Monday, 22 September 2008

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு உணவு விநியோகம்: விசேட கலந்துரையாடல் இன்று.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான உணவு விநியோகம் தொடர்பாக ஆராயவென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உலக உணவுத் திட்ட உயரதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வழமைபோன்று எதுவிதமான குறைபாடுகளுமின்றி தொடராக நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஐ. நா. வின் பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் பயணமாவதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு இந்தப்பணிப்புரையை வழங்கினார். இப்பணிப்புரைக்கு அமையவே அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன உலக உணவுத் திட்ட கொழும்பு அலுவலக சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு உணவு விநியோகம்: விசேட கலந்துரையாடல் இன்று.

No comments: