Saturday, 24 May 2008

லண்டன் குறும்படக் காட்சியும் திரை ஆவணப் பதிவும்

மே 25ல் குவாக்கர்ஸ் மண்டபத்தில் (லண்டன் லேய்டன்ஸ்ரோன்) இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘விழி’ குறும்படமும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மாமல்லனின் குறும்படங்களும் காண்பிக்கப்பட இருக்கிறது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் இணைந்து இக்குறும்படக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் திரைக்கலை பற்றியும் மாற்று சினிமா பற்றியும் ஒரு அறிமுகத்தையும் புரிதலையும் ஏற்படுத்தும் நோக்குடன் மாதம் ஒருமுறை இவ்வாறான குறும்படக் காட்சிகளை ஒழுங்குபடுத்த ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் முயற்சிகளை எடுத்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸ் குறும்பட இயக்குநர் அஜீவன் ஊடாக தேசம் சஞ்சிகை லண்டனில் ஓர் குறும்படப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் சில சந்திப்புக்களையும் நடத்தி இருந்தது. இப்போது அவற்றின் தொடர்ச்சியாக ஒரு குறும்படக் காட்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பு முழுமையாக திரைக்கலை சார்ந்த ஒரு குழு. இவ்வமைப்பு மாற்று, கனவுகள் நிஜமானால், மண் ஆகிய முழுநீளப்படங்களை தயாரித்து உள்ளது. இப்படங்களின் இயக்குநரான ஆர் புதியவன், ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பின் இயக்குநராகவும் உள்ளார். தற்போது வேறும் சில திரைக்கலை முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் குறும்படக் காட்சியும் திரை ஆவணப் பதிவும்

No comments: