16 ம் திகதி திங்கட்கிழமை இரவு சிட்னியில் ஒரு திரையரங்கில் தசாவதாரம் படம் பார்த்தேன். அடுத்த நாள் காலை இப்படத்தைப் பற்றிய இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் விமர்சனத்தை தேசம்நெற்றில் வாசித்து அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன்.
நல்ல நாடகத்துக்கோ அல்லது திரைப் படத்துக்கோ (Feature film) அடிப்படையில் அத்தியாவசியமாக வேண்டியது ஒரு நல்ல நாடகப்பிரதி அல்லது ஒரு நல்ல திரைக்கதை. கமலுக்கு 10 வேடங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சீக்கியப்பாடக நெட்டை ‘சுலாமியா’, யப்பானிய கராத்தேகாரன் ஆகிய பாத்திரங்கள் மையக் கதைக்கு சம்மந்தமில்லாமல் வலிந்து உருவாக்கப்பட்டவைகள். படம் தொடங்கும் போது வரும் நம்பியினுடைய கதையும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு உபகதை. மற்றப்படி மூலக்கதை எத்தனையோ ஹொலிவூட் படங்களில் பார்த்து அலுத்துப் போன வகை மாதிரியான ஹொலிவூட் அக்ஷன் படக்கதை. சந்தேகமேயில்லாமல் திறமையான ஒரு சந்தைப்படுத்தல் ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான தமிழ் வியாபாரப் படத்துக்கான திரைக்கதைதான் இது. வசூலில் நிச்சயமாக சாதனை படைக்கும்...
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தசாவதாராம் : Outsourcing Hollywood : இராஜேஸ் பாலா அம்மாவுக்கு ஒரு பதில். : நட்சத்திரன் செவ்விந்தியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment