மூன்றாவது தசாப்தமாகத் தொடரும் இலங்கையின் உள்நாட்டுப் போர் அந்நாட்டின் சிறுவர்களை குறிப்பாக யுத்த பூமியாக உள்ள இலங்கையின் வடக்கு கிழக்கு சிறுவர்களை வெகுவாக பாதித்து உள்ளது என்பது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஏப்ரல் 14, 2008ல் Watchlist on Children and Armed Conflict என்ற அமைப்பு இலங்கையில் உள்ள ஆயுத முரண்பாடு எவ்வாறு சிறுவர்களை பாதித்து உள்ளது என்பது பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். No Safety No Escape: Children and the Escalating Armed Conflict in Sri Lanka என்று தலைப்பிடப்பட்டு உள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கமும், எல்ரிரிஈ யும், ரிஎம்விபி போன்ற பிரிந்து சென்ற ஆயுதக் குழுக்களும் நாடு முழுவதும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன என்ற முகவுரையுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆயுத முரண்பாடு கடந்த இரண்டு தசாப்தங்களில் 67,000 மக்களை கொன்றுள்ளதுடன் சொல்ல முடியாத வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாதுகாபு இல்லை தப்பிக்கவும் முடியாது: சிறுவர்களும் வீச்சமடையும் இலங்கை யுத்தமும் : த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment