83ம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 13 இரணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்ட நிகழ்வின் எதிரொலி முழு இலங்கையிலும் அதிர்ந்தது. மிகப்பெரும் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்திருந்த இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு ஏக அதிகாரம் தேவைப்பட்ட நிலையில் போர் வெறியைச் சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்துவிட்டார். தாராள மயமாக்கப்பட்ட பொருளாதரக் கொள்கை, சிங்கள மக்களின் பொருளாதார வாழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கத்தால் அரசிற்கெதிரான வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டிருந்த 80 களின் ஆரம்பப் பகுதி நெருக்கடியான காலகட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. அநகாரிக தர்மபாலவினால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் அமைப்பாக்கப்படிருந்த பேரினவாதத்திற்குப் புத்தியிர் கொடுத்து மற்றய பிரச்சனைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதென்பது பின் காலனிய அரசுகளுக்குப் பின் வந்த எல்லா அரசுகளும் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகும். காலத்திற்குக் காலம்இ ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியின் தாக்க அளவிற்கேற்ப தேசிய இன அடக்கு முறையின் குரூரமும் மாறுபடும்.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜூலைப் படுகொலை நிகழ்வுகள்: கொச்சைப்படுத்தப்படும் தியாகங்கள் : சபா நாவலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment