Tuesday, 20 May 2008

இலங்கையில் தொடரும் போரும் அதனால் மாற்றமடையும் பெண்களின் கலாச்சார அடையாளமும் : ராஜேஸ் பாலா

தொடரும் போரால், எங்கள் இலங்கையின் இளம் தலைமுறையினர் அழிந்து கொண்டு வருகிறார்கள். நாங்கள் எல்லோரும் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளி¢ன் பாதுகாப்பு, எதிர்காலம் என்பவற்றில் அக்கறை கொண்டவர்கள். இந்தப்போரை நிறுத்தாவிட்டால் இளம் தலைமுறையைப் பாதுகாக்க முடியாது. இராணுவ முன்னெடுப்புக்களால் சமாதானம் வராது. போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.”

Visaka Dharmadasa, Chairperson - Association of War Affected Woman ...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையில் தொடரும் போரும் அதனால் மாற்றமடையும் பெண்களின் கலாச்சார அடையாளமும் : ராஜேஸ் பாலா

1 comment:

Anonymous said...

அன்புள்ள ராசேசு அக்காவுக்கு.

தம்பி சாத்திரி எழுதிக்கொள்ளுறது என்னவெண்டால். நீங்கள் உலகம் முழுக்க சுத்திச் சுழண்டு எங்கையெல்லாம் பெண்கள் பாதிக்கப் படுகினமோ கய்ரப் பபடுகினமோ அங்கையெல்லாம் ஓடியோடி அடிக்கடி மகா நாடு நடத்திக் கொண்டிருக்கிற உங்களுக்கு என்ரை கடுதாசியை படிக்க நேரம் இருக்குமோ என்னவோ தெரியாது எண்டாலும் ஏதோ அக்காச்சிக்கு எழுதவேணும் போலை தோன்றிச்சுது எழுதிறன். கடைசியாய் லண்டன் தமிழ் மவளிர் அமைப்பினர் நடத்தின மகா நாடு பற்றி நீங்கள் எழுதியிருந்தியள் சந்தோசம்.இந்த லண்டன் தமிழ் மவளிர் அமைப்பு இதுவரை எங்கடை ஊரிலை சண்டையிலை அங்கவீனமாகி போய் இல்லாட்டி வருமானம் கொண்டுவந்த புருசன்மாரை இழந்து கைக்குழந்தையளோடை சோத்துக்கே அல்லாடி கொண்டிருக்கிற எங்கடை பொம்பிளையளுக்கு ஏதாவது ஒரு சதத்துக்குகேனும் பிரயோசனமான உதவி ஏதும் செய்திருக்கினமோ?? சரி உதவிதான் வேண்டாம் மனுச விழுமியம்.மனிதவுரிமை.மனச்சிதைவு எண்டு ஏதோ பெரிய பெரிய வார்த்தையள் எல்லாம் பாவிச்சு கட்டுரை எழுதிற மெத்தப் படிச்ச நீங்கள் ஊரிலை ஆமிக்காரன் சிதைச்சுப்போட்டு பிறகு கழுத்திலை கயிறுபோட்டு கட்டித்தூக்கிப் போட்டுபோன பெண்களை பற்றி. ஏன் வாழுற வயசிலை கொத்தாய் அள்ளி கொலை செய்த வள்ளி புரத்து பிஞ்சு பெண் பிள்ளையளை பற்றின செய்தியளும் படங்களோடை வந்து நீங்கள் வால் பிடிக்கிற வெளிநாட்டு மனிதஉரிமை அமைப்புக்களே மனமிரங்கி உச்சுக்கொட்டி கண்டிச்ச நேரங்களிலை எல்லாம் உங்கடை பேனையிலை மை இருக்கேல்லையோ இல்லாட்டி உங்கடை வீட்டு கொம்புயூட்டர் பழுதாய் போய் கிடந்ததோ?? விவசாயம் செய்ய ஏலாது மீன் பிடிக்க ஏலாது தொழில் செய்ய ஏலாது எண்டு எல்லாருக்கும்தான் தெரியும்.கொழும்பிலை போய் நிண்டு கொட் லைன் போடத் தெரிஞ்ச உங்களுக்கு அதே லைனிலை மகிந்தரிட்டை எங்கடை சனங்கள் பாவம் தொழில் செய்ய விடப்பு எண்டு கெஞ்சியாவது கேட்டிருக்கலாம் தானே. அப்பிடி கேட்ட உடைனையே உங்கடை தொழில் பட்டுப்போகும் எல்லாருக்கும் தெரியும்.சிலநேரம் எனக்குத்தான் இந்த கட்டுரையின்ரை தலைப்பு சரியா விழங்காமல் கண்டபடி எழுதிப்போட்டனோ தெரியாது ஏணெண்டால்சில நேரம் லண்டனிலை உள்ள தமிழ் மகளிர்களுக்கு உங்கை உள்ள பிரச்சனையளை பற்றித்தான் கதைச்சிச்சினமோ தெரியாது?? அப்பிடியெண்டால் இங்கிலண்டு காரன் தமிழாக்களை உங்கை மீன்பிடிக்க விவசாயம் தொழில் செய்ய விடுறான் இல்லையெண்டால். அதிலை நியாயம் இருக்கு ஏணெண்டால் உங்களை பாத்தாலே தன்ரை நாட்டு சனத்துக்கு சாப்பாடு இல்லாமல் போடும் எண்ட பயத்திலைஅப்பிடியொரு தடையை போட்டிருக்கலாம்.மற்றபடி அதிலை கதைச்ச விசாக்காவுக்கு தமிழர் தமிழ்மொழி அடிப்படையிலை போரை தொடங்கேல்லை சிங்களவர்தான் முதலிலை மொழி அடிப்படையிலை சிறீ எழுதி எங்கடை பொம்பிளையளுக்கு பின்னாலை குறி சுட்டு போராட்டத்தை தொடங்கி வைச்சவை எண்டு நீங்களாவது மெல்லமாய் சுரண்டி விளங்கப்படுத்தியிருக்கலாம் . சரி உங்களுக்கு எங்கை அதெல்லாம் ஞாபகத்திலை இருக்கப்போகுது.சரி நீங்கள் அடிக்கடி இப்பிடி ஏதாவது எழுதுங்கொ அப்பதான் நானும் அடிக்கடி ஆனந்த சங்கரியார் மாதிரி கடிதம் எழுதலாம் எழுத்து பிழையள் இருந்தால் மன்னிச்சு கொல்லுங்கொ ஏணெண்டால் நான் அஞ்சாம் வகுப்புதான் பாஸ்


இப்படிக்கு

தம்பி
சாத்திரி