Monday 28 July 2008

யாழ்ப்பாண நூலகக் கனவுகள் - மறுப்பும்! பதிலும்! : என் செல்வராஜா

யாழ்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதின் 27வது ஆண்டை நினைவிற்கொண்டு நூலகவியலாளர் என் செல்வராஜா ‘பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது! : சாம்பலில் இருந்து 27 ஆண்டுகள் ’ என்றொரு கட்டுரையை தேசம்நெற் இணையத்திற்காக எழுதி இருந்தார். இக்கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்து ‘யாழ்ப்பாண நூலகக் கனவுகள்’ என்ற தலைப்பில் கொழும்பில் இருந்து வெளியாகும் ஞானம் சஞ்சிகையிலும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இக்கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பிபிசி தமிழோசை, ஐபிசி வானொலியிலும் வெளியிட்டு இருந்தார். இவை தொடர்பாக யாழ்மாநகரசபை ஆணையாளர் மு பெ சரவணபவ நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு எழுதிய மடலையும் அதற்கு என் செல்வராஜா வழங்கிய பதிலையும் இங்கு பதிவு செய்கிறோம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாண நூலகக் கனவுகள் - மறுப்பும்! பதிலும்! : என் செல்வராஜா

சந்திரிகாவின் உரிமைகளை அரசு பறித்தால் ஐ.தே.க. எதிர்க்கும்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சிவில் உரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனைக் கொள்கையளவில் எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1998இல் உருவாக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் தமது கட்சி இதனை எதிர்க்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சந்திரிகாவின் உரிமைகளை அரசு பறித்தால் ஐ.தே.க. எதிர்க்கும்!

முகாம்களுக்கு திரும்பாத படை வீரர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

”பயங்கர வாதத்தைத் தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில், இறுதி வெற்றியின் பங்காளர் களாவதற்காக விடுமுறையில் வீடு சென்று கடமைக்குத் திரும்பாதிருக்கும் பாதுகாப்பு படைவீரர்கள் சகலரும் உடனடியாகத் தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும். இதன் மூலம் இராணுவ நீதிமன்றத்திற்கு முகம் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் (26) எச்சரிக்கை விடுத்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முகாம்களுக்கு திரும்பாத படை வீரர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

மலையகத்திலும் புரட்சி உருவாகும். என்.கே. சிவாஜிலிங்கம்

இந்திய நாடு நமக்கு மிக அருகிலிருந்து இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதில் அந்நாடு பாராமுகமாயுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரி A+iy 27 சபையில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையகத்திலும் புரட்சி உருவாகும். என்.கே. சிவாஜிலிங்கம்

சார்க் மாநாடு ஆரம்பம். ஆட்சித் தலைவர்களின் மாநாடு ஓகஸ்ட் 2ல்

சார்க் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுக் (July 27) காலை கோலாகலமாக ஆரம்பமானது. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட உயர் அதிகாரிகளுக்கான மாநாடே நேற்றைய முதல்நாள் அமர்வில் இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு இலங்கை தலைமை வகித்து சார்க் மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் கிரேஸ் ஆசிர்வாதம் இந்தத் தலைமை பொறுப்பை வகித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க் மாநாடு ஆரம்பம். ஆட்சித் தலைவர்களின் மாநாடு ஓகஸ்ட் 2ல்

யூசுப் செயின் மரணம் (1926-2008) : அஞ்சலியாக ஒரு பட அறிமுகம் : யமுனா ராஜேந்திரன்

எகிப்திய இயக்குனர் யூசுப் செயினின் ‘செப்டம்பர் பதினொன்று’ குறித்த குறும்படத்தை, இயக்குனராக செயின் குறித்த ஒரு ‘சுயசித்திரம்’ எனவே குறிப்பிடலாம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யூசுப் செயின் மரணம் (1926-2008) : அஞ்சலியாக ஒரு பட அறிமுகம் : யமுனா ராஜேந்திரன்

துப்பாக்கிச் சூட்டால், நெடுங்குருதி நிகழ்வு புறக்கணிக்கப்பட்டது : வி அருட்சல்வன்

நேற்று (யூலை 27) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யூலை 1983 கலவரத்தை நினைவுகூரும் நெடுங்குருதி நிகழ்வு திட்டமிட்டபடி நிகழவில்லை. நிகழ்வின் பேச்சாளர்கள் சிலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பெரும்பாலும் அரசியல் ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பேச்சாளர்களும் ஏற்பாட்டாளர்களும் இன்னும் சிலரும் மட்டுமே இந்நிகழ்வில் கலந்தகொண்டதாக தெரியவருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
துப்பாக்கிச் சூட்டால், நெடுங்குருதி நிகழ்வு புறக்கணிக்கப்பட்டது : வி அருட்சல்வன்

இலங்கையில் (இன)கலவரங்கள் : மாற்று நக்கீரன்

1883ம் ஆண்டு தலைநகரமான கொழும்பில் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும கலவரத்தில் ஈடுபட்டார்கள். பிரித்தானியர்களின் ஆதரவான அதிகாரம் கொண்ட மேலாதிக்க வாதிகளுக்கும், பௌத்த சிங்களப் பேரின வாதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. பிரித்தானியர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக் கலவரத்தை அடக்கினார்கள். இக் கலவரத்தில்த் தங்கள் நன்மைக்காக அதிகாரத்துக்கு வருவதற்கும் - உயர் கல்வி கற்பதற்கும் - கொழும்பைத் தங்கள் தங்கள் பிரதேசமாகக் கருதியவர்களும், மதம் மாறிய யாழ் மேட்டுக் குடியினர்களும் பாதிக்கப்பட்டார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையில் (இன)கலவரங்கள் : மாற்று நக்கீரன்

இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

1983 - 2008 நெடுங்குருதி’ நிகழ்வின் ஏற்பாட்டாளர் குகன் தெய்வேந்திரன் இன்று (யூலை 26) காலை பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யூலை 23 இரவு அவரது கடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றிய தாஸ் என்பவரே இச்சம்பவத்தில் காயப்பட்டு இருந்தார். இவர் இன்னமும் பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் கடுமையான காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது. இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக கடையின் ‘பெயரளவில் உரிமையானவர்’ பல மணிநேரம் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு இருந்தார். மேலும் காயமடைந்த தாஸ் என்பவரும் மருத்துவமனையில் பொலிசாரால் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

Sunday 27 July 2008

ஜூலைப் படுகொலை நிகழ்வுகள்: கொச்சைப்படுத்தப்படும் தியாகங்கள் : சபா நாவலன்

83ம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 13 இரணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்ட நிகழ்வின் எதிரொலி முழு இலங்கையிலும் அதிர்ந்தது. மிகப்பெரும் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்திருந்த இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு ஏக அதிகாரம் தேவைப்பட்ட நிலையில் போர் வெறியைச் சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்துவிட்டார். தாராள மயமாக்கப்பட்ட பொருளாதரக் கொள்கை, சிங்கள மக்களின் பொருளாதார வாழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கத்தால் அரசிற்கெதிரான வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டிருந்த 80 களின் ஆரம்பப் பகுதி நெருக்கடியான காலகட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. அநகாரிக தர்மபாலவினால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் அமைப்பாக்கப்படிருந்த பேரினவாதத்திற்குப் புத்தியிர் கொடுத்து மற்றய பிரச்சனைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதென்பது பின் காலனிய அரசுகளுக்குப் பின் வந்த எல்லா அரசுகளும் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகும். காலத்திற்குக் காலம்இ ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியின் தாக்க அளவிற்கேற்ப தேசிய இன அடக்கு முறையின் குரூரமும் மாறுபடும்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜூலைப் படுகொலை நிகழ்வுகள்: கொச்சைப்படுத்தப்படும் தியாகங்கள் : சபா நாவலன்

Saturday 26 July 2008

இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

'1983 - 2008 நெடுங்குருதி’ நிகழ்வின் ஏற்பாட்டாளர் குகன் தெய்வேந்திரன் இன்று (யூலை 26) காலை பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யூலை 23 இரவு அவரது கடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றிய தாஸ் என்பவரே இச்சம்பவத்தில் காயப்பட்டு இருந்தார். இவர் இன்னமும் பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் கடுமையான காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது. இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக கடையின் ‘பெயரளவில் உரிமையானவர்’ பல மணிநேரம் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு இருந்தார். மேலும் காயமடைந்த தாஸ் என்பவரும் மருத்துவமனையில் பொலிசாரால் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

பஸ் டிரைவரின் மகளாக இருந்து ஐநா மனித உரிமை ஆணையாளராக திருமதி நவநீதம் பிள்ளை : த ஜெயபாலன்

திருமதி நவநீதம் பிள்ளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக யூலை 24 அன்று அறிவிக்கப்பட்டு உள்ளார். இவ்வறிவித்தலை ஐநா செயலாளர் நாயகம் பங்கி மூன் யூலை 24ல் வெளியிட்டார். யூலை 28ல் ஐநாவின் பொதுச்சபை கூடி இவரது நியமனத்தை உறுதிப்படுத்தும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பஸ் டிரைவரின் மகளாக இருந்து ஐநா மனித உரிமை ஆணையாளராக திருமதி நவநீதம் பிள்ளை : த ஜெயபாலன்

”கருணாநிதிக்கு என்ன அருகதை!” விமல்வீரவன்ச

”இலங்கைப் படையினரின் யுத்த நடவடிக்கையை முறியடித்துப் புலிகளையும் அவர்களின் இடங்களையும் பாதுகாக்கும் நோக்கிலும், இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி செயற்பட்டு வருகிறார்” என்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கருணாநிதிக்கு என்ன அருகதை!” விமல்வீரவன்ச

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும் - மு. கருணாநிதி

”தமிழக மீனவர்கள் கச்சதீவையொட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து சார்க் மாநாட்டுக்கு செல்லும்போது இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டும்” என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் (July 23) டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியபோதே கருணாநிதி இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும் - மு. கருணாநிதி

”அணுசக்தி விவகாரத்தில் இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போன்று நடத்த முயற்சித்தனர்” பிரதமர் மன்மோகன்சிங்

”இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விடயத்தில் தான் அவர்களின் கொத்தடிமை போல செயற்பட வேண்டும்” என்று இடதுசாரிகள் விரும்பினர் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில். ”இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னாட்டு அணுசக்தி முகாமையுடனும், அணு தொழில்நுட்க வணிகக்குழு (என்.எஸ்.ஜி) வுடனும் பேச்சு நடத்துவதற்கு எங்களை அனுமதியுங்கள். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்று இடதுசாரிகளிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். அயலுறவுக்கொள்கை சார்ந்த இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயலும் எந்தவொரு அரசும் விடுப்பது போன்ற இந்த சாதாரணமான வேண்டுகோளுக்கும் இடதுசாரிகள் அனுமதியளிக்கவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”அணுசக்தி விவகாரத்தில் இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போன்று நடத்த முயற்சித்தனர்” பிரதமர் மன்மோகன்சிங்

27ஆம் திகதி முதல் விமானத் தாக்குதல், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா? - லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி.

”எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விமானத் தாக்குதல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பாதுகாப்புச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
27ஆம் திகதி முதல் விமானத் தாக்குதல், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா? - லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி.

சார்க்’ பாதுகாப்பில் 12 ஆயிரம் பொலிஸ்

”கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு, அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்போர் முழுமையான கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவர்” என கொழும்பு வடக்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (July 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க்’ பாதுகாப்பில் 12 ஆயிரம் பொலிஸ்

இந்தியா தனது சர்வாதிகாரத்தை இலங்கையில் நிலைநாட்ட முயல்கிறது - அநுரகுமார திஸாநாயக்க

”இலங்கையின் தேசிய பிரச்சினையை சிக்கல் நிலைக்குள் தள்ளி - இலங்கையை முற்றாக ஆக்கிரமித்து அதனூடாக தனது சர்வாதிகாரத்தை இலங்கையில் நிலைநாட்ட இந்தியா முயற்சிசெய்து வருகிறது” என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநயாக்க நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியா தனது சர்வாதிகாரத்தை இலங்கையில் நிலைநாட்ட முயல்கிறது - அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை அரசியல் வாதிகளின் இந்திய விஜயம் குறித்து இந்தியா அதிருப்தி

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு முன்னறிவித்தலின்றி விஜயம் மேற்கொள்வது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்தியா எதிர்காலத்தில் இவ்வாறான விஜயங்களின் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சினால் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபுர்வ கடிதத்திலேயே இது குறித்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இலங்கை அமைச்சர்கள் பலர் முன்னறிவித்தலின்றி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரியுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை அரசியல் வாதிகளின் இந்திய விஜயம் குறித்து இந்தியா அதிருப்தி

”இந்தியப் பிரதமர் வடக்கு, கிழக்கு இணைப்பையே விரும்புகின்றார்.” இரா. சம்பந்தன்

கிழக்கின் பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களை மீள அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு மீளக் குடியமர்த்தப்படாமலுள்ளனர் எனவும் அவர் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இந்தியப் பிரதமர் வடக்கு, கிழக்கு இணைப்பையே விரும்புகின்றார்.” இரா. சம்பந்தன்

இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் - 1983 கறுப்பு யூலை நினைவாக : சேனன்

1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்றுசொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன உறவை கொச்சைப்படுத்துவது பிழை. ஆயிக்கணக்கான மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும் சரி – வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமைகள் தாக்கப்பட்டபோதும் சரி தெற்கில் ஏராளமான சிங்கள மக்கள் தமிழர் பக்கம் நின்றுள்ளார்கள். தமிழ் தலைமகள் தமிழர் உரிமைகளை கைவிட்ட தருனங்களிற்கூட அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். 83 படுகொலை பற்றிய முழு விசாரணை நடத்தப்பட்டு, ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மேலும் பொறுப்பை போட்டு தப்பும் எமது பொல்லாத தலைமைகளின் போக்கிரித்தனத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் - 1983 கறுப்பு யூலை நினைவாக : சேனன்

Friday 25 July 2008

‘1983 - 2008 நெடுங்குருதி’ பாரிஸ் சார்சல் வரை கசிகிறது : த ஜெயபாலன்

பிரான்ஸின் சார்சல்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக பிரான்ஸின் சார்சல்ஸ் பகுதியில் கடை வைத்துள்ள உரிமையாளர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். வியாபார நிலையத்தின் உரிமையாளர் பெயரளவிலேயே உரிமையாளர் என்றும் வியாபார நிலையத்தை குகன் தெய்வேந்திரன் என்பவரே பின்னணியில் நடத்தி வருவதாகவும் அப்பகுதியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் தாஸ் என அறியப்பட்டு உள்ளார். இவர் சார்சல்லில் உள்ள அக்கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘1983 - 2008 நெடுங்குருதி’ பாரிஸ் சார்சல் வரை கசிகிறது : த ஜெயபாலன்

Thursday 24 July 2008

ஈழ ‘தமிழ்’ பேசும் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு –அரசாங்கங்களும் அமைப்புக்களும் மன்னிப்பு கேட்கவேண்டும்.-நாகார்ஜுனன் (பகுதி 4) : சேனன்

ஈழ ‘தமிழ்’ பேசும் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு –அரசாங்கங்களும் அமைப்புக்களும் மன்னிப்பு கேட்கவேண்டும்.-நாகார்ஜுனன் (பகுதி 4) : சேனன்

ஈழத்தமிழர்களின் பிரச்னை, இனப்பிரச்னை குறித்து தமிழ்நாட்டில் இயங்கியவர் என்ற வகையில் உங்கள் கண்ணோட்டம் இன்றைக்கு எப்படி இருக்கிறது?

உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச் சொல்ல முடியும்.

.....

view all in thesamnet.co.uk

Wednesday 23 July 2008

1983 யூலை - ‘நினைவுகள் மரணிக்கும்போது’ : அ. சிவானந்தனுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்

அ சிவானந்தன் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களை குறிப்பாக 1958 1983 இனக்கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கலத்தில் When Memory Dies என்ற நாவலை 1997ல் வெளியிட்டு இருந்தார். கடந்த 40 ஆண்டுகளாக Race and Class என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வருபவர். New Left, Mnthly Review ஆகிய சர்வதேச சஞ்சிகைகளினால் சிறந்த அரசியல் பகுப்பாய்வளராக கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவானந்தனுடனான யமுனா ராஜேந்திரனின் உரையாடல் சில ஆண்டுகளுக்கு முன்ரேயே பதிவு செய்யப்பட்டது. 1958 கலவரத்தின் 50வது வருடமும் 1983 கலவரத்தின் 25வது வருடமும் நினைவுகூரப்படும் நிலையில், இவ்உரையாடல் பொருத்தமானது என்ற வகையில் பதிவாகிறது. இதனைத் தொடர்ந்து இந்நாவல் பற்றிய யமுனா ராஜேந்திரனின் விமர்சனமும் பதிவாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
1983 யூலை - ‘நினைவுகள் மரணிக்கும்போது’ : அ. சிவானந்தனுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்

”மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்க வேண்டிவரும்.” அநுர எம்.பி

மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க வேண்டிய சூழ்நிலை அரசுக்கு உருவாகியுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஜே.வி.பி. மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்க வேண்டிவரும்.” அநுர எம்.பி

மடுமாதா திருச்சொரூபம் மன்னாருக்கு எடுத்துவரப்பட்டது.

மடுமாதா ஆலயத்திலிருந்து பாதுகாப்புக் கருதி எடுத்துச்செல்லப்பட்டு தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதா அன்னையின் திருச்சொரூபம் நேற்று (July 22) புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து மன்னாருக்கு எடுத்து வரப்பட்டு மன்னார் ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மடுமாதா திருச்சொரூபம் மன்னாருக்கு எடுத்துவரப்பட்டது.

Monday 21 July 2008

”இன்னும் 10 வருடங்களுக்கு அதிகாரத்தைத் தக்கவைக்க திட்டமிடுகிறார் மஹிந்த” அநுர குமாரதிஸாநாயக்க

”தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு ஜனாதிபதி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பாரிய திட்டம் ஒன்றை மஹிந்த ராஜபக்ச வகுத்துள்ளார்” என்றும் - அதன்படி 2010ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெறலாம் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

”மஹிந்தவின் இத்திட்டத்தின் மூலம் அவரது மகனையும் அரசியலுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றும் ஜே.வி.பி. மேலும் தெரிவித்துள்ளது. ”இருப்பினும் இந்த ஊழல் மோசடிமிக்க அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க இடமளிக்கக்கூடாது” என்று அக்கட்சி கூறுகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இன்னும் 10 வருடங்களுக்கு அதிகாரத்தைத் தக்கவைக்க திட்டமிடுகிறார் மஹிந்த” அநுர குமாரதிஸாநாயக்க

”முஸ்லிம்களை அடையாளப்படுத்தாத கிழக்கு கொடி மாற்றப்பட வேண்டும்!” ஹஸன் அலி

”கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றபோதும் மாகாணக் கொடியில் அவர்களுக்கு அடையாளம் இல்லை. ஓர் அங்குலமேனும் பச்சை நிறமில்லை. முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று மு.கா. பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி கிழக்கு மாகாணசபையில் கன்னியுரை நிகழ்த்துகையில் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”முஸ்லிம்களை அடையாளப்படுத்தாத கிழக்கு கொடி மாற்றப்பட வேண்டும்!” ஹஸன் அலி

ஜனநாயகத்தை நிலைநாட்ட வருபவர்கள் ஆரம்பிப்தே தேர்தல் வன்முறைகளில்தான் - தயானந்த திஸாநாயக்க

அரசியல் கட்சிகளுக்குள்ளும் அவற்றுக்கு இடையேயும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் இந்தத் தேர்தல் முறையை முற்றாக மாற்றியமைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தத் தேர்தல்களில் கூடுதலான எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அனைவரும் உண்மையான வேட்பாளர்கள் அல்லரெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் பிரதான கட்சிகளின் சார்பில் வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் கூடுதலான பிரதிநிதிகளை நுழைத்துக்கொள்வதற்கே போட்டியிடுகிறார்கள் எனத் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனநாயகத்தை நிலைநாட்ட வருபவர்கள் ஆரம்பிப்தே தேர்தல் வன்முறைகளில்தான் - தயானந்த திஸாநாயக்க

கல்வியில் உயர்ந்திருந்த எம் சமூகத்தின் நிலைமை தாழ்ந்தது கவலையை தருகின்றது

எந்தவிதமான இன்னல்கள் நேர்ந்தாலும் கல்வியைச் சீரழியவிட்டு விடக்கூடாது. இன்றைய யுத்த நிலையைச் சவாலாகக் கொண்டு கல்வியை மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்வியறிவால் மேம்பட்டு சட்டம் ஒழுங்குகள் மதித்து ஒழுக்க சீலர்களாக வாழவேண்டும். இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் இந்நாட்டை வழிநடாத்தும் தலைவர்களாவர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கல்வியில் உயர்ந்திருந்த எம் சமூகத்தின் நிலைமை தாழ்ந்தது கவலையை தருகின்றது

படுகொலைகள் அவசியமானது என்ற அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும் : வரதகுமார் (TIC)

மனித உரிமைகளுக்காகவும் மனிதத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்த முக்கியமான நிகழ்வில் உங்களுடன் கலந்துகொண்டு மகேஸ்வரிக்கு அஞ்சலியை செலுத்துவதில் நிறைவடைகிறேன்.

ஒருவருடைய மதிப்பான செய்கைகளும் சாதனைகளும் மட்டும் அவர் எப்படியானவர், எப்டிப்பட்டவர் என்பதை விளக்க போதுமானதல்ல. மகேஸ்வரி என்னுடன் பணியாற்றியவர். நல்ல நண்பர். அவர் மிக மோசமான முறையில் 13 மேயில் கரவெட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து அவருடைய வயதான தாயோரோடு இருந்தவேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் மகேஸ்வரி செய்த சேவைகளை அறிந்திருக்கவில்லை. அயராது சமூகத்திற்கு உழைத்த மகேஸ்வரியின் இழப்பு ஒரு பாரிய இழப்பு. மகேஸ்வரி முன்னரும் படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர். அவர் தனக்குள்ள ஆபத்தை மிகவும் அறிந்திருந்தவர். ஆனால் இது அவருடைய மக்களுக்கான சேவையைத் தொடர்வதை குறைக்கவில்லை. நீதிக்கான ஆர்வம், அகதிகள் பிரச்சினை, சமூகத்துடனான தொடர்பும் தலைமைத்துவப் பண்பும் இளம் வயதிலிருந்தே அவரில் ஆழமாக வேரூன்றி இருந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படுகொலைகள் அவசியமானது என்ற அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும் : வரதகுமார் (TIC)

Sunday 20 July 2008

குற்றவாளிகளை அடையாளம் காணவே வீடீயோப் படமெடுக்கப்பட்டது - சட்டமா அதிபர்

தமிழர்கள் அநாவசியமாக கைது செய்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முகத்துவாரம் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அங்குள்ளவர்களை வீடீயோ எடுத்ததாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
குற்றவாளிகளை அடையாளம் காணவே வீடீயோப் படமெடுக்கப்பட்டது - சட்டமா அதிபர்

கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் ஈ.பி.டி.பி. அலுவலக வளவுக்குள்

மட்டக்களப்பு செங்கலடிப் பகுதியில் கடந்த மாத நடுப்பகுதியில் வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரது சடலம் வியாழக்கிழமை (July 17) காலை கொம்மாதுறை ஈ.பி.டி.பி. அலுவலக வளவிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் ஈ.பி.டி.பி. அலுவலக வளவுக்குள்

”கிழக்குக்கு பொலிஸ் அதிகாரம்!” ஹிஸ்புல்லாஹ் - பிரிட்டிஸ் அமைச்சர் கிழக்கு முதல்வர் சந்திப்பு : வி அருட்சல்வன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஸ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் மலோச் பிறவுண் பிரபு தலைமையிலான உயர்மட்டக் குழு அண்மையில் (யூலை 16) திருகோணமலைக்கு விஜயம் செய்தது. கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்த இந்தக்குழு, முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினர். முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரியவருகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கிழக்குக்கு பொலிஸ் அதிகாரம்!” ஹிஸ்புல்லாஹ் - பிரிட்டிஸ் அமைச்சர் கிழக்கு முதல்வர் சந்திப்பு : வி அருட்சல்வன்

லண்டன் தெருக்களில் மற்றவர் தலையை துண்டிக்க முயற்சித்து, தம் இளமையைத் தொலைத்தனர். - 63 ஆண்டுகள் சிறைத் தண்டனை! : த ஜெயபாலன்

கொலை முயற்சி மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட 7 தமிழ் இளைஞர்களுக்கு ஓல்ட் பெயிலி; (Old Bailey) 63 ஆண்டுகள் நீண்ட சிறைத்தண்டனையை நேற்று (யூலை 18)ல் வழங்கி உள்ளது. ”மோசமான காயங்களை ஏற்படுத்துவதற்காக அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் இது. லண்டன் தெருக்களில் கோஸ்டி மோதல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது” என்று குற்றவாளிகளுக்கான தண்டனையை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி ரிச்சட் ஹக்கின் கியூசி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார். யூன் 19ம் திகதி குற்றவாளிகளாக காணப்பட்ட இவர்களுக்கு நேற்று தண்டனைக் காலம் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்ப்பினை நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் வரவேற்பதாகத் தேசம்நெற் இணையத்திற்குத் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் தெருக்களில் மற்றவர் தலையை துண்டிக்க முயற்சித்து, தம் இளமையைத் தொலைத்தனர். - 63 ஆண்டுகள் சிறைத் தண்டனை! : த ஜெயபாலன்

பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசியல் தஞ்ச வழக்கில் தமிழருக்கு சாதகமான தீர்ப்பு!!! : த ஜெயபாலன்

ஐரோப்பிய நீதிமன்றத்தில் நேற்று (யூலை 17) பிரித்தானிய அரசுக்கு எதிராக என்ஏ (NA) என்று அறியப்பட்ட இலங்கைத் தமிழர் தொடுத்த வழக்கில், என்ஏ க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்புவது ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் 3வது சரத்தை அல்லது 2வது சரத்தை (அல்லது 2வது சரத்தையும் 3வது சரத்தையும்) மீறுகிறது என்றும் அது அநீதியானது என்றும் என்ஏ பிரித்தானிய அரசின் முடிவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார். (Article 2: Everyone’s right to life shall be protected by law. No one shall be deprived of his life intentionally save in the execution of a sentence of a court following his conviction of a crime for which this penalty is provided by law. Article 3: No one shall be subjected to torture or to inhuman or degrading treatment or punishment.)....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசியல் தஞ்ச வழக்கில் தமிழருக்கு சாதகமான தீர்ப்பு!!! : த ஜெயபாலன்

Saturday 19 July 2008

கிழக்கு இளைஞர்களுக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு இளைஞர்களுக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு

அரசியல் கட்சிகளின் சதிவலைக்குள் சிக்காது எதிர்காலத்தில் போராட்டங்களை நடத்தத் திட்டம்

அரசியல் கட்சிகளின் தலையீடுகளின்றி தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாரிய தொழிற்சங்கங்கள் ஊடாக இயக்கங்கள் ஏனைய அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசியல் கட்சிகளின் சதிவலைக்குள் சிக்காது எதிர்காலத்தில் போராட்டங்களை நடத்தத் திட்டம்

ஜே.வி.பி க்கு புலி முத்திரை குத்துவது நியாயமற்றது - சோமவன்ச அமரசிங்க

புலிகளை சர்வதேச ரீதியில் முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்த ஜே.வி.பி.க்கு அரசாங்கம் புலி முத்திரை குத்தியுள்ளமை நியாயமற்ற செயல் என அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜே.வி.பி க்கு புலி முத்திரை குத்துவது நியாயமற்றது - சோமவன்ச அமரசிங்க

வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்களுக்கு எவ்வாறு ஒன்றிணைந்து தீர்வு காணமுடியும் என்பது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அந்த அலுவலகத்தின் இணைப்பாளர் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு

தமிழ்நாட்டு ஊடகங்கள் உள்நோக்கிய பார்வை மாத்திரமே கொண்டவை-நாகார்ஜுனன் (பகுதி 3) : சேனன்

ஈழப்பிரச்னை, போரை தமிழ்நாட்டு, இந்திய ஊடகங்கள் இன்று அணுகும் முறை பற்றி உங்களுக்கு வரலாற்றுரீதியான விமர்சனப்பார்வை இருக்குமல்லவா…

இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் சமுதாயத்தின் பிரச்னையை அணுகுவது, இலங்கைப்பிரச்னையை அணுகுவது எப்படிங்கறதுக்கு முன்னால இதற்குப் பின்னணியாக ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்கணும்…

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ்நாட்டு ஊடகங்கள் உள்நோக்கிய பார்வை மாத்திரமே கொண்டவை - நாகார்ஜுனன் (பகுதி 3) : சேனன்

Friday 18 July 2008

மீனவர் மீதானதாக்குதலை தடுத்து நிறுத்தும்படி மன்மோகன்சிங் ராஜபக்சவை வலியுறுத்துவார் - மு. கருணாநிதி

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இலங்கைச் செல்லும் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசு வலியுறுத்துமென முதலமைச்சர் மு. கருணாநிதி உறுதியளித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மீனவர் மீதானதாக்குதலை தடுத்து நிறுத்தும்படி மன்மோகன்சிங் ராஜபக்சவை வலியுறுத்துவார் - மு. கருணாநிதி

புஸ்ஸின் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் - ஜாதிக ஹெலஉறுமய

நாட்டை முழுமையாக மீட்டுத்தருமாறு மக்கள் வழங்கிய ஆணையை எவ்வித குறைபாடுகளுமின்றி களங்கமும் ஏற்படாதவாறு முன்னெடுத்துச் செல்வதற்கு ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் (16) தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புஸ்ஸின் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் - ஜாதிக ஹெலஉறுமய

சார்க் மகாநாடும் கொழும்பில் கடை உடைப்புகளும்.

இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் பொலிஸாரின் உதவியுடன் வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க் மகாநாடும் கொழும்பில் கடை உடைப்புகளும்.

பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசியல் தஞ்ச வழக்கில் தமிழருக்கு சாதகமான தீர்ப்பு!!! : த ஜெயபாலன்

ஐரோப்பிய நீதிமன்றத்தில் நேற்று (யூலை 17) பிரித்தானிய அரசுக்கு எதிராக என்ஏ (NA) என்று அறியப்பட்ட இலங்கைத் தமிழர் தொடுத்த வழக்கில், என்ஏ க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்புவது ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் 3வது சரத்தை அல்லது 2வது சரத்தை (அல்லது 2வது சரத்தையும் 3வது சரத்தையும்) மீறுகிறது என்றும் அது அநீதியானது என்றும் என்ஏ பிரித்தானிய அரசின் முடிவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார். (Article 2: Everyone’s right to life shall be protected by law. No one shall be deprived of his life intentionally save in the execution of a sentence of a court following his conviction of a crime for which this penalty is provided by law. Article 3: No one shall be subjected to torture or to inhuman or degrading treatment or punishment.)...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசியல் தஞ்ச வழக்கில் தமிழருக்கு சாதகமான தீர்ப்பு!!! : த ஜெயபாலன்

இந்திய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வரவில்லை

சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியப்படையினருடன் இந்திய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரவில்லை என கொழும்பு மாவட்டத்திற்கான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வரவில்லை

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையை வாங்க இந்திய நிறுவனம் முயற்சி

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையை வாங்க உத்தேசித்துள்ள இந்திய நிறுவனம் தொழிற்சாலையை பார்வையிடுவதற்காக சில தினங்களுக்கு முன் இலங்கை வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையை வாங்க இந்திய நிறுவனம் முயற்சி

Wednesday 16 July 2008

தவறுகளைத் திருத்தி புதிய பாதையில் முன்னேறுவோம் - கி. மா. முதலமைச்சர்

யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்து மேம்படுத்த அன்று புறப்பட்ட அல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தார். அன்று ஆரம்பிக்கப்பட்ட படுகொலை இன்றும் தொடர்ந்து கொண்டயிருக்கின்றது. பிரபாகரனின் கொலைக் கலாசாரத்தை இளைஞர்களே மாற்றியமைக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தவறுகளைத் திருத்தி புதிய பாதையில் முன்னேறுவோம் - கி. மா. முதலமைச்சர்

வன்முறைகள் மோசடிகளை தடுக்க கடும் நடவடிக்கை

வடமத்திய சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க்கை முன்னிட்டு 25ஆம் திகதி முதல் உயர் பாதுகாப்பு வலயத்தில் வீதிகள் மூடப்படும்!

சார்க்கை முன்னிட்டு 25ஆம் திகதி முதல் உயர் பாதுகாப்பு வலயத்தில் வீதிகள் மூடப்படும்!

இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் கொழும்பில் சில வீதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது...

நாடளாவிய ரீதியிலான மூன்று நாள் பொது வேலைநிறுத்தம்! - லால்காந்த

கடந்த ஜுலை மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுவேலைநிறுத்தம் வெற்றியளித்த போதிலும்கூட அரசாங்க செயற்பாடுகளில் ஸ்தம்பிதநிலை ஏற்படவில்லை. அதேநேரம் தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியிலான மூன்று நாள் தொடர்ச்சியான பொதுவேலை நிறுத்தமொன்று விரைவில் நடத்தப்படுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிலாளர் சங்க மத்திய நிலையத் தலைவருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நாடளாவிய ரீதியிலான மூன்று நாள் பொது வேலைநிறுத்தம்! - லால்காந்த

கருணா அம்மான் மட்டக்களப்பு விஜயம்.

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதனூடாகவே எமது மண்ணைக் கட்டி எழுப்ப முடியும். எதிர்காலத்தில் அழிந்து போன எமது புமியைக் கட்டி எழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வினாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருணா அம்மான் மட்டக்களப்பு விஜயம்.

Tuesday 15 July 2008

பொங்கு தமிழும் - புலிகள் ஆதரவும் : சேனன்

யூன் 12 லண்டனில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். குறைந்தது இருபதாயிரம் பேராவது இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். ‘எமக்கு வேண்டும் தமிழ் ஈழம்’ We want Tamil Eelam - எமது தலைவர் பிரபாகரன்’ - Our leader Pirabakaran - என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கோசம் எழுப்பியவர்களும் - பிரபாகரன் படம், தமிழ் ஈழ படம் பிடித்தபடி உணர்ச்சி பொங்க திரிந்தவர்களுமாக திரண்ட மக்கள் மத்தியில் தேசிய - இன உணர்வு ஓங்கியிருந்ததை கவனிக்க கூடியதாக இருந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பொங்கு தமிழும் - புலிகள் ஆதரவும் : சேனன்

தவறுகளைத் திருத்தி புதிய பாதையில் முன்னேறுவோம்- கி. மா. முதலமைச்சர்

யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்து மேம்படுத்த அன்று புறப்பட்ட அல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தார். அன்று ஆரம்பிக்கப்பட்ட படுகொலை இன்றும் தொடர்ந்து கொண்டயிருக்கின்றது. பிரபாகரனின் கொலைக் கலாசாரத்தை இளைஞர்களே மாற்றியமைக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தவறுகளைத் திருத்தி புதிய பாதையில் முன்னேறுவோம்- கி. மா. முதலமைச்சர்

இனவாத சக்திகளை எதிர்ப்பது பற்றி சிந்திக்காத முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் அமைச்சர்களும் - மௌலவி முபாறக்

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நுரைச்சோலை வீட்டுத்திட்டத்துக்காக தனித்து நின்று போராடும் அமைச்சர் பேரியல் அ`ரபுக்கு ஆதரவாக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது மக்கள் ஊர்வலங்களை நடத்த ஏற்பாடு செய்யமுன்வரக் கூடாது என அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி கேட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனவாத சக்திகளை எதிர்ப்பது பற்றி சிந்திக்காத முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் அமைச்சர்களும் - மௌலவி முபாறக்

சார்க் மாநாட்டுக்கு தலைவர்கள் அமைச்சர்கள் உட்பட 1500 பிரமுகர்கள் வருகை. ஏற்பாடுகள் புர்த்தி

கொழும்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 15வது சார்க் மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணிகள் புர்த்தி நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சு இம்மாநாட்டில் தெற்காசிய நாடுகளுக்கு பொதுவான முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க் மாநாட்டுக்கு தலைவர்கள் அமைச்சர்கள் உட்பட 1500 பிரமுகர்கள் வருகை. ஏற்பாடுகள் புர்த்தி

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செயலாளர் மலிக் பிறவுண் இலங்கை விஜயம்

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் மலிக் பிரவுண் நாளை மறுதினம் (July 16) புதன்கிழமை இலங்கை செல்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில் பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் இரு நாட்கள் இங்கு தங்கியிருந்து முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் பிரிவு தெரிவிக்கின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செயலாளர் மலிக் பிறவுண் இலங்கை விஜயம்

இலங்கை இந்தியப் பொருளாதார உடன்படிக்கை நாட்டை அடகு வைக்கும் முயற்சி - விமல் வீரவன்ஸ

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை இந்தியப் பொருளாதார உடன்படிக்கை நாட்டை அடகு வைக்கும் முயற்சி - விமல் வீரவன்ஸ

Monday 14 July 2008

தேசத்தின் தியாக ஜோதி மகேஸ்வரி! : டக்ளஸ் தேவானந்தா செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி

இந்நிகழ்வில் ஈபிடிபி செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அனுப்பி வைத்த இரங்கள் உரையை ஈபிடிபியின் பிரித்தானிய பொறுப்பாளர் சந்திரகுமார் நிகழ்வில் வாசித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரை இங்கு பதிவிடப்படுகிறது. (நிகழ்ச்சியில் ஏனையவர்களின் உரைகளும் பதிவுகளும் தொடரும்.)

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசத்தின் தியாக ஜோதி மகேஸ்வரி! : டக்ளஸ் தேவானந்தா செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி

1983 - 2008, 25 ஆண்டுகள் ஆறாத துயரம்!!!

1983 யூலை இலங்கை வரலாற்றில் மிகவும் கறை படிந்த தினங்கள். யூலைக் கலவரம் இடம்பெற்று இவ்வாண்டு 25 வருடங்கள் ஆகிறது. தமிழ் இளைஞர்களை ஆயுத வழிக்கு தள்ளிய இக்கலவரம் இடம்பெற்று 25 வருடங்களுக்குப் பின் இன்று தமிழர்கள் இலங்கைத் தீவில் வாழ்வதே நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. இத்தினத்தை உலகம் பூராவும் சிதறி வாழும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்கிறார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”1983 - 2008, 25 ஆண்டுகள் ஆறாத துயரம்!!!

Friday 11 July 2008

BBC தமிழோசை விடும் பிழைகள். காலனியச் சொல்லாடலில் சிக்கியுள்ள BBC மொழிச்சேவைகள். செவ்வி : நாகார்ஜுனன்

BBC தமிழோசை விடும் பிழைகள். காலனியச் சொல்லாடலில் சிக்கியுள்ள BBC மொழிச்சேவைகள். செவ்வி : நாகார்ஜுனன் (பகுதி 2) : சேனன்

நீங்கள் சொன்னபடி பத்திரிகை, ஊடகத்துறையில் நிறைய வருஷங்கள் இருந்திருக்கிறீர்கள். பிபிசி தமிழோசையில் நிறைய நாட்கள் வேலை செய்துள்ளீர்கள். தமிழோசைக்கும் உங்களுக்குமான உறவென்ன? என்ன நடந்தது? அதிலிருந்து நீங்கள் ஏன் விடுபட்டீர்கள்? இதுபற்றிச் சொல்லுங்கள்.

பிபிஸியில், தமிழோசையில் இருப்பவர்க்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல.........
http://thesamnet.co.uk/

Thursday 10 July 2008

இந்தியாவுடனான எண்ணெய் ஒப்பந்தம். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து! - விமல் வீரவன்ச

இலங்கையில் எண்ணெய் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்காக இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது முறையற்ற விதத்தில் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பான சிபாரிசுகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நிபுணர்களையும் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் விமல் வீரவன்ச நேற்று (08) பாராளுமன்றில் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியாவுடனான எண்ணெய் ஒப்பந்தம். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து! - விமல் வீரவன்ச

கிழக்கு மாகாண சபையிலிருந்து ரவுப் ஹக்கீம் இராஜினாமா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நேற்றுக்காலை (09) அவர் தமது இராஜினாமா தொடர்பான கடிதத்தை உத்தியோகபுர்வமாகக் கையளித்ததாக கிழக்கு மாகாணசபை செயலாளர் ஆர். தியாகலிங்கம் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாண சபையிலிருந்து ரவுப் ஹக்கீம் இராஜினாமா

சம்பள உயர்வு போராட்டம் தோல்வியடைந்தால் இராஜினாமாச் செய்வேன்! - கே.டி. லால்காந்த

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன்று நடைபெறும் போராட்டம் தோல்வியில் முடிந்தால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய தலைவருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சம்பள உயர்வு போராட்டம் தோல்வியடைந்தால் இராஜினாமாச் செய்வேன்! - கே.டி. லால்காந்த

கிழக்கில் பொலிஸ் பாதுகாப்பு துறைகளில் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் - கருணா

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மீண்டும் நிலைப்பாட்டுள்ளதால் எமது கட்சி உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் பொலிஸ் சேவையில் அல்லது வேறு பாதுகாப்புத் துறையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதன் முதலாவது கட்ட நடவடிக்கை திருகோணமலையில் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் பொலிஸ் பாதுகாப்பு துறைகளில் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் - கருணா

இன்றைய போராட்டம் பாரிய வெற்றி! - கே.டி. லால்காந்த. இன்றைய போராட்டம் படுதோல்வி! - டளஸ் அலகப்பெரும

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன்று (July 10) நடைபெறும் போராட்டம் ஒரு அடையாள வேலை நிறுத்தப் போராட்டமாகும். இன்றைய போராட்டம் பாரிய அளவிலான வெற்றியிலே முடிந்துள்ளது. எனவே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலைய தலைவருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்றைய போராட்டம் பாரிய வெற்றி! - கே.டி. லால்காந்த. இன்றைய போராட்டம் படுதோல்வி! - டளஸ் அலகப்பெரும

”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காண

லண்டன் தமிழர்களுடைய அரசியல் நடவடிக்கைகளில் பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamil Forum - BTF)) மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அது ஆரம்பிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய அரசியல் சக்தியாகவும் அது உருவாகி உள்ளது. பிரித்தானிய தமிழ் ஒன்றியம் ( British Tamil Association - BTA) விடுதலைப் புலிகளின் முன்னரங்க அமைப்பு என்று குற்றம்சாட்டப்பட்டு அதன் உறுப்பினர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது செயலற்று போயுள்ளது. இப்போது தனது அரசியல் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் முடுக்கிவிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உள்ளது. அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரனை தேசம்நெற் இணையத்திற்காகவும் எமது சகோதரப் பத்திரிகையான லண்டன் குரலுக்காகவும் பல்வேறு கேள்விகளுடன் சந்தித்தோம். அதனை எமது வாசகர்களிற்காக இங்கு பதிவிடுகிறோம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Wednesday 9 July 2008

வேலைநிறுத்தம் தொடர வேண்டும்!!! : சேனன்

‘யுத்தத்தை நிறுத்தாமல் எந்தவிதமான போராட்டங்களும் பலனளிக்கப்போவதில்லை. முதலில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.’ என்பதை த ஜெயபாலனும் முகம்மட் அமீனும் எழுதியிருந்த கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது. இலங்கையில் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்கள் பலருக்கும் தோண்றகூடிய சிந்தனைதான் இது. இருப்பினும் அந்த அக்கறையில் மட்டும் அதிகவனம் கொண்டு - எமக்கு முன்வரும் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட நாம் அனுமதிக்கடாது.

இன்றைக்கு இலங்கையில் இருக்கும் பொருளாதார அரசியல் நெருக்கடி நிலையில் இலக்கற்ற போக்கிரித்தனமான யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியது என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. இருப்பினும் விடாப்பிடியாக யுத்த காய்ச்சலுடன் இயங்கும் இந்த இனவாத அரசை யுத்தத்தை நிறுத்தும்படி செய்வது எப்படி என்ற கேள்வியை நாம் சிந்திக்க வேண்டும். அதன் ஒரு பக்கமாகத்தான் இன்று யூலை 10 நடக்கும் பொதுவேலைநிறுத்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கோருகிறோம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வேலைநிறுத்தம் தொடர வேண்டும்!!! : சேனன்

ஜேவிபி யுஎன்பி ரிஎன்ஏ வேலைநிறுத்தம் ஒரு பம்மாத்து!!! உடனடித் தேவை யுத்தநிறுத்தம் : த ஜெயபாலன் & முஹம்மட் அமீன்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சகல போராட்டங்களுமே வரவேற்கப்பட வேண்டும். இன்றைய அரசு தனது மக்களை மிக மோசமான வாழ்நிலைக்குள் தள்ளி உள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம். ஆனால் இன்று அரக்கு எதிராக மக்களின் வாழ்நிலையை தொழிலாளர்களின் வாழ்நிலையை, உயர்த்த வேண்டும் என்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஜேவிபி, யுத்தம் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆக்ரோசமாகக் கோரிவருகிறது. ஜேவிபி இன் இந்த முரண்நகை, அதற்கு முண்டு கொடுக்க வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கும் இவை எதுவுமே தொழிலாளர் நலன் சார்ந்ததல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓடிப்போய் ஏதோ தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டும் என்று சொல்லி இனவாத சக்திகளைக் கட்டிப்பிடிக்க என்ன அவசரம் ஏற்பட்டு உள்ளது என்பது சந்தேகத்தையே எழுப்புகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜேவிபி யுஎன்பி ரிஎன்ஏ வேலைநிறுத்தம் ஒரு பம்மாத்து!!! உடனடித் தேவை யுத்தநிறுத்தம் : த ஜெயபாலன் & முஹம்மட் அமீன்

Monday 7 July 2008

புலம்பெயர் மனநிலையும் -கூட்டுப்பித்தமும்.– நாகார்ஜுனன் -செவ்வி- பகுதி 1-

புலம்பெயர் மனநிலையும் -கூட்டுப்பித்தமும்.– நாகார்ஜுனன் -செவ்வி- பகுதி 1-

நாகார்ஜுனன்’ ஜ அவரது அலுவலகத்துக்கு அருகாமையில் சந்தித்து நடத்திய நீண்ட உரையாடலை 6 பாகங்களாக உங்களுக்கு தருகிறோம். பாகம் இரண்டு வரும் 11ம் திகதி வெள்ளிக்கழமை வெளியாகும்.

நீண்டகால மௌனம். இப்ப மீண்டும் எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள், உங்கள் வலைத்தளத்தில் நித்தம் புதிய பதிவுகள்.. இந்த மாற்றத்தின் காரணம் என்ன?

இதுல புதுசா என்னன்னு நீங்கதான் பார்த்துச் சொல்லணும்..! என்னைப்பொறுத்தவரை, இருபது வருஷத்துக்கும் மேல இந்தியாவில பத்திரிகைத்துறையில் செயல்பட்டிருக்கேன்.. இதுல ஒன்பது வருஷம் முன்னாடி லண்டன் வந்து பிபிஸி வானொலி ஊடகத்தில் பத்திரிகையாளர் மற்றும் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக ஆறு வருஷம் இருந்தேன். இப்போ மூன்று வருஷமா லண்டன் அம்னெஸ்டி இன்டர்நேஷனலில் இந்தியாவில் மனித உரிமை நிலைமைகள் பற்றிய ஆய்வாளராக இருக்கிறேன். இதுலயும் களப்பணி உண்டு. இந்தியாவுக்கு – குறிப்பாக ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு - அடிக்கடி போறதுண்டு. ஆக, இந்த விஷயத்தில் இப்போ மௌனம்னு இல்லைங்கிறேன்..!

..........
http://thesamnet.co.uk/?p=1677

யாருக்கு கதையளக்கிறார் ரிஎன்ஏ பா உ சுரேஸ் பிரேமச்சந்திரன் : த ஜெயபாலன்

யாருக்கு கதையளக்கிறார் ரிஎன்ஏ பா உ சுரேஸ் பிரேமச்சந்திரன் : த ஜெயபாலன்

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டமையினாலும் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் இடதுசாரி முன்னணி சார்பாக அதிக தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளமையினாலும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடதுசாரி முன்னணிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
..........
http://thesamnet.co.uk/?p=1680

Sunday 6 July 2008

‘வடக்கு கிழக்கும் 13வது திருத்தச்சட்டமும்’ பன்முகப் பார்வை - தொகுப்பு : த ஜெயபாலன்

தேசம் சஞ்சிகையினால் யூன் 29ல் ‘வடக்கு கிழக்கும் 13வது திருத்தச்சட்டமும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. பல்வேறுபட்ட கருத்தாளர்களும் கூடி விவாதிப்பதற்கான ஒரு பொதுதுத் தளத்தை இந்நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. தமிழ சமூகத்திடம் பெரும்பாலும் ஒரு குறையாக உள்ள விவாதத்தளத்தை இந்நிகழ்வு அறிமுகப்படுத்தியது நிகழ்வில் கலந்துகொண்ட பலராலும் வரவேற்கட்டது. துருவ அரசியலுக்கு உள்ளளும் விவாதத்திற்கான சில புள்ளிகளைக் கொண்டு உரையாடலை ஏற்படுத்த முடிந்தமை இந்நிகழ்வின் முக்கிய விடயமாக இருந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘வடக்கு கிழக்கும் 13வது திருத்தச்சட்டமும்’ பன்முகப் பார்வை - தொகுப்பு : த ஜெயபாலன்

புலிகள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர்! நோர்வேயிடம் கிழக்கு மா உ இரா துரைரத்தினம் : வி அருட்சல்வன்

புலிகளின் எகப்பிரதிநிதித்துவ கோரிக்கையிலுள்ள பொருத்தப்பாட்டின்மையை நோர்வேயிடம் தெளிவுபடுத்தியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் பிரதிநிதிகள் சர்வதேச தராதர ஜனநாயக நெறிமுகைளுக்கு அது முரணானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய இலங்கைக்குள் முழுமையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் பல்கட்சி ஜனநாயக முறை ஊக்குவிக்கப்பட வேண்டியதன் தேவை பற்றியும் இப்பிரதிநிதிகள் நோர்வே அரசியல் தலைவர்களிடம் விபரித்துள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர்! நோர்வேயிடம் கிழக்கு மா உ இரா துரைரத்தினம் : வி அருட்சல்வன்

Saturday 5 July 2008

மலையக மக்களுக்கு காதில் பூச்சுற்றி பீலா விடுகிறார் பெரும்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி மு ஜெயரத்ன : த ஜெயபாலன்

மலையகத் தோட்டங்களில் குடியிருப்புக்களை குறிப்பிடும் ‘லயன் காம்பறா’ (லயன் அறை) எனும் சொற்பிரயோகத்திற்கு பதிலாக இனிமேல் ‘நிவாஸ’ (இல்லம்) எனும் பதமே பயன்படுத்த வேண்டுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார். ‘இல்லம்’ ‘பெருந்தோட்ட உற்பத்தியாளர்’ ஆகிய சொற்பிரயோகங்கள், விசேட பயிற்சிகள் மற்றும் சீருடை ஆகியன குறித்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளேன். இதற்கான வர்த்தமானி விரைவில் வெளியாகும். அதனைத் தொடர்ந்தும் சொற்பிரயோகங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ஜுலை 02ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார். ‘லயன்கமபறா’ எனும் சொற்பிரயோகம் ஒதுக்கப்பட்ட இடம் போன்றதொரு உணர்வு அங்கே வாழ்வோருக்கு ஏற்படுவதுடன், அதனை உச்சரிக்கும்போது தமக்குள்ளும் ஒருவித உறுத்தல் ஏற்படுகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றார் அமைச்சர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையக மக்களுக்கு காதில் பூச்சுற்றி பீலா விடுகிறார் பெரும்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி மு ஜெயரத்ன : த ஜெயபாலன்

இன்று ஜுலை 05 கரும்புலிகள் தினம் : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகள் இன்று (யூலை 5) தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களில் கரும்புலிகள் தினத்தை அனுஸ்டிக்கின்றனர். 1987 ஜுலை மாதம் 05ஆம் திகதி விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் மில்லரினால் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நெல்லியடி இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தினமே கரும் புலித்தினமாக விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை இராணுவம் ‘ஒப்பிரேசன் லிபரேசன்’ என்ற இராணுவ நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வெற்றிகரமாக முன்னேறி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டு இருந்தனர். கப்டன் மில்லர் வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்துடன் இராணுவம் தங்கியிருந்த நெல்லியடி பாடசாலை முகாம்மீது மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்ததுடன் விடுதலைப் புலிகளின் புதிய இராணுவ உத்தியாகவும் அமைந்தது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று ஜுலை 05 கரும்புலிகள் தினம் : த ஜெயபாலன்

Friday 4 July 2008

தற்கொலைக் குண்டுதாரி பாபுவின் தந்தை கடத்தப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவை கொலை செய்த தற்கொலைக் குண்டுதாரி எனக் கூறப்படும் பாபு என்பவரின் தந்தை நேற்று (July 03) அதிகாலை வெள்ளைநிற வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சர்மா சாமி என்பவர் 70 வயது நிரம்பியவர். இவர் ரம்புக்கன வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள ருகுணு கதிர்காம ஆலயத்தின் பூசாரியாக கடமையாற்றி வந்தார் என்றும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தற்கொலைக் குண்டுதாரி பாபுவின் தந்தை கடத்தப்பட்டார்

”சகல பகுதிகளுக்கும் அபி. பகிரப்படாமையே இன்றைய தேசிய பிரச்சினைக்குக் காரணம்.” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

”அபிவிருத்தி யும் வளங்களும் சகல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படாமையே நாட்டின் இன்றைய பிரச்சினைக்கு முக்கிய காரணமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இலங்கையில் இனங்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் இல்லை. அபிவிருத்தியையும், வளங்களையும் முறையாகப் பகிர்ந்தளிக்காமல் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் அவற்றை மட்டுப்படுத்தியமையே தேசிய பிரச்சினைக்குக் காரணமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”சகல பகுதிகளுக்கும் அபி. பகிரப்படாமையே இன்றைய தேசிய பிரச்சினைக்குக் காரணம்.” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

புலிகளின் தலைவர் பிரபாவுக்கு நீதிமன்ற அழைப்பாணையை கையளிக்க முடியாததால் லக்ஸ்மன் வழக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அடங்கலான பிரதிவாதிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணைகள் கையளிக்க முடியவில்லை என பொலிஸார் கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். சந்தேகநபர்கள் எல்.ரீ.ரீ.ஈ. தலைவர்கள் எனவும், அவர்கள் வன்னியிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ. கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ளதால் அங்கு பொலிஸாருக்கோ, இராணுவத்தினருக்கோ செல்ல முடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளின் தலைவர் பிரபாவுக்கு நீதிமன்ற அழைப்பாணையை கையளிக்க முடியாததால் லக்ஸ்மன் வழக்கு ஒத்தி வைப்பு

”இராணுவ உதவி குறித்ததே இந்திய உயர்மட்ட குழு விஜயம்” TNA எம்.பி. துரைரட்ண சிங்கம்

”இந்திய உயர்மட்ட குழு இராணுவ உதவிகள் குறித்து பேசுவதற்கு திடீர் விஜயம் செய்திருந்தது என்று வெளியாகியிருக்கும் செய்தியை மறுப்பதற்கில்லை. ஏனெனில், இச்செய்தியை வெளியிட்டிருக்கும் பழநெடுமாறன் எம்மைவிட இந்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். இலங்கை தமிழ் மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுள்ளவருமாவார்” என திருமலை மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ண சிங்கம் தெரிவித்தார்...

வடக்கு - கிழக்கும் 13வது திருத்தமும் அரசியல் கலந்துரையாடல் : த ஜெயபாலன்

வடக்கு கிழக்கும் 13வது திருத்தச்சட்டமும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் யூன் 29, அன்று லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுசில் இடம்பெற்றது. பொருளியல் விரிவுரையாளரும், முன்னணி புலம்பெயர் சினிமா இயக்குநருமான ஆர் புதியவன் தலைமையில் இடம்பெற்ற இவ் அரசியல் கலந்துரையாடலை தேசம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருந்தது. தேசம்சஞ்சிகையின் ஆசிரியர் த ஜெயபாலனின் நிகழ் வு பற்றிய அறிமுக உரையைத் தொடர்ந்து, ஈபிடிபி கட்சியின் சார்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்ட முன்னெடுப்பில் கலந்து கொண்ட எஸ் தவராஜா 13வது திருத்தச்சட்டம் பற்றிய அறிமுக உரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரு அமர்வுகளாக நிகழ்வு இடம்பெற்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வடக்கு - கிழக்கும் 13வது திருத்தமும் அரசியல் கலந்துரையாடல் : த ஜெயபாலன்

சுதந்திர சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச செயலூக்க அரங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி : அசோக் - யோகன் கண்ணமுத்து

அன்புடன் நண்பர்களுக்கு, இங்கு தற்போது பதிவிடப்படும் இரண்டு கடிதங்களும் தோழர் பராவினாலும், என்னாலும் எழுதப்பட்டு தனிப்பட்ட சுற்றுக்காக விடப்பட்டவை. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சுதந்திர சிந்தiயாளர்களை, செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய சர்வதேச அரங்கமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியப்பாட்டை ஆதாரமாகக்கொண்டே இவ் இரண்டு கடிதங்களும் எழுதப்பட்டன.

இவற்றுக்கு பெருமளவு ஆதரவு கிடைத்தது. எனினும் தோழர் பராவின் இறப்பினால் ஏற்பட்ட மனச்சோர்வினால் இதனை தொடர முடியவில்லை. இன்று புலம்பெயர்ந்த சுழலில் ஜனநாயக பூர்வமானமான சுதந்திர செயல்பாட்டு அமைப்பொன்றின் அவசிய நிலை உணரப்படுகின்றது. இதனை கவனத்தில் கொண்டே தனிப்பட்ட சுற்றுக்கு விடப்பட்ட இக்கடிதங்கள் தேசம் நண்பர்களுக்காக பதிவிடப்படுகின்றது. உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பாhக்கிறேன்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சுதந்திர சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச செயலூக்க அரங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி : அசோக் - யோகன் கண்ணமுத்து

மக்களின் தேவைகளுக்கு உயிர் அர்ப்பணிப்புடன் சேவை செய்வது ஒரு குற்றமா? எனது சகோதரி மகேஸ்வரி வேலாயுதத்தின் வாழ்க்கையும் அகால மரணமும் : கலாநிதி வேலாயுதம்

மகேஸ்வரி அக்கா 1953.07.17 ஆந் திகதி பிறந்தார். எமது தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த ஒரு பேரூந்து சாரதியாவார். எமது தாயார் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஓர் ஆசிரியராக பணிபுரிந்தார். எமது குடும்பத்தில் பத்து பிள்ளைகள். 07 சகோதரிகளும் 03 சகோதரர்களும். மகேஸ் அக்கா எமது குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவார். சரஸ்வதி வித்தியாலயத்திலும் பருத்தித்துறை வடஇந்து மகளீர் கல்லூரியிலும் கல்வி பயின்ற பின் 1972ஆம் ஆண்டு கொழும்பு சர்வகலாசாலையில் சேர்ந்து எல்.எல்.பி. சட்டப்படிப்பை மேற்கொண்டார். சர்வகலாசாலை கல்வி முடிந்தவுனேயே கொழும்பு தேசிய சுவடி திணைக்களத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். 1974 ல் எமது தந்தை இறந்ததின் பின் எமது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த நியமனம் தேவையாக இருந்தது. அதன் பின் அவர் எமது தந்தையின் மிக நெருங்கிய உறவினரும் தழிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமாகிய திரு. முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் கீழ் பயிலுனராக கடமையாற்றினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மக்களின் தேவைகளுக்கு உயிர் அர்ப்பணிப்புடன் சேவை செய்வது ஒரு குற்றமா? எனது சகோதரி மகேஸ்வரி வேலாயுதத்தின் வாழ்க்கையும் அகால மரணமும் : கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன்

Thursday 3 July 2008

பிரித்தானிய பொலிஸ் பாதுகாப்புடன் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

கேணல் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று (யூலை 3) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இவர் இலங்கை வந்தடைந்ததை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அசாத் மௌலானா உறுதிப்படுத்தி உள்ளார். போலிக் கடவுச்சீட்டில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா, பிரித்தானிய பொலிசாரால் 2007 நவம்பர் 2ல் கென்சிங்ரனில் அவரது குடும்பத்தினருடன் தங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார். ஜனவரியில் இடம்பெற்ற வழக்கில் குறுகிய கால சிறைத் தண்டனை பெற்ற கருணா, மே மாத முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார். பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கேட்காத நிலையிலும், கருணா மீது எவ்வித மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாத நிலையில் கருணா மீண்டும் இலங்கையில் காலடி பதித்து உள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய பொலிஸ் பாதுகாப்புடன் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு சுற்றுலா விஸாவில் சென்று தொழில் புரிய முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு சுற்றுலா விஸாவில் சென்று அங்கு தொழில் புரிய முயற்சிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கமைய இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு தூதரகம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அறிவித்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு சுற்றுலா விஸாவில் சென்று தொழில் புரிய முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Newer Posts Older Posts Home