இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள தேசங்களுக்கு இடையிலான பகை முரண்பாட்டைத் தீர்க்க - செய்துகொண்ட ஒப்பந்தங்களில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனெனில் 1956இல் மொழி அங்கீகாரம் குறித்து பண்டா - செல்வா ஒப்பந்தமும், 1965இல் மாவட்டசபை குறித்து டட்லி -செல்வா ஒப்பந்தமும், சிங்கள, தமிழ் தேசங்களின் பிரதிநிதிகளின் ஒப்புதல் மூலம் உருவாக்கப்பட்டவை. மாறாக, 1987இல் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ்ப் பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசத்தின் பிரதிநிதியான விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் மட்டும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக வற்புறுத்திக் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டது இந்திய அரசு. ஆனால் புலிகளை மட்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காட்ட இந்திய அரசு விரும்பவில்லை. அதற்கு ஏற்ப இரு பக்கத்து காய்களையும் தானே நகர்த்தி சதுரங்கத்தைத் தனித்தே ஆடியது....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை - இந்திய ஒப்பந்தம்: முத்தரப்புத் தோல்வி : த ஜெயபாலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment