கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - ரிஎம்விபி க்கு, பிரான்சைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக தேசம்நெற்றிற்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அதன் முக்கியஸ்தரான எம் ஆர் ஸ்ராலின் (ஞானம்) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பிரான்ஸில் இருந்து கிழக்கிலங்கை சென்று உள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் சூட்டோடு சூடாக புலம்பெயர் தமிழர்களும் தேர்தல் களத்தில் குதித்து உள்ளனர். குறிப்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா - பிள்ளையான் அணி) இன் புலம்பெயர் ஆதரவாளர்களும் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவாளர்களும் தேர்தல் சடுகுடு ஆட்டத்தை ஆட இறங்கி உள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் வன்முறையற்ற தேர்தலாகவும் சர்வதேச சமூகத்தாலும் வரவேற்கப்படும் வகையிலும் இடம்பெற்றதால் மாகாண சபைத் தேர்தலில் ஆர்வம் அதிகரித்து உள்ளது மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களும் அதில் ஆர்வத்தடன் ஈடுபட்டு உள்ளனர்.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரிஎம்விபி க்கு ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி முழுமையான ஆதரவு : த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment