பிரிவினை வாதத்தை தோற்கடிக்கும் ஒரு களமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பயன்படுத்தப் போவதாக அம்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இந்த தேர்தல் மூலம் “முதலமைச்சரை” பெற்றுக்கொள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் கிழக்கிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பிரிவினைவாதம் விதைக்கப்படுகிறது. இந்த விடயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு “பிரிவினைவாதத்தை தோற்கடிப்போம்” என்ற பிரதான தொனிப்பொருளின் அடிப்படையிலேயே ம.வி.முன்னணி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்காக 3 இனங்களையும் சேர்ந்த வேட்பாளர்களை உள்ளடக்கியதாக எமது கட்சி வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிவினையையும் கிழக்கை இந்தியா சுரண்டுவதையும் தடுப்போம்!!! - ஜேவிபி பா உ ஆர் சந்திரசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment