Sunday, 14 September 2008

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!

கடந்த வருடம் ஒக்ரோபர் ஆரம்பிக்கப்பட்ட தேசம்நெற் இணையத்தளம் புலம்பெயர் தமிழ் சூழலில் காணப்பட்ட துருவ அரசியலை தகர்த்து உருவாக்கிய ஊடகமுறையின் பலனாக பல்வேறு வகையான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் ஊடகம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில ஊடகங்கள், சில அமைப்புகள், பலர் தனிநபர்களாக 72 பேர் கையொப்பமிட்டு இவ்வறிக்கை வெளிவந்து உள்ளது. இவ்வறிக்கை எந்த அமைப்பினால் அல்லது ஊடகத்தினால் அல்லது தனிநபரினால் தயாரிக்கப்பட்டது என்பது பற்றி உத்தியோகபூர்வமாக எதுவும் குறிப்பிடாத போதும், இவ்விவாதத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வறிக்கையை தேசம்நெற் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தற்சமயம் மனித உரிமைகள், வன்னி மக்கள் எதிர்கொள்ளும் அவலம் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல்களை ஒழுங்கமைப்பதில் தேசம்நெற் ஈடுபட்டு இருப்பதால் உடனடியாக இவ்வறிக்கை தொடர்பான எமது கருத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம். ஆனால் இயலுமான வரையில், விரைவில் தேசம்நெற் இவ்வறிக்கை தொடர்பான கருத்தை முன்வைக்கும். நன்றி. - தேசம்நெற்

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!

No comments: