கடந்த செப்ரம்பர் 11ம் திகதி 72 பேர் கையெழுத்திட்டு ‘அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!’ என்ற அறிக்கை ஒன்று 17 இணையத்தளங்களுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களின் பின் மேலும் இரண்டு கையெழுத்தாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வறிக்கை தேசம்நெற்றுக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதாலும் இவ்வறிக்கையுடன் தேசம்நெற் ஆசிரியர்கள் உடன்படாததாலும் நாம் இதற்கு பதில் சொல்வது தவிர்க்க முடியாததாகிறது. இலங்கை மற்றும் உலக அரசியல் நிலவரங்களின் திடீர் மாற்றங்கள் சார்ந்த பிரசுரங்கள் மற்றும் களப்பணிகளில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட்டுவருவதால் இந்த பதில் அறிக்கை சற்று தாமதமாக வருகிறது.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தல் : தேசம்நெற்
Wednesday, 1 October 2008
பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்
பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் அமைதிப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழ் போறத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஒக்ரோபர் 6ää திக்கட் கிழமை மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை இவ்வமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோடைகால விடுமுறையின் பின் ஒக்ரோபர் 6ல் பாராளுமன்றம் கூட இருப்பதால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பார்கள் என தமிழ் போறத்தினர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளனர். வன்னிப் பகுதியின் மீது இலங்கை அரசபடைகள் நடாத்தும் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக்களை உடனடியாக நிறுத்தும் படி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் கோர உள்ளனர். மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னிப் பகுதியிலேயே இடம்பெயர்ந்து உள்ள 230,000 மக்களுக்கும் பிரித்தானிய அரசு உடனடியா நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவ்வமைதிப் போராட்டத்தில் கோர உள்ளனர். தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு தமிழரதும் கடமை எனவும் பிரித்தானிய தமிழ் போறத்தினர் தெரிவித்து உள்ளனர்....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்
வன்னியில் தரையிலும் கடலிலும் கடும் சமர். 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்வு. : தொகுப்பு ஏகாந்தி
வன்னிப் பிரதேசம் மீது நடத்தப்பட்டு வரும் தரைவழி வான்வழித் தாக்குதல்களால் சுமார் 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்பட்டு வருகின்றனர். எனினும் பௌத்தம் பேசும் ஜனாதிபதியும் அவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் அந்த மக்கள் நிலை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுகின்றவர்கள் இல்லை என்று. புதிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-....