லண்டன் தமிழர்களுடைய அரசியல் நடவடிக்கைகளில் பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamil Forum - BTF)) மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அது ஆரம்பிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய அரசியல் சக்தியாகவும் அது உருவாகி உள்ளது. பிரித்தானிய தமிழ் ஒன்றியம் ( British Tamil Association - BTA) விடுதலைப் புலிகளின் முன்னரங்க அமைப்பு என்று குற்றம்சாட்டப்பட்டு அதன் உறுப்பினர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது செயலற்று போயுள்ளது. இப்போது தனது அரசியல் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் முடுக்கிவிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உள்ளது. அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரனை தேசம்நெற் இணையத்திற்காகவும் எமது சகோதரப் பத்திரிகையான லண்டன் குரலுக்காகவும் பல்வேறு கேள்விகளுடன் சந்தித்தோம். அதனை எமது வாசகர்களிற்காக இங்கு பதிவிடுகிறோம்....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment