Tuesday, 24 June 2008

இந்தியா மீண்டும் சமாதானம் பேசுகிறதா? : த ஜெயபாலன்

இந்திய இராஜதந்திரிகளின் திடீர் வருகையை அடுத்து கொழும்பு பங்குச்சத்தையில் பங்குகளின் விலை சராசரியாக 1.11 புள்ளியால் அதிகரித்து உள்ளது. இவ்வாரத்தில் இடம்பெற்ற முதல் அதிகரிப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அதிகாரிகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் நோக்குடனேயே வந்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்பட்டதால் முதலீட்டாளர்களும் அந்த ஊகத்தை ஏற்றுள்ளதையே இது காட்டுகிறது. இந்திய அரசின் விசேட செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அந்நாட்டின் 3 உயர் இராஜதந்திரிகள் நேற்று (June 20) நண்பகல் விசேட விமானமொன்றின் மூலம் புதுடில்லியிலிருந்து அவசர விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகியோரே அம்மூவருமாவர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியா மீண்டும் சமாதானம் பேசுகிறதா? : த ஜெயபாலன்

No comments: