ஈழத் தமிழர்களின் வாழ்வில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். 27 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அறிவியல் மையங்களில் ஒன்றாக நிமிர்ந்து நின்ற யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட அவலம் நடந்தேறிய நாள். யாழ்ப்பாண நூலகத்தோடு சேர்த்து தமிழரின் ஒரேயொரு பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தக சாலை ஆகிய மற்றும் இரு அறிவு மூலங்களும் சேர்த்தே திட்டமிட்டு எரித்து அழிக்கப்பட்டன. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் நள்ளிரவின் பின்னர் இலங்கை அரசின் கைக்கூலிகளான காடையர்களாலும் பாதுகாப்புப் படையினராலும் இந்தப் படுபாதகச்செயல் இருளின் பாதுகாப்புடன் செய்து முடிக்கப்பட்டது. ஈழத் தமிழர்களால் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அறிவுசார் சமூகங்கள் எதனாலும் மன்னித்து ஒதுக்கிவிட முடியாததொரு படுபாதக நிகழ்வு அது...
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது! : சாம்பலில் இருந்து 27 ஆண்டுகள் : என் செல்வராஜா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment