Tuesday 28 October 2008

நான் சரவணன் அல்ல வித்யா பற்றிய ஒரு உரையாடல் : தர்மினி (பிரான்ஸ்)

பலருக்கும் திரு நங்கைகள் பற்றிய பிரமைகள் தமிழ் திரைப்படங்களில் அவர்களைப் பற்றிக் கட்டமைப்பதில் தோன்றுகிறது. ஒரு காட்சியிலோ பாடலின் இடையிலோ தோன்றுதல் என்பதாக அமைகிறது. அவற்றின் தொனி எதுவென்பதும் அக்காட்சிகளில் தெளிவாகத் தென்படும். பொதுவெளிச்சமூகம் திரு நங்கைகள் பற்றிய எதுவிதமான புரிதல்களும் அற்றதாகவே உள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளை உணர்வுகளை உடலின் மாற்றங்களை விளங்கிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நான் சரவணன் அல்ல வித்யா பற்றிய ஒரு உரையாடல் : தர்மினி (பிரான்ஸ்

Wednesday 1 October 2008

பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் அமைதிப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழ் போறத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஒக்ரோபர் 6ää திக்கட் கிழமை மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை இவ்வமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோடைகால விடுமுறையின் பின் ஒக்ரோபர் 6ல் பாராளுமன்றம் கூட இருப்பதால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பார்கள் என தமிழ் போறத்தினர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளனர். வன்னிப் பகுதியின் மீது இலங்கை அரசபடைகள் நடாத்தும் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக்களை உடனடியாக நிறுத்தும் படி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் கோர உள்ளனர். மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னிப் பகுதியிலேயே இடம்பெயர்ந்து உள்ள 230,000 மக்களுக்கும் பிரித்தானிய அரசு உடனடியா நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவ்வமைதிப் போராட்டத்தில் கோர உள்ளனர். தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு தமிழரதும் கடமை எனவும் பிரித்தானிய தமிழ் போறத்தினர் தெரிவித்து உள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்

வன்னியில் தரையிலும் கடலிலும் கடும் சமர். 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்வு. : தொகுப்பு ஏகாந்தி

வன்னிப் பிரதேசம் மீது நடத்தப்பட்டு வரும் தரைவழி வான்வழித் தாக்குதல்களால் சுமார் 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்பட்டு வருகின்றனர். எனினும் பௌத்தம் பேசும் ஜனாதிபதியும் அவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் அந்த மக்கள் நிலை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுகின்றவர்கள் இல்லை என்று. புதிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னியில் தரையிலும் கடலிலும் கடும் சமர். 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்வு. : தொகுப்பு ஏகாந்தி