Tuesday, 24 June 2008

முஸ்லிம்களுடனான உறவை நிறுத்த சமூகவிரோத சக்திகள் கோரிக்கை!

முஸ்லிம்களுடனான சகல உறவுகளையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று ‘மட்டக்களப்பு தமிழ் மக்கள் ஒன்றியம்’ என்ற பெயரில் சமூகவிரோத அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி நவமணிப் பத்திரிகை (22.06.2008) இல் செய்தி வெளியிட்டுள்ளது. ‘தமிழினமே விழித்தெழுங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்ட இத்துண்டுப் பிரசுரத்தை நவமணி பத்திரிகை பிரதான செய்தியாக வெளியட்டு உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல் நிலை தீவிரமாக உள்ள இன்றைய காலகட்டத்தில் மிகவும் விசமத்தனமாக வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரம் ஏற்கனவே விரிசலாகி உள்ள தமிழ் முஸ்லீம் உறவுகளை மேலும் மோசமாக்குவதாக உள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட மூன்றாம்தர அரசியல் நடவடிக்கை யாகவே கருதப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களுடனான உறவை நிறுத்த சமூகவிரோத சக்திகள் கோரிக்கை!

No comments: