கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) புதன்கிழமை (ஏப்ரல் 02) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யோகரட்ணம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பேரது பெயர்பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக தற்போது இயங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணித்து உள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பெயரில் வேட்புமனுத் தாக்கள் செய்யப்பட்டு இருப்பது பலத்த சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கல் தொடர்பாக விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் விடுதலைப் புலிகள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment