கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் உட்பட பிரதான 6 பதவிகளுக்குமான நியமனம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தனது சார்புக் கட்சித் தலைவர்களுடன் நேற்று (மே 13) விசேட பேச்சுவார்த்தையொன்றினை நடத்த இருந்தது. ஆனால், இப்பேச்சுவார்த்தை நேற்று (மே 13) நடைபெறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆம 15ல் லண்டனிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் உட்பட பிரதான 6 பதவிகளுக்குமான நியமனம் குறித்து முடிவெடுக்கப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஆரம்பத்தில் பிள்ளையானுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்தது. பின்னர் விருப்பு வாக்குகளை அதிகம் பெறுபவர்களுக்கு என்றது. பின்னர் கூடிய ஆசனங்களைப் பெற்ற சமூகத்தில் உள்ளவருக்கு முதல்வர் என்றுது. இதனால் ஹிஸ்புல்லா தனக்கே முதலமைச்சர் என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் இஸ்டத்திற்கு முடிவுகளை மாற்றியது. மே 10 தேர்தல் முடிவடைந்து மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்கு மறுநாள் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியும் முக்கிய நியமனங்களும் இன்னும் சில நாட்களுக்கு இழுபறியில் விடப்பட்டு உள்ளது....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனமுரண்பாட்டைத் தூண்டும் முதலமைச்சர் கனவுகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு : முஹம்மட் அமீன் & த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment