Thursday, 3 July 2008

பிரித்தானிய பொலிஸ் பாதுகாப்புடன் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

கேணல் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று (யூலை 3) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இவர் இலங்கை வந்தடைந்ததை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அசாத் மௌலானா உறுதிப்படுத்தி உள்ளார். போலிக் கடவுச்சீட்டில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா, பிரித்தானிய பொலிசாரால் 2007 நவம்பர் 2ல் கென்சிங்ரனில் அவரது குடும்பத்தினருடன் தங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார். ஜனவரியில் இடம்பெற்ற வழக்கில் குறுகிய கால சிறைத் தண்டனை பெற்ற கருணா, மே மாத முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார். பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கேட்காத நிலையிலும், கருணா மீது எவ்வித மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாத நிலையில் கருணா மீண்டும் இலங்கையில் காலடி பதித்து உள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய பொலிஸ் பாதுகாப்புடன் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!

No comments: