கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தனித்துவம், சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முஸ்லிம் அமைப்பு ஒன்றுடன் உடன்படிக்கை செய்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திகாந்தன் (பிள்ளையான்) கைச்சாத்திட்டுள்ளார். கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவம், சுதந்திரம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஐந்து அம்சங்கள் உடன்படிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படும் பகிரங்க உறுதிமொழிகள் என உடன்படிக்கைக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் சுதந்திர கூட்டமைப்புடனேயே இந்த உடன்படிக்கையை பிள்ளையான் செய்துள்ளார். உடன்படிக்கையில் இந்த அமைப்பின் தலைவர் ஜுனைத் முஹம்மத் அன்வர், பொதுச்செயலாளர் செய்க் இஸ்மாயில் முஹம்மத் முஸ்டீன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனராம். ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியின் செயலாளர் எம்.ஆர். ஸ்ராலின் இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்ததுடன், உடன்படிக்கையின் உறுதிமொழிகளை உறுதிப்படுத்தும் விதத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்...
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களுக்கு பிள்ளையானிடம் இருந்து ஐந்து பகிரங்க உறுதிமொழிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment