மே 10ல் கிழக்கு இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தல் அம்மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வில்லையானாலும் அரசியல் கட்சிகளிடையேயும் அவர்களுக்குப் பின் நிற்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தல் வன்முறையற்ற தேர்தலாகவும் சர்வதேச சமூகத்தாலும் வரவேற்கப்படும் வகையிலும் இடம்பெற்றதால் மாகாண சபைத் தேர்தலில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு சர்வதேசத்திற்கு தன் ஜனநாயகத்தை பறைசாற்றும் ஒரு காட்சியகமாக அமைந்து உள்ளது. தேர்தலுக்கு முன்பாக நாள்தோறும் படுகொலைகள் இடம்பெற்று வந்தது. ஆனால் உள்ளுராட்சித் தேர்தலுக்கு சற்று முன்னிருந்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை அம்மக்களுக்கு ஒரு ஆறுதலான விடயமே. இது புயலுக்கு முன்னான அமைதியாக அல்லாமல் நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்பது அம்மக்களின் குறைந்தபட்ச அக்கறை என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது...
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு தேர்தலும் புலம்பெயர் குழுக்களின் ஈடுபாடும் - இயக்க அடையாளங்களை களைய வேண்டும் : த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment