Saturday, 31 May 2008

கனவிலும் தோண்றாத கொடூரம் - தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!

தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கனவிலும் தோண்றாத கொடூரம் - தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!

No comments: