Friday, 9 May 2008

கேணல் கருணா விரைவில் இலங்கை திரும்பலாம் : த ஜெயபாலன்

கேணல் கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனில் உள்ள வூம்குரொப்ற் சிறையிலிருந்து விடுதலையாக உள்துறை அமைச்சின் குடிவரவு கட்டுப்பாட்டுப் பிரிவினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சு செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது. கேணல் கருணா அரசியல் தஞ்சம் கோராத பட்சத்தில் விரைவில் இலங்கைக்கு திரும்பலாம் என்று தெரியவருகிறது. இவர்மீதான குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமையல் பிரித்தானிய பொலிசார் கேணல் கருணா மீது குற்றச்சாட்டுகள் எதனையும் பதிவு செய்யவில்லை எனவும் nதிரியவரகிறது. கேணல் கருணா கைது செய்யப்படும் போது கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இதற்காக உள்துறை அமைச்சு அவர்மீது நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெரியவில்லை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கேணல் கருணா விரைவில் இலங்கை திரும்பலாம் : த ஜெயபாலன்

No comments: