Tuesday 30 September 2008

திருக்கோணேஸ்வரர் ஆலயக் குருக்களின் படுகொலையும் பௌத்த பேரினவாதமும் : ஜெ ஜென்னி

யாழ்ப்பாண பிரதேசங்களிலிருந்து 90களுக்கு பின் ஏற்பட்ட போர்ச் சூழல்களால் இடம் பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை என தமிழர் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இந்த சூழலில் அல்வாய் மேற்கு என்ற பிரதேசத்திலிருந்து உயிர்தப்பி பிழைப்பு தேடி வந்த ஒரு இளம் குருக்கள் தான் இந்த சிவ சிறி சிவ கடாட்ச சிவகுகராஜா குருக்கள். 30.05.69ல் பிறந்த இவர் 4 பிள்ளைகளின் தந்தையுமாவார். ஒரு சமயக் குருக்களாக இருந்தாலும், சாதி மதங்களுக்கு அப்பாலும் மககளை நேசித்த மனிதனாக வாழ்ந்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திருக்கோணேஸ்வரர் ஆலயக் குருக்களின் படுகொலையும் பௌத்த பேரினவாதமும் : ஜெ ஜென்னி

Monday 29 September 2008

தோழரும் - அம்மானும் சந்திப்பு! பழைய உறவு மலர்கிறது? : த ஜெயபாலன்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனும் நேற்று செப் 28ல் சந்தித்து உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கருணா அணி - பிள்ளையான் அணி என்ற முரண்பாடு தீர்க்கப்படாத சூழலில் ஈபிடிபி க்கும் ரிஎம்விபி யின் கருணா அணிக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்று உள்ளது. இது புதிய அணி ஒன்று உருவாவதை நோக்கியதா என்ற கேள்வி தமிழ் அரசியல் வட்டாரங்களில் எழுந்து உள்ளது. பிரித்தானியாவில் இருந்து கருணா திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தோழரும் - அம்மானும் சந்திப்பு! பழைய உறவு மலர்கிறது? : த ஜெயபாலன்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (29) முடிவு - கோத்தபாய ராஜபக்ஷ

வன்னியில் தன்னார்வ தொண்டுகளில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த பிரதேசத்தைவிட்டு வெளியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனிவரும் வரும் காலங்களில் தொடர்ச்சியாக வன்னியில் தங்கியிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (29) முடிவு - கோத்தபாய ராஜபக்ஷ

Sunday 28 September 2008

கருத்துச் சுதந்திரம்: தினக்குரல் பத்திரிகையில் கையெழுத்தாளர்களின் பெயர்கள் சுயதணிக்கை : வி அருட்செல்வன்

‘கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுப்போம்’ என்ற தலைப்பில் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில் தேசம்நெற் இணையத்தின் கருத்துச் சுதந்திர தளத்திற்கு எதிராக கையழுத்து இட்டவர்களின் பெயர்களை தினக்குரல் பத்திரிகை சுயதணிக்கை செய்து உள்ளது. இவர்களின் பெயர்களை வெளியிடுவது தங்களது ஊடகவியலாளர்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் என்பதால் அச்செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்த அப்பத்திரிகை கையெழுத்திட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் தவிர்த்து உள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்துச் சுதந்திரம்: தினக்குரல் பத்திரிகையில் கையெழுத்தாளர்களின் பெயர்கள் சுயதணிக்கை : வி அருட்செல்வன்

இலங்கையின் மோசமான சூழலைத் தடுக்க தலையிடுங்கள் - தவிகூ பகிரங்க அழைப்பு

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை கைப்பற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தற்சமயம் வடக்கில் கடும் யுத்தம் செய்து வருகிறது. ஆதன் பகுதியாக அண்மையில் வன்னி பிரதேசத்தில் அரசு யுத்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த யுத்த நடவடிக்கைகளினால் வன்னி பிரதேசத்துக்குள் பாரிய மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த இடம்பெயர்ந்த மக்கள் மோசமான மனிதஅழிவு நிலையை எதிர்கொண்டுள்ளார்கள். இப்பகுதிக்கு உணவு மருத்துவபொருட்கள் எடுத்துசெல்ல ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடையானது இம் மக்களின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையின் மோசமான சூழலைத் தடுக்க தலையிடுங்கள் - தவிகூ பகிரங்க அழைப்பு

Saturday 27 September 2008

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் - ஒரு பார்வை : த ஜெயபாலன்

இன்று (28 செப்) அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்ட தமிழ் அகதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று லண்டனுக்கு வெளியெ ஹெஸ்ரிங் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாஸ் என்ற அரச உதவியுடன் வாழும் 30க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் ஹெஸ்ரிங் பகுதியில் வாழ்கின்றனர். லண்டனில் வாழும் 100,000க்கும் அதிகமான தமிழர்களுடன் அல்லாமல் லண்டனில் இருந்து பல மைல்கள் ஒதுக்குப்புறமாக கடற்கரையை ஒட்டிய பிரதேசமொன்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அரச உதவிபெறுபவர்களை லண்டனுக்கு வெளியே நாட்டிக் பின் தங்கிய பகுதிகளில் அரசு குடியமர்த்தி வருவது கடந்த பல ஆண்டுகளாக ஒரு செயன்முறையாக இருந்து வருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் - ஒரு பார்வை : த ஜெயபாலன்

வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அரசு கூறுவது சுத்தப் பொய். - மாவை சேனாதிராஜா

“வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அரசு கூறுவது சுத்தப் பொய். அதில் துளியும் உண்மை இல்லை. அங்குள்ள மக்கள் இப்போதும் பட்டினியால் வாடுகின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். வன்னிக்குப் போதிய உணவு அனுப்புவதை உறுதிப்படுத்தவும், துரிதப்படுத்தவும் நாடாளுமன்றம் முழு அளவில் தலையிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அரசு கூறுவது சுத்தப் பொய். - மாவை சேனாதிராஜா

படை நடவடிக்கைகள் காரணமாக 53561 குடும்பங்களைச் சேர்ந்த 219058 அங்கத்தவர்கள் முல்லை மாவட்டத்தில்..

இராணு வத்தினரின் படை நடவடிக்கைகள் காரணமாக இரண்டு லடசத்திற்கும் மேற்பட்ட மக்கள் முல்லை மாவட்டத்திற்குள் வந்து தங்கியுள்ளதாக முல்லைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. பார்திபன் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் திகதி வரை 53561 குடும்பங்களைச் சேர்ந்த 219058 அங்கத்தவர்கள் முல்லை மாவட்டத்திற்குள் வந்து தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிலர் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், ஒரு தொகுதியினர் பாடசாலைகள் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர் எனவும், உலக உணவுத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு உணவப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் பாதிக்கபபட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படை நடவடிக்கைகள் காரணமாக 53561 குடும்பங்களைச் சேர்ந்த 219058 அங்கத்தவர்கள் முல்லை மாவட்டத்தில்..

Friday 26 September 2008

சிதைந்து செல்லும் புலம்பெயர் ஜனநாயகம். : பாண்டியன் தம்பிராஜா

கிட்டத்தட்ட புலிக்கும் புளொட்டிற்கும், புலிக்கும் ரெலோவிற்கும் போன்ற எதிரி உணர்வுகள் வந்து விட்டதா? 20-25 வருடங்கள் நெருங்கி பழகிய எமக்குள் அடங்கியிருந்த இயக்க வாத மிருகம் தலைதூக்கி விட்டது போலுள்ளது. நாம் தேசம் - ராகவன் குறூப் என கண்ணை கட்டுகிறோம்? ஒரு காலத்தில் கால் முறிந்த நேரத்தில் ஓடோடி வந்து பார்த்து ஆறுதல் சொன்னவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு அலைந்து காவலுக்கு நின்றவர்கள் இன்று காலை முறிப்போம் என கங்கணம் கட்டி நிற்பது ஏன்? நண்பர்களே சிந்திப்போம்.!

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சிதைந்து செல்லும் புலம்பெயர் ஜனநாயகம். : பாண்டியன் தம்பிராஜா

ரெலோ தலைவர் செல்வம் முன்னாள் போராளியுடன் இரு மணிநேரங்கள் : ரி சோதிலிங்கம்

கட்டுரையிலுள்ள பல கேள்விகளின் நியாயத்தன்மையை தான் விளங்கிக் கொள்வதாகக் கூறிய செல்வம் கடந்த காலத்தில் ரெலோவில் இணைந்து வேலை செய்த தோழர்களையும் ஒன்று சேர்த்து கூட்டம் ஒன்றை நடாத்தி, கடந்தகால சரி, பிழைகள் பற்றி விமர்சிக்கவே தான் விரும்புவதாகவும், ஆனால் இது உடனடியாக சாத்தியமில்லை என்றும் கூறினார்.

தாம் தற்போது நடைபெறும் யுத்தம் சம்பந்தமாகவே முக்கிய கவனம் செலுத்துவதாகவும், அதில் இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கெதிரான - யுத்ததிற்கெதிரான பிரச்சாரங்களில், முக்கிய கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரெலோ தலைவர் செல்வம் முன்னாள் போராளியுடன் இரு மணிநேரங்கள் : ரி சோதிலிங்கம்

Wednesday 24 September 2008

பள்ளமடு மக்களை விடுவியுங்கள். அவர்களை சுதந்திரமாக பயணிக்க அனுமதியுங்கள்!!! : ஜெ.ஜென்னி

மன்னார் முருங்கன் பகுதியில் பள்ளமடு என்னும் கிராமத்தில் கடந்த நாலரை மாதங்களாக ராணுவ பாதுகாப்பு வலையமாக்கப்பட்ட பிரதேசத்தில் இன்று எம் மக்கள் படும் அவலங்களை யார் அறிவார். புலிப் பாசிசத்தின் பிடியிலிருந்து இலுப்பக்கடவை, முழங்காவில், நாச்சிக்குடா, மல்லாவி, துணுக்காய், பல்லவராயன்கட்டு, கரிகாலநானப்படுவான், கிராஞ்சி, வேரவில், வலப்பாடு, புநகரி என்ற கிராமங்களில் இருந்து அல்லல்பட்டு, அவதியுற்று மரண பீதிகளுடன் நாடோடிகளாக இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசும் - அதன் யந்திரமான ராணுவமும் உள்நோக்கத்துடன் வரவேற்றது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பள்ளமடு மக்களை விடுவியுங்கள். அவர்களை சுதந்திரமாக பயணிக்க அனுமதியுங்கள்!!! : ஜெ.ஜென்னி

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்; என இலங்கை ஊடகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் சீற்றம்

இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து கவலையடைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகள், ஐரோப்பிய அயலுறவு கொள்கை போன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா, இலங்கை ஊடகங்களில் ஐரோப்பிய ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்திருப்பதையிட்டு கவலையடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ள அவர் அதில் தெரிவித்திருப்பதாவது;

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் - என இலங்கை ஊடகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் சீற்றம்

வன்னியில் யுத்தம் உக்கிரம். நியுயோர்க்கில் ஜனாதிபதி, சொல்ஹெய்ம் சந்திப்பு - ஏகாந்தி

வடபகுதியில் யுத்த நிலை கடந்த இரு வாரங்களாக மிகவும் உக்கிரமமான நிலையில் இருப்பதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் (22) வடபகுதியில் ஐந்து இடங்களில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல நேற்று (23) மோதல்கள் தொடர்ந்துள்ளன.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னியில் யுத்தம் உக்கிரம். நியுயோர்க்கில் ஜனாதிபதி, சொல்ஹெய்ம் சந்திப்பு - ஏகாந்தி

Monday 22 September 2008

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு உணவு விநியோகம்: விசேட கலந்துரையாடல் இன்று.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான உணவு விநியோகம் தொடர்பாக ஆராயவென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உலக உணவுத் திட்ட உயரதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வழமைபோன்று எதுவிதமான குறைபாடுகளுமின்றி தொடராக நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஐ. நா. வின் பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் பயணமாவதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு இந்தப்பணிப்புரையை வழங்கினார். இப்பணிப்புரைக்கு அமையவே அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன உலக உணவுத் திட்ட கொழும்பு அலுவலக சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு உணவு விநியோகம்: விசேட கலந்துரையாடல் இன்று.

போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

யாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

Sunday 21 September 2008

உள்ளாடை அரசியல் : ஜெ ஜென்னி

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்கா - ஐரோப்பா உட்பட்ட மேலை நாடுகளில் பல சமூக பொருளாதார கலாச்சார புரட்சிகளும், பல அரசியல் மாற்றங்களும் நடந்தேறின. இதில் பெண்களும் வெகுஜனசக்திகளாக சரிக்குச் சரி பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதில் பெண்கள் தங்கள் தஙகள் வாழ்நிலைக்கு ஏற்றவாறு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாம் சார்ந்த வர்க்கப் பிரிவினரின் குணாம்சங்களோடு சமூக மாற்றத்தையும் பெண்கள் உரிமையையும் முன்நிலைப்படுத்தினர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
உள்ளாடை அரசியல் : ஜெ ஜென்னி

தேசம்நெற் இணையத்திற்கு ஆப்பு! புலம்பெயர் ஜனநாயகவாதிகள் தேசம்நெற்றுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!! : நவமணி

அண்மையில் தேசம்நெற் தொடர்பாக வெளிவந்த அறிக்கை பற்றி இலங்கையில் வெளியாகும் நவமணி பத்திரிகையில் இன்று (செப் 21) வெளியான செய்தி. தற்போது தேசம்நெற்றில் இடம்பெறும் கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாக இச்செய்தி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசம்நெற் இணையத்திற்கு ஆப்பு! புலம்பெயர் ஜனநாயகவாதிகள் தேசம்நெற்றுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!! : நவமணி

Friday 19 September 2008

யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு : விம்பம்

28 ஞாயிறு செப்டம்பர் 2008, மாலை 2.30 — 07.00
Quakers Meeting House, Bush House, Wanstead, London, E11 3AU

தலைமையுரை - திரு. மு.புஷ்பராஜன்
வரவேற்புரை - திரு. யோ.நவஜோதி
இந்தியப் பிரிவினை சினிமா - திரு. ச.வேலு
வன்முறை திரைப்படம் பாலுறவு - திரு.கே.கிருஷ்ணராஜா
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - திரு. ந.சபேசன்
மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை - திரு. ப. சந்துஷ்
நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை - திரு. மு.நித்தியானந்தன்
அரசியல் இஸ்லாம் - திரு. எஸ்.எம்.எம். பஸீர்

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு : விம்பம்

Monday 15 September 2008

இணக்கத்தின் அடிப்படையில் பொறியியலாளர்களையும் இணக்கப்பாடு முடியும் வரையில் சேவைக்காக அனுப்பி வைக்கும் நடைமுறை உண்டு.

வவுனியா படைத்தலைமையகத் தாக்குதலில் காயமடைந்த இந்தியாவின் இரண்டு பொறியியலாளர்களையும் திருப்பியழைப்பதென்பது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான விடயமெனவும், இரண்டு அரசாங்கங்களும் இணங்கிக் கொண்டமைக்கு அமையவே இந்த இரண்டு பொறியியலாளர்களும் திருப்பியழைக்கப்பட்டதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இணக்கத்தின் அடிப்படையில் பொறியியலாளர்களையும் இணக்கப்பாடு முடியும் வரையில் சேவைக்காக அனுப்பி வைக்கும் நடைமுறை உண்டு.

Sunday 14 September 2008

வரையறுக்கப்பட்ட பகுதி நேர ஜனநாயகவாதிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

இந்தக் கட்டுரை எங்களுடைய புலம்பெயர் ஜனநாயக, கலை, இலக்கிய, தத்துவார்த்த……. மேதைகளின் அறிக்கை வருவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. அதனால் இவர்களுடைய இந்த அறிக்கை பற்றி எதுவும் இதில் இல்லை. இது அந்த மேதைகளுக்கான பதிலுமல்ல. இதை இப்ப போட்டால் அதுக்கு பதிலாப்போகும் என்று இப்ப பிரசுரிக்க முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றவை மற்ற ஆசிரியப் பெருமக்கள். நான் விடுவனே. கட்டுரை போடாட்டி அங்கால போய் சைன் பண்ணிப் போடுவன் என்று வெருட்டித்தான் கட்டுரையை போடுவிக்கிறன். நான் ஆசிரயர் என்றதால எனக்கும் சில றைற்ஸ் இருக்கெல்லோ. இப்ப இதைப் போடாட்டி பிறகு போட்டு பிரியோசனம் இல்லை. அதனால் தான். சரி சரி அதெல்லாம் இருக்கட்டும். விசயத்துக்கு வருவம் என்னுடைய லெவலுக்கு அந்த அறிக்கை கொஞ்சம் ரூமச். மற்றைய ஆசிரியர்களுடன் சேர்ந்து குத்துப்பட்டு ஆறுதலாக ஒரு விளக்கம் வரும். இப்ப நான் எழுதி இருக்கிறது என்னுடைய சின்ன மூளைக்கு எட்டிய சின்ன விசயங்கள். இது ஒரு வெள்ளோட்டம் அவ்வளவு தான். – ரி கொன்சன்ரைன்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வரையறுக்கப்பட்ட பகுதி நேர ஜனநாயகவாதிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!

கடந்த வருடம் ஒக்ரோபர் ஆரம்பிக்கப்பட்ட தேசம்நெற் இணையத்தளம் புலம்பெயர் தமிழ் சூழலில் காணப்பட்ட துருவ அரசியலை தகர்த்து உருவாக்கிய ஊடகமுறையின் பலனாக பல்வேறு வகையான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் ஊடகம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில ஊடகங்கள், சில அமைப்புகள், பலர் தனிநபர்களாக 72 பேர் கையொப்பமிட்டு இவ்வறிக்கை வெளிவந்து உள்ளது. இவ்வறிக்கை எந்த அமைப்பினால் அல்லது ஊடகத்தினால் அல்லது தனிநபரினால் தயாரிக்கப்பட்டது என்பது பற்றி உத்தியோகபூர்வமாக எதுவும் குறிப்பிடாத போதும், இவ்விவாதத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வறிக்கையை தேசம்நெற் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தற்சமயம் மனித உரிமைகள், வன்னி மக்கள் எதிர்கொள்ளும் அவலம் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல்களை ஒழுங்கமைப்பதில் தேசம்நெற் ஈடுபட்டு இருப்பதால் உடனடியாக இவ்வறிக்கை தொடர்பான எமது கருத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம். ஆனால் இயலுமான வரையில், விரைவில் தேசம்நெற் இவ்வறிக்கை தொடர்பான கருத்தை முன்வைக்கும். நன்றி. - தேசம்நெற்

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!

Friday 12 September 2008

வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறின. அகதிகள் நிலைமை மோசமடையும் அபாயம்! : ஏகாந்தி

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடந்த திங்கட்கிழமை அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு அவசர உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அரசின் இந்த உத்தரவைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விடுத்திருந்தார். இதையடுத்து, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறின. அகதிகள் நிலைமை மோசமடையும் அபாயம்! : ஏகாந்தி

தமிழர்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு தனிநாடே. - செல்வம் அடைக்கலநாதன்

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு சிறி லங்கா இரண்டாவதைத்தவிர வேறு தீர்வுகள் இருக்கமுடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக சிங்கள ஆட்சியாளர்களால் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாமல் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்துள்ளனர். இந்த நிலையில் இனியும் சிங்கள அரசு தமிழர்களுக்கு நியாயமானதொரு தீர்வினை வழங்கும் என எதிர்பார்க்க முடியாது என்றும் தமிழர்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு என்றால் அது தனிநாடாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழர்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு தனிநாடே. - செல்வம் அடைக்கலநாதன்

Thursday 11 September 2008

வன்னி யுத்தம் யாருக்கும் இறுதியானது அல்ல. மனித அவலத்தை நிறுத்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். : த ஜெயபாலன்

Both sides to this long conflict have again shown that they will jeopardize the lives of thousands of ordinary people in the pursuit of military objectives,” Yolanda Foster, Amnesty’s Sri Lanka researcher.

”இந்த நீண்ட யுத்தத்தில் இரு தரப்பினரும், தங்களது இராணுவ இலக்குகளுக்காக ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வை சீரழிப்போம் என்பதை மீண்டும் காட்டி உள்ளனர்.”, யோலன்ட் போஸ்ரர், சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னி யுத்தம் யாருக்கும் இறுதியானது அல்ல. மனித அவலத்தை நிறுத்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். : த ஜெயபாலன்

மேயர் பொன் சிவபாலன் நினைவு நிகழ்வு : எஸ் அரவிந்தன் & வி அருட்சல்வன்

லண்டனில் செப்ரம்பர் 14ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள, பொன் சிவபாலன் அவர்களின் 10வது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி அவர்கள் நினைவு பேருரையாற்றவுள்ளார். 1998 செப்ரம்பர் 11ல் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் மேயர் பொன் சிவபாலன் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். யாழ் நகர மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. பொன் சிவபாலனுடன் மிக நெருக்கமானவரும் அவரது அரசியல் பாதையில் அவருடன் பயணித்தவருமான தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் பொன் சிவபாலனின் நினைவு பேருரை ஆற்ற உள்ளார். மேலும் தமிழக முஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவுத் அவர்களும் சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதியுமான நாகர்ஜ்சுனன் ஆகியோரும் இந்நிகவில் சிறப்புரையாற்றுகின்றனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மேயர் பொன் சிவபாலன் நினைவு நிகழ்வு : எஸ் அரவிந்தன் & வி அருட்சல்வன்

Wednesday 10 September 2008

இந்தியாவின் டாட்டா கார் உற்பத்தி இலங்கையில்…

இந்தியாவின் புகழ் பெற்ற டாட்டா நிறுவனத்தின் கார் உற்பத்தி திட்டத்திற்கான காணி தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் அந்த தொழிற்சாலையை இலங்கையில் நிறுவுவதற்குரிய வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலங்கை முன்வந்துள்ளதாக அறியவருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியாவின் டாட்டா கார் உற்பத்தி இலங்கையில்…

இந்திய அணு உடன்படிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும் - கொண்டலிஸா ரைஸ்

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற இன்னும் குறுகிய கால அவகாசமே உள்ளதாக வெளிநாட்டமைச்சர் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்துள்ளார். வியன்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு ஏகமனதாக இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறவேண்டும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய அணு உடன்படிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும் - கொண்டலிஸா ரைஸ்

Monday 8 September 2008

பிந்திய செய்தி - கொழும்பு பெட்டாவில் குண்டுவெடிப்பு! 10 பேர் காயம். இருவர் நிலை கவலைக்கிடம்.

இன்று இரவு 9.30க்கு கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் (பெட்டாவில்) குண்டுவெடிப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பத்தில் 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் நிலை கவலைக்கிடமானது என தேசிய வைத்தியசாலை சிரேஸ்ட வைத்திய அதிகாரி ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி - கொழும்பு பெட்டாவில் குண்டுவெடிப்பு! 10 பேர் காயம். இருவர் நிலை கவலைக்கிடம்.

காற்றினில் கரைந்த பெருமகன்… : ‘விம்பம்’

அமரர் N.S. கந்தையா
மண்ணில்: 07. 09. 1922
விண்ணில்: 26. 08. 2008

லண்டனுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வரலாற்றில் மிகமூத்த தமிழ்ப் பிரமுகராகத் திகழ்ந்த திரு N.S. கந்தையா அவர்களின் மறைவு, நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தமிழர் விவகாரங்களில் பணியாற்றிய ஒரு சிறந்த சேவையாளரின் பாரிய இழப்பாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காற்றினில் கரைந்த பெருமகன்… : ‘விம்பம்’

எந்தத் தாய்க்கும் இந்நிலை ஏற்படக் கூடாது!!! - நிலாந்தனின் தாய் கலா மூர்த்தி : லண்டன் குரல்

எந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்குத் தெரிவித்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று வேதனையுடன்…

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எந்தத் தாய்க்கும் இந்நிலை ஏற்படக் கூடாது!!! - நிலாந்தனின் தாய் கலா மூர்த்தி : லண்டன் குரல்

யுனெஸ்கோ பாரிஸ் மாநாட்டிலிருந்து புலி ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் நடைபெறும் யுனெஸ்கோவின் 61வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புலிகளின் ஆதரவு அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யுனெஸ்கோ பாரிஸ் மாநாட்டிலிருந்து புலி ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Newer Posts Older Posts Home