மனித உரிமைகளுக்காகவும் மனிதத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்த முக்கியமான நிகழ்வில் உங்களுடன் கலந்துகொண்டு மகேஸ்வரிக்கு அஞ்சலியை செலுத்துவதில் நிறைவடைகிறேன்.
ஒருவருடைய மதிப்பான செய்கைகளும் சாதனைகளும் மட்டும் அவர் எப்படியானவர், எப்டிப்பட்டவர் என்பதை விளக்க போதுமானதல்ல. மகேஸ்வரி என்னுடன் பணியாற்றியவர். நல்ல நண்பர். அவர் மிக மோசமான முறையில் 13 மேயில் கரவெட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து அவருடைய வயதான தாயோரோடு இருந்தவேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் மகேஸ்வரி செய்த சேவைகளை அறிந்திருக்கவில்லை. அயராது சமூகத்திற்கு உழைத்த மகேஸ்வரியின் இழப்பு ஒரு பாரிய இழப்பு. மகேஸ்வரி முன்னரும் படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர். அவர் தனக்குள்ள ஆபத்தை மிகவும் அறிந்திருந்தவர். ஆனால் இது அவருடைய மக்களுக்கான சேவையைத் தொடர்வதை குறைக்கவில்லை. நீதிக்கான ஆர்வம், அகதிகள் பிரச்சினை, சமூகத்துடனான தொடர்பும் தலைமைத்துவப் பண்பும் இளம் வயதிலிருந்தே அவரில் ஆழமாக வேரூன்றி இருந்தது....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படுகொலைகள் அவசியமானது என்ற அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும் : வரதகுமார் (TIC)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment