Saturday, 31 May 2008

கனவிலும் தோண்றாத கொடூரம் - தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!

தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கனவிலும் தோண்றாத கொடூரம் - தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!

படுகொலைகளை நிறுத்துங்கள்! மகேஸ்வரி வேலாயுதம் - நினைவுக் கூட்டம் : ராஜேஸ் பாலா

படு கொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் நினைவுக் கூட்டம் யூன் 7ம் திகதி லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுசில் (Quakers Meeting House, Bush Road, Wanstead,London, E11 3AU.) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதியம் 12:30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகும். இக்கூட்டத்தை மகேஸ்வரியின் நினைவாக படுகொலைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நடத்த உள்ளோம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படுகொலைகளை நிறுத்துங்கள்! மகேஸ்வரி வேலாயுதம் - நினைவுக் கூட்டம் : ராஜேஸ் பாலா

Friday, 30 May 2008

பிரித்தானியாவில் Grammar Schoolகளுக்கான போட்டி : விஜி (லண்டன்)

கடந்த வருடம்(2007) நடைபெற்று முடிந்த grammar school களுக்கான 11+ பரீட்சை குநித்து பெற்றோரிடையே பிணக்குகள் தொடங்கியுள்ளன. இது குறித்து Sloughexpress செய்தி வெளியிடடுள்ளது. Slough பகுதியில் உள்ள ஐந்து பாடசாலைகளில் உள்ளுர் மாணவர்களுக்கு அனுமதி கிடைப்புது கேள்விக் குறியாகியுள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிடுகின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானியாவில் Grammar Schoolகளுக்கான போட்டி : விஜி (லண்டன்)

உலக உணவு மாநாட்டில் ஜனாதிபதி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரோமில் நடைபெறவுள்ள உலக உணவு சம்மேளன கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வேண்டி இன்று (May 30) உரோம் நோக்கி பயணிக்கவுள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
உலக உணவு மாநாட்டில் ஜனாதிபதி

பரதக்கலையில் மாற்றுக்கருத்துக்களும் அதன் வளர்ச்சியும் : கவிதா இரவிக்குமார்

படைப்புலகில் புகுந்துவிட்டால் நாம் எம்மை மறந்து தியானத்தில் இருக்கும் நிலையை உணரலாம். உலகில் கணக்கில் அடங்காத நடன, நாடக வடிவங்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததுமானதொரு கலைதான் பரதக்கலை.

தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒர் அரும் பெரும் ஆடற்கலைப் பொக்கிசமே பரதநாட்டியம். ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாவது நூற்றாண்டு வரை சதிர் எனவும் சின்னமேளம் எனவும் பிற்படுத்தப்பட்டோராலும் (தேவதாசிகளினால்) கோயில்களிலும் அரசவைகளிலும் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த நடனம், கடந்த பல ஆண்டுகளாக பரதநாட்டியம் என்று புதுப்பெயர் பூண்டு, புதுபொழிவுடனும், சிலரால் புனிதமாவும், சிலரால் மக்களிடம் எடுத்துச் சொல்லும் ஊடகமாகவும் போற்றப்பட்டு வருகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பரதக்கலையில் மாற்றுக்கருத்துக்களும் அதன் வளர்ச்சியும் : கவிதா இரவிக்குமார்

Thursday, 29 May 2008

முதல் தமிழ் பெண் மேயர்

எலிசபத் பாக்கியதேவி மஅன் சதேக் கவுன்சிலின் மேயராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவர் லிபிரல் டெமொகிரட் கட்சியில் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இவர் இரண்டு தடவைகள் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முதல் தமிழ் பெண் மேயர்

”மலையக மக்கள் தேசிய இனம்” - பிரதியமைச்சர் புத்திரசிகாமணி

மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். இதனை நான் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகிறேன். அதே நேரத்தில் மலையக தமிழ் மக்கள் காணி, மொழி உரிமை பெற்றவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்தார். மலையக தேசிய தொழிலாளர் சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் கொட்டகலை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிப் பேசும் போதே சட்டம் மற்றும் நீதி மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வி. புத்திரசிகாமணி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மலையக மக்கள் தேசிய இனம்” - பிரதியமைச்சர் புத்திரசிகாமணி

திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்

இலண்டன் லேய்டன் ஸ்டோன் குவாக்கர் ஹவுஸில் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம்நெட்டும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாதாந்த திரைப்பட நிகழ்வின் முதல் திரையிடல் 25 மே 2008 மாலை 04.30 மணிக்குத் துவங்கியது.

ஈழத்திலிருந்து இயக்குனர் செல்வன் இயக்கிய ‘விழி’ எனும் திரைப்படமும் தமிழகத்திலுருந்து இயக்குனர் மாமல்லன் இயக்கிய ‘நானும்’ எனும் திரைப்படமும் திரையிடப்பட்டது. இரண்டு குறம்படங்களும் அரைமணி நேரத்திற்கு அருகிலான கால அளவே ஓடக் கூடிய திரைப்படங்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்

Wednesday, 28 May 2008

தீகவாபியில் குடியமர்த்துவதற்கு உச்ச நீதிமன்று இடைக்கால தடை

தீகவாபி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளை எவருக்கும் வழங்குவதற்கும் மற்றும் குடியமர்த்துவதற்கும் உச்ச நீதிமன்றம் (May 26) இடைக்கால தடையுத்தரவு விதித்தது. இந்தத் தடையுத்தரவு ஜூன் 11ம் திகதி வரை அமுலிலிருக்கும். தீகவாபியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளையும் முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு எதிராக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அடங்களான 7 பேர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை விதித்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீகவாபியில் குடியமர்த்துவதற்கு உச்ச நீதிமன்று இடைக்கால தடை

”மீண்டுமொரு ‘83 ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை” ஜனாதிபதி மஹிந்த

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் இனக் கலவரமொன்றுக்கு வித்திடும் புலிகளின் நோக்கம் நிறைவேறுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த தெரிவித்தார். நேற்று (27 May) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மீண்டுமொரு ‘83 ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை” ஜனாதிபதி மஹிந்த

Tuesday, 27 May 2008

கல்முனைச் சம்பவம் மறு விசாரணை : இராஜேஸ் பாலா

கிழக்கில் நடந்ததாக (10.05.08—11.05.08) கூறப்படும் பாலியல் வன்முறைகள்:
இவ்வருடம் மாசி மாதக் கடைசிப் பகுதியில் இருந்து பங்குனி மாத நடுப் பகுதிவரை அம்பாரைப் பகுதியில் சில ஏழைத் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரின் அதிரடிப்படையால் பாலியல் வன்முறைக்கு ஆளhக்கப் பட்டதாகப் பல செய்திகள் வந்தன. அம்பாரைப் பகுதியிலுள்ள சமுகநல வாதிகளுடன் தொடர்பு கொண்டபோது, ”அப்படியான விடயங்களை தாங்களும் கேள்விப்படுவதாகவும், ஆனால் தங்களுத் தெரிந்த பகுதிகளில் ஏதும் நடந்ததாகவோ நடப்பதாகவோ தெரியாது” என்றார்கள். கிராமத்துப் பெண்களுக்குப் பாலியற் கொடுமைகள் நடந்தால் அதை அவர்கள் தானாக வந்து வெளியே சொல்ல மாட்டார்கள் என்று தெரியும். அதுவும் கிராமப் புறங்களில் பெண்களுக்கு ஏதும் இப்படியான விடயங்கள் நடந்தால், அது பற்றிய பழி பெண்களிடமே போடப்படும் என்றும் அவர்களுக்குத் தெரியும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கல்முனைச் சம்பவம் மறு விசாரணை : இராஜேஸ் பாலா

முஸ்லிம் பிரிவினைவாதமோ பயங்கரவாதமோ இலங்கையில் இல்லை! : திசரணி குணசேகர

83 கறுப்பு ஜுலைக்கான காரணம் எல்.ரி.ரி.ஈ.யின் போபோ பிராவோ தாக்குதல் மூலம் இலங்கை இராணுவத்தின் 13 உறுப்பினர்களை கொன்றமையாகும். இருப்பினும் அக்காலப் பகுதியில் இந்நாட்டு அரசியலில் மற்றும் சிவில் சமூகத்தின் மத்தியில் நிலவிய இனவாத போக்கு இல்லாமலிருந்தால் கறுப்பு ஜலையை நிச்சயம் தடுத்திருக்க முடியும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம் பிரிவினைவாதமோ பயங்கரவாதமோ இலங்கையில் இல்லை! : திசரணி குணசேகர

எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் காலமானார்: வி ரி இளங்கோவன்

பிரான்ஸ் நாட்டில் பல வருடங்களாக வசித்துவந்த எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் மே 22ல் லண்டனில் காலமானார். 53 வயதினைப் பூர்த்திசெய்த சிவபாலன் தாயகத்தில் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற சிவபாலனுக்கு திடீரென இருதய வருத்தம் ஏற்பட்டது. அதனால் உடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்பு அவர் சுகமடைந்து வந்தார். ஆனாலும் 22ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு மயக்கம் அவரை மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் காலமானார்: வி ரி இளங்கோவன்

WHOன் தலைவராக முதன் முதலாக ஆசியர், இலங்கையர் தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைராக சுகாதாரப் பராமரிப்பு போசாக்குத்துறை அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று (மே 26) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுக்குழுக்கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நேற்றுக்காலை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே அவர் இந்த உயர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
WHOன் தலைவராக முதன் முதலாக ஆசியர், இலங்கையர் தெரிவு

ஐ.தே.க. துரோகம் இழைத்ததாலேயே அரசில் இணைந்தேன். - பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி

‘’நான் சார்ந்த சமூகத்திற்கு திடமான ஆக்கபூர்வமான ஒன்றை சாதிக்கும் நோக்கிலேயே புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கின்றேன்” என பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். ‘மலையக தேசிய தொழிலாளர் சங்கம்’ எனும் பெயரில் புதிய தொழிற்சங்கமொன்று கொட்டகலை தலைமை அலுவலகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தோட்ட கமிட்டி தலைவர்கள் பங்குபற்றனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஐ.தே.க. துரோகம் இழைத்ததாலேயே அரசில் இணைந்தேன். - பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி

லண்டன் தமிழ் இளைஞர் வன்முறை: ஒருவர் ஆபத்தான நிலையில்

நேற்று மே 25, கிழக்கு லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஈஸ்ற்ஹாம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ஒன்றில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இரவு 9:25 மணியளவில் ஈஸ்ற்ஹாம் அன்டர்கிறவுண்ட் ஸ்ரேசனில் ஒருவர் மயங்கி வீழ்ந்ததை அடுத்து பொலிசாஸர் அழைக்கப்பட்டனர். வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி மயங்கி இருந்த 19 வயதான அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் அந்நபர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் தமிழ் இளைஞர் வன்முறை: ஒருவர் ஆபத்தான நிலையில்

கொழும்பு ரெயிலில் குண்டு வெடிப்பு! 7 பேர் பலி 70 பேருக்குக் காயம்!!!

இன்று மாலை 4.25 மணிக்கு மருதனையிலிருந்து புறப்பட்டு பாணதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக புகையிரதம் தெஹிவளை புகையிரத நிலையத்தை அண்மித்த வேளையில் புகையிரத பெட்டியொன்றினுள் பாரிய குண்டொன்று வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் இதுவரை ஏழு பேர் கொல்லப்பட்ட தாகவும் 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாகவும் காயமடைந்தவர்கள் களுபோவிளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதாக அறியமுடிகின்றது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பு ரெயிலில் குண்டு வெடிப்பு! 7 பேர் பலி 70 பேருக்குக் காயம்!!!

மீண்டும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு - அமைச்சர் திஸ்ஸ விதாரண

கிழக்கில் மாகாணசபையும் வடக்கில் இடைக்கால சபையையும் உருவாக்கி அரசியல் அமைப்பின் குறைந்தபட்ச 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றுவருகிறது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்து உள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மீண்டும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு - அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கைக்கு மீண்டும் இராணுவ உதவிகள் - அமெ. தூதுவர் ரொபர்ட் பிளேக்

இலங்கை க்கான இராணுவ ரீதியிலான உதவிகளை இடைநிறுத்துவது என அமெரிக்கா ஏற்கனவே மேற்கொண்டிருந்த தீர்மானத்தை மீள்பிரிசீலனை செய்ய உள்ளதாக தெரியவருகிறது. இதனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவிகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் தோன்றியுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு வருவதற்கு அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ள காரணம் சிரிப்பிற்கிடமாகி உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைக்கு மீண்டும் இராணுவ உதவிகள் - அமெ. தூதுவர் ரொபர்ட் பிளேக்

Sunday, 25 May 2008

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் அழுத்தம்! - திஸ்ஸ அத்தநாயக்க

“சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும்படி அரசுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படும்” என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்: “17வது திருத்தச்சட்டத்தின் மூலம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுயாதீன பொலீஸ் ஆணைக்குழு சுயாதீன அரசசேவை ஆணைக்குழு ஆகியவற்றை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எமது கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் அழுத்தம்! - திஸ்ஸ அத்தநாயக்க

”சரவகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரிஎம்விபி தயார்” - அஸாத் மௌலானா

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக இருப்பதாக கட்சியின் பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் “எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் முன்வைப்பதற்கான யோசனைகளை தயாரித்து வருகின்றது. அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு எமது யோசனைகளை முன்வைக்க தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வில் எமது பங்களிப்பை புரணமாக வழங்க தயாராக இருக்கின்றோம்” என்றார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”சரவகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரிஎம்விபி தயார்” - அஸாத் மௌலானா

இன்று லண்டன் குறும்படக் காட்சி

இன்று மே 25ல் குவாக்கர்ஸ் மண்டபத்தில் (லண்டன் லேய்டன்ஸ்ரோன்) இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘விழி’ குறும்படமும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மாமல்லனின் குறும்படங்களும் காண்பிக்கப்பட இருக்கிறது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் இணைந்து இக்குறும்படக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று லண்டன் குறும்படக் காட்சி

Saturday, 24 May 2008

மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கிழக்கு முதல்வருக்கு அழைப்பு

மாதத்தில் ஒரு தடவை மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு பிள்ளையானுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அதாவது, மாதத்தில் ஒரு தடவை அமைச்சரவைக் கூட்டங்களுக்கு முதலமைச்சர்கள் அழைக்கப்படுவதுண்டு. இந்த அடிப்படையில் எதிர்வரும் மாதத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டமொன்றில் பிள்ளையான் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கிழக்கு முதல்வருக்கு அழைப்பு

தேர்தலுக்கு முன் இன்னும் எட்டு புதிய அரசியல் கட்சிகள்

விமல் வீரவன்ஸ பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தேசிய சுதந்திர முன்னணி’க் கட்சியைச் சேர்ந்த பியசிறி விஜயநாயக்க மற்றுமொரு அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேர்தலுக்கு முன் இன்னும் எட்டு புதிய அரசியல் கட்சிகள்

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிணையில் விடுதலை

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நால்வர் நேற்று (மே 23) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஓல்ட் பெய்லியில் இடம்பெற்ற விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த வொன்ஸ்வேர்த் சிறையில் இருந்தவாறே விடியோ இணைப்பு மூலம் சாட்சியம் அளித்தனர். இவர்கள் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டு இருக்கும் விடுதலை புலிகளுக்காக நிண்டகாலமாக பல்வேறு கருவிகளை கொள்வனவு செய்து அனுப்பியதாக அரச தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிணையில் விடுதலை

லண்டன் குறும்படக் காட்சியும் திரை ஆவணப் பதிவும்

மே 25ல் குவாக்கர்ஸ் மண்டபத்தில் (லண்டன் லேய்டன்ஸ்ரோன்) இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘விழி’ குறும்படமும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மாமல்லனின் குறும்படங்களும் காண்பிக்கப்பட இருக்கிறது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் இணைந்து இக்குறும்படக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் திரைக்கலை பற்றியும் மாற்று சினிமா பற்றியும் ஒரு அறிமுகத்தையும் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்குடன் மாதம் ஒருமுறை இவ்வாறான குறும்படக் காட்சிகளை ஒழுங்குபடுத்த ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் முயற்சிகளை எடுத்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸ் குறும்பட இயக்குநர் அஜீவன் ஊடாக தேசம் சஞ்சிகை லண்டனில் ஓர் குறும்படப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் சில சந்திப்புக்களையும் நடத்தி இருந்தது. இப்போது அவற்றின் தொடர்ச்சியாக ஒரு குறும்படக் காட்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பு முழுமையாக திரைக்கலை சார்ந்த ஒரு குழு. இவ்வமைப்பு மாற்று, கனவுகள் நிஜமானால், மண் ஆகிய முழுநீளப்படங்களை தயாரித்து உள்ளது. இப்படங்களின் இயக்குநரான ஆர் புதியவன், ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பின் இயக்குநராகவும் உள்ளார். தற்போது வேறும் சில திரைக்கலை முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் குறும்படக் காட்சியும் திரை ஆவணப் பதிவும்

வடக்கில் வாழும் தமிழர்கள் யுத்தத்திற்கு எதிரானவர்கள் - அஸ்கிரிய பீடாதிபதி

”வடக்கில் வாழும் தமிழ் மக்களின் 75 சதவீதமானோர் யுத்தத்திற்கு எதிரானவர்கள்” இவ்வாறு அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீபுத்தரகித்த தேரர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் கல்வி, போக்குவரத்து, கலாசார, காணி அபிவிருத்தி அமைச்சரான விமலவீரதிஸாநாயக்க அஸ்கிரிய பீடாதிபதியை நேற்று முன்தினம் (மே 22) சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற போதே மகாநாயக்கர் மேற்கண்டவாறு கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வடக்கில் வாழும் தமிழர்கள் யுத்தத்திற்கு எதிரானவர்கள் - அஸ்கிரிய பீடாதிபதி

Friday, 23 May 2008

முறுகண்டியில் கிளைமோர் தாக்குதல் 17 பொதுமக்கள் பலி

மே 20ல் மாரடைப்பால் காலமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான பிரகேடியர் பால்ராஜின் இறுதி அஞ்சலி தினமான இன்று (மே 23) முறுகண்டிப் பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறுகண்டி அக்காரயன் வீதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் சிறுவர்கள் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முறுகண்டியில் கிளைமோர் தாக்குதல் 17 பொதுமக்கள் பலி

இனஒற்றுமை, அபிவிருத்திக்காக பிள்ளையானுடன் இணைந்து செயற்படுவேன் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

”கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியையும், இன ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளையும் முதலமைச்சர் பிள்ளையானின் அழைப்பையும் ஏற்று கிழக்கு மாகாணசபையின் அமைச்சுப் பொறுப்பை ஏற்று செயற்பட முடிவு செய்தேன்” என மாகாணசபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (May 22) தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனஒற்றுமை, அபிவிருத்திக்காக பிள்ளையானுடன் இணைந்து செயற்படுவேன் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு - வடக்கு மாகாண சபைகளும் 13வது திருத்தச் சட்டமும் : த ஜெயபாலன்

ஜெர்மன் மியுனிச் மாநகர சபை மேயர் கிறிஸ்ரியன் உடே தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று முன்தினம் (மே 21) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர். இவர்கள் மட்டக்களப்பு மாநகர முதல்வர், திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையிலான மாநகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றினார். இச்சந்திப்பு மாநகரசபை அலுவலகத்தில் இடம்பெற்றது. சுனாமியை அடுத்து மியுனிச் நகரம் மட்டு நகருக்கு புனர்நிர்மாண உதவியை வழங்கி இருந்தது. மியுனிச் நகர மேயரின் விஜயத்தை அடுத்து மட்டுநகரில் சில அபிவிருதத்தி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு - வடக்கு மாகாண சபைகளும் 13வது திருத்தச் சட்டமும் : த ஜெயபாலன்

உடனடியாக சம்பளம் உயர்த்தப்படாவிட்டால் பதவி விலகுவேன் - பிரதம நீதியரசர்

“நாட்டின் நீதிபதிகளின் சம்பளங்களை நியாயமான அடிப்படையில் விரைந்து உடன் அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லையேல் நான் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு விலகிவிடுவேன்” என்று பிரதம நீதியரசர் சரத் சில்வா உயர்நீதிமன்றில் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அதேநேரம், நீதிபதிகளின் சம்பள உயர்வு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு யூன் 09 வரை அவர் காலக்கெடு விதித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
உடனடியாக சம்பளம் உயர்த்தப்படாவிட்டால் பதவி விலகுவேன் - பிரதம நீதியரசர்

மலையக மக்கள் இன்னும் சூழ்நிலைக் கைதிகளே! - நகரசபைத் தலைவர் பி. உதயகுமார் (இ.தொ.ஐ.மு)

“1870ஆம் ஆண்டளவில் மலையக மண்ணில் தடம் பதித்த தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பு – பிழைப்பு என்ற இரண்டு சூழலுக்கு உள்ளேயே மூழ்கிக் கிடந்தனர். இந்த வட்டத்தைவிட்டு அவர்களால் இம்மியளவுகூட நகர முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்களின் வாழ்வு சுருங்கியிருந்தது” தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவரும், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பி. உதயகுமார் தலவாக்கலை இ.தொ.ஐ. முன்னணியின் பணிமனையில் அண்மையில் நடைபெற்ற தோட்டக் கமிட்டித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையக மக்கள் இன்னும் சூழ்நிலைக் கைதிகளே! - நகரசபைத் தலைவர் பி. உதயகுமார் (இ.தொ.ஐ.மு)

கூட்டணி அலுவலகம் திடிர் சோதணை

கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் இன்று (மே 22) இலங்கை நேரம் மாலை 4:30 மணியளவில் பொலிசாரின் தேடுதலுக்கு உள்ளானது. கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கோ அல்லது அதன் முக்கிய உறுப்பினர்களுக்கோ அறிவிக்காது திடிரென பொலிசார் சோதணையில் இறங்கி உள்ளனர். எதற்காக சோதணையிடப்படுகிறது என்பதையும் அங்கு கடமையில் இருந்தவர்கிளிடம் பொலிசார் தெரிவிக்கவில்லை. சோதணையிடப்பட்ட போது கட்சியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி அங்கிருக்கவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கூட்டணி அலுவலகம் திடிர் சோதணை

கடத்தல், காணாமல் போதல், கைது குறித்து முறையிட புதிய அலுவலகம் - மேஜர் நவரத்ன

கடத்தல், காணாமற் போதல், கைது செய்யதல் ஆகியவற்றை பொது மக்கள் உடனடியாக முறைப்பாடு செய்து அது தொடர்பில் விவரங்களை அறிந்து கொள்வதற்காக 24 மணித்தியாலமும் இயங்கும் அலுவலகமொன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடத்தல், காணாமல் போதல், கைது குறித்து முறையிட புதிய அலுவலகம் - மேஜர் நவரத்ன

Thursday, 22 May 2008

சவூதியில் பணிபுரியும் இலங்கை பணிப் பெண்களுக்கு காப்புறுதி - அமைச்சர் ரம்புக்வெல்ல

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கைப் பணிப்பெண்களுக்கென காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும், சவூதி அரேபிய தொழிலமைச்சர் காஸி அலி கொய்சாபிக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் இலங்கை அமைச்சரும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸீத் முஹம்மத் மர்லீன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சவூதியில் பணிபுரியும் இலங்கை பணிப் பெண்களுக்கு காப்புறுதி - அமைச்சர் ரம்புக்வெல்ல

இன்று இலங்கையின் குடியரசுத்தினம்

இலங்கை யின் குடியரசுத்தினம் இன்று (மே 22) அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற அனைத்து அரசாங்க கட்டடங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகள் திணைக்களங்கள் ஆகியவற்றிற்கு நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று இலங்கையின் குடியரசுத்தினம்

காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டம் - கொல்லப்பட்டவர்கள் 5 ஆக உயர்வு - அத்தொகுதி வேட்பாளர் ஹிஸ்புல்லா பதவியேற்பு

கிழக்கு மாகாணத்தை சகல வளங்களும் கொண்ட நவீன மாகாணமாக அபிவிருத்தி செய்வதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் சபீட்சத்தைக் கொண்டு வருவதற்கும் தான் பாடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் முதலமைச்சராகப் பதவியேற்று மட்டக்களப்புக்கு முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு அவரின் ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பினை வழங்கி இருந்தனர். ஆனால் மட்டக்களப்பில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் காத்தன்குடியில் முஸ்லீம்களுக்கும் ரிஎம்விபி க்கும் இடையில் ஏற்பட்ட பதட்டம் இன்று (மே 22) நான்கு படுகொலைகளில் முடிவடைந்து உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டம் - கொல்லப்பட்டவர்கள் 5 ஆக உயர்வு - அத்தொகுதி வேட்பாளர் ஹிஸ்புல்லா பதவியேற்பு

மலையகப் பகுதியில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் : பி. மகேந்திரன் (தலவாக்கல)

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் நீண்டகாலமாக பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பினும் அவையெதுவும் முழுமையாக அச்சமூகத்தைச் சென்றடையாத நிலையே இன்றும் காணப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையகப் பகுதியில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் : பி. மகேந்திரன் (தலவாக்கல

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்! : தமிழ் சமாதான ஓன்றியம்

தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி ரீதியிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வாகும். சமஷ்டி முறையிலான தீர்வினை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு தீங்கிழைப்பதல்ல. அத்தகைய தீர்வினை அடைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அளவில் உதவ முடியும். எனவே சமஷ்டி முறையிலான தீர்வினை விரைவில் சாத்தியமாக்கவும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம விரைவில் சுபீட்சம் அடைவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பினைக் கோரும் இவ் வேண்டுகோளை சமாதானத்தை விரும்பும் மக்கள் சார்பாக முன் வைக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை எற்று தமிழ் பேசும் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களை தியாகங்களை மனதில் கொண்டு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழ் பேசும் மக்களின் வாழ்வை உத்தரவாதம் செய்யும் இவ்வேண்டுகோளை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்! : தமிழ் சமாதான ஓன்றியம்

Wednesday, 21 May 2008

எம் வாழ்நாளுக்கும் தொடரும் இந்தக் கொடூரத்தின் சுவடுகள் - கணேஸ்வரன் வேலாயுதம் : தொகுப்பு : த ஜெயபாலன்

சட்ட ஆலோசகரும் ஈபிடிபி முக்கியஸ்தருமான மகேஸ்வரி வேலாயும் படுகொலை செய்யப்பட்ட போது அவருடைய சகோதரர் கணேஸ்வரன் வேலாயுதமும் உடனிருந்தார். லண்டனில் வாழும் கணேஸ்வரன் தனது சகோதரி மகேஸ்வரியை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மீண்டும் கொழும்பு வரும்போது அவரால் தனது சகோதரியின் உயிரற்ற உடலையே கொண்டுவர முடிந்தது. தனது இந்த துயர்மிக்க அனுபவத்தை தேசம்நெற்றுடன் பகிர்ந்து கொண்டார் லண்டன் திரும்பிய கணேஸ்வரன். இன்று (மே 21ல்) தொலைபேசியூடாக வேதனையுடன் பகிர்ந்துகொண்ட அனுபவம், பெரும்பாலும் அவரது பேச்சு மொழியிலேயே தொகுக்கப்பட்டு உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எம் வாழ்நாளுக்கும் தொடரும் இந்தக் கொடூரத்தின் சுவடுகள் - கணேஸ்வரன் வேலாயுதம் : தொகுப்பு : த ஜெயபாலன்

மற்றுமொரு மாகாணசபைத் தேர்தல்

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் வெற்றியையடுத்து மேலும் இரண்டு மாகாண சபைகளை உரிய காலத்துக்கு முன் கலைத்து தேர்தலொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளுமென நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வடமத்திய மாகாணசபையுடன் தெற்கு அல்லது ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் வடமத்தி, தெற்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது சாதகமெனவும் கருதப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மற்றுமொரு மாகாணசபைத் தேர்தல்

குண்டு வெடிப்பு: கண்டி – மாத்தளை புகையிரதசேவை இடைநிறுத்தம்

நேற்று (May 20) நள்ளிரவு 11.40 மணிக்கு கண்டி – மாத்தளை புகையிரதப் பாதையில் கட்டுகஸ்தோட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள பாலம் ஒன்றில் குண்டொன்று வெடித்துள்ளது. புகையிரதப் பாதையில் மக்கள் நடக்கும் நடைபாதையிலே இக்குண்டு வெடித்துள்ளது. இதனால் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் கண்டி – மாத்தளை புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டிப்பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கிங்ஸ்லி ஏகநாயக தெரிவித்துள்ளார். வெடித்த குண்டு 2கிலோகிறாம் எடையுடைய சீ-4 ரக குண்டாக இருக்குமென நம்பப்படுகிறது. குண்டு வெடிப்பையடுத்து இப்பிரதேச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
குண்டு வெடிப்பு: கண்டி – மாத்தளை புகையிரதசேவை இடைநிறுத்தம்

மாரடைப்பால் வி.புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் உயிரிழந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் இன்று (மே 20) மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. பாலசேகரம் கந்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1965ல் பிறந்தவர். கொக்குத்தொடுவாய் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை கீழே காணலாம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாரடைப்பால் வி.புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் உயிரிழந்தார்

Tuesday, 20 May 2008

தேசியம் - பாசிசம் - சோசலிசம் : யமுனா ராஜேந்திரன்

….நம் அனைவருக்கும் உள்ளிருக்கும் பாசிசம், நமது தலைகளிலும் நமது அன்றாட வாழ்வு நடவடிக்கைளிலும் இருக்கும் பாசிசம், அதிகாரத்தைக் காதலிக்க நம்மைக் கோரும் பாசிசம், அந்த அதிகாரத்திற்கான வேட்கை, அதுதான் நம்மை ஆதிக்கம் செலுத்துகிறது, நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது…

மிஷேல் பூக்கோ...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசியம் - பாசிசம் - சோசலிசம் : யமுனா ராஜேந்திரன்

இலங்கையில் தொடரும் போரும் அதனால் மாற்றமடையும் பெண்களின் கலாச்சார அடையாளமும் : ராஜேஸ் பாலா

தொடரும் போரால், எங்கள் இலங்கையின் இளம் தலைமுறையினர் அழிந்து கொண்டு வருகிறார்கள். நாங்கள் எல்லோரும் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளி¢ன் பாதுகாப்பு, எதிர்காலம் என்பவற்றில் அக்கறை கொண்டவர்கள். இந்தப்போரை நிறுத்தாவிட்டால் இளம் தலைமுறையைப் பாதுகாக்க முடியாது. இராணுவ முன்னெடுப்புக்களால் சமாதானம் வராது. போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.”

Visaka Dharmadasa, Chairperson - Association of War Affected Woman ...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையில் தொடரும் போரும் அதனால் மாற்றமடையும் பெண்களின் கலாச்சார அடையாளமும் : ராஜேஸ் பாலா

Monday, 19 May 2008

U - turn எடுக்கிறார் ஹிஸ்புல்லாஹா

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது ஹிஸ்புல்லாஹ்வைத் தவிர வேறு எவரையாவது முதலமைச்சராக நியமிப்பதற்கு தாங்கள் இணங்கப் போவதில்லையென மாகாணசபைக்கு தெரிவான 3 உறுப்பினர்களான எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், ஏ.எஸ். ஜவாஹர் ஸாலிஹ், எம்.எஸ். சுபைர் ஆகிய 3 உறுப்பினர்களும் அரசு தரப்புக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறித் தாங்கள் எந்தப் பக்கமும் சாராமல் தனிக்குழுவாக இயங்கப் போவதாக கிழக்கு மாகாண ஆளுநர் முகான் விஜயவிக்கிர அவர்களுக்கு கடந்த 16ஆந் திகதி கடிதம் மூலம் தெரிய வைத்திருந்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
U - turn எடுக்கிறார் ஹிஸ்புல்லாஹா

பெருந்தோட்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்புகள்

க.பொ.த.உயர்தரத்தில் கணித, விஞ்ஞானத் துறைகளில் கல்வி பயின்ற இளைஞர், யுவதிகளுக்கு பட்டப்படிப்புக்களை இந்தியாவில் தொடருவதற்காக இந்தியத் தூதவராலயத்தின் அனுசரணையுடன் புலமைப் பரிசிலினை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பெருந்தோட்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்புகள்

முதலமைச்சர் பிள்ளையானுக்கு தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் வாழ்த்து

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது ஹிஸ்புல்லாஹ்வைத் தவிர வேறு எவரையாவது முதலமைச்சராக நியமிப்பதற்கு தாங்கள் இணங்கப் போவதில்லையென மாகாணசபைக்கு தெரிவான 3 உறுப்பினர்களான எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், ஏ.எஸ். ஜவாஹர் ஸாலிஹ், எம்.எஸ். சுபைர் ஆகிய 3 உறுப்பினர்களும் அரசு தரப்புக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறித் தாங்கள் எந்தப் பக்கமும் சாராமல் தனிக்குழுவாக இயங்கப் போவதாக கிழக்கு மாகாண ஆளுநர் முகான் விஜயவிக்கிர அவர்களுக்கு கடந்த 16ஆந் திகதி கடிதம் மூலம் தெரிய வைத்திருந்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முதலமைச்சர் பிள்ளையானுக்கு தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் வாழ்த்து

பிள்ளையான் ஸ்ரீதலதா மாளிகையில் ஆசிர்வாதம். சிங்கள மக்களிடம் வரவேற்பு

கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சர் பிள்ளையான் நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை கண்டிக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்துக்குச் சென்று உடுகம ஸ்ரீபுத்தரகித்த மகநாயக்க தேரரையும், மல்வத்தை பௌத்த பீடத்துக்குச் சென்று திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல மகாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையான் ஸ்ரீதலதா மாளிகையில் ஆசிர்வாதம். சிங்கள மக்களிடம் வரவேற்பு

Sunday, 18 May 2008

கிழக்கில் சிங்களவர் உரிமை பாதிக்கப்பட்டால் உயிர்த்தியாகம் செய்வோம். - எல்லாவள மேதானந்த தேரர்

கிழக்கு மண் தமிழருக்கு உரியதோ முஸ்லிம்களுக்கு உரியதோ அல்ல. இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே உரியது. கிழக்கு சிங்களவருடையதே. கிழக்கில் சிங்களவரின் உரிமை பறிக்கப்படுமானால் உரிமைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் நாம் தயார் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சங்கைக்குரிய எல்லாவள மோதானந்த தேரர் தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் சிங்களவர் உரிமை பாதிக்கப்பட்டால் உயிர்த்தியாகம் செய்வோம். - எல்லாவள மேதானந்த தேரர்

Saturday, 17 May 2008

தமிழ் ‘தேசிய’ இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது : த ஜெயபாலன்

”கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்றவை இதனுள் அடங்கும்.” என்று பனை மரத்தோப்பின் படத்தோடு அறிமுகம் செய்கிறது தமிழ் இலக்கியத் தோட்டம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் ‘தேசிய’ இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது : த ஜெயபாலன்

மகேஸ்வரி வேலாயுதம் நினைவாக லண்டனில் படுகொலைகளைக் கண்டிக்கும் கூட்டம் : த ஜெயபாலன்

படுகொலை செய்யப்பட்ட சட்ட ஆலோசகரும் ஈபிடிபி முக்கியஸ்தருமான மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவு கூரவும் படுகொலைகளைக் கண்டிக்கவுமான அஞ்சலிக் கூட்டம் லண்டன் லூசியம் சிவன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. யூன் மாதம் 1ம் திகதி மாலை 2 மணி முதல் 6 மணிவரை இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தை எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் அவரது நண்பர்களும் ஏற்பாடு செய்து உள்ளனர். அரசியல் படுகொலைகளைக் கண்டிக்கும் ஒவ்வொருவரும் இதில் கலந்துகொண்டு, இத்தகைய படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மகேஸ்வரி வேலாயுதம் நினைவாக லண்டனில் படுகொலைகளைக் கண்டிக்கும் கூட்டம் : த ஜெயபாலன்

பிள்ளையானின் முதலமைச்சர் பதவி உசலாடுகிறது. கேர்ணல் கருணா நாடு திரும்புகிறார். : முஹம்மட் அமீன்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும்கூட எதிர்காலத்தில் முதலமைச்சுப் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய நிகழ்தகவுகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இவ்வார இறுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்; தலைவர் கருணா அம்மான் இலங்கை வர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கருணா அம்மான் வந்த பின்பு எத்தகை மாற்றங்கள் ஏற்படுமென்று தற்போதைக்குக் கூற முடியாது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையானின் முதலமைச்சர் பதவி உசலாடுகிறது. கேர்ணல் கருணா நாடு திரும்புகிறார். : முஹம்மட் அமீன்

Friday, 16 May 2008

லண்டன் நியூஹாம் கவுன்சிலின் துணைத் தலைவராக கவுன்சிலர் போல் : த ஜெயபாலன்

நியூஹாம் உள்ளுராட்சி சபையின் துணைத் தலைவராக (துணை மேயராக) கவுன்சிலர் போல் சத்தியநேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று (மே 15) மாலை நியூஹாம் கவுன்சிலில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வில் கவுன்சிலர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் முன்னிலையில் கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ஏனையவர்களும் தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். பல்லின மக்கள் வாழும் நியூஹாமில் அம்மக்களுக்கு இதுவரை செய்துவந்த கடமைகளையும் பொறுப்புக்களையும் இன்னும் திறம்படச் செய்ய வேண்டிய பொறுப்பு தனக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கவுன்சிலர் போல் சத்தியநேசன் தேசம்நெற்றிற்குத் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் நியூஹாம் கவுன்சிலின் துணைத் தலைவராக கவுன்சிலர் போல் : த ஜெயபாலன்

மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். - சோசலிச மக்கள் முன்னணி

கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தைப் பலப்படுத்துமாறு சோசலிச மக்கள் முன்னணி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்ற போதிலும் இன ரீதியான எத்தகைய வன்முறைகளும் அங்கு இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கும் மேற்படி முன்னணி, வன்முறைகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்றை அரசு நியமிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். - சோசலிச மக்கள் முன்னணி

சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று! : சி ராஜேஸ்குமார்

மகேஸ்வரி வேலாயுதம் (1953- 2008): அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பது போல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய, மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர் புனர்வாழ்வுப் பணிகளில் TRRO அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் அவர் துரோகியென்று!....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று! : சி ராஜேஸ்குமார்

500 வீடுகளை முஸ்லீம்களுக்கு வழங்குவதை தடை செய்ய ஹெல உறுமய கோருகிறது

தீகவாபி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகள் கொண்ட வீடமைப்புத் திட்டததில் உள்ள வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு தடை உத்தரவு விதிக்கக்கோரி சிஹல உறுமய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் அடங்கலான 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த மனுவில் அம்பாறை மாவட்ட செயலாளர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், காணி ஆணையாளர், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பேரியல் அஸ்ரப் அடங்கலான 12 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
500 வீடுகளை முஸ்லீம்களுக்கு வழங்குவதை தடை செய்ய ஹெல உறுமய கோருகிறது

கிழக்கு வெளுக்கிறது: ‘முதலமைச்சர்’ பிள்ளையான்!!! - முஹம்மட் அமீன்

கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையானை நியமிப்பது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (16) தீர்மானித்துள்ளார். கிழக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகின்ற நிவையில் தற்போது பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி தீர்மானித்து உள்ளார். பல்வேறு மனித உரிமை மீறல் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்தவராக குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையான் இன்னும் சில மணி நேரங்களில் கிழக்கின் முதல்வராக பதவியேற்க உள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு வெளுக்கிறது: ‘முதலமைச்சர்’ பிள்ளையான்!!! - முஹம்மட் அமீன்

கொழும்பில் குண்டு வெடிப்பு! ஆறு பேர் பலி

கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற குண்டு குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகி உள்ளனர். விகாரைக்கு அருகில் இருந்த சோதணைச் சாவடிக்கு அருகிலேயே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி குண்டு வெடிப்க்கு இலக்காகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் பயணித்த பஸ் வண்டியுடன் மோட்டார் வண்டி மோதிய போதே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பில் குண்டு வெடிப்பு! ஆறு பேர் பலி

Thursday, 15 May 2008

மூன்றாவது தமிழியல் மாநாடு - ரொறன்ரோ: தமிழியலா? அல்லது புலிகளுக்கு Lobby இயலா? : நட்சத்திரன் செவ்விந்தியன்

கனடாவின் வின்சர் பல்கலைக்கழக சமூக மானுடவியல் துறையினரும் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கற்கைநெறிகளுக்கான அமையமும் இணைந்து நடத்தும் வருடாந்த கல்விசார் தமிழியல் மாநாடு என்ற கோதாவில் 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மாநாடுகள் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. குறித்த அதன் அமைப்பாளர்களே மூன்றாவது மாநாட்டை இன்று (மே 16 ம் திகதி) வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கூட்டுகிறார்கள். இம்மாநாட்டின் அமைப்பாளர்களையும் அவர்களது உள்நோக்கங்களையும் இக்கட்டுரை அலசி ஆராய்கிறது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மூன்றாவது தமிழியல் மாநாடு - ரொறன்ரோ: தமிழியலா? அல்லது புலிகளுக்கு Lobby இயலா? : நட்சத்திரன் செவ்விந்தியன்

ஒக்ஸ்போர்டில் இல. ஜனாதிபதி மின்னி முழங்கினார். லண்டன் தமிழ் அமைப்புகள் ஓரம்கட்டின : த ஜெயபாலன்

எல்.ரி.ரி.ஈ.க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை தோல்வியடையுமானால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழு உலகுமே தோல்வியடைந்த தாகிவிடும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்ற (மே 14ல்) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக யூனியனால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ஜனாதிபதி, புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிப்பதற்காக உலகம் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பொதுவாக இவ்வாறான நிகழ்வுகளில் மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் இடம்பெறும் நாடுகளில் இருந்து அரச தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு அடையாள எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது வழமை. ஆனால் 200,000 பேர் கொண்ட பலமான தமிழ் சமூகமும் காளான்களாக முளைத்து குவிந்த தமிழ் அமைப்புகள் லண்டனில் இருந்தும் இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்தவரை எவ்வித எதிர்ப்புமின்றி அவரது பயணம் சுமுகமாக அமைந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஒக்ஸ்போர்டில் இல. ஜனாதிபதி மின்னி முழங்கினார். லண்டன் தமிழ் அமைப்புகள் ஓரம்கட்டின : த ஜெயபாலன்

கனாடவில் சிரிஆர் வானொலி பொறுப்பாளர் கலாதரனுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் முகாமைத்துவக் குழு ஆப்பு : த ஜெயபாலன்

கனடாவில் இயங்கும் இரு வானொலி நிலையங்களுக்கிடையில் இருந்து வந்த இழுபறி மே 11ல் க்ளைமாக்ஸிற்கு வந்தது. சகோதர வானோலிகளாக இயங்கிய சிஎம்ஆர் - சிரிஆர் வானொலிகளுக்கிடையில் இருந்து வந்த நிர்வாக முரண்பாடு அதன் உச்சத்திற்கு வந்தது. சிஎம்ஆர் நிர்வாகம் அதிரடியாக சிரிஆர் வானொலி நிலையத்திற்குள் புகுந்து அதன் உபகரணங்களை சிஎம்ஆர் இயங்கும் கட்டிடத்திற்கு இடம்மாற்றியது. இது தொடர்பாக சிஎம்ஆர் வானொலி நிர்வாகத்திடம் தேசம்நெற் தொடர்பு கொண்ட போது, சிரிஆர் வானொலியின் மூன்றில் இரண்டு பங்குதாரர்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே, சிரிஆர் வானொலியின் உபகரணங்கள் சிஎம்ஆர் நிறுவனம் இயங்கும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதாக சிஎம்ஆர் நிறுவனத்தின் முகாமையாளர் கம்பல் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனமுரண்பாட்டைத் தூண்டும் முதலமைச்சர் கனவுகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு : முஹம்மட் அமீன் & த ஜெயபாலன்

Wednesday, 14 May 2008

இனமுரண்பாட்டைத் தூண்டும் முதலமைச்சர் கனவுகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு : முஹம்மட் அமீன் & த ஜெயபாலன்

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் உட்பட பிரதான 6 பதவிகளுக்குமான நியமனம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனது சார்புக் கட்சித் தலைவர்களுடன் நேற்று (மே 13) விசேட பேச்சுவார்த்தையொன்றினை நடத்த இருந்தது. ஆனால், இப்பேச்சுவார்த்தை நேற்று (மே 13) நடைபெறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆம 15ல் லண்டனிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் உட்பட பிரதான 6 பதவிகளுக்குமான நியமனம் குறித்து முடிவெடுக்கப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஆரம்பத்தில் பிள்ளையானுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்தது. பின்னர் விருப்பு வாக்குகளை அதிகம் பெறுபவர்களுக்கு என்றது. பின்னர் கூடிய ஆசனங்களைப் பெற்ற சமூகத்தில் உள்ளவருக்கு முதல்வர் என்றுது. இதனால் ஹிஸ்புல்லா தனக்கே முதலமைச்சர் என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் இஸ்டத்திற்கு முடிவுகளை மாற்றியது. மே 10 தேர்தல் முடிவடைந்து மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்கு மறுநாள் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியும் முக்கிய நியமனங்களும் இன்னும் சில நாட்களுக்கு இழுபறியில் விடப்பட்டு உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனமுரண்பாட்டைத் தூண்டும் முதலமைச்சர் கனவுகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு : முஹம்மட் அமீன் & த ஜெயபாலன்

”யுத்த நிறுத்தம் நிறுத்தப்படாது! பிரபாகரனின் பதுங்கு குழி விரைவில் அவருக்கு புதைகுழியாகும்” - பிரதமர் விக்கிரமநாயக்க

”பயங்கரவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முற்று முழுதாகத் துடைத்தெறியும் வரையில் அரசாங்கம் இராணுவ ரீதியான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்” என பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார். மேலும் ”தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் அழுத்தங்களைக் கொண்டுவந்து அரசாங்கத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சித்த போதிலும் அனைத்து வகையான சவால்களையும் முறியடித்து அரசாங்கம் இறுதி வெற்றியை அடைந்தே தீரும்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”யுத்த நிறுத்தம் நிறுத்தப்படாது! பிரபாகரனின் பதுங்கு குழி விரைவில் அவருக்கு புதைகுழியாகும்” - பிரதமர் விக்கிரமநாயக்க

ஈபிடிபி முக்கியஸ்தர் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஈபிடிபி முக்கியஸ்தர் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். சுகவீனமுற்று இருந்த தாயாரை பார்ப்பதற்காக அவரது சொந்த ஊரான கரவெட்டிக்குச் சென்றிருந்த போதே அங்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இரவு 7.45 அளவில் இராணுவ உடையில் வீட்டை சோதனையிடப் போவதாக கூறி உள்ளே சென்ற நபர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தபின் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மகேஸ்வரி வேலாயுதத்துடன் அவரின் சகோதரரும் கரவெட்டிக்குச் சென்றிருந்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஈபிடிபி முக்கியஸ்தர் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டார்

Tuesday, 13 May 2008

ஐனாதிபதி ராஜபக்ஸ ஒக்ஸ்போர்டில் உரையாற்றுகிறார். பிரித்தானிய தமிழர்கள் எதிர்ப்புக் காட்டத் தயக்கம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (May 13) பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர் பேரவை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதற்காக வேண்டி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் (May 11) பிரித்தானியாவிலுள்ள இலங்கை மாணவர் பேரவையின் அழைப்பின் பேரில் லண்டன் வந்துள்ளார். ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து இன்றிரவு இராப்போஸண விருந்தொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஐனாதிபதி ராஜபக்ஸ ஒக்ஸ்போர்டில் உரையாற்றுகிறார். பிரித்தானிய தமிழர்கள் எதிர்ப்புக் காட்டத் தயக்கம்

ஐரோப்பிய தமிழர்களின் பார்வையில் கிழக்குத் தேர்தல் - தொகுப்பு : த ஜெயபாலன்

கிழக்கு தேர்தல் தொடர்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஈடுபாடு பற்றிய கட்டுரையொன்றை தேசம்நெற்றில் தேர்தலுக்கு முன்னாக எழுதியிருந்தேன். அதைவிட இத்தேர்தல் தொடர்பாக புலம்பெயர் அமைப்புகள் சில அறிக்கைகள் விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இப்போது தேர்தல் முடிவுக்குப் பின் அது தொடர்பான கருத்துக்களை தொகுத்து உள்ளேன். இத்தேர்தல் தொடர்பான கிழக்கு எதிர்காலம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஐரோப்பிய தமிழர்களின் பார்வையில் கிழக்குத் தேர்தல் - தொகுப்பு : த ஜெயபாலன்

Monday, 12 May 2008

கிழக்கு தேர்தலுக்குப் பின்னான சலசலப்பு : முஹம்மட் அமீன்

மாகாணசபை வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண தேர்தலில் பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த வாக்குகள் 982,721 ஆகும். இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் 646,456 ஆகும். இதில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 54,780 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 591,766 ஆகும். இத்தேர்தலில் 65.78 வீதத்தினர் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தலுக்குப் பின்னான சலசலப்பு : முஹம்மட் அமீன்

தேசிய சுதந்திர முன்னணி - புதிய கட்சி

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிந்த கையோடு இன்று 12-05-2008 இலங்கை அரசியல் கட்சி வரலாற்றில் புதியதோர் அரசியல் கட்சி உருவாக்கம் பெறுவதற்கான அத்திவாரம் இடப்பட்டது. ஜே.வி.பி. இருந்து பிரிந்து சென்றுள்ள அணியினரே தேசிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றினைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று தேர்தல் ஆணையாளரிடம் சமர்பித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசிய சுதந்திர முன்னணி - புதிய கட்சி

Sunday, 11 May 2008

ஐ.தே.கவுக்கு 15வது தடவையாகவும் தோல்வி - மஹிந்தானந்த அழுத்கமகே

அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த ஐ.தே.க. முழுமையாக முயற்சித்த போதிலும் கூட அது வெற்றியைத்தரவில்லை. இதுவரை தொடர்ச்சியாக 14 தடவைகள் தோல்வியைத்தழுவிய ஐ.தே.க. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தோல்வியடைவதுடன் 15வது தடவையும் தோல்வியைத் தழுவிய துர்ப்பாக்கியமான நிலையை அடைகின்றது. ஐ.தே.க கூறும் முறையில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றிருந்தால் தேர்தல் ஆணையாளர் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை வாக்குகளை நிராகரித்திருப்பார். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஐ.தே.கவுக்கு 15வது தடவையாகவும் தோல்வி - மஹிந்தானந்த அழுத்கமகே

Saturday, 10 May 2008

கேர்ணல் கருணா, இலங்கைக்கு செல்லும் மணித்தியாலங்களை நாட்களை எண்ணுகிறார்

கேர்ணல் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (40) இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜதந்திர கடவுச்சீட்டுடன பிரித்தானியாவிற்குள் நுழைந்தற்காக கடந்த ஆண்டு நவம்பர் 2, முதல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இவர் மே 8ல் விடுதலையானார். இவர் விடுதலையானதும் உள்துறை அமைச்சினால் தடுத்து வைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் குற்றவாளியை உள்துறை அமைச்சு தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதே வழமையான நடைமுறையுமாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கேர்ணல் கருணா, இலங்கைக்கு செல்லும் மணித்தியாலங்களை நாட்களை எண்ணுகிறார்

மட்டு வில் ஆளும் கூட்டணியில் போட்டியிட்ட ரிஎம்விபி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது

மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 11 ஆசனங்களைப் பெறுவதற்கான இத்தேர்தலில் 12 அரசியல் கட்சிகளையும் 15 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 378 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 331,000 வாக்காளர்களில் 198,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 56 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 32.47 விதமான வாக்குகளை மட்டுமே இரண்டாவதாக வந்த ஐக்கிய தேசியக்கட்சிக் கூட்டணி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் பிரதானமாகப் போட்டியிட்டது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மட்டு வில் ஆளும் கூட்டணியில் போட்டியிட்ட ரிஎம்விபி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது

தபால் வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் வெளியாகி உள்ளது. மட்டக்களப்பில் 2159 வாக்குகளைப் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குளில் இது 51.7 வீதம். ஆதே போல் அம்பாறை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 4722 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட வாக்குகளில் இது 55.2 வீதம்.

திருகோணமலையில் இடம்பெயர்ந்தவர்கள் அளித்துள்ள வாக்குகளில் யுஎன்பி கூட்டணி 1143 வாக்குகளையும் ஆளும் கூட்டணியான யுபிஎப்ஏ 166 வாக்குகளையே பெற்றுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தபால் வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது

மட்டு தபால் வாக்குகளில் 52 வீதவாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது

மட்டு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் வெளியாகி உள்ளது. அதில் 2159 வாக்குகளைப் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குளில் இது 51.7 வீதம்.

திருகோணமலையில் இடம்பெயர்ந்தவர்கள் அளித்துள்ள வாக்குகளில் UNP கூட்டணி 1243 வாக்குகளையும் ஆளும் கூட்டணியான UPFA 166 வாக்குகளையே பெற்றுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மட்டு தபால் வாக்குகளில் 52 வீதவாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது

கிழக்கு தேர்தல் அரசுக்கு சாதகமாகவே உள்ளது. வெற்றி பெற்றால் இரட்டிப்பு வெற்றி!!! : முஹம்மட் அமீன்

கிழக்கு மாகாணசபைக்கு 35 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (May 10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 3 மாவட்டங்களிலும் பி.ப 4.00 மணிக்கு நிறைவுபெற்றது. இத்தேர்தலில் வாக்களிக்க மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை மாவட்டங்களில் 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தல் அரசுக்கு சாதகமாகவே உள்ளது. வெற்றி பெற்றால் இரட்டிப்பு வெற்றி!!! : முஹம்மட் அமீன்

தேர்தல் சுமுகமாக நடைபெறுகிறது 50 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர் - முஹம்மட் அமீன்

கிழக்கு மாகாணசபைக்கு 37 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 3 மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாக்கெடுப்பு பி.ப 4.00 மணிக்கு நிறைவுபெறும். இலங்கை நேரம் பி.ப. 2:15 வரை மூன்று மாவட்டங்களிலும் மிகச் சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்றதாக தெரியவரவில்லை. 28 சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு காலையில் வாக்குப்பதிவுகளை மந்தமாக்கி இருந்தது. ஆனால் நண்பகலில் வாக்குப்பதிவு வழமைக்கு திரும்பியது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேர்தல் சுமுகமாக நடைபெறுகிறது 50 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர் - முஹம்மட் அமீன்

Friday, 9 May 2008

கேணல் கருணா விரைவில் இலங்கை திரும்பலாம் : த ஜெயபாலன்

கேணல் கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனில் உள்ள வூம்குரொப்ற் சிறையிலிருந்து விடுதலையாக உள்துறை அமைச்சின் குடிவரவு கட்டுப்பாட்டுப் பிரிவினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சு செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது. கேணல் கருணா அரசியல் தஞ்சம் கோராத பட்சத்தில் விரைவில் இலங்கைக்கு திரும்பலாம் என்று தெரியவருகிறது. இவர்மீதான குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமையல் பிரித்தானிய பொலிசார் கேணல் கருணா மீது குற்றச்சாட்டுகள் எதனையும் பதிவு செய்யவில்லை எனவும் nதிரியவரகிறது. கேணல் கருணா கைது செய்யப்படும் போது கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இதற்காக உள்துறை அமைச்சு அவர்மீது நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெரியவில்லை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கேணல் கருணா விரைவில் இலங்கை திரும்பலாம் : த ஜெயபாலன்

”கிழக்கில் பெறப்படும் ஆணை வடக்கிற்கும் ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆணை” - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

”கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் (மே 10) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வட பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆணையாக எற்றுக்கொள்ளப்படும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் (மே 07) தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட பொதுக் கூட்டம் அம்பாறை நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் (மே 07) நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து செய்மதி ஊடாக உரையாற்றினார். இவ்வுரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கிழக்கில் பெறப்படும் ஆணை வடக்கிற்கும் ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆணை” - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

Thursday, 8 May 2008

”இலங்கை இனப் பிரச்சனையில் எமது ஐக்கியம்” கருத்தரங்கு : தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணி - பத்திரிகை அறிக்கை

04-05-2008 ஞயிறு பிரான்ஸில் தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியினால் ”இலங்கை இனப்பிரச்சனையில் எமது ஐக்கியம்” என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று ‘சபாலிங்கம் நினைவு மண்டபத்தில்’ நடைபெற்றது. காலை 11 மணியில் இருந்து மாலை வரை நடைபெற்ற இன் நிகழ்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து குறிப்பாக கனடா, நோர்வே, சுவிற்ஸலாந்து, பிரித்தானியா, Nஐர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் பல அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இலங்கை இனப் பிரச்சனையில் எமது ஐக்கியம்” கருத்தரங்கு : தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணி - பத்திரிகை அறிக்கை

கிழக்கு தேர்தல் - தீவிர பாதுகாப்பு

தேர்தலில் வன்முறைகள் எதுவும் ஏற்படாதவாறு தீவிரமான பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேர்தலுக்கு முன்பும், பின்பும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு வியூகமொன்றினை வகுக்குமாறும் சகலரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறும் இப்பணிப்புரையில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தல் - தீவிர பாதுகாப்பு

தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் இரண்டாவது மகளிர் மகாநாடு : WDF-CCD

பெண்கள் வலிமையாக்கம், பால் சமத்துவம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325வது தீர்மான அமுலாக்கம் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது மகளிர் மகாநாட்டில் கலந்து கொள்ளப் பதிவு செய்யுமாறு தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம் அழைப்பு விடுக்கின்றது. 2008 ஆம் ஆண்டு மே மாதம்; நடைபெறும் இம் மகாநாடு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் இரண்டாவது மகளிர் மகாநாடு : WDF-CCD

”நாடாளுமன்றம் இடைநிறுத்தம் அரச பயங்கரவாதம்” - ஜே.வி.பி.

எதிர்ப்பு காட்ட ஆயத்தம் - ஜே.வி.பி:
நாடாளுமன்றத்தை இடைநிறுத்த ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி கடும் எதிர்ப்புக் காட்டப் போவதாக சோமவன்ஸ சார்பு ஜே.வி.பி. நேற்று (May 07) தெரிவித்தது. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவுடன் சேர்ந்து அரசு மேற்கொண்டு வரும் வன்முறைகள் பற்றி நாம் நாடாளுமன்றத்தில் கூறினோம். மேலும் அது பற்றிய விடயங்களை விவரமாக அம்பலப்படுத்தத் தயாரானோம். எம்மைப் பேசவிடாது தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வுகளை அவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைநிறுத்திவிட்டார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
””நாடாளுமன்றம் இடைநிறுத்தம் அரச பயங்கரவாதம்” - ஜே.வி.பி.

Wednesday, 7 May 2008

”இலங்கைத் தீவிலிருந்து பிரபா குழுவினர் முழுமையாக துடைத்தெறியப்படும் நாளன்று எமது ஆயுதப் பிரிவு கலைக்கப்படும்.” பிள்ளையான் - நேர்காணல்

“பிரபாகரன் குழுவிடமிருந்து எங்களையும், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களையும் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஆயுதம் வைத்திருக்கின்றோம். எங்கள் துப்பாக்கிகள் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவல்ல. இலங்கைத் தீவிலிருந்து பிரபாகரன் குழுவினர் முழுமையாகத் துடைத்தெறியப்படும் நாளன்று எமது ஆயுதப் பிரிவு கலைக்கப்படும். ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படும்.” தினகரன் பத்திரிகையில் 2008.05.04ஆந் திகதி பிரசுரமாகியிருந்த பேட்டியொன்றிலே பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இப்பேட்டியின் சுருக்கம் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இலங்கைத் தீவிலிருந்து பிரபா குழுவினர் முழுமையாக துடைத்தெறியப்படும் நாளன்று எமது ஆயுதப் பிரிவு கலைக்கப்படும்.” பிள்ளையான் - நேர்காணல்

எதிரியின் எதிரியும் எதிரியே (இலங்கை - ஈரான் - அமெரிக்கா) - (எஸ்எல்எப்பி - யுஎன்பி - எல்ரிரிஈ) : பிளேட்டோ

ஈரானிய ஜனாதிபதி முஹம்மத் அஹ்மத் நஜாத்தின் இலங்கை விஜயம் சர்ச்சைக்குரிய விஜயமாக பலர் கருதுகிறார்கள். இல்லாவிட்டால் அதனை சர்ச்சைக்குரியதாக்க முயற்சிக்கிறார்கள். அதேவேளை, பலர் தத்தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அவ்விஜயத்தை வியாக்கியானம் செய்கிறார்கள்.

ஈரானிய ஜனாதிபதியின் விஜயத்தை சர்ச்சைக்குரியதாக்குவதில் இந்திய அரசியல் விமர்சகர் பி. ராமன் பெரும் பங்கை ஆற்றினார். அஹ்மத் நஜாத்தின் விஜயத்தின் மூலம் ஈரான் இலங்கைக்கு புலனாய்வுத்துறையில் உதவி செய்யவிருப்பதாக அவர் எழுதினார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இனி இலங்கைக்கு வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகளை நிறுத்தப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியை பதவிக்குக் கொண்டுவர முயற்சிக்கும் பத்திரிகையொன்று எழுதியது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எதிரியின் எதிரியும் எதிரியே (இலங்கை - ஈரான் - அமெரிக்கா) - (எஸ்எல்எப்பி - யுஎன்பி - எல்ரிரிஈ) : பிளேட்டோ

ஜனநாயகம் பேணும் ஞான(ம்) நிலையில் புலம்பெயர் குழுக்கள்

இதுவரை காலமும் இன்றும் தமிழ்பேசும் மக்களின் மேல் பேரினவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு தமது தேர்தல் வெற்றியை அடிப்படையாக முன்வைத்து அரசியல் நடத்துகின்றன இனவாதக் கட்சிகள். வெற்றிலைச் சின்னத்தின் கீழும் யானைச் சின்னத்தின் கீழும் மே 10ல் மற்றுமொரு அரசியல் நாடகம் அரங்கேறுகிறது. தங்கள் முன்னணிகளின், கட்சிகளின், இயக்கங்களின் பெயர்களில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள ஜனநாயகம் கோருபவர்களின் மூன்றம்தர அரசியல் அலசல்களும் கூட்டிணைவுகளும் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் விரக்தியின் விழிம்புவரை இழுத்து வந்திருக்கிறது. இந்த முற்போக்கு முகமூடிகள் அம்பலத்திற்கு வருவதானது புலம்பெயர் சூழலில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்கத்தக்க சமிக்ஞையே.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனநாயகம் பேணும் ஞான(ம்) நிலையில் புலம்பெயர் குழுக்கள்

கிழக்கு தேர்தல் பிரசாரங்கள் இன்று முடிவடையும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் இன்று (மே 7) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. 10ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதால் 48 மணித்தியாலத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரப் பணிகளை நிறைவு செய்துகொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழு வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தல் பிரசாரங்கள் இன்று முடிவடையும்

Tuesday, 6 May 2008

ஓநாய்களும் எலும்புத் துண்டுகளும் : பிரதீபன்

இந்த மே மாதம் 4ம் திகதி இரவு நான் ஒரு கனவு கண்டேன். கனவு கண்டு விழித்தபோது நான் ஒரு பதட்டத்தில் இருப்பதைப் போலவும் என் அன்புக்குரிய ஏதோ ஒன்றை இழந்தது போலவும் எனக்குத் தோன்றுகின்றது. எனக்கு கனவுகள் அவ்வப்போதுதான் வரும். வரும் கனவுகள் எப்போதுமே என்னை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தும். கனவுகள் ஆழ்மன சிந்தனைகளின் குறியிடுகளுடனான காட்சி வடிவம் என நான் எப்போதும் நம்புவதால் என் கனவு தோன்றுவதற்கான என் ஆழ்மனக் காரணிகளை நான் தேடுவது வழக்கம். பெரும்பாலும் என் கனவுகளுக்கும் என் ஆழ்மனதிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என நான் அறிவேன். எனது கனவில் வந்த காட்சி இது.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஓநாய்களும் எலும்புத் துண்டுகளும் : பிரதீபன்

பிந்திய செய்தி: விடுதலைப் புலி ஆதரவாளர் மீண்டும் கைது

இன்று (மே 6) 51 வயதுடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவின்;டன் என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது தலைநகரில் அதிகூடிய பாகாப்புக் கொண்ட படிங்ரன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தேசம்நெற்றிற்கு தெரிவித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர் ஏ சி சாந்தன் என உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவெ கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஏ சி சாந்தன் சுவின்டனில் உள்ள அவருடைய சகோதரியின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி: விடுதலைப் புலி ஆதரவாளர் மீண்டும் கைது

தடம்புரண்ட எம் போராட்டப் பாதை - சகோதரப் படுகொலைகள் - மனித உரிமை மீறல்கள் : ரி சோதிலிங்கம்

(ஏப்ரல் 29, 1986ல் ஆரம்பமாகிய தமிழீழ விடுதலை இயக்க அழிப்புத் தாக்குதல்கள் இருவாரங்கள் வரை நீடித்தது. இச்சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகளை நினைவுகூரும் வகையில் இக்கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது. இது டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி 15 டிசம்பர் 2007ல் தேசம் சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலில் ரி சோதிலிங்கம் ஆற்றிய உரை.)

உலகில் பல நாடுகளிலும் பல வழிகளில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதற்காக அவரவர்கள் போராடுகிறார்கள். அவரவர் தத்தமது பிரதேசத்திற்காக இனத்திற்காக செய்யும் போராட்டங்களை வரவேற்பதோடு எனது ஆதரவினையும் வழங்குகின்றேன். தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் மலையக மக்கள் ஆகிய நாம் எமது நாட்டில் எப்படி எல்லாம் மனித உரிமைகள் மீறப்பட்டது. தற்போதும் மீறப்படுகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தடம்புரண்ட எம் போராட்டப் பாதை - சகோதரப் படுகொலைகள் - மனித உரிமை மீறல்கள் : ரி சோதிலிங்கம்

Monday, 5 May 2008

ஆண்டுகள் 22 கடந்தும் ஆறாத அந்த ரணங்கள் - ரி சோதிலிங்கம்

”எதிரியைத் தடுத்திட எடுத்திட வேண்டிய ஆயுதங்கள்; இனத்தின் இரத்தத்தையே குடித்து மகிழத் தொடங்கி விட்டது. ஈழவிடுதலை இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தெரியாத நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வருவது என்பதில் போராளிகளின் பல்வேறு குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொண்டு மடிந்து போகிற அவலம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது”. – 1986ல் சிறிசபாரத்தினம் கொல்லப்பட்ட போது கலைஞர் கருணாநிதி....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆண்டுகள் 22 கடந்தும் ஆறாத அந்த ரணங்கள் - ரி சோதிலிங்கம்

வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்திய பாரிஸ் சந்திப்பு : த ஜெயபாலன்

மே 4ல் தமிழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எப், புளொட், ரியுஎல்எப்) இலங்கை இனப் பிரச்சினையில் எமது ஐக்கியம்’ என்ற தலைப்பில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு தேர்தலையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பிற்கு மோகன் என்பவர் தலைமைதாங்கி இருந்தார். பாரிஸில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளிலும் இருந்தும் 50 வரையானவர்கள் கலந்து கொண்டனர். வட - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தை இச்சந்திப்பு விலியுறுத்தியது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்திய பாரிஸ் சந்திப்பு : த ஜெயபாலன்

புலம்பெயர்ந்தவர்களின் பார்வையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்

எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நீண்ட காலம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த மீட்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு விடிவாக அமையப் போகிறது என அரசாங்கம் முழங்குகிறது. ஆனால் இத்தேர்தல் நீதியும் நியாயமானதுமாக இடம்பெறுமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவமிக்க இத் தேர்தலை சர்வதேச சமூகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசிப்போர் இத்தேர்தலை எந்தக் கண்னோட்டத்தில் நோக்குகின்றனர் என்பதை அறிய லன்டனில் வசிக்கும் சில புத்திஜீவிகளுடன் எங்கள் தேசம் அலசியது. - உரையாடியவர்: பருர் அலி....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலம்பெயர்ந்தவர்களின் பார்வையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்

Sunday, 4 May 2008

மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்! : TFP, SLDF, SL-IF, SDOSLD அறிக்கை

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது.

ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத் தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்பு உற்று இருப்பதாலும் வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத சமூக அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாலும் இத்தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தேர்தல் அங்கு வாழ்கின்ற பல்லினங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் தோற்றுவிக்கும் தேர்தலாக இத் தேர்தல் அமையவேண்டும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்! : TFP, SLDF, SL-IF, SDOSLD அறிக்கை

Saturday, 3 May 2008

தயவு செய்து நிறுத்துங்கள்!!! : த ஜெயபாலன்

ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தயவு செய்து நிறுத்துங்கள்!!! : த ஜெயபாலன்

கிழக்கு தேர்தலும் புலம்பெயர் குழுக்களின் ஈடுபாடும் - இயக்க அடையாளங்களை களைய வேண்டும் : த ஜெயபாலன்

மே 10ல் கிழக்கு இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தல் அம்மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வில்லையானாலும் அரசியல் கட்சிகளிடையேயும் அவர்களுக்குப் பின் நிற்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தல் வன்முறையற்ற தேர்தலாகவும் சர்வதேச சமூகத்தாலும் வரவேற்கப்படும் வகையிலும் இடம்பெற்றதால் மாகாண சபைத் தேர்தலில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு சர்வதேசத்திற்கு தன் ஜனநாயகத்தை பறைசாற்றும் ஒரு காட்சியகமாக அமைந்து உள்ளது. தேர்தலுக்கு முன்பாக நாள்தோறும் படுகொலைகள் இடம்பெற்று வந்தது. ஆனால் உள்ளுராட்சித் தேர்தலுக்கு சற்று முன்னிருந்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை அம்மக்களுக்கு ஒரு ஆறுதலான விடயமே. இது புயலுக்கு முன்னான அமைதியாக அல்லாமல் நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்பது அம்மக்களின் குறைந்தபட்ச அக்கறை என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தலும் புலம்பெயர் குழுக்களின் ஈடுபாடும் - இயக்க அடையாளங்களை களைய வேண்டும் : த ஜெயபாலன்

லண்டன் அசம்பிளியில் இனவாதக் கட்சியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : சேனன்

மே 1ல் நடந்த லண்டன் மேயருக்கான தேர்தலிலும் எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் வெற்றி பெற்றுள்ளது. அதன் வேட்பாளரான பொறிஸ் ஜோன்சன் புதிய மேயராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். பொறிஸ் ஜோன்சன் 1,168,738 வாக்குகளைப் பெற்று மேயராகி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக மேயராக இருந்த கென் லிவிங்ஸ்ரன் 1,028,966 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்து உள்ளார். இதன் தேர்தல் முடிவுகள் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கும். பொறிஸ் ஜோன்சனின் வெற்றி 2010ல் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள கோடன் பிறவுண் தலைமையிலான் தொழிற்கட்சிக்கு சவாலாகவே அமைந்து உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் அசம்பிளியில் இனவாதக் கட்சியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : சேனன்

Friday, 2 May 2008

லண்டன் மேயருக்கான தேர்தலிலும் எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் வெற்றி : த ஜெயபாலன்

மே 1ல் நடந்த லண்டன் மேயருக்கான தேர்தலிலும் எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் வெற்றி பெற்றுள்ளது. அதன் வேட்பாளரான பொறிஸ் ஜோன்சன் புதிய மேயராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். பொறிஸ் ஜோன்சன் 1,168,738 வாக்குகளைப் பெற்று மேயராகி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக மேயராக இருந்த கென் லிவிங்ஸ்ரன் 1,028,966 வாக்குகளைப் பெற்று மூன்றாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டு லண்டன் ஒலிம்பிக்கை ஒழுங்கமைக்கும் வாய்ப்பை இழந்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் மேயருக்கான தேர்தலிலும் எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் வெற்றி : த ஜெயபாலன்

பிரித்தானிய உள்ளுராட்சித் தேர்தல்: தொழிற்கட்சியின் வரலாற்றுத் தோல்வி : த ஜெயபாலன்

40 வருடங்களுக்குப் பின் பிரித்தானிய தொழிற்கட்சி படுதோல்வியைச் சந்தித்து உள்ளது. இங்கிலாந்திலும் வேல்சிலும் நேற்று (மே 1) இடம்பெற்ற 159 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலேயே இந்த தோல்வி ஏற்பட்டு உள்ளது. 1997 முதல் கடந்த மூன்று தடவைகள் தொடர்ந்தும் ஆட்சியைக் கைப்பற்றி 11 ஆண்டுகள் பிரித்தானியாவை ஆட்சி செய்துவரும் தொழிற்கட்சி உள்ளுராட்சித் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்த்த போதும் இத்தோல்வி மிக மோசமானதாக அமைந்து உள்ளது. 159 உள்ளாட்சி மன்றங்களில் 100 மன்றங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தொழிற்கட்சியின் வரலாற்றுத் தோல்வி உறுதியாகி உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய உள்ளுராட்சித் தேர்தல்: தொழிற்கட்சியின் வரலாற்றுத் தோல்வி : த ஜெயபாலன்

Thursday, 1 May 2008

இலங்கையில் இன்று தொழிலாளர் தினமல்ல : அரசியல் கட்சிகளின் பிரச்சார தினம்

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று கொழும்பிலும், மலையகப் பகுதிகளிலும் மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. கொழும்பிலுள்ள சில அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முக்கிய கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்துகின்றன. மொத்தம் 11 கூட்டங்கள் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், பிரதான கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகியன ஊர்வலங்கள் நடத்துவதிலிருந்து தவிர்ந்துள்ளன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையில் இன்று தொழிலாளர் தினமல்ல : அரசியல் கட்சிகளின் பிரச்சார தினம்

வாக்களிக்கத் தயாராகுங்கள்: லண்டன் மேயர் தேர்தல் - லாபம் யாருக்கு? : சேனன்

இன்று 1ம் திகதி வியாழன், லண்டனில் நடக்க இருக்கும் தேர்தலில் லண்டனுக்கான மேயரும் லண்டன் அசம்பிளிக்கான உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கபட உள்ளார்கள்.

1. லண்டனில் வாழ்பவர்கள் தமது முக்கிய பிரச்சினைகளாக போக்குவரத்து, சம்பள உயர்வு, வீட்டு வசதி, வன்முறை குறைப்பு முதலானவைகளை கருதுகிறார்கள். இதை மையமாக வைத்து மூன்று முன்னணி கட்சிகளும் கிட்டத்தட்ட ஓரே மாதிரியான தீர்வையே வைக்கின்றன. லண்டனின் பொருளாதார நடவடிக்கையை மாற்றி பெரும்பான்மை மக்களின் நலனுக்கு ஆதரவான கொள்கை உடையவர்களுக்கு முதல் தெரிவை வழங்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே. இடது சாரி பட்டியலில் போட்டியிடும் லின்சி யேர்மனை ஒரு உதாரணமாக காட்டலாம்.

2. நாம் வாக்களிக்காத பட்சத்தில் துவேச-கோமாளி பொரிசுக்கு வெல்லும் சந்தர்பத்தை கூட்டுகிறோம் என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். இதனால் இரன்டாவது தெரிவாக கென்னுக்கு வாக்களிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

3. வாக்களிப்பது எமது ஜனநாயக உரிமை. எமது குரலை அடையாளப்படுத்தும் சந்தர்பத்தை நாம் தவறவிடக் கூடாது. லன்டனில் கனிசமான தொகையில் வாழும் நாம் லண்டன் அரசியில் தீர்வுகளில் பங்குபற்ற வேண்டியது கட்டாயம். பங்கு பற்றும் துவேச கட்சிகளுக்கு எதிராக - முதலாளிகளின் கட்சிகளுக்கு எதிராக நாம் வாக்களிப்பது அவசியம். குறைந்த பட்சம் அசம்பிளி உறுப்பினர் தேர்வில் நாம் செல்வாக்கு செலுத்தலாம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாக்களிக்கத் தயாராகுங்கள்: லண்டன் மேயர் தேர்தல் - லாபம் யாருக்கு? : சேனன்
Newer Posts Older Posts Home