Wednesday 30 April 2008

மே தினத்துக்கு பின்பு விமலின் புதிய கட்சி

மே தினத்திற்கு முன்னர் ஜே.வி.பி.யில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கட்சித்தலைமை பேச்சு நடத்தாவிட்டால் புதிய அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” - இவ்வாறு விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மே தினத்துக்கு பின்பு விமலின் புதிய கட்சி

‘Journalist are nescessary evils. - ஊடகவியலாளர்கள் அவசியமான பேய்கள்.’ லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாடு : த ஜெயபாலன்

தமிழ் செய்தியாளர் ஒன்றியம் - International Assosiation of Tamil Journalist - IATAJ, ஏப்ரல் 26ல் தனது வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. Media & Sri Lanka’s Conflict: Where is the truth? - ஊடகமும் இலங்கை முரண்பாடும்: எங்கே உண்மை என்ற தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்றது.

”இலங்கையில் இனமுரண்பாடு மீண்டும் வீச்சடைந்ததைத் தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கொலை செய்யப்டுகிறார்கள்” என இம்மாநாடு தொடர்பாக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் வெளியிட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, ”எப்போதும் இல்லாத அளவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அச்சமும் யுத்தமும் உண்மைச் செய்திகளை கொண்டுவருவதை இயலாமல் செய்திருக்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு நீண்டகாலமாக உணரப்பட்டு இருக்கின்றது. முக்கியமாக ஊடகங்கள் இனரீதியான, மத ரீதியான கோடுகளால் பிளவுபட்டு உள்ளது. ஊடகத்தின் செய்திகளும் ஆசிய நிலைப்பாடுகளும் வௌ;வேறு சமூகங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்றாற் போல் வேறுபடுகிறது. நிலைப்பாடுகளை கட்டமைக்கிறது. இதன் காரணமாக ஊடகங்களும் முரண்பாட்டின் ஒருபகுதியாகின்றன” என தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கையேடு தெரிவிக்கின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘Journalist are nescessary evils. - ஊடகவியலாளர்கள் அவசியமான பேய்கள்.’ லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாடு : த ஜெயபாலன்

இலங்கை - ஈரான் காதல் சடுகுடு : வி அருட்செல்வம்

இலங்கை - ஈரானுக்கிடையில் ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து:
இலங்கைக்கும், ஈரானுக்குமிடையில் ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏப்ரல் 28ல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் இலங்கை பெருமளவு நன்மையடையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்பு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டில் விவசாய உற்பத்தித்துறைக்கு முக்கியத்துவமளித்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஈரான் அரசாங்கம் வழங்கவுள்ள பொருளாதார உதவியானது நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த காலகட்டத்தில் கிடைக்கவுள்ள பிரயோசனமிக்க உதவியாகும் என்று தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை - ஈரான் காதல் சடுகுடு : வி அருட்செல்வம்

Tuesday 29 April 2008

”தமிழ்நாட்டு மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை” லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாட்டில் இந்திய பத்திரிகையாளர் முராரி - த ஜெயபாலன்

”தமிழ்நாட்டு மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. அவர்கள் சமாதானமான தீர்வையே எதிர்பார்க்கிறார்கள்.” என சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் - International Assosiation of Tamil Journalist - IATAJ, ஏப்ரல் 26ல் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த மாநாட்டில் இந்திய பத்திரிகையாளர் முராரி தெரிவித்தார். ‘Media and Sri Lanka’s Conflict: Where is the truth? - ஊடகமும் இலங்கை முரண்பாடும்: எங்கே உண்மை?’ என்ற தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”தமிழ்நாட்டு மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை” லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாட்டில் இந்திய பத்திரிகையாளர் முராரி - த ஜெயபாலன்

ஒருபேப்பர்-வாசன் அச்சக கட்டடிம் மீது சோதணை - பிரித்தானிய புலி ஆதரவாளர்கள் மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்து உள்ளனர். வேல்ஸில் உள்ள Newtown, Powys ஆகிய இடங்களில் இருவரும் மூன்றாமவர் லண்டன் மிச்சம் பகுதியிலும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஸ்கொட்லன்ட் யாட் தெரிவிக்கிறது. Newtownல் கைது செய்யப்பட்டவர் முரளீதரன் ஜெகதீஸ்வரன் (39) என்றும் Powysல் கைது செய்யப்பட்டவர் வித்தி தரன் (46) என்றும் மிச்சம் பகுதியில் கைது செய்யப்பட்டவர் முருகேசு ஜெகதீஸ்வரன் (33) என்றும் தெரியவருகிறது. இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பாதுகாப்பு நிறைந்த படிங்ரன்கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஒருபேப்பர்-வாசன் அச்சக கட்டடிம் மீது சோதணை - பிரித்தானிய புலி ஆதரவாளர்கள் மூவர் கைது

இந்தியாவின் தலையீடுதான் இனப்பிரச்சினையின் கொடூரத்தை இலங்கை உணர வழிசெய்தது - எம். சைபுதீன்

இலங்கை அரசு இனப்பிரச்சினையின் கொடூரத்தை உணர இந்தியாவின் தலையீடுதான் வழிசமைத்ததாகப் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான எம். சைபுதீன் குறிப்பிட்டார். சகவாழ்வு மன்றம் கம்பளை சிக்ஸ்டீன் பிளஸ் அமைப்புடன் இணைந்து அண்மையில் கம்பளை பின்வினோ விடுதியில் நடாத்திய செயலமர்வில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியாவின் தலையீடுதான் இனப்பிரச்சினையின் கொடூரத்தை இலங்கை உணர வழிசெய்தது - எம். சைபுதீன்

Monday 28 April 2008

கிழக்கு - இருளுக்குள் எதிர்காலம்! : சபா நாவலன்

ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட பேரினவாத அரசியலுக்கு எதிரான தமிழ் பேசும் மக்களின் போராட்டம், 1983 ம் ஆண்டு அரச ஆதரவுடன் நடந்த இன அழிப்பிற்குப் பின்னர் அதன் உச்ச நிலையை அடைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சத்தியாக் கிரகங்களையும், எதிர்ப்பு ஊர்வலங்களையும், பாராளுமன்ற அரசியற் பேச்சுக்களையும் நம்பியிருந்த தமிழ் பேசும் மக்கள் இன அடக்குமுறை என்பது கொலைக கரங்களுடன் தமது வீட்டுக் கதவுகளைத் தட்டியபோது வேறுபாடுகளையும் விருப்பு வெறுப்புக்களையும் விலக்கி வைத்துவிட்டு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு - இருளுக்குள் எதிர்காலம்! : சபா நாவலன்

வீரவன்ஸவின் வெளியேற்றம் ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா? : பிளேட்டோ

மக்கள் விடுதலை முன்னணியில் எற்பட்டுள்ள பிணக்கு இலங்கை அரசியலில் எற்படுத்தக்கூடிய மாற்றங்களைப் பற்றி இப்போது பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சினை இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணியினதும் ஏனைய அரசியல் கட்சிகளினதும் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வீரவன்ஸவின் வெளியேற்றம் ஜே.வி.பி.யின் இனவாதப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா? : பிளேட்டோ

Sunday 27 April 2008

கிழக்கில் குவியும் அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாரிய பிரச்சினைகள்!!! விரைவில் இலங்கையிலும் - ரூஸோ

எதிர்வரும் மே 10ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கும் தேர்தல் பிரசாரப் பணியிலீடுபடும் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்பு அதிகாரிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதும் இன்றும் அங்கும் இங்கும் புலிகள் தமது கைவரிசையைக் காட்டியே வருகின்றனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் குவியும் அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாரிய பிரச்சினைகள்!!! விரைவில் இலங்கையிலும் - ரூஸோ

கிழக்கில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க ரிஎம்விபி மூன்று அம்சத் திட்டம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், வடக்கு – கிழக்கிலிருந்து பயங்கரவாதத்தை விரட்டியடிப்பதற்காகவும் மூன்று அம்சத் திட்டங்கள் ஒன்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அத்துடன், இந்தத் திட்டத்தை ஆதரித்து கிழக்கு மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க ரிஎம்விபி மூன்று அம்சத் திட்டம்

Saturday 26 April 2008

தமிழரா? முஸ்லீமா? யார் முதலமைச்சராகலாம்

தமிழ் பிரதிநிதிகளுக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தாலேயே தமிழர் ஒருவர் கிழக்கின் முதலமைச்சராக வர முடியும் என சிவநேசதுரை சந்திரசேகரன் (பிள்ளையான்) பகிரங்கமாக கூறியிருப்பதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகமாக கிடைத்தாலும் தமிழரே முதலமைச்சராவார் என்ற கூற்றுக்கள் பொய்யாகிவிட்டன என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழரா? முஸ்லீமா? யார் முதலமைச்சராகலாம்

Friday 25 April 2008

பஸ் வண்டியில் குண்டுவெடிப்பு 25 பேர் பலி 70 பேர் காயம்

இன்று (ஏப்ரல் 25) மாலை 6:50 மணியளவில் கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தல என்ற இடத்தில் நடந்த பஸ் குண்டுவெடிப்டில் 25 வரையானோர் கொல்லப்பட்டதாகவும் 70 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டதாகவும் தெரியவருகிறது. காயமடைந்துள்ளவர்கள் கொழும்பு தெற்கு வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, பிலியந்தலா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பஸ் வண்டியில் குண்டுவெடிப்பு 25 பேர் பலி 70 பேர் காயம்

பாதுகாபு இல்லை தப்பிக்கவும் முடியாது: சிறுவர்களும் வீச்சமடையும் இலங்கை யுத்தமும் : த ஜெயபாலன்

மூன்றாவது தசாப்தமாகத் தொடரும் இலங்கையின் உள்நாட்டுப் போர் அந்நாட்டின் சிறுவர்களை குறிப்பாக யுத்த பூமியாக உள்ள இலங்கையின் வடக்கு கிழக்கு சிறுவர்களை வெகுவாக பாதித்து உள்ளது என்பது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஏப்ரல் 14, 2008ல் Watchlist on Children and Armed Conflict என்ற அமைப்பு இலங்கையில் உள்ள ஆயுத முரண்பாடு எவ்வாறு சிறுவர்களை பாதித்து உள்ளது என்பது பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். No Safety No Escape: Children and the Escalating Armed Conflict in Sri Lanka என்று தலைப்பிடப்பட்டு உள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கமும், எல்ரிரிஈ யும், ரிஎம்விபி போன்ற பிரிந்து சென்ற ஆயுதக் குழுக்களும் நாடு முழுவதும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன என்ற முகவுரையுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆயுத முரண்பாடு கடந்த இரண்டு தசாப்தங்களில் 67,000 மக்களை கொன்றுள்ளதுடன் சொல்ல முடியாத வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாதுகாபு இல்லை தப்பிக்கவும் முடியாது: சிறுவர்களும் வீச்சமடையும் இலங்கை யுத்தமும் : த ஜெயபாலன்

தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினை: மறுக்கப்படக் கூடாது! மறைக்கப்படக் கூடாது!! இல்லையென வாதாடக் கூடாது!!! : நேர்காணல் சி கா செந்தில்வேல் :த ஜெயபாலன்

தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினையை தலித் என்ற பெயரிலோ வேறு என்ன பெயரிலோ அம்மக்களுக்குரிய பிரச்சினையை உண்மையாகவே அவைக்குரிய பின்புலத்தில வைத்து அடையாளம் காண்கிறதும் பிரச்சாரப்படுத்துவதும் தேவையானது. அது மறுக்கப்படக் கூடாது. மறைக்கப்படக் கூடாது. அப்படி ஒன்று இல்லையென்று வாதாடக் கூடாது. இதனை இந்த இயங்கங்களுடைய மோதல்களுக்கோ வேறுபாடுகளுக்கோ ஆளையால் பழி தீர்க்கும் கருவியாகவோ பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியம். வேறு நோக்கங்களுக்கு திசை திருப்பப்படாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நேர்மையாக அந்த மக்கள் சம்பந்தமாக பேச விரும்பினால் அதை யாரும் பேசலாம். :சி கா செந்தில்வேல் ....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினை: மறுக்கப்படக் கூடாது! மறைக்கப்படக் கூடாது!! இல்லையென வாதாடக் கூடாது!!! : நேர்காணல் சி கா செந்தில்வேல் :த ஜெயபாலன்

Thursday 24 April 2008

கட்சியின் வெற்றி முக்கியம் விருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்ளக் கூடாது - அமைச்சர் நிமல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் விருப்பு வாக்குபெறுவதற்காக மோதிக் கொள்ளக்கூடாது. அத்துடன், எதிர்தரப்பினருக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடவும் கூடாது. இதனை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஐ.ம.சு.மு.யின் அம்பாறை மாவட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கட்சியின் வெற்றி முக்கியம் விருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்ளக் கூடாது - அமைச்சர் நிமல்

பாலஸ்தீனமும் இலங்கையும்: இரும்புச் சுவரின் பின்னால் சில பாடங்கள் : ஜெயன் மகாதேவன்

அஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் இது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திரையரங்கில் கேட்ட பல விசும்பல் ஒலிகள் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தின....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாலஸ்தீனமும் இலங்கையும்: இரும்புச் சுவரின் பின்னால் சில பாடங்கள் : ஜெயன் மகாதேவன்

யாழ், பல்கலைக் கழகத்துக்கு சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் முதல் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த இரு வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்திருக்கிறார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ், பல்கலைக் கழகத்துக்கு சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்

”போராளிக் குழுக்களுக்கு உள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் போராட்டம் பலவீனமாகி விட்டது” சட்டசபையில் தமிழக முதல்வர்

போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது” என்று தமிழக முதல்வர் கலைஞர் சட்டசபையில் வருத்தம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று (ஏப்ரல் 23) கேள்வி நேரம் முடிந்ததும் ஜி.கே.மணி (பா.ம.க.) எழுந்து இலங்கை பிரச்சினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது சுதர்சனம் (காங்கிரஸ்), கண்ணப்பன் (ம.தி.மு.க.) ஆகியோர் பேசினார்கள்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”போராளிக் குழுக்களுக்கு உள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் போராட்டம் பலவீனமாகி விட்டது” சட்டசபையில் தமிழக முதல்வர்

Wednesday 23 April 2008

ரணில் - ஹக்கீம் கூட்டணியில் முதலமைச்சராக வருபவரும் பிரிவினைக்குத் துணை போவார் - விஜித ஹேரத்

கிழக்கு மாகாணத்தில் பிரிவினை வாதத்தை பலவீனப்படுத்தும் பிரதான சக்தியாக மக்கள் விடுதலை முன்னணி விளங்கும். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் பிரிவினை வாதத்துக்கு துணைபோகாத சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள், மக்கள் விடுதலை முன்னணியின் கரங்களை பலப்படுத்துவர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான விஜித ஹேரத் நவமணிக்குத் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரணில் - ஹக்கீம் கூட்டணியில் முதலமைச்சராக வருபவரும் பிரிவினைக்குத் துணை போவார் - விஜித ஹேரத்

ரிஎம்விபி க்கு ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி முழுமையான ஆதரவு : த ஜெயபாலன்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - ரிஎம்விபி க்கு, பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக தேசம்நெற்றிற்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அதன் முக்கியஸ்தரான எம் ஆர் ஸ்ராலின் (ஞானம்) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பிரான்ஸில் இருந்து கிழக்கிலங்கை சென்று உள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் சூட்டோடு சூடாக புலம்பெயர் தமிழர்களும் தேர்தல் களத்தில் குதித்து உள்ளனர். குறிப்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா - பிள்ளையான் அணி) இன் புலம்பெயர் ஆதரவாளர்களும் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவாளர்களும் தேர்தல் சடுகுடு ஆட்டத்தை ஆட இறங்கி உள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் வன்முறையற்ற தேர்தலாகவும் சர்வதேச சமூகத்தாலும் வரவேற்கப்படும் வகையிலும் இடம்பெற்றதால் மாகாண சபைத் தேர்தலில் ஆர்வம் அதிகரித்து உள்ளது மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களும் அதில் ஆர்வத்தடன் ஈடுபட்டு உள்ளனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரிஎம்விபி க்கு ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி முழுமையான ஆதரவு : த ஜெயபாலன்

Tuesday 22 April 2008

கடையின் பணியாளர் படுகொலை!, சிறையில் வாலிபர் தற்கொலை!!, தீபம் ரிவியில் 100,000 பவுண் மோசடி!!! - குரல் 23

கடையின் பணியாளர் படுகொலை

சிறையில் தமிழ் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை

தீபம் ரிவியில் 100,000 பவுண் மோசடி குற்றவாளி சிறையில்

மட்டை மோசடியின் மாதாக்கள்

ஹீத்ரோ விமான நிலையத்தை அல்லோல கல்லோலப்படுத்திய தமிழ் வாலிபர்

நீங்களும் ஒருக்கா திங் பண்ணுங்கோ பேராசிரியர் பெக்கோ

லண்டன் குரல் இதழ் 23 வெளிவந்து விட்டது. பார்வையிடுவதற்கு...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடையின் பணியாளர் படுகொலை!, சிறையில் வாலிபர் தற்கொலை!!, தீபம் ரிவியில் 100,000 பவுண் மோசடி!!! - குரல் 23

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் கூடி ஆராய்வு - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

வட அயர்லாந்தின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்ந்துவிட்டு நாடு திரும்பியுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அது பற்றி அடுத்த வாரம் கூடி கலந்துரையாடவுள்ளது. வடஅயர்லாந்தின் அரசியல் தீர்வு முறைமையை உள்ளடக்கியதாக தீர்வுத்திட்ட மொன்றைத் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை இந்தச் சந்திப்பில் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் கூடி ஆராய்வு - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

Monday 21 April 2008

தீபம் தயாரிப்பாளரின் அனுபவம்: தள்ளி வீழ்த்தி சீற்றையும் கிழித்தனர்! : த ஜெயபாலன்

தீபம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நிகழ்ச்சியை தொகுத்து அளிப்பவருமான கார்த்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவரது வேலை நீக்கத்திற்கு முன் இடம்பெற்ற சம்பவங்களே இந்த வேலை நீக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தான் வேலை நீக்கப்பட்டதற்கு எதிராக சுந்தர் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார். தன்னை Levenes Solicitors என்ற சட்ட நிறுவனம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சுந்தர் ஏப்ரல் 2ல் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீபம் தயாரிப்பாளரின் அனுபவம்: தள்ளி வீழ்த்தி சீற்றையும் கிழித்தனர்! : த ஜெயபாலன்

ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்

எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி அஹமதி நஜாத் உமாஓய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதோடு, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பார். இந்த இரு திட்டங்களுக்கும் ஈரான் நிதியுதவியளிப்பது குறிப்பிடத்தக்கது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்

”யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லீம்களின் உரிமைகளை பிள்ளையானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாகும்” - துணை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

நிச்சயமாக நீங்கள் யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்களது உரிமைகளை பிள்ளையானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாகும். யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிள்ளையானின் வெற்றியை உறுதி செய்யும் வாக்குகளாகும். என்று ஓட்டமாவடியில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”யானைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லீம்களின் உரிமைகளை பிள்ளையானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாகும்” - துணை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

Wednesday 16 April 2008

மதம் பற்றிய புதுக் கதைகள் : சேனன்

அண்மையில் வெளியான Richard Dawkins -ன் The God Delusion - கடவுள் என்ற மாயம் - புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றி கதைத்தல்.

ஊறுருப்பட்ட அடையாளங்களின் உலகலாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது. இந்த தருனத்தில் மதம் பற்றி பேசும்பொழுது எம் பார்வையை குறிப்பிட்ட சில அடையாளங்களுக்குள் குறுக்கிக்கொண்டால் கருத்தியல் ரீதியான பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதேசமயம் சில தனித்துவமான கலாச்சாரங்களும், அடையாளங்களும் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதன் பண்புகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தி பார்க்கமுடியாது.

இதன் காரணமாக நாம் இங்கு எந்த ஒரு மையப்புள்ளியையும் சார்ந்து இயங்காமல் எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முயன்றுள்ளோம். அதனால் மதம் என்று சொல்லி வைக்கும் கருத்தை இந்துத்துவம் இஸ்லாம் என்று வலிந்து கணிப்பதோ அல்லது இந்துத்துவம் இஸ்லாம் பற்றி வைக்கும் கருத்துக்களை மதம் சார்ந்து புரிந்து கொள்வதோ தவறான புரிதலுக்கே இட்டுச் செல்லும்.

to read more -click this link

Tuesday 8 April 2008

கனடியர்களின் சமாதானத்திற்கான அழைப்பு

இலங்கையில் ஒரு சமாதான சூழ்நிலை உருவக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 6ல் ஒர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கையின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமாதானத்திற்கான கனடியர்கள் என்ற அமைப்பே இந்நிகழ்வை ஏற்பாடு செய்து உள்ளது. இலங்கையில் ஜனநாயகம், சமூகநீதி, மனித உரிமைகள், சுதந்திரம் என்பன மேம்படுவதை வலியுறுத்தும் இவ்வமைப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் முன்னாள் மேயர் பொப்ரே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்...

கனடியர்களின் சமாதானத்திற்கான அழைப்பு

Monday 7 April 2008

”கிழக்கு மாகாண சபை இயங்கத் தொடங்குவது முக்கியம்” லண்டனில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு : த ஜெயபாலன்

கிழக்கு மாகாணசபை இயங்க ஆரம்பிப்பது முக்கியமானது என அமைச்சர் திஸ்ஸ விதாரண லண்டனில் தெரிவித்தார். அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரனவின் தலைமையில் 9 பேர் கொண்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு வட அயர்லாந்து செல்லும் வழியில் ஏப்ரல் 5ல் லண்டன் வந்தனர். இக்குழுவினர் ஏப்ரல் 6ல் இலங்கை ஜனநாயக குழு (Sri Lanka Democracy Forum) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலிலும் பங்கேற்ற போதே இதனைத் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கிழக்கு மாகாண சபை இயங்கத் தொடங்குவது முக்கியம்” லண்டனில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு : த ஜெயபாலன்

கிளைமோர் குண்டு வைத்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

இன்று காலை வவுனத்தீவு கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீதியில் ‘உரசரி’ எனுமிடத்தில் கிளைமோர் குண்டொன்று வெடித்துள்ளது. இக்கிளைமோர் குண்டினை வெடிக்கவைத்த இருவரையும் விசேட அதிரடி பொலிஸ் படையினர் சுட்டுக்கொலை செய்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளைமோர் குண்டு வைத்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

இன்று சுகாதார தினம் - வலிய நாடுகள் வறிய நாடுகளை அழிக்கின்றன

”ஓஸோ ன் புரட்டக்கோல் ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியா கைச்சாதிடாதது உலகுக்கு இழைக்கும் பெரும் அநீதி என்பதால் அந்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அமெரிக்காவும் இதுவரை அந்த ஒப்பந்தத்துக்கு இணங்கவில்லை. ஓஸோன் ஓட்டைக்கு உடந்தையாக உள்ள நாடுகள் தான் அதிகளவு கார்பன் கழிவுகளை உண்டாக்கி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது எம் போன்ற வளர்முக நாடுகளும், வறிய நாடுகளுமே. இந்த நாடுகளது மக்களின் மனித உரிமை பற்றி சிந்திக்காமல் அநாவசியமாக எமது நாட்டு மனித உரிமை பற்றி அமெரிக்கா பேசுவது சரியா?” இவ்வாறு கேட்டார் சுகாதார போசாக்கு அமைச்சர் சிறிபால டி சில்வா....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று சுகாதார தினம் - வலிய நாடுகள் வறிய நாடுகளை அழிக்கின்றன

பிரிவினையையும் கிழக்கை இந்தியா சுரண்டுவதையும் தடுப்போம்!!! - ஜேவிபி பா உ ஆர் சந்திரசேகரன்

பிரிவினை வாதத்தை தோற்கடிக்கும் ஒரு களமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பயன்படுத்தப் போவதாக அம்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த தேர்தல் மூலம் “முதலமைச்சரை” பெற்றுக்கொள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் கிழக்கிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பிரிவினைவாதம் விதைக்கப்படுகிறது. இந்த விடயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு “பிரிவினைவாதத்தை தோற்கடிப்போம்” என்ற பிரதான தொனிப்பொருளின் அடிப்படையிலேயே ம.வி.முன்னணி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக 3 இனங்களையும் சேர்ந்த வேட்பாளர்களை உள்ளடக்கியதாக எமது கட்சி வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிவினையையும் கிழக்கை இந்தியா சுரண்டுவதையும் தடுப்போம்!!! - ஜேவிபி பா உ ஆர் சந்திரசேகரன்

Sunday 6 April 2008

லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதராண

வட அயர்லாந்து சமாதானத் தீர்வு குறித்து ஆராயும் நோக்கில் சட்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நேற்று (ஏப்ரல் 05) பிரிட்டன் வந்தடைந்தனர். அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரனவின் தலைமையில் 12 பேர் கொண்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு வட அயர்லாந்து செல்லும் வழியில் நேற்றுக் லண்டன் வந்தடைந்தனர். இவர் இன்று இலங்கை ஜனநாயக குழுவினருடன் (Sri Lanka Democracy Forum) இன்று கலந்துரையாடலை மேற்கொள்கிறார். இக்கலந்துரையாடலில் சர்வகட்சிப் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்றனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதராண

மூன்றாவது பாதையும் ஜனநாயகமும் : பாண்டியன் தம்பிராஜா

ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களைக் கொண்ட மூன்றாவது பாதையைப் பற்றிப் பேசுகின்ற உங்கள் கட்டுரை அதிர்ச்சியைத் தராவிட்டாலும் ஆச்சரியத்தின் விசை விழிகளை வெளி நோக்கி விரட்டியடிக்கிறது. மூன்றாம் பாதையை வலியுறுத்தும் எனது கட்டுரையின் சாராம்சத்தையே புரிந்துகொள்ள பின்நின்ற போதும் அதனோடு உடன்படுவதாகவும் கூறிக்கொண்டது தான் ஆச்சரியக்குறியின் ஆரம்பப் புள்ளி. முதலில் பாசிசம் என்றால் என்ன என்று வரைமுறை வரை வரும் எனது கட்டுரை. புலிகள் பாசிசமாக மாறியதை தொட்டுச்சென்று புலி எதிர்ப்பாளர்களதும் ஆதரவுடன் எவ்வாறு அரசு பாசிசப் பயங்கர வாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இதில் நாங்கள் சார்ந்த அமைப்பு இழைத்த தவறையும் இறுதிப் பகுதியில் வெள்ச்சமிட்டுக் காட்டியுள்ளேன்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மூன்றாவது பாதையும் ஜனநாயகமும் : பாண்டியன் தம்பிராஜா

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே உட்பட 12 பலி

இன்று காலை கம்பஹா மாவட்டத்தில் ‘வெலிவேரிய’ நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் இலங்கையின் பெருந்தெருக்கள், தெருக்கள்அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே காலமானார். இரருடன் மேலும் 11 பொதுமக்களும் கொல்லப்பட்டு உள்ளனர். பெர்னான்டோபுள்ளே ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனாதிகாரியும், சிறந்த பேச்சாளருமாவார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே உட்பட 12 பலி

Friday 4 April 2008

கிழக்கு தேர்தலில் 35 இடங்களுக்கு 1342 வேட்பாளர்கள் போட்டியில்

2008.05.10ஆம் திகதி கிழக்கிலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான கால எல்லை ஏப்ரல் 03 நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தலில் 35 இடங்களுக்கு 1342 வேட்பாளர்கள் போட்டியில்

இலங்கை ஜனநாயக ஒன்றியமும் மூன்றாவது பாதையும் : சி ராஜேஸ்குமார்

மூன்றாவது பாதை என்ற தலைப்பில் பாண்டியன் எழுதிய கட்டுரையின் அடிப்படை விடயங்களுடன் ஒத்து போகும் அதேவேளை இலங்கை ஜனனாயக ஒன்றியம் சம்பந்தமான தகவல் பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியனும் ஜனநாயக ஒன்றியத்தின் ஆரம்ப காலங்களில் இருந்து அது நடாத்திய பல சர்ச்சைகள் விவாதங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கு பற்றியுள்ளார். பகிரங்க கூட்டங்களுக்கு வந்து ஆதரவு நல்கியிருக்கிறார். இந்த வகையில் அவர் ஜனநாயக ஒன்றியம் சம்பந்தமாக பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை ஜனநாயக ஒன்றியமும் மூன்றாவது பாதையும் : சி ராஜேஸ்குமார்

மலையகத்தில் தமிழ் கிராம அலுவலர்களை இரட்டிப்பாக்க வேண்டுகோள்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் 1000 பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் கிராமசேவை அதிகாரி, விவாகப் பதிவாளர், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும். அத்துடன் மேற்கண்ட பதிவகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தமிழ்மொழி மூலம் கடமையாற்றக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் டி.வி. சென்னன் தலைமையிலான உயர்மட்ட தூதுக் குழுவினர் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்த மகஜரொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையகத்தில் தமிழ் கிராம அலுவலர்களை இரட்டிப்பாக்க வேண்டுகோள்

கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் விடுதலைப் புலிகள்?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) புதன்கிழமை (ஏப்ரல் 02) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யோகரட்ணம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பேரது பெயர்பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக தற்போது இயங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணித்து உள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பெயரில் வேட்புமனுத் தாக்கள் செய்யப்பட்டு இருப்பது பலத்த சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கல் தொடர்பாக விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் விடுதலைப் புலிகள்?

Thursday 3 April 2008

பிரிட்டிஸ் எம்.பிக்கள் குழுவின் மட்டு விஜயம் : த ஜெயபாலன்

இலங்கை வந்துள்ள பிரிட்டிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (ஏப்ரல் 02) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வமதப் பிரமுகர்கள், படை அதிகாரிகள் பலரையும் இக்குழு தனித்தனியாகச் சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை பற்றிக் கேட்டறிந்து கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும் இச்சந்திப்பில் இக்குழுவால் கேட்டறியப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் அன்ரூ லவ், அன்ரோ குரோக்லிங், ஸ்ரீபன் ஹாமன்ட், டாக்கடர் அசோக்குமார் ஆகியோர் வருகை தந்திருந்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிட்டிஸ் எம்.பிக்கள் குழுவின் மட்டு விஜயம் : த ஜெயபாலன்

திருமலை மூதூர் படுகொலைகள் - சூத்திரதாரிகள் அம்பலம் : UTHR(J) அறிக்கை

திருகோணமலை தமிழ் மாணவர் ஐவர் படுகொலை 17 (ACF) பணியாளர் படுகொலை சம்பந்தமாக 2008 ஏப்பிரல் முதலாம் தேதி வெளிவந்த UTHR(J) இன் விசேட அறிக்கை 30 பற்றி அதே அமைப்பினால் வெளியிடப்பட்ட PRESS RELEASE. - தமிழில் நட்சத்திரன் செவ்விந்தியன்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திருமலை மூதூர் படுகொலைகள் - சூத்திரதாரிகள் அம்பலம் : UTHR(J) அறிக்கை

Wednesday 2 April 2008

மூன்றாவது பாதையை நோக்கி …..!!! : பாண்டியன் தம்பிராஜா

பாசிசம் என்பதற்கு முசோலினியிலிருந்து ஜோர்ஜ் புஷ் வரைக்கும் பல்வேறு அரசியல் வரைவுகளையும் அர்த்தங்களையும் மனிதகுலத்தின் போலிஸ் காரர்களாகத் தம்மை எண்ணிக்கொண்டு முன்வைத்துள்ளனர். 1922ம் ஆண்டிலிருந்து இத்தாலியை ஆண்ட முசோலினி உருவாக்கிய பாசிசம் பின்னதாக முதலாளித்துவ அரசுகளால் கம்யூனிசத்தைத் தாக்குவதற்கான இன்னொரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. சமூகவியலாளர்களும் அரசியற் தலைவர்களும் காலத்திற்குக் காலம் பாசிசத்தை மத்தியத்துவப் படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் சார்ந்ததாக மட்டுமே காண முற்பட்டனர். சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிரான தத்துவார்த்த அடிப்படையானது மக்களை அணிதிரட்டுவதிலும் ஒரு தலைமையை நோக்கி அவர்களை மத்தியத்துவப் படுத்துவதிலும் வெற்றிகொள்ளும் போது பாசிசம் உருவாகிறது என்பது இடதுசாரிகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைமுறையாகும். பாசிசத்தின் உருவாக்கத்திற்கான ஆதரவு சக்திகளாக சாதாரண மக்களிலிருந்து புத்திஜீவிகள் வரை உலகத்தைக் கூறுபோட்டு இருக்கிறார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மூன்றாவது பாதையை நோக்கி …..!!! : பாண்டியன் தம்பிராஜா

கிழக்கு தேர்தல் களம் - மட்டு நேரடி ரிப்போர்ட் : வீ. அருட்செல்வன்

கிழக்கு மாகாணத் தேர்தலில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கட்டத்தில் ‘தேசம் நெற்’ சார்பாக கிழக்கு மாகாணத்தில் கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக வேண்டி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டோம். கிழக்கு மாகாண மக்களின் தேர்தல் குறித்த மனோநிலைகள் பற்றி அறிந்து கொள்வதே எமது முக்கிய நடவடிக்கையாக இருந்தது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தல் களம் - மட்டு நேரடி ரிப்போர்ட் : வீ. அருட்செல்வன்

வேலைவாய்ப்பின்மையை இல்லாதொழிப்பதே நோக்கம் - பிரதி அமைச்சர் இராதகிருஸ்ணன்

தொழில்நுட்பக் கல்வியையும், தொழில்நுட்ப பயிற்சிகளையும் வழங்கி, திறன்மிக்க தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி மலையகத்தில் வேலை வாய்ப்பின்மையை இல்லா தொழிப்பதே எனது நோக்கமாகும் என வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பெ. இராதகிருஸ்ணன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வேலைவாய்ப்பின்மையை இல்லாதொழிப்பதே நோக்கம் - பிரதி அமைச்சர் இராதகிருஸ்ணன்

Tuesday 1 April 2008

இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா: போரை நிறுத்த உதவவும் - ரிஎன்ஏ; உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் - ஜேவிபி

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இலங்கையை வற்புறுத்தும்படி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேசமயம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சோமவன்ச அமரசிங்க தலைமையிலான வேவிபி குழுவினர் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனக் கோட்டுக் கொண்டு உள்ளனர். நேற்று மார்ச் 31, பிரித்தானிய பாராளுமன்றத்தின் சந்திப்புக் கூடத்தில் இடம்பெற்ற வேறு வேறு சதிப்பின் போதே இவ்வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா: போரை நிறுத்த உதவவும் - ரிஎன்ஏ; உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் - ஜேவிபி

லண்டன் உதயன் இதழ் 60

லண்டன் உதயன் பத்திரிகை இதழ் 60 வெளிவந்து உள்ளது. வாசிக்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் உதயன் இதழ் 60

ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த ஆயுதக் குழுக்களை கௌரவமாக நடத்த வேண்டும் - அமைச்சர் கரு ஜயசூரிய

ஆயுதம் ஏந்தியவர்கள் ஜனநாயகத்துக்கு வந்துள்ளனர். அவர்களை சிறப்பாக வழிநடத்த வேண்டியது நம்மனைவரினதும் பொறுப்பு. எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு இம்மாவட்டத்தில் புதுயுகத்தை ஏற்படுத்தப் போகின்றது. 25 ஆண்டுகளுக்கு பின்பு கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கின்றனர் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை (மார்ச 29) அன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த ஆயுதக் குழுக்களை கௌரவமாக நடத்த வேண்டும் - அமைச்சர் கரு ஜயசூரிய

கிழக்கு முஸ்லிம்களின் ‘தாயகபூமி’ தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் - மு கா தலைவர் ஹக்கீம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி இதுவரை எந்தவிதமான இறுதித் தீர்மானத்துக்கும் வரவில்லை. கிழக்கிலும் பொதுவாக நாடு முழுவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு தனது அரசியல் பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வமே மக்களிடம் மேலோங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்சி பெறும் ஆசனங்கள் ஒரு பாரிய பங்கை வகிக்கப் போகின்றது. சரியான வியூகங்களை வகுத்தால் இங்கு நிச்சயமாக 5 ஆசனங்களை எம்மால் பெற முடியும். இங்கு தனித்துப் போட்டியிடுவதாக இருந்தாலும் 3 ஆசனங்களைப் பெறக் கூடிய நிலை எமக்கு இருக்கிறது. இதன் மூலம் கிழக்கு, முஸ்லிம்களின் தாயகப் பூமி என்பதை நிரூபிக்கலாம். இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். மூதூரில் கடந்த வியாழன்று (Mar 27) நடைபெற்ற மு.காங்கிரஸின் மத்திய குழுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு முஸ்லிம்களின் ‘தாயகபூமி’ தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் - மு கா தலைவர் ஹக்கீம்
Newer Posts Older Posts Home