கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி இதுவரை எந்தவிதமான இறுதித் தீர்மானத்துக்கும் வரவில்லை. கிழக்கிலும் பொதுவாக நாடு முழுவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு தனது அரசியல் பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வமே மக்களிடம் மேலோங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்சி பெறும் ஆசனங்கள் ஒரு பாரிய பங்கை வகிக்கப் போகின்றது. சரியான வியூகங்களை வகுத்தால் இங்கு நிச்சயமாக 5 ஆசனங்களை எம்மால் பெற முடியும். இங்கு தனித்துப் போட்டியிடுவதாக இருந்தாலும் 3 ஆசனங்களைப் பெறக் கூடிய நிலை எமக்கு இருக்கிறது. இதன் மூலம் கிழக்கு, முஸ்லிம்களின் தாயகப் பூமி என்பதை நிரூபிக்கலாம். இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். மூதூரில் கடந்த வியாழன்று (Mar 27) நடைபெற்ற மு.காங்கிரஸின் மத்திய குழுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு முஸ்லிம்களின் ‘தாயகபூமி’ தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் - மு கா தலைவர் ஹக்கீம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment