Saturday, 5 July 2008

இன்று ஜுலை 05 கரும்புலிகள் தினம் : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகள் இன்று (யூலை 5) தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களில் கரும்புலிகள் தினத்தை அனுஸ்டிக்கின்றனர். 1987 ஜுலை மாதம் 05ஆம் திகதி விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் மில்லரினால் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நெல்லியடி இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தினமே கரும் புலித்தினமாக விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை இராணுவம் ‘ஒப்பிரேசன் லிபரேசன்’ என்ற இராணுவ நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வெற்றிகரமாக முன்னேறி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டு இருந்தனர். கப்டன் மில்லர் வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்துடன் இராணுவம் தங்கியிருந்த நெல்லியடி பாடசாலை முகாம்மீது மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்ததுடன் விடுதலைப் புலிகளின் புதிய இராணுவ உத்தியாகவும் அமைந்தது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று ஜுலை 05 கரும்புலிகள் தினம் : த ஜெயபாலன்

No comments: