Thursday, 1 May 2008

வாக்களிக்கத் தயாராகுங்கள்: லண்டன் மேயர் தேர்தல் - லாபம் யாருக்கு? : சேனன்

இன்று 1ம் திகதி வியாழன், லண்டனில் நடக்க இருக்கும் தேர்தலில் லண்டனுக்கான மேயரும் லண்டன் அசம்பிளிக்கான உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கபட உள்ளார்கள்.

1. லண்டனில் வாழ்பவர்கள் தமது முக்கிய பிரச்சினைகளாக போக்குவரத்து, சம்பள உயர்வு, வீட்டு வசதி, வன்முறை குறைப்பு முதலானவைகளை கருதுகிறார்கள். இதை மையமாக வைத்து மூன்று முன்னணி கட்சிகளும் கிட்டத்தட்ட ஓரே மாதிரியான தீர்வையே வைக்கின்றன. லண்டனின் பொருளாதார நடவடிக்கையை மாற்றி பெரும்பான்மை மக்களின் நலனுக்கு ஆதரவான கொள்கை உடையவர்களுக்கு முதல் தெரிவை வழங்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே. இடது சாரி பட்டியலில் போட்டியிடும் லின்சி யேர்மனை ஒரு உதாரணமாக காட்டலாம்.

2. நாம் வாக்களிக்காத பட்சத்தில் துவேச-கோமாளி பொரிசுக்கு வெல்லும் சந்தர்பத்தை கூட்டுகிறோம் என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். இதனால் இரன்டாவது தெரிவாக கென்னுக்கு வாக்களிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

3. வாக்களிப்பது எமது ஜனநாயக உரிமை. எமது குரலை அடையாளப்படுத்தும் சந்தர்பத்தை நாம் தவறவிடக் கூடாது. லன்டனில் கனிசமான தொகையில் வாழும் நாம் லண்டன் அரசியில் தீர்வுகளில் பங்குபற்ற வேண்டியது கட்டாயம். பங்கு பற்றும் துவேச கட்சிகளுக்கு எதிராக - முதலாளிகளின் கட்சிகளுக்கு எதிராக நாம் வாக்களிப்பது அவசியம். குறைந்த பட்சம் அசம்பிளி உறுப்பினர் தேர்வில் நாம் செல்வாக்கு செலுத்தலாம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாக்களிக்கத் தயாராகுங்கள்: லண்டன் மேயர் தேர்தல் - லாபம் யாருக்கு? : சேனன்

No comments: