Wednesday, 30 April 2008

‘Journalist are nescessary evils. - ஊடகவியலாளர்கள் அவசியமான பேய்கள்.’ லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாடு : த ஜெயபாலன்

தமிழ் செய்தியாளர் ஒன்றியம் - International Assosiation of Tamil Journalist - IATAJ, ஏப்ரல் 26ல் தனது வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. Media & Sri Lanka’s Conflict: Where is the truth? - ஊடகமும் இலங்கை முரண்பாடும்: எங்கே உண்மை என்ற தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்றது.

”இலங்கையில் இனமுரண்பாடு மீண்டும் வீச்சடைந்ததைத் தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கொலை செய்யப்டுகிறார்கள்” என இம்மாநாடு தொடர்பாக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் வெளியிட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, ”எப்போதும் இல்லாத அளவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அச்சமும் யுத்தமும் உண்மைச் செய்திகளை கொண்டுவருவதை இயலாமல் செய்திருக்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு நீண்டகாலமாக உணரப்பட்டு இருக்கின்றது. முக்கியமாக ஊடகங்கள் இனரீதியான, மத ரீதியான கோடுகளால் பிளவுபட்டு உள்ளது. ஊடகத்தின் செய்திகளும் ஆசிய நிலைப்பாடுகளும் வௌ;வேறு சமூகங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்றாற் போல் வேறுபடுகிறது. நிலைப்பாடுகளை கட்டமைக்கிறது. இதன் காரணமாக ஊடகங்களும் முரண்பாட்டின் ஒருபகுதியாகின்றன” என தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கையேடு தெரிவிக்கின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘Journalist are nescessary evils. - ஊடகவியலாளர்கள் அவசியமான பேய்கள்.’ லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாடு : த ஜெயபாலன்

No comments: