Wednesday, 1 October 2008

பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் அமைதிப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழ் போறத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஒக்ரோபர் 6ää திக்கட் கிழமை மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை இவ்வமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோடைகால விடுமுறையின் பின் ஒக்ரோபர் 6ல் பாராளுமன்றம் கூட இருப்பதால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பார்கள் என தமிழ் போறத்தினர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளனர். வன்னிப் பகுதியின் மீது இலங்கை அரசபடைகள் நடாத்தும் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக்களை உடனடியாக நிறுத்தும் படி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் கோர உள்ளனர். மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னிப் பகுதியிலேயே இடம்பெயர்ந்து உள்ள 230,000 மக்களுக்கும் பிரித்தானிய அரசு உடனடியா நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவ்வமைதிப் போராட்டத்தில் கோர உள்ளனர். தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு தமிழரதும் கடமை எனவும் பிரித்தானிய தமிழ் போறத்தினர் தெரிவித்து உள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்

No comments: