Wednesday, 18 June 2008

தசாவதாரம் : ஒரு தமிழ்ப் படத்தை உலக அவதாரமாக்கி இருக்கிறார் கமல்! : இராஜேஸ் பாலா

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகப் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் இடையில் கமலஹாசனின் தசாவாதாரம் படம் திரையிடப்பட்டு இருக்கிறது. தமிழ்ப்பட அகராதியில் பத்து வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுதான் முதற்தடவையாகும். அத்துடன் கிட்டத்தட்ட எழுபதுகோடி ரூபா பணச்செலவில், மிகவும் பிரமிப்பான தயாரிப்பாக வெளிவந்து இருக்கிறது இப்படம். தமிழ்ப்பட வரலாற்றைப் பொறுத்த வரையில் பல சரித்திர மாற்றங்களைத் தங்கி வருகிறது இப்படம். இப்படத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகல் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில், தேங்காய் உடைத்து, மங்கல தீபம் எரித்து கமலின் இரகசிகர்கள் படத் திரையீட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். சென்னையில் 12ம் திகதி திரைப்படப் பிரமுகர்களுக்காகத் ‘தசாவாரம்’ விசேடமாகத் திரையட்டுக் காட்டப்பட்டது. அதேநேரம், இந்தியா தவிர்ந்த பலநாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது. ஜூன் 12ம் திகதி அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படத்தை அமெரிக்க ஜனாதிபது ஜோர்ஜ் புஷ் பார்க்கவேண்டும் என்ற ஏற்பாட்டையும் அமெரிக்காவாழ் கமலஹாசன் ஆதரவாளர்கள் செய்கிறார்கள்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தசாவதாரம் : ஒரு தமிழ்ப் படத்தை உலக அவதாரமாக்கி இருக்கிறார் கமல்! : இராஜேஸ் பாலா

No comments: