கிழக்கில் இரு மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டும்” என அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விட்டு உள்ளது. ”கிழக்கிலே வாழும் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் தங்களைத் தாங்களே நிருவகிக்கும் வகையில் அதிகாரப்பகிர்வு ஏற்படுத்துவது பற்றி இனப்பிரச்சினை பற்றி ஆராயும் சர்வகட்சி மகாநாடு முடிவெடுக்க வேண்டும். கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மாகாணசபைகள் உருவாக்கப்படல் வேண்டும். இரண்டு இனங்களிலிருந்தும் இரண்டு முதலமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். ஓரினம் மற்ற இனத்தை ஆளமுற்படும்போதே பிரச்சினைகள் தோற்றம் பெறுவதைக்காண முடிகிறது. மறைந்த தலைவர் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்சென்று கிழக்கிலே முஸ்லிம்களுக்கு நிம்மதியான வாழ்வுக்கு ஒன்றுபட சகல முஸ்லிம்களையும், அரசியல் கட்சிகளையும், நிறுவனங்களையும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அழைக்கிறது.” இவ்வாறு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்...
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் இரு மாகாணசபைகள் வேண்டும் - மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment