Saturday, 28 June 2008

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் புலம்பெயர் குழு சந்திப்பு : வி அருட்சல்வன்

ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் வாழ் கிழக்கு மாகாண குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். 23ஆம் திகதி காலை முதலமைச்சரின் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் பேது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு செல்லவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பிரதிநிதி மற்றும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் குறித்தும் முதலமைச்சர் சந்திரகாந்தன் புலம்பெயர் வாழ் கிழக்கு மாகாண குழுவினருக்கு விளக்கமளித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாண முதலமைச்சருடன் புலம்பெயர் குழு சந்திப்பு : வி அருட்சல்வன்

இலங்கை - இந்திய ஒப்பந்தம்: முத்தரப்புத் தோல்வி : த ஜெயபாலன்

இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள தேசங்களுக்கு இடையிலான பகை முரண்பாட்டைத் தீர்க்க - செய்துகொண்ட ஒப்பந்தங்களில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனெனில் 1956இல் மொழி அங்கீகாரம் குறித்து பண்டா - செல்வா ஒப்பந்தமும், 1965இல் மாவட்டசபை குறித்து டட்லி -செல்வா ஒப்பந்தமும், சிங்கள, தமிழ் தேசங்களின் பிரதிநிதிகளின் ஒப்புதல் மூலம் உருவாக்கப்பட்டவை. மாறாக, 1987இல் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தரப் போவதாகக் கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ்ப் பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசத்தின் பிரதிநிதியான விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் மட்டும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக வற்புறுத்திக் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டது இந்திய அரசு. ஆனால் புலிகளை மட்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காட்ட இந்திய அரசு விரும்பவில்லை. அதற்கு ஏற்ப இரு பக்கத்து காய்களையும் தானே நகர்த்தி சதுரங்கத்தைத் தனித்தே ஆடியது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை - இந்திய ஒப்பந்தம்: முத்தரப்புத் தோல்வி : த ஜெயபாலன்

மன்னார் எண்ணை வள ஆராய்ச்சி இந்திய - பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது

இலங்கையில் எண்ணெய் அகழ்வுக்கான முதலாவது ஒப்பந்தம் ஜுலை மாதம் 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளது. இந்திய - பிரிட்டிஸ் கூட்டு நிறுவனமான CAIRN கேன் - நிறுவனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பின் கேன் என்ற இந்நிறுவனம் மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்குமென பெற்றோலிய, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். இலங்கை எரிபொருள் அகழ்வுப் பணிகளுக்கென சர்வதேச மட்டத்தில் கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மன்னார் எண்ணை வள ஆராய்ச்சி இந்திய - பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது

பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக சந்திரா நிஹால்

பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்கவை அரசாங்கம் நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:- சட்டத்துறையில் 37 வருடங்களாக ஈடுபட்ட நீதிபதி சந்திரா நிஹால் ஜயசிங்க கடந்த மார்ச் முதலாம் திகதி சட்டத்துறையிலிருந்து ஓய்வுபெற்றார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிட்டனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக சந்திரா நிஹால்

”எல்ரிரிஈ ஆயுதங்களை கீழே வைத்தால் இணைந்து செயலாற்றத் தயார்” - ஜனாதிபதி மகிந்த

நாட்டு மக்களுடன் யுத்தம் புரிவதற்கான தேவை எமக்கு ஒருபோதும் இல்லையென்றும், ஆனாலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்களாயின் நாட்டின் சமாதானத்துக்காக அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”எல்ரிரிஈ ஆயுதங்களை கீழே வைத்தால் இணைந்து செயலாற்றத் தயார்” - ஜனாதிபதி மகிந்த

”யுத்தத்தை நிறுத்த இந்தியா, இலங்கைக்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” அமைச்சர் யாப்பா அபேவர்தன

யுத்தத்தை நிறுத்த வேண்டுமென இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” என தகவல், ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ”தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா மிகுந்த அவதானத்தைச் செலுத்தி வருகிறது. இந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டுமென்று தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்து வருகிறது” எனவும் அமைச்சர் தெரிவித்தார். தகவல், ஊடகத்துறை அமைச்சில் கடந்த யூன் 26ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்....

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எதிராக வழக்கு

அடிப்படை நோக்கங்களுக்கு முரணாகச் செயற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையைக் கலைக்க வேண்டும் என்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா 25ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள அரச காணியை தனிப்பட்ட நபர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக வழக்கு விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனையின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபை, அரசுக்கு சொந்தமான காணிகளை செல்வந்தர்களுக்கான வீடுகளை அமைக்க வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எதிராக வழக்கு

அன்ஜான் உம்மா விமலின் கட்சியில் இணைந்தார்

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்பட தீர்தானித்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திஸ்ஸமஹாராமயில் திரைப்பட நகரம்

திஸ்ஸமஹாராமயில் திரைப்பட நகரம்

அம்பாந் தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரிந்திஓய பகுதியில் திரைப்பட நகரம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது எனக் கூறிய அமைச்சர் இதற்கென கிரிந்தி ஓய பண்ணையாக இருந்த காணியை சவீகரிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் கூறினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திஸ்ஸமஹாராமயில் திரைப்பட நகரம்

புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் 31ஆவது பொலிஸ்மா அதிபராக எதிர்வரும் ஜுலை மாதம் 2ஆம் திகதி முதல் புதிய பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். தற்போதைய பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேராவின் பதவிக் காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. இந்த இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன

Friday, 27 June 2008

‘பிரபாகரன்’ படத்துக்கான தடை நீக்கப்பட்டது

சிங்கள திரைப்படமான பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இயக்கநர் துஸ்ரா பெரீஸ் சிங்களம் மற்றும் தமிழில் இயக்கியுள்ள படம் ‘பிரபாகரன்’. இப்படத்தில் விடுதலைப் புலிகள் குறித்தும் இலங்கைத் தமிழர்கள் குறித்தும் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘பிரபாகரன்’ படத்துக்கான தடை நீக்கப்பட்டது

சடலம் மாறிய மர்மமென்ன?

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலத்திற்கு பதிலாக வெளிநாட்டவர் ஒருவரது சடலம் மாறி கொண்டுவரப்பட்டுள்ள சம்பவம் பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சடலம் மாற்றி கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சடலம் மாறிய மர்மமென்ன?

”மலையக மக்களின் வேதனம் கட்டாயமாக உயர்தப்பட வேண்டும்” வீ. புத்திரசிகாமணி

”மலையக மக்களின் வேதனம் கட்டாயமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பொருளாதார ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் எம் மக்களுக்கு என்ன நிவாரணம் பெற வேண்டுமோ அதில் எமது கட்சி ஈடுபடும்” என்று மலையக தேசிய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும், நீதி மற்றும் சீரமைப்பு பிரதி அமைச்சருமான வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மலையக மக்களின் வேதனம் கட்டாயமாக உயர்தப்பட வேண்டும்” வீ. புத்திரசிகாமணி

திஸாநாயகத்தை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதா? இல்லையா? 30ஆம் திகதி முடிவு

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைதாகி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திஸாநாயகம் அடங்கலாக 3 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதா, இல்லையா என்ற தீர்ப்பை எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடுவதாக கொழும்பு பிரதான நீதவான் நிசாந்த ஹபுஆரச்சி கடந்த திங்கட்கிழமை (June 23) தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திஸாநாயகத்தை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதா? இல்லையா? 30ஆம் திகதி முடிவு

வடமத்திய, சப்ரகமுவ மாகாண தேர்தகளுக்கான பெப்ரலின் கண்காணிப்பு பணிகள் இன்று ஆரம்பம்

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கண்காணிக்கும் பணிகளைப் பெப்ரல் அமைப்பு இன்று 27ஆம் திகதி ஆரம்பிக்க இருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தலைக் கண்காணிக்கவென மாவட்ட மட்டத்தில் நான்கு அலுவலகங்களும் இன்று முதல் செயற்படத் தொடங்கும் எனவும் அவர் கூறினார். இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் சுமார் 2500 பேரை ஈடுபடுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வடமத்திய, சப்ரகமுவ மாகாண தேர்தகளுக்கான பெப்ரலின் கண்காணிப்பு பணிகள் இன்று ஆரம்பம்

வளரும் துவேசம் : ‘நான் ஒரு துவேசி அல்ல. ஆனால்….’ - ‘I am not a racist. But…’ : சேனன்

யூன் 21 அன்று 5000க்கும் மேற்பட்ட மக்கள் லண்டன் GLA (Greater London Authority) க்கு முன்னால் துவேசத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடந்த மேயர் தேர்தலில் இனத்துவேச கட்சியான பி.என்.பி யின் சார்பில் ரிச்சர்ட் பான்புரூக் வெற்றி பெற்றதை தொடர்ந்து லண்டன் எங்கும் இனவாதத்துக்கு எதிரான எதிர்ப்பு நடந்து வருகிறது. தேர்தலுக்கு அடுத்த நாளே மேயர் காரியாலயத்துக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அதை தொடர்ந்து ஜி எல் ஏ க்கு முன்னால் பல எதிர்கோசங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த ஊர்வலம் நிகழ்ந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வளரும் துவேசம் : ‘நான் ஒரு துவேசி அல்ல. ஆனால்….’ - ‘I am not a racist. But…’ : சேனன்

தசாவதாரம் - உலக உயிர்கொல்லி நாயகனின் இந்திய அவதாரம் : யமுனா ராஜேந்திரன்

ஈராக்கில் ஸத்தாம் ஹஸைன் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட ‘பயாலஜிகல் வெப்பன்ஸ் - உயிர்கொல்லி ஆயுதங்களைக்’ கண்டுபிடிக்க ஈராக்கினுள் நுழைந்து அலைந்த ஐக்கிய நாடுகள் சபை சோதனையதிகாரியின் பெயர் பெலிக்ஸ் (Felix). ‘எப்’அவரது பெயரின் முதலெழுத்து. கமல்ஹாஸனின் தசாhவதாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நோக்கத்திற்கு மாறாக உயிர்கொல்லி ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் விற்க அலையும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் பெயர் பிளெச்சர் (Fletcher). பிளெச்சரின் முதல் எழுத்து ‘எப்’ எனவே துவங்குகிறது. பிளெச்சர்-பெலிக்ஸ். பிளெச்சர்-பெலிக்ஸ். பிலெ-பெலி-. பிலெ-பெலி. தொடர்ந்து மாற்றி மாற்றி உச்சரித்துப் பாதருங்கள். ஒன்று போலவே இருக்கிறது இல்லையா?...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தசாவதாரம் - உலக உயிர்கொல்லி நாயகனின் இந்திய அவதாரம் : யமுனா ராஜேந்திரன்

” ‘83 வன்முறையை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” திஸ்ஸவிதாரண

தமிழன் என்ற ஒரே காரணத்தால் அவன் உயிரும், உடைமைகளும் ”அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. 1983இன் இன ஒழிப்பும் அதற்கு முன்பும் பின்பும் இந்நாட்டில் நடந்த அநியாய அட்டூழியங்களை இந்நாட்டில் புத்திஜீவிகள் மறந்திருக்க மாட்டார்கள். எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களை நாம் அனுமதிக்கவோ, ஆமோதிக்கவோ போவதில்லை” என அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
''‘83 வன்முறையை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” திஸ்ஸவிதாரண

வாக்காளர் இடாப்பில் பெயருடன் தேசிய அடையாள அட்டை இலக்கம் - தயானந்த திஸாநாயக்க

வாக்களிப்பின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் வாக்காளர் இடாப்பில் பெயர்களுடன் சேர்ந்து தேசிய அடையாள அட்டைகளின் இலக்கங்களும் இனிமேல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். பெப்ரல் அமைப்பு பிரதிநிதிகள், அதன் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தலைமையில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவை தேர்தல் செயலகத்தில் கடந்த வெள்ளியன்று (June 20) மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே தேர்தல் ஆணையாளர் மேற்கண்டவாறு உறுதியளித்திருக்கிறார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
“வாக்காளர் இடாப்பில் பெயருடன் தேசிய அடையாள அட்டை இலக்கம் - தயானந்த திஸாநாயக்க

“வாக்குகளைப் பயன்படுத்துவதில் சிரத்தைக் கொள்ள வேண்டும்” பெ. இராதாகிருஸ்ணன்

”தமிழ் மக்களுக்கு வாக்குரிமை பதிவில் அக்கறை காட்டுவதில் உத்வேகம் ஏற்பட்டுள்ளதைப் போலவே தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை உருவாக்குவதற்கு வாக்குகளை பயன்படுத்துவதிலும், சிரத்தைக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றைய சமூகங்களுக்கு ஈடாக எமது ஜனநாயக உரிமைகளை நிலை நிறுத்திக்கொள்ளவும் அனுபவிக்கவும் முடியும்.” அரசியல் பிரிவு அமைப்பாளர் மத்தியில் உரையாடும் போது மலையக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்தார். கூட்ட ஏற்பாடுகளை கொழும்பு மாவட்ட மலையக மக்கள் முன்னணியின் பொறுப்பாளர் வி.என். தங்கவேலு ஏற்பாடு செய்திருந்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
“வாக்குகளைப் பயன்படுத்துவதில் சிரத்தைக் கொள்ள வேண்டும்” பெ. இராதாகிருஸ்ணன்

ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு : EPRLF(Naba)

ஜெர்மனியில் உள்ள நூரன்பெக் நகரில் தியாகிகள் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. (21 June 2008) மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நடைபெற்றது. தோழர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய இடங்களிலுருந்தும் தோழர்கள் வந்து கலந்துகொண்டதுடன் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி ஆகிய சக தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு : EPRLF(Naba

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரன்ஜித் குணசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கொட்டாஞ் சேனையில் கைது செய்யப்பட்ட கணகசபை தேவதாசன் அல்லது நாதன் (வயது 57) இவர், 2004, 2005ஆம் ஆண்டில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது திரைப்படக் கூட்டுத்தாபன அடையாள அட்டை இருந்ததாக குறிப்பிடப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

Tuesday, 24 June 2008

ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு : EPRLF(Naba)

ஜெர்மனியில் உள்ள நூரன்பெக் நகரில் தியாகிகள் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. (21 June 2008) மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நடைபெற்றது. தோழர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய இடங்களிலுருந்தும் தோழர்கள் வந்து கலந்துகொண்டதுடன் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி ஆகிய சக தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு : EPRLF(Naba)

“தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லை. சிங்களவர்களுக்கு பொருளாதார வளங்கள் இல்லை. ஆனால் வடக்கைச் சேர்ந்த எனது சமூகத்திற்கு இந்த இரண்டுமே இல்லாநிலை” - ப

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். இமாம் ஆற்றிய உரை:

அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எல்.ரீ.ரீ.ஈ.யோடு இணக்கப்பாட்டிற்கான பேச்சு வார்த்தையில் இறங்க வேண்டும். அரசாங்கம் வங்குரோத்தான அரசியல்வாதிகளை நம்புவதை கைவிட வேண்டும். சந்தர்ப்பவாதிகளை நம்புவதை கைவிட வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ.யினர் எப்போதும் சமாதானத்திற்கு ஆயத்தமாக இருப்பதால் அரசாங்கம் அதை நல்மனதோடு அங்கீகரிக்க வேண்டும். நான் இறுதியாக சொல்ல விரும்புவது என்னவென்றால் எல்..ரீ.ரீ.ஈ.யோடு இந்த பிரச்சினைகளை சமாதானமாக தீர்த்தாலேயொழிய உலகத்திலுள்ள எந்தவொரு சக்தியும் எமது நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டு வரப்போவதில்லை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
“தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லை. சிங்களவர்களுக்கு பொருளாதார வளங்கள் இல்லை. ஆனால் வடக்கைச் சேர்ந்த எனது சமூகத்திற்கு இந்த இரண்டுமே இல்லாநிலை” - பா உ இமாம்

முஸ்லிம்களுடனான உறவை நிறுத்த சமூகவிரோத சக்திகள் கோரிக்கை!

முஸ்லிம்களுடனான சகல உறவுகளையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று ‘மட்டக்களப்பு தமிழ் மக்கள் ஒன்றியம்’ என்ற பெயரில் சமூகவிரோத அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி நவமணிப் பத்திரிகை (22.06.2008) இல் செய்தி வெளியிட்டுள்ளது. ‘தமிழினமே விழித்தெழுங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்ட இத்துண்டுப் பிரசுரத்தை நவமணி பத்திரிகை பிரதான செய்தியாக வெளியட்டு உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல் நிலை தீவிரமாக உள்ள இன்றைய காலகட்டத்தில் மிகவும் விசமத்தனமாக வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரம் ஏற்கனவே விரிசலாகி உள்ள தமிழ் முஸ்லீம் உறவுகளை மேலும் மோசமாக்குவதாக உள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட மூன்றாம்தர அரசியல் நடவடிக்கை யாகவே கருதப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களுடனான உறவை நிறுத்த சமூகவிரோத சக்திகள் கோரிக்கை!

கிழக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது : சுசில் பிரேம்ஜயந்த

ஏனைய மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை போன்றே கிழக்கு மாகாணசபைக்கும் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் இயங்கும் ஏனைய ஏழு மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்கு மேலதிகமாக கிழக்கிற்கு வழங்கப்பட…

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது : சுசில் பிரேம்ஜயந்த

”தீவிரவாத அமைப்புகள் (புலிகள்) தமிழகத்தில் காலூன்றாமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.” கருணாநிதி

அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைப்போரை தமிழகத்திற்குள் ஊடுருவ அனுமதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். வகுப்புவாதமும், சாதிய உணர்வும் தமிழ் மண்ணிலிருந்து வேரோடு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (June 19) தொடங்கிய கலெக்டர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியபோதே இதைத் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”தீவிரவாத அமைப்புகள் (புலிகள்) தமிழகத்தில் காலூன்றாமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.” கருணாநிதி

இந்தியா மீண்டும் சமாதானம் பேசுகிறதா? : த ஜெயபாலன்

இந்திய இராஜதந்திரிகளின் திடீர் வருகையை அடுத்து கொழும்பு பங்குச்சத்தையில் பங்குகளின் விலை சராசரியாக 1.11 புள்ளியால் அதிகரித்து உள்ளது. இவ்வாரத்தில் இடம்பெற்ற முதல் அதிகரிப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அதிகாரிகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் நோக்குடனேயே வந்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்பட்டதால் முதலீட்டாளர்களும் அந்த ஊகத்தை ஏற்றுள்ளதையே இது காட்டுகிறது. இந்திய அரசின் விசேட செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அந்நாட்டின் 3 உயர் இராஜதந்திரிகள் நேற்று (June 20) நண்பகல் விசேட விமானமொன்றின் மூலம் புதுடில்லியிலிருந்து அவசர விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகியோரே அம்மூவருமாவர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியா மீண்டும் சமாதானம் பேசுகிறதா? : த ஜெயபாலன்

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரன்ஜித் குணசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கொட்டாஞ் சேனையில் கைது செய்யப்பட்ட கணகசபை தேவதாசன் அல்லது நாதன் (வயது 57) இவர், 2004, 2005ஆம் ஆண்டில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது திரைப்படக் கூட்டுத்தாபன அடையாள அட்டை இருந்ததாக குறிப்பிடப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

கிழக்குப் பட்டதாரிகள் 1287 பேருக்கு ஜுலை 15ஆம் திகதி ஆசிரிய நியமனம் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண பட்டதாரிகளுள் 1287 பேருக்கு ஜுலை மாதம் 15ஆம் திகதி ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்குப் பட்டதாரிகள் 1287 பேருக்கு ஜுலை 15ஆம் திகதி ஆசிரிய நியமனம் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

பாய்ந்து சென்ற இராணுவ வீரர்களை கைது செய்ய தேடுதல்!

இராணுவப் பயற்சியெடுத்து இராணுவ சேவையை இடைநடுவே விட்டு சென்ற இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இராணுவத்தில் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் சேவையை இடைநடுவேவிட்டுவிட்டு சென்றுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரேகெடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாய்ந்து சென்ற இராணுவ வீரர்களை கைது செய்ய தேடுதல்!

மக்கள் ஏற்கக்கூடிய கொள்கைத் திட்டம் ஐ.தே.க.விடம் இல்லாததும் பாரிய பிரச்சினையே - பிளேட்டோ

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் உட்பூசல் ஆரம்பித்துள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன. அக்கட்சியில் சிலர் கட்சித் தலைமையின் போக்கை விமர்சித்து வருவதாக அச்செய்திகளில் கூறப்படுகின்றன. ஐ.தே.க. தொடர்ந்து பல தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதனாலேயே இந்த உட்பூசல் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சித் தலைமை கட்சியின் இரண்டாந்தர தலைவர்களால் விமர்சிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மக்கள் ஏற்கக்கூடிய கொள்கைத் திட்டம் ஐ.தே.க.விடம் இல்லாததும் பாரிய பிரச்சினையே - பிளேட்டோ

முஸ்லிம்களிடம் இருந்து குரங்குபாஞ்சான் பறிக்கப்படும் ஆபத்து!

கடந்த 2003 - 2004ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் சர்வதேச மட்டம்வரை பேசப்பட்ட ஒரு பிரதேசம் தான் கிண்ணியாவின் குரங்குபாஞ்சான் பகுதியாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய விவசாயக் கிராமமான குரங்குபாஞ்சானை விடுதலைப் புலிகள் தமது பகுதியாக பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஆரம்பித்தது.

கடந்த 2006ஆம் ஆண்டு அரச படையினர் கிழக்கு விடுவிப்பு என்ற தலைப்பின் கீழ் இப்பகுதியையும் தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கிழக்கு விடுவிக்கப்பட்டுள்ளதால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், அந்த வாய்ப்பு குரங்குபாஞ்சான் பகுதி மக்களுக்கு கிட்டவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களிடம் இருந்து குரங்குபாஞ்சான் பறிக்கப்படும் ஆபத்து!

அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்குமாறு ஐ.தே.க. கூறுவது புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே! - நிமல் சிறிபால டி சில்வா

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எத்தகைய சேவையைச் செய்துள்ளது என்பதை எதிர்வரும் தேர்தலில் நாட்டு மக்கள் வெளிப்படுத்துவர். மக்கள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கையுண்டு என சபை முதல்வர் அமைச்சர் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு அமைச்சர்களைப் பலி கொடுத்து ஆட்சியைப் பிடிக்கும் குறுகிய அரசியல் நோக்கத்துடனேயே ஐ.தே.க. செயற்படுகிறது. அதனால்தான் அமைச்சர்களின் பாதுகாப்பைக் குறைக்குமாறு ஐ.தே.க. கோருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்குமாறு ஐ.தே.க. கூறுவது புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே! - நிமல் சிறிபால டி சில்வா

ஐ.தே.க. தலைவராக கரு ஜயசூரிய?

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து அரசில் இணைந்த அனைவரையும் மீண்டும் உள்வாங்கி கட்சித் தலைமையை கரு ஜயசூரியவுக்கு வழங்கி பலம் வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியை உருவாக்க திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஐ.தே.க.வின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியை வழிநடத்தும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ள கட்சி முக்கியஸ்தர்களே குறித்த திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிய வருகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஐ.தே.க. தலைவராக கரு ஜயசூரிய?

முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வதில்லை என்பது பிள்ளையான் குழுவினரின் நிலைப்பாடு! - எம்.எஸ். உதுமாலெவ்வை.

”புலிகள் முஸ்லிம்களின் விரோதிகள், நமது அரசியல் தலைவர்களையும், பெருந் தலைவர் அஸ்ரப் அவர்களையும் புலிகளே திட்டமிட்டுக் கொலை செய்தனர். தமிழ், முஸ்லிம், சிங்கள தலைவர்களையெலலாம் கொலை செயத புலிகளுக்குப் பக்கபலமாக இயங்கிய பிள்ளையான் குழுவினர் இன்று ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர். எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்த அநியாயமும் செய்யமாட்டோம் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.” இவ்வாறு கூறினார் கிழக்கு மாகாணசபை அமைச்சர் தேசகீர்த்தி எம்.எஸ். உதுமாலெவ்வை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வதில்லை என்பது பிள்ளையான் குழுவினரின் நிலைப்பாடு! - எம்.எஸ். உதுமாலெவ்வை.

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரன்ஜித் குணசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கொட்டாஞ் சேனையில் கைது செய்யப்பட்ட கணகசபை தேவதாசன் அல்லது நாதன் (வயது 57) இவர், 2004, 2005ஆம் ஆண்டில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போது திரைப்படக் கூட்டுத்தாபன அடையாள அட்டை இருந்ததாக குறிப்பிடப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

Sunday, 22 June 2008

தரிசனம் தொலைக்காட்சி சேவையை நிறுத்துவது, Article 19யை மீறும் செயல் : த ஜெயபாலன்

பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பப்பட்ட தரிசனம் தொலைக்காட்சி சேவைகள் இன்று இரவு முதல் இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கலையகத்தை பிரித்தானியாவில் கொண்டிருந்த போதும் இஸ்ரேலில் உள்ள சற்லிங் நிறுவனமூடாகவே ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு யூன் 15ல் தரிசனம் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ”எல்ரிரிஈ போன்ற பயங்கரவாத அமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு இஸ்ரேல் நிறுவனம் சேவைகளை வழங்குவது பொருத்தமற்றது” எனத் தெரிவித்து உள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோளை அடுத்தே இஸ்ரேல் அரசாங்கம் இம்முடிவுக்கு வந்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தரிசனம் தொலைக்காட்சி சேவையை நிறுத்துவது, Article 19யை மீறும் செயல் : த ஜெயபாலன்

Friday, 20 June 2008

ஆளப்போவது யார் என்பதல்ல வாழப்போவது யார் என்பதுதான் பிரச்சினை : அமைச்சர் டக்ளஸ்

தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும்.

20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆளப்போவது யார் என்பதல்ல வாழப்போவது யார் என்பதுதான் பிரச்சினை : அமைச்சர் டக்ளஸ்

தசாவதாராம் : Outsourcing Hollywood : இராஜேஸ் பாலா அம்மாவுக்கு ஒரு பதில். : நட்சத்திரன் செவ்விந்தியன்.

16 ம் திகதி திங்கட்கிழமை இரவு சிட்னியில் ஒரு திரையரங்கில் தசாவதாரம் படம் பார்த்தேன். அடுத்த நாள் காலை இப்படத்தைப் பற்றிய இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் விமர்சனத்தை தேசம்நெற்றில் வாசித்து அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன்.

நல்ல நாடகத்துக்கோ அல்லது திரைப் படத்துக்கோ (Feature film) அடிப்படையில் அத்தியாவசியமாக வேண்டியது ஒரு நல்ல நாடகப்பிரதி அல்லது ஒரு நல்ல திரைக்கதை. கமலுக்கு 10 வேடங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சீக்கியப்பாடக நெட்டை ‘சுலாமியா’, யப்பானிய கராத்தேகாரன் ஆகிய பாத்திரங்கள் மையக் கதைக்கு சம்மந்தமில்லாமல் வலிந்து உருவாக்கப்பட்டவைகள். படம் தொடங்கும் போது வரும் நம்பியினுடைய கதையும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு உபகதை. மற்றப்படி மூலக்கதை எத்தனையோ ஹொலிவூட் படங்களில் பார்த்து அலுத்துப் போன வகை மாதிரியான ஹொலிவூட் அக்ஷன் படக்கதை. சந்தேகமேயில்லாமல் திறமையான ஒரு சந்தைப்படுத்தல் ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான தமிழ் வியாபாரப் படத்துக்கான திரைக்கதைதான் இது. வசூலில் நிச்சயமாக சாதனை படைக்கும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தசாவதாராம் : Outsourcing Hollywood : இராஜேஸ் பாலா அம்மாவுக்கு ஒரு பதில். : நட்சத்திரன் செவ்விந்தியன்

அண்ணன் ஜெயபாலனிற்கு கூட்டணித் தம்பி எழுதும் பதில் : எஸ் அரவிந்தன் (தவிகூ லண்டன் கிளை)

அன்பு மிக்க அண்ணன் ஜெயபாலனிற்கு
தாங்கள் அண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி ஆனந்தசங்கரி அவர்களுக்கு துணிகரமான வாழ்த்து மடல் ஒன்றை எழுதி இருந்தீர்கள். தங்களது தொடர்ச்சியான ஜனநாயக நடைமுறையைக் கண்டு மகிழ்வுற்ற எமது தலைவர் நீங்கள் குறிப்பிட்டது போவே பல கடிதங்களை எழுத வேண்டி இருப்பதால் படுபிசியாக இருப்பதாகவும், எமது லண்டன் கிளையை தங்களுக்கு விரிவான ஓர் நன்றி கலந்த பதில் ஒன்றையும் சில விளக்கங்களையும் எழுதும்படி கூறியிருந்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அண்ணன் ஜெயபாலனிற்கு கூட்டணித் தம்பி எழுதும் பதில் : எஸ் அரவிந்தன் (தவிகூ லண்டன் கிளை)

ஜே.வி.பி. பா உ அம்ஜான் உம்மா எங்கே?

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அம்ஜான் உம்மா பாராளுமன்ற நடவடிக்கைகளில் சுயாதீனமாக செயல்படப் போவதாக அறிவித்து இருந்தார். அதன் பின் நேற்றுவரை யூன் 19 அவர் வீடு திரும்பிவில்லை. சுயாதீன உறுப்பினராக செயல்பட முடிவெடுத்து உள்ளமையினால் தமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்று தற்காப்பு நடவடிக்கையாக இவர் பாராளுமன்ற பொலிஸ் நிலையத்தலும் முறைப்பாடு செய்திருந்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜே.வி.பி. பா உ அம்ஜான் உம்மா எங்கே?

சப்ரகமுவ மற்றும் வட மத்திய தேர்தல்கள் இந்திய வம்சாவளி மக்களுக்கு மிக முக்கியமானது - அமைச்சர் சந்திரசேகரன்

”சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணசபை தேர்தல்கள் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய மிக முக்கிய தேர்தலாக அமையப் போகிறது” என மலையக மக்கள் முன்னிணியின் தலைவரும், சமூக அபிவிருத்தி, அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ. சந்திரசேகரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சப்ரகமுவ மற்றும் வட மத்திய தேர்தல்கள் இந்திய வம்சாவளி மக்களுக்கு மிக முக்கியமானது - அமைச்சர் சந்திரசேகரன்

‘தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க இடமளிக்கப்படாது’ - பிள்ளையான் - ஹிஸ்புல்லாஹ் கூட்டறிக்கை

கிழக்கு மாகாணத்தில் தீய சக்திகளால் மேற்கொள்ளப்படும் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இதற்காக காத்திரமான திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இணைந்து இது தொடர்பாக செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க இடமளிக்கப்படாது’ - பிள்ளையான் - ஹிஸ்புல்லாஹ் கூட்டறிக்கை

பாதுகாப்புச் செய்திக் கட்டுப்பாட்டுக்கு கண்டனம்

தேசிய பாதுகாப்பு செய்திகளை வெளியிடுவது தொடர்பில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரைக்கு சுதந்திர ஊடக அமைப்பு கண்டனத்தைத் தெரிவித்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாதுகாப்புச் செய்திக் கட்டுப்பாட்டுக்கு கண்டனம்

”புலிகளின் குரல்” ஒலிபரப்புக்குத் தடை & யூன் 20 செய்திச்சுருக்கம்

கடந்த முதலாம் திகதி செர்பியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் வானொலி சேவையான ‘வொய்ஸ் ஒப் டைகர்’ சேவையை செர்பிய அரசாங்கம் தடைசெய்துள்ளது. கடந்த 9ஆம் திகதி செர்பிய அரசாங்கம் இதற்கான தடையை விதித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு செர்பியாவிலிருந்து ஐரோப்பியா வடஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வானொலிச் சேவையை நடத்தியுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”புலிகளின் குரல்” ஒலிபரப்புக்குத் தடை & யூன் 20 செய்திச்சுருக்கம்

Thursday, 19 June 2008

மேற்கில் புலி ஆதரவுப் போராட்டங்கள் நெருக்கடியில் : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இடம்பெறும் போராட்டங்கள் ஊர்வலங்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலியில் 33 தமிழர்கள் யுன் 17ல் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்தினம் யுன் 16ல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க அமைப்பாக செயற்பட்ட உலகத் தமிழர் இயக்கத்தை கனடிய அரசு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துக் கொண்டது.அதனை அடுத்து அந்த அமைப்பின் சகல சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மேற்கில் புலி ஆதரவுப் போராட்டங்கள் நெருக்கடியில் : த ஜெயபாலன்

”முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும்” பா உ எம்.எச்.எம். ஹலீம்

“இலங்கையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசியல் பேதங்கள் மற்றும் பிரதேச பேதங்களை மறந்து முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது. எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் அரசியல் தலைவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். மாறாக தத்தமது சுயநல நோக்கங்களுக்காக வேண்டி நாம் பிளவுபட்டு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் நிலைமை தொடருமாயின் எமது சமூகத்தின் எதிர்காலம் மிகவும் பயங்கரமானதாக ஆகிவிடும்”. இன்று (June 19) காலை 10.30 மணிக்கு கட்டுகஸ்தோட்டை வீரகோன்கார்ட்ன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே முன்னாள் மத்திய மாகாணசபை அமைச்சரும், தற்போதைய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். ஹலீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும்” பா உ எம்.எச்.எம். ஹலீம்

கிரடிட் கார்ட் மூலம் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி செய்தவர்; வெள்ளவத்தையில் கைது!

கிரடிட் கார்ட் அட்டைகளைப் பயன்படுத்தி மோசடியான முறையில் இலங்கை மற்றும் வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபா நிதியைப் பெற்றுக் கொண்ட ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு உள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிரடிட் கார்ட் மூலம் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி செய்தவர்; வெள்ளவத்தையில் கைது!

வெளிநாட்டவருடன் உண்டியல் பரிமாற்றம் செய்து வந்த மூவர் கைது

அரசாங்கத்திற்குக் கோடிக்கணக்கான ரூபா நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்ப் பாடசாலை யொன்றின் ஆசிரியரொருரையும் மற்றும் இரு சந்தேக நபர்களையும் வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். உண்டியல் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வெளிநாட்டு நிதி பரிமாற்றம் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கில் வாழும் தமிழர்கள் ஊடாக இடம்பெற்று வந்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெளிநாட்டவருடன் உண்டியல் பரிமாற்றம் செய்து வந்த மூவர் கைது

”அதிகாரப்பகிர்வூ மூலமான தீர்வை பெற்று கொடுக்க கட்சி பேதம் பாராமல் அனைவரும் முன்வர வேண்டும்.” அமைச்சர் கருஜயசூரிய

தேசிய இனப்பிரச்சினைக்கு கட்சி பேதம் பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கருஜயசூரிய வேண்டுகோள் விடுத்தார். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் பொருளாதார வீழ்ச்சியினை எதிர்நோக்கி, சர்வதேசத்தின் மத்தியிலிருந்து இலங்கை ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.பதுளை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் அமைச்சர் கருஜயசூரிய உரை நிகழ்த்தினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”அதிகாரப்பகிர்வூ மூலமான தீர்வை பெற்று கொடுக்க கட்சி பேதம் பாராமல் அனைவரும் முன்வர வேண்டும்.” அமைச்சர் கருஜயசூரிய

ஜுலை 10இல் பொது வேலைநிறுத்தம்

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜுலை 10இல் பொது வேலைநிறுத்தம்

”இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவசியமாகும்.” டக்ளஸ் தேவானந்தா

தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு தனக்கிருக்கிறது என்றும் சொந்த இடங்களில் மக்களைக் குடியேற்றி மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான சுமுகமான நிலையை படிப்படியாகத் தோற்றுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையூம் தான் மேற்கொண்டு வருவதாகவூம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வடமாகத்திற்கான விசேட செயற்பாட்டுக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவசியமாகும்.” டக்ளஸ் தேவானந்தா

Wednesday, 18 June 2008

ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன்

யூன் 16, 199ல் ஆரம்பிக்கப்பட்ட ரிபிசி - லண்டன் தமிழ் வானொலி இவ்வாரம் 10 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனைக் குறிக்கும் வகையில் யூன் 21 - 22ம் திகதிகளில் வானொலிக் கலையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை ரிபிசி ஏற்பாடு செய்துள்ளது. நிதி நெருக்கடி வன்முறைத் தாக்குதல்கள் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளால் பல தடவை தாக்குதலுக்கு உள்ளான இவ்வானொலி இடையிடையே சில காலகட்டங்களில் இடைநிறுத்தப்பட்டும் இருந்தது. ரிபிசியினுடைய அரசியல் நிலைப்பாடுகள் கேள்விக்குரியதாக இருந்த போதும் ஒவ்வொரு தடவை இடைநிறுத்தப்பட்ட போதும் மீண்டும் தன்னை சுதாகரித்துக் கொண்டு வானலைகளில் ரிபிசி வலம்வரத் தவறவில்லை என்பது அதன் குறிப்பிடத்தக்க அம்சம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன்

தலை வணங்குவோம் தியாகிகளுக்கு : ரஞ்சன்

அது 1990 யூன் மாதம் 19ந் திகதி!

மானுடவர்க்கத்தின் மனிதப் பண்புகளுடன், அமைதி, சமாதானம், ஜனநாயகம் நிறைந்த சமதர்த வாழ்வை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க போராடி மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவும், பன்னிரு தோழர்களும், சென்னையில் பாசிசப் புலிகளால் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்!

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தலை வணங்குவோம் தியாகிகளுக்கு : ரஞ்சன்

ஈபிஆர்எல்எப் பத்மநாபா நினைவாக: அரசியல் கொலைகள் : தோழர் என் சண்முகதாசன்

1990 யூன் 19ல் ஈபிஆர்எல்எப் பத்மநாபாவும் அவரது தோழர்களும் தமிழகத்தில் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல. இன்று 18 ஆண்டுகள் கடந்த பின்னும் இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதோ அல்லது இதனை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதோ சின்னஞ்சிறிய இலங்கைத் தீவின் எங்கோ ஒரு மூலையில் ஒரு மகன், ஒரு சகோதரன், ஒரு கணவன், ஒரு தந்தை கொல்லப்பட்டிருப்பான்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஈபிஆர்எல்எப் பத்மநாபா நினைவாக: அரசியல் கொலைகள் : தோழர் என் சண்முகதாசன்

இலங்கையில் மாகாண சபை முறையின் உருவாக்கமும் - கட்டமைப்பும் - அதிகாரங்களும். : முஹம்மட் அமீன்

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள உள்ளுராட்சி அலகான மாகாணசபை முறையின் உருவாக்கம் - கட்டமைப்பு - அதிகாரங்கள் ஆகியன சுருக்கமாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (13வது திருத்தச்சட்டம் பற்றிய உத்தியோகபூர்வமான அறிக்கையை பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்: Thirteenth Amendment to the Constitution )..

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையில் மாகாண சபை முறையின் உருவாக்கமும் - கட்டமைப்பும் - அதிகாரங்களும். : முஹம்மட் அமீன்

தசாவதாரம் : ஒரு தமிழ்ப் படத்தை உலக அவதாரமாக்கி இருக்கிறார் கமல்! : இராஜேஸ் பாலா

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகப் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் இடையில் கமலஹாசனின் தசாவாதாரம் படம் திரையிடப்பட்டு இருக்கிறது. தமிழ்ப்பட அகராதியில் பத்து வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுதான் முதற்தடவையாகும். அத்துடன் கிட்டத்தட்ட எழுபதுகோடி ரூபா பணச்செலவில், மிகவும் பிரமிப்பான தயாரிப்பாக வெளிவந்து இருக்கிறது இப்படம். தமிழ்ப்பட வரலாற்றைப் பொறுத்த வரையில் பல சரித்திர மாற்றங்களைத் தங்கி வருகிறது இப்படம். இப்படத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகல் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில், தேங்காய் உடைத்து, மங்கல தீபம் எரித்து கமலின் இரகசிகர்கள் படத் திரையீட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். சென்னையில் 12ம் திகதி திரைப்படப் பிரமுகர்களுக்காகத் ‘தசாவாரம்’ விசேடமாகத் திரையட்டுக் காட்டப்பட்டது. அதேநேரம், இந்தியா தவிர்ந்த பலநாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது. ஜூன் 12ம் திகதி அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படத்தை அமெரிக்க ஜனாதிபது ஜோர்ஜ் புஷ் பார்க்கவேண்டும் என்ற ஏற்பாட்டையும் அமெரிக்காவாழ் கமலஹாசன் ஆதரவாளர்கள் செய்கிறார்கள்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தசாவதாரம் : ஒரு தமிழ்ப் படத்தை உலக அவதாரமாக்கி இருக்கிறார் கமல்! : இராஜேஸ் பாலா

படுகொலைகளைச் செய்யும் புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள் - மங்கையற்கரசி அமிர்தலிங்கம் : இராஜேஸ் பாலா

07.06.08ல் லண்டனில் நடத்தப்பட்ட மஹேஸ்வரி ஞாபகார்த்தக்கூட்டத்தில் திருமதி அமிர்தலிங்கமும் ஒரு பேச்சாளாராக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவர் கடந்த ஒருமாதத்திற்கு மேல் தனது உறவினர்களைப் பார்க்க வெளிநாடு சென்றிருந்ததால் கூட்டத்திற்கு வரமுடியவில்லை என்று தெருவித்தார். லண்டனுக்கு வந்ததும் முதற் கண்ணாக, மஹேஸ்வரியின் கொலைக்கெதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அவரின் குறிப்பில் பின்கண்ட விடயங்களை அறிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படுகொலைகளைச் செய்யும் புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள் - மங்கையற்கரசி அமிர்தலிங்கம் : இராஜேஸ் பாலா

சமாதானம் பேசுபவர்கள் தேசத்துரோகிகள் : விமல் வீரவன்ச

பயங்கர வாதியான பிரபாகரனை அழிக்கும் இறுதிக்கட்டத்தை இராணுவத்தினர் அடைந்துள்ளனர். இராணுவத்தினரை இந்த வெற்றியை சீர்குலைக்கும் வகையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொண்டு சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க கூறுபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தினருக்கு அன்பளிப்பு வழங்கும் வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சமாதானம் பேசுபவர்கள் தேசத்துரோகிகள் : விமல் வீரவன்ச

ரணில் தலைமையில் இருந்து நீங்க வேண்டும் ஐ.தே.க செயற்குழுக் கூட்டத்தில் சூடான விவாதம்

ஐ.தே.க.யின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கோட்டையில் அமைந்துள்ள ஐ..தே.க.யின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுமுன்தினம் (June 16) காலை ஐ.தே.க.யின் செயற்குழு கூடியது. பொதுவாக ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க.யின் தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டும் என்று வெளிப்படையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காலை 10.50 மணிதொடக்கம் பி.ப. 3.00 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் அமைப்பாளர் செயற்பாடுகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. செயற்குழு உறுப்பினர்கள் பலர் வெளிப்படையாகவும் ஆக்ரோஸமாகவும் கருத்துக்களை பரிமாரிக்க கொண்டமையினால் இடைகிடையே கூட்டம் சூடுபிடித்ததாக அறிய முடிகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரணில் தலைமையில் இருந்து நீங்க வேண்டும் ஐ.தே.க செயற்குழுக் கூட்டத்தில் சூடான விவாதம்

நாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றது - சர்வதேச ஊடகவியல் அமைப்பு

நாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவது குறித்து ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமொன்றை அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைத்துள்ளது. யுத்த நடவடிக்கை தொடர்பான விமர்சனங்களை மேற்கொள்ளும் ஊடகவியலளார்கள் குறித்து இலங்கை அரசாங்கம் நோக்கும்முறை கவலையளிப்பதாக அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றது - சர்வதேச ஊடகவியல் அமைப்பு

சர்வகட்சி பாதுகாப்பு சபை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

தேசிய சுதந்திர முன்னணியினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் சர்வகட்சி பாதுகாப்பு சபையை அமைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சம்மதம் தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சர்வகட்சி பாதுகாப்பு சபை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

பலிக்குப்பலி வாங்கும் படலம். கடந்த 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலி! : முஹம்மட் அமீன்

2008ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 6 மாதத்துக்குள் தென்பகுதியிலும், வன்னிப் பகுதியிலும் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் அதேநேரத்தில், இதற்குப் பதிலடியாக தென்பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் எல்லாளன் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பலிக்குப்பலி வாங்கும் படலம். கடந்த 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலி! : முஹம்மட் அமீன்

Monday, 16 June 2008

முஸ்லிம்களுக்கு பிள்ளையானிடம் இருந்து ஐந்து பகிரங்க உறுதிமொழிகள்!

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தனித்துவம், சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முஸ்லிம் அமைப்பு ஒன்றுடன் உடன்படிக்கை செய்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திகாந்தன் (பிள்ளையான்) கைச்சாத்திட்டுள்ளார். கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவம், சுதந்திரம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஐந்து அம்சங்கள் உடன்படிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படும் பகிரங்க உறுதிமொழிகள் என உடன்படிக்கைக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் சுதந்திர கூட்டமைப்புடனேயே இந்த உடன்படிக்கையை பிள்ளையான் செய்துள்ளார். உடன்படிக்கையில் இந்த அமைப்பின் தலைவர் ஜுனைத் முஹம்மத் அன்வர், பொதுச்செயலாளர் செய்க் இஸ்மாயில் முஹம்மத் முஸ்டீன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனராம். ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியின் செயலாளர் எம்.ஆர். ஸ்ராலின் இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்ததுடன், உடன்படிக்கையின் உறுதிமொழிகளை உறுதிப்படுத்தும் விதத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களுக்கு பிள்ளையானிடம் இருந்து ஐந்து பகிரங்க உறுதிமொழிகள்!

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ஆச்சிராஜன் காலமானார்

தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ஆச்சிராஜன் மாரடைப்பால் காலமானார். யாழ் வலிகாம், சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் 1980க்களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1980க்களின் நடுப்பகுதியில் அவ்வியக்கத்தில் ஏற்பட்ட பிளவின் போது தங்களுடன் சேர்ந்துகொண்ட சக உறுப்பினர்களுக்காக தொடர்ந்தும் அவ்வியக்கத்துடன் இணைந்திருந்த இவர் அவ்வியக்க உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைய உதவியவர். இளம்வயதிலேயே இயக்கத்தில் இணைந்துகொண்ட இவர்கள் புளொட் தலைமைத்துவத்தினால் தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். தங்கள் நிலையை உணர்ந்த போது இயக்கத் தலைமைத்துவத்தினால் பழிவாங்க திட்டமிடப்பட்ட பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களைக் காப்பாற்றினர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ஆச்சிராஜன் காலமானார்

சங்கரி ஐயாவுக்கு எனது பகிரங்க 75வது பிறந்தநாள் வாழ்த்து மடல் : த ஜெயபாலன்

சங்கரி ஐயா வணக்கம்.

இன்று யூன் 15, உங்கள் 75வது பிறந்த தினத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு என் குடும்பத்தில் எல்லோரும் நலம். உங்களுக்கும் அவ்வாறே என்று நம்புகிறேன். ஐயா நீங்கள் கடிதம் எழுதுவதில் படுபிசியாக இருப்பது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற வாசகர்களையும் படுபிசியாக வைத்திருக்கிறீர்கள். நிற்க.

ஐயா 14 மே 1976 அன்று நீங்களெல்லாம் வட்டுக்கோட்டையில் கூடி ஒரு தீர்மானம் போட்டியல், அது உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். இதுவொரு பகிரங்கக் கடிதம் என்ற படியால மற்றவைக்கும் விளங்குவதற்காக ”….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு …..

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சங்கரி ஐயாவுக்கு எனது பகிரங்க 75வது பிறந்தநாள் வாழ்த்து மடல் : த ஜெயபாலன்

ஆனந்தசங்கரி - டக்ளஸ் மோதல் புலிகள் மீண்டும் பலம்பெறுவதற்கே உதவும் : குரு

மே 26 திகதியிட்டு ஜனாதிபதி ராஜபக்சவுக்கு ஆனந்த சங்கரியினால் எழுதப்பட்ட கடிதம் தேசம்நெற்றிலும் புலிகள் ஆதரவுத் தளமான புதினம் இணையத்திலும் வெளியிடப்பட்டதையும் அதையொட்டிய விமர்சனங்களையும் ஏனைய வாசகர்களைப் போல் நானும் பார்த்ததேன். தேசம்நெற் அந்தக் கடிதத்தை எவ்வித விபரிப்பும் இன்றி கடிதமாகப் பிரசுரிக்க, புதினம் புளாங்கிதத்துடன் கிண்டல் செய்தியாக வெளியிட்டது. புலிகளுக்கு எதிரானவர்கள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாட்டை வைத்து தம்பட்டம் அடிப்பதற்கு புதினதிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆனந்தசங்கரி - டக்ளஸ் மோதல் புலிகள் மீண்டும் பலம்பெறுவதற்கே உதவும் : குரு

இலங்கை இனப்பிரச்சினையால் இந்தியாவுக்கு பாதிப்பு - மன்மோகன் சிங்

இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புது டில்லியில் நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர் இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரம் அடையும்போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாக குறிப்பிட்டார். எனவே, இந்தியாவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை இனப்பிரச்சினையால் இந்தியாவுக்கு பாதிப்பு - மன்மோகன் சிங்

”இந்த அரசால் முஸ்லிம்களுக்கு சகல விதத்திலும் பாதிப்பே.” பா உ எம்.எச்.எம். ஹலீம் : முஹம்மட் அமீன்

”கிழக்கு மாகாணத்துக்கு அடுத்ததாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் கண்டி மாவட்டமாகும். ஆனால், கண்டி மாவட்ட முஸ்லிம்களின் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் கருத்திற் கொள்ளாது அரசாங்கம் மாற்றாத்தாய் மனப்பாங்குடன் நடந்து வருகின்றது. ” இன்று (June 15) காலை 9.00 மணிக்கு கட்டுகஸ்தோட்டை வீரகோன் கார்ட்ன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற முஸ்லிம் இளைஞர்களுக்கான விசேட கருத்தரங்கொன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும்போதே முன்னாள் மத்திய மாகாணசபை அமைச்சரும், தற்போதைய கண்டி மாவட்ட பா உ எம்.எச்.எம். ஹலீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இந்த அரசால் முஸ்லிம்களுக்கு சகல விதத்திலும் பாதிப்பே.” பா உ எம்.எச்.எம். ஹலீம் : முஹம்மட் அமீன்

யுத்த சூனிய பகுதியை உறுதியுடன் பேணும் முயற்சியில் ஆலய நிர்வாகம்

மடு தேவாலயப் பகுதியில் சுமார் இரண்டரை கிலோ மீற்றர் பகுதியை யுத்த சூனியப் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்குரிய ஆயத்த வேளைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நேற்று (June 14) தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யுத்த சூனிய பகுதியை உறுதியுடன் பேணும் முயற்சியில் ஆலய நிர்வாகம்

புத்தரின் தார்மீகத்தை உயிராக மதிக்கும் தேரர் கிழக்கு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் - அமைச்சர் டிலான் பெரேரா

நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 வீடுகளை முஸ்லிம்களிடையே பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவாக அது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய தாக்கல் செய்துள்ள வழக்கினை வாபஸ் பெறுமாறு துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரோவைக் கேட்டுள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புத்தரின் தார்மீகத்தை உயிராக மதிக்கும் தேரர் கிழக்கு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் - அமைச்சர் டிலான் பெரேரா

வவுனியாவில் தற்கொலைத் தாக்குதல்! 12 பேர் பலி, 23 பேர் காயம்

இன்று June 16 காலை 7.15 மணியளவில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாக தற்கொலை குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றது. இத்தாக்குதலில் 12 பேர் மரணமடைந்து உள்ளனர். மரணமடைந்த அனைவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்பட்டுகிறது. இவர்களுள் 3 பெண் பொலிஸாரும் அடங்குவர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வவுனியாவில் தற்கொலைத் தாக்குதல்! 12 பேர் பலி, 23 பேர் காயம்

Saturday, 14 June 2008

கத்தி, வாள்களுடன் லெபறா - லைக்காரெல் கோலிங்காட் போட்டி : லண்டன் குரல் 24

முக்கிய தலைப்புகள்:
1. கத்தி, வாள்களுடன் லெபறா - லைக்காரெல் கோலிங்காட் போட்டி

2. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் : கிங்ஸ்ரன் தமிழ் பிள்ளைகளின் பெயரில் மோதல்

3. ஆச்வேல் முருகன் குருக்களுக்கு கத்திக்குத்து!

4. ஈஸ்ற்ஹாம் முருகன் - மகாலக்ஸ்மி இல்பொர்ட் விநாயகர் முரண்டு பிடிக்கின்றனர்!

5. நீங்களும் ஒருக்கா திங் பண்ணுங்கோ : பேராசிரியர் பெக்கோ..

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கத்தி, வாள்களுடன் லெபறா - லைக்காரெல் கோலிங்காட் போட்டி : லண்டன் குரல் 24

எல்லா சிலைகளையும் உடைப்போம், எமது சிலைகளைத், தவிரவும் : யமுனா ராஜேந்திரன்

எழுத்து - ஒலி - ஒளி - இணையம் என அனைத்து ஊடகங்களும் இவைகளது வளர்ச்சிப் போக்கில், ஊடகங்களாக இவைகள் எதிர்கொண்ட சவால்களைக் கடந்தே வந்திருக்கிறது.

எழுத்து சார்ந்த ஊடகம் எனும் அளவில், அவதூறுகளும் ‘மஞ்சள் கடதாசி’ வகைக் கருத்துக்களும் தனிநபர் தாக்குதல்களும் அநாமதேயமான பெயரில் வரத் துவங்கிய பின்தான், அச்சு இதழ்கள் வாசகர் கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் தொடர்பாக எழுதுபவரின் முகவரி மற்றது அவரது நிஜ அடையாளம் போன்றவற்றினைக் கோரிப் பெற்றன.

‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘ஹிண்டு’ போன்ற பத்திரிக்கைககளில் தமது ‘கருத்துக்களுக்குப் பொறுப்பெடுக்காத’ கட்டுரையாளர்களோ அல்லது வாசகர்களோ இப்போது எழுத முடியாது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எல்லா சிலைகளையும் உடைப்போம், எமது சிலைகளைத், தவிரவும் : யமுனா ராஜேந்திரன்

இலக்கியச் சந்திப்பின் இணைய ஊடக உரையாடலுக்காக - தேசம்நெற் பற்றிய ஒரு குறிப்பு : சேனன்

இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமைக்காக தேசம் ஆசிரியர்கள் குழுவினர் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

தேசம்நெற் பற்றி:

தேசம் ஆசிரியர்கள்:
தற்சமயம் தேசம் ஆசிரியர் குழுவில் 8 பேர் இயங்குகிறார்கள். இங்கிலாந்தில் வாழும் இந்த 8 பேரில் இருவர் பெண்கள். அவர்கள் உட்பட நால்வர் தங்கள் பெயர்களை தற்சமயம் வெளிவிட விரும்பில்லை. மற்றவர்களின் விபரங்கள் வருமாறு:
த. ஜெயபாலன் ரி கொன்ஸ்ரன்ரைன் சேனன் ரி சோதிலிங்கம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கியச் சந்திப்பின் இணைய ஊடக உரையாடலுக்காக - தேசம்நெற் பற்றிய ஒரு குறிப்பு : சேனன்

இலக்கிய சந்திப்பு - சில கிறுக்கல்கள் : துடைப்பான்

நான் தேசாந்தரியாகி சுற்றியலைந்து 1990க்களின் ஆரம்பப பகுதியின் குளிர்காலம் ஒன்றில் பாரிசில் காலடி வைத்தேன். குளிர் உறைதலோடு என் புகலிட வாழ்வும் தொடங்கிற்று. என் இந்த புதியவாழ்நிலை என் “இருத்தல்” தொடர்பாக பல்தரப்பட்ட முரண்பாட்டுத் தன்மைகளை உருவாக்கிற்று. நான் வாழ்ந்த நேசித்த இலங்கை - தமிழக சுழல் என்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் கிராமிய நட்புக்கள் அவர்தம் மண்வாசனை பதிந்த முகங்கள் என் அரசியல் இலக்கிய உலகம் அனைத்தும் இழப்புற்ற அனாதைத்தனமாய் என் மனநிலை பரிசில் அலையுற்றுருந்த வேளையில்தான் பரிசில் நடந்த 14வது இலக்கிய சந்திப்பில் என் காலடி பதிந்தது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கிய சந்திப்பு - சில கிறுக்கல்கள் : துடைப்பான்

Friday, 13 June 2008

அரசியல் கலந்துரையாடல் : வடக்கு கிழக்கும் 13வது திருத்தச் சட்டமும்

3 தசாப்தத்தையும் கடந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு திசையில் முடிவின்றிச் சென்று கொண்டிருக்க, மறுமுனையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ 13வது திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் இலங்கையில் உள்ள சகல இன மக்களுக்கும் அழிவையும் வேதனையையும் வழங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில் இலங்கையில் ஒரு சமாதான சூழல் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டா என்ற விவாதத்தை இக்கலந்துரையாடல் மூலம் ஏற்படுத்த முனைகிறோம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேசம் உதவ வேண்டும்.” - முதல்வர் சந்திரகாந்தன்

”கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேசம் உதவ வேண்டும்.” - முதல்வர் சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தை மீளக்கட்டி யெழுப்புவதற்கும், அங்கு வாழும் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கும் மத்திய அரசு உதவி வழங்குவது போன்று சர்வதேச சமூகமும் உதவிகள் வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று முன்தினம் (June 11) தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேசம் உதவ வேண்டும்.” - முதல்வர் சந்திரகாந்தன்

நுவரெலியா தோட்டமொன்றில் பெருமளவு வெடிமருந்து கண்டுபிடிப்பு.

நுவரெலியா, கந்தபொல, மாகஸ்தொட தோட்டத்தில் நிலத்துக்கடியே கொங்கிரீட் இட்டு செய்யப்பட்டிருந்த பங்கர் ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடி பொருட்களையும் உபகரணங்களையும் கொழும்பு பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் (June 11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நாசகாரப் பொருட்களின் TND சேர்ந்த வெடிபொருள் 300 கிலோவும், C4ச் சேர்ந்த வெடிபொருள் 16 கிலோவும் T56 துப்பாக்கி இரண்டும், மெகசின் இரண்டும் மற்றும் 100 துப்பாக்கிக் குண்டுகளும், வெடிப்புக்காகப் பயன்படுத்தப்படும் டெரனேடர் 75உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அண்மைக் காலத்தில் மலையக தோட்டப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விசாலமான ஆய்வுப் பொருள் இதுவென்றும் கூறப்படுகின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நுவரெலியா தோட்டமொன்றில் பெருமளவு வெடிமருந்து கண்டுபிடிப்பு.

வாழ்வாதாரம் ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க போராட ஐ.தே.க. தீர்மானம்

மக்களின் வாழ்வாதாரம் ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க பாதையில் இறங்கி போராட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளினதும், பொது அமைப்புகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (June 12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாழ்வாதாரம் ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க போராட ஐ.தே.க. தீர்மானம்

Thursday, 12 June 2008

தேர்தல் ஒரு வார காலத்துக்குள் அறிவிக்கப்படும் : முஹம்மட் அமீன்

கலைக்கப்பட்டுள்ள வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் ஒரு வார காலத்துக்குள் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 1988ம் ஆண்டின் இல.02 என்ற மாகாண சட்ட விதிகளின் இரண்டாவது பிரிவின் 10 - ஆ என்ற உபபிரிவுக்கமைய மாகாண சபையொன்று கலைக்கப்பட்டு ஒரு வாரத்தினுள் அல்லது ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து ஒரு வார காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் ஆணையாளர் வெளியிட வேண்டும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேர்தல் ஒரு வார காலத்துக்குள் அறிவிக்கப்படும் : முஹம்மட் அமீன்

ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பயந்து பாடசாலைகளுக்கு அரசு விடுமுறை வழங்கியது

சகல அரசாங்கப் பாடசாலைகளுக்கும் நேற்றும் (June 11) இன்றும்(June 12) விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு வலியுறுத்தி ஆசிரிய தொழிற்சங்கங்கள் நேற்றும், இன்றும் தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. அதே நேரம் ஆசிரியர் வேலை நிறுத்தற் போராட்டத்திற்கு அஞ்சியே அரசு இரண்டு நாட்களுக்குப் பாடசாலைகளை மூடியுள்ளது என்று தெரிவிக்கும் ஆசிரியர்கள் சங்கங்கள் சற்றுப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பயந்து பாடசாலைகளுக்கு அரசு விடுமுறை வழங்கியது

தேசம்நெற்றின் மற்றுமொரு பரிமாணம் தேசம்திரை

தேசம் இணையத்தின் மற்றுமொரு பரிமாணமாக தேசம்திரை அறிமுகமாக உள்ளது. இன்னும் இருவாரங்களில் உங்கள் இணையங்களில் தேசம்திரையைப் பார்க்கலாம். அச்சு ஊடகமாக 10 ஆண்டுகளாக இன்றும் வெளிவந்த கொண்டிருக்கும் தேசம் சஞ்சிகை இணைய ஊடகமாகிய மிகக் குறுகிய காலத்தில் காட்சியுடகமாக தேசம்திரை ஆக உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் தேசம் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசம்நெற்றின் மற்றுமொரு பரிமாணம் தேசம்திரை

பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதிய பரிமாணம் : சபா நாவலன்

ஜனநாயகக் கடவுளைச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு புலியெதிர்பென்ற புதிய சிம்மசனத்தில் சப்பாணி கொட்டி அமர்ந்து கொண்டு சட்டம்பிகளாயும், சக்கரவர்த்திகளாயும் சாம்ராஜ்யக் கனவில் மிதந்தவர்களுக்கு மட்டுமல்ல அதே ஜனநாயகத்தை ஒரு கைபார்த்து வைத்த புலம்பெயர் புலிகளுக்கும் கூட ‘தண்ணி காட்டியிருக்கிறது’ புதிய மக்கள் ஊடகவியலின் வளர்ச்சி. பரிஸில் நடந்து முடிந்தது இதை விலாவாரியாகத் தெளிவுபடுத்துகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதிய பரிமாணம் : சபா நாவலன்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்துவிடல் : த ஜெயபாலன்

1. சுகன்//விமர்சனங்களும் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவமும் அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் இன்னும் வாலாயப்படவில்லை. மாற்றுக் கருத்துகளையும் எதிர் விமர்சனங்களையும் இருகரங் கூப்பி கை தொழுது வரவேற்கின்ற நிலை போயே போய்விட்டது போலத்தான் தெரிகிறது.//
நணபர் சுகன் இந்த பின்னூட்டத்தை நீங்கள் தேசம்நெற்றில் இடவில்லை. சத்தியக்கடதாசியிலே இட்டீர்கள். ஆனால் //குறையிருந்தால் எம்மிடம் கூறுங்கள் நிறையிருந்தால் நண்பரிடம் கூறுங்கள் என்ற உணவு விடுதிக்காரரின் பக்குவம் கூடவா நமது நண்பர்களுக்கு இல்லாமல் போக வேண்டும்!// என்று எழுதுகிறீர்கள். ஊகங்களையும் குழுவாதத்தையும் வைத்துக் கொண்டு ஆலோசனை வழங்க முற்பட்டால் இவ்வாறான வழுக்கள் தவிர்க்க முடியாது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்துவிடல் : த ஜெயபாலன்

ஆயுததாரிகளே, கருத்தாளர்களுடன் ஆயுதங்களால் பேசாதீர்கள் : ரி சோதிலிங்கம்

மே 13ல் படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் யூன் 7ல் இடம்பெற்ற நினைவுக் கூட்டத்தில் ரி சோதிலிங்கம் ஆற்றிய உரை இங்கு பதிவிடப்படுகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆயுததாரிகளே, கருத்தாளர்களுடன் ஆயுதங்களால் பேசாதீர்கள் : ரி சோதிலிங்கம்

Tuesday, 10 June 2008

தேசம்நெற் பார்காதீர்கள்! படிக்காதீர்கள்! - எனது பார்வையில் கலைச்செல்வனின் நினைவுக்கூட்டம் : எஸ் சுரேஸ் (பாரிஸ்)

பாரிஸில் நடைபெற்ற கலைச்செல்வனின் மூன்றாவது ஆண்டு நினைவு ஒன்று கூடலில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களில் நானும் ஒருவன். 08-06-08ல் France -la plaine - stade de franceல் அமைந்துள்ள மண்டபத்தில் மதியம் 12 மணிக்கு கலைச்செல்வனின் 3வது நினைவுக்கூட்டம் சுசீந்திரன் அவர்களின் தலைமையில் கலைச்செல்வனின் நினைவுப் பகிர்வுடன் ஆரம்பமாகியது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசம்நெற் பார்காதீர்கள்! படிக்காதீர்கள்! - எனது பார்வையில் கலைச்செல்வனின் நினைவுக்கூட்டம் : எஸ் சுரேஸ் (பாரிஸ்

கிழக்கை பேரினமயமாக்க அரசுடன் ஜாதிகஹெல உறுமயவும் இணைந்து திட்டம் - மனோ கணேசன்

”கிழக்கை பேரினமயமாக்கும் திட்டத்தை அரசாங்கத்துடன் இணைந்து ஜாதிகஹெல உறுமய மிகக் கச்சிதமாக செய்து வருகிறது. இதனை அங்குள்ள தமிழ் பேசும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இரு இனங்களும் விழிப்புடன் செயற்படும் நிலமொன்று இருந்தால் தான் தமிழ் பேசும் மக்கள் தங்களது உரிமையை கோர முடியும்.” இவ்வாறு கூறினார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான மனோ கணேசன்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கை பேரினமயமாக்க அரசுடன் ஜாதிகஹெல உறுமயவும் இணைந்து திட்டம் - மனோ கணேசன்

ஜனாதிபதி மகிந்தவின் வருகையையொட்டி கொமன்வெல்த் அலுவலகம் முன் முத்தரப்பு போராட்டம்

இன்று (யூன் 10) கொமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு வந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க பல நூறு தமிழர்கள் கூடியதால் பிற்பகுதியில் கண்டன நிகழ்வு இடம்பெற்ற கொமன்வெல்த் செயலாளர் அலுவலகத்திற்கு முன் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சிலர் ரவல்ஸ்கர் ஸ்கெயரில் சிறிது நேரம் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனாதிபதி மகிந்தவின் வருகையையொட்டி கொமன்வெல்த் அலுவலகம் முன் முத்தரப்பு போராட்டம்

Saturday, 7 June 2008

கொழும்பில் இலங்கை – ஐரோப்பிய ஆணைக்குழு கூட்டம்

கொழும்பில் 9ம் திகதி முதல் 11ம் திகதிவரை நடைபெறவுள்ள இலங்கை – ஐரோப்பிய ஆணைக்குழு கூட்டத்தினூடாக ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கான களமொன்றை அமைக்க முடியுமென ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோஸ் மெனுவல் பர்ரோஸோ நம்பிக்கை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் புதிய தூதுவரான ரவினாத் ஆரயசிங்கவின் நியமனக் கடிதத்தை கையேற்ற பின்னர் அங்கு கருத்துத் தெரிவித்தபோதே ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பில் இலங்கை – ஐரோப்பிய ஆணைக்குழு கூட்டம்

”மலையக மக்கள் மொழியுரிமை, காணியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்” - பிரதியமைச்சர் புத்திரசிகாமணி

”மலையக மக்கள் மொழியுரிமை, காணியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தேசியஇனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.” - இவ்வாறு மலையகத் தேசிய தொழிலாளர் சங்கத் தலைவரும் நீதி மற்றும் மறுசீரமைப்புப் பிரதியமைச்சருமான வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மலையக மக்கள் மொழியுரிமை, காணியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்” - பிரதியமைச்சர் புத்திரசிகாமணி

பிந்திய செய்தி: இன்று 2வது குண்டு வெடிப்பு!!! மொத்தமாக 23 பேர் பலி! 90 பேர் காயம்!

வத்தே கமையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் பிற்பகல் 3.50 மணியளவில் குண்டுடொன்று வெடித்துள்ளது. இது தொடர்பாக கண்டி வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர உடன் தொடர்பு கொண்ட போது இதுவரை காயமுற்ற 12 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஒரு சடலங்கள் கண்டி வந்துள்ளதாகவும் இன்னுமொரு சடலம் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி: இன்று 2வது குண்டு வெடிப்பு!!! மொத்தமாக 23 பேர் பலி! 90 பேர் காயம்!

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் தகராறு: மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது.

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக நேற்று (June 5) ஆம் திகதியிலிருந்து காலவரையறையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக சபை நடவடிக்கை எடுத்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் தகராறு: மறுஅறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது.

காத்தான்குடி – ஆரையம்பதியில் 30 பேர் அளவில் வெட்டுக்காயம் - ஊரடங்கு அமுல்.

காத்தான் குடி ஆரையம்பதி பிரதேசங்களில் நேற்றும் (June 5) பதற்றம் நிலவியதுடன் அப்பிரதேசங்களில் அமைதியை நிலைநாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காத்தான்குடி – ஆரையம்பதியில் 30 பேர் அளவில் வெட்டுக்காயம் - ஊரடங்கு அமுல்.

Thursday, 5 June 2008

கறுப்பர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியுமா? : தோழர் என் சண்முகதாசன்

நவம்பர் 2008, அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கறுப்பினத்தவர் ஒருவர் பிரதான கட்சி ஒன்றின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவை. பராக்கா ஓபாமா, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இன்று (யூன் 5) தன்னை அறிவித்து உள்ளார். இதற்காக இவருடன் போட்டியிட்ட ஹில்லரி கிளின்டன் நாளை (யூன் 6) தனது தோல்வியை அறிவிக்க உள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகி உள்ள பராக்கா ஓபாமா நவம்பர் நடைபெறவுள்ள தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோன் மக்கெயின் உடன் அமெரிக்க ஜனாதிபதிக்காக போட்டியிட இருக்கிறார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கறுப்பர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியுமா? : தோழர் என் சண்முகதாசன்

1968 பாரிஸ் மாணவர் எழுச்சி : கவிதைகள் தெருக்களை ஆட்சி செய்தபோது : யமுனா ராஜேந்திரன்

லெனின் அல்லது சேகுவேராவின் ஒரு புகைப் படத்தையும் அவர்களது ஒரு வாக்கியத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். வாக்கியத்தை பத்துப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பிம்பத்திற்கு ஒரு வார்த்தை. பிற்பாடு அந்தப் பிம்பங்களுக்குப் பொருந்தும் மாதிரி அல்லது மாறுபடுகிற மாதிரி அர்த்தப்படுமாறு அந்தப் புகைப்படத்தைப் போடுங்கள்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
1968 பாரிஸ் மாணவர் எழுச்சி : கவிதைகள் தெருக்களை ஆட்சி செய்தபோது : யமுனா ராஜேந்திரன்

வடக்கின் மையத்தின் கீழ், கிழக்கு தெற்கானது| சூரிஜ் நகர கருத்தரங்கின் மையவாதம் : ரவி சுந்தரலிங்கம்

அண்மையில், வைகாசி 18, 2008, எமது முன்னைநாள் ஈரோஸ் தோழர்கள் மிகவும் அரியதான சந்திப்பு ஒன்றினை சுவிஸ் சூரிஜ் நகரத்தில் ஏற்படுத்தியிருந்தார்கள். ஒன்றாக ஓரமைப்பில் இருந்து இலங்கை பூராக வாழும் தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடி இறுதியில் மாற்றியக்கத் தடையால் தமது உயிருக்காகவும் போராடியவர்களில் பலர் இன்று தமது தனிப்பட்ட அடையாளங்களுக்காகப் போரிடுவது போன்ற நிலையில் இக்கூட்டம் எழுந்திருந்தமை ஒருபுறம். பல மாற்றங்கள் குறுகிய காலத்துள் தாயகத்தில் இடம் பெற்றுள்ளமையால் எழுந்துள்ள கேள்விகள் பதில்கள் ஏக்கங்கள் என்பவை இன்னொருபுறம். இவையிரண்டுமே ஒன்றில் மேலொன்றாகிய மனச் சூழ்நிலையில் எதிர்பாராவிதமாக பல அரசியல் தீவிரவாதிகளை சந்திக்கக் கூடியதான சம்பவமாகவும் இச்சந்திப்பு அமைந்தமையால் அரியதொரு வாய்ப்பு என்பதில் உண்மை உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வடக்கின் மையத்தின் கீழ், கிழக்கு தெற்கானது| சூரிஜ் நகர கருத்தரங்கின் மையவாதம் : ரவி சுந்தரலிங்கம்

யூன் 7ல் படுகொலைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

அரசியல் படுகொலைகளுக்கு எதிரான கண்டனம் என்ற தலைப்புடன் மகேஸ்வரி வேலாயுதம்: நினைவுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. யூன் 7ல் லெய்டன்ஸ்ரோன் - வொன்ஸ்ரட் பகுதியில் உள்ள குவாக்கர்ஸ் ஹவுஸில் இந்நினைவுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு ”அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான அடையாள எதிர்ப்பாகும்” என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யூன் 7ல் படுகொலைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

வெள்ளம் அபாயம் குறைகிறது. இதுவரை உயிரிழப்பு 24.

கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அபாயம் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைக்கு வெள்ள அபாயம் குறைந்தாலும் சீரற்ற காலநிலை தொடருமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெள்ளம் அபாயம் குறைகிறது. இதுவரை உயிரிழப்பு 24.

பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம். ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கடந்த மே மாதம் ஆறாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வால் திடீரென இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் இன்று (June 5) காலை கூடியது. 6வது பாராளுமன்றத்தின் 3வது கூட்டத்தொடரே இன்று ஆரம்பமாகியது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம். ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சமூக ஆர்வலர் ஜீவரட்ணம் காலமானார்

அண்மைக் காலமாக நோய்வாய்பட்டடிருந்த தம்பையா ஜீவரட்ணம் புற்றுநோயினால் உயிரிழந்தார். பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர் பதவிக்காக அல்லாமல் தனது உழைப்பையும் வழங்கி வருபவர். லண்டனில் நடைபெறும் தமிழர்களின் நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்பவர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சமூக ஆர்வலர் ஜீவரட்ணம் காலமானார்

Wednesday, 4 June 2008

உலமா சபையின் வேண்டுகோள் பிசுபிசுத்து விட்டது : முஹம்மட் அமீன்

கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வினை 18 முஸ்லிம் பிரதிநிதிகளும் கட்சி வேறுபாடின்றி பகிஸ்கரிக்க வேண்டுமென காத்தான்குடி உலமாசபை நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது. காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபை ஏகமனதான தீர்மானத்தின் கீழ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:..

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
உலமா சபையின் வேண்டுகோள் பிசுபிசுத்து விட்டது : முஹம்மட் அமீன்

ஜனாதிபதியின் லண்டன் வருகைக்கு எதிர்ப்பு

யூன் 10ல் கொமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழ் போறம் அழைப்பு விடுத்து உள்ளது. இக்கூட்டத்திற்கு முன்னதாக யூன் 9ல் 12 நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் அரச தலைவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம் மாநாட்டிலும் இவ்விருந்து உபசாரத்திலும் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணும் கலந்து கொள்ள உள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனாதிபதியின் லண்டன் வருகைக்கு எதிர்ப்பு

கலைச்செல்வன் நினைவு ஒன்றுகூடல்

கலைச் செல்வனின் 3வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல் யூன் 8ல் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ்வொன்றுகூடலை உயிர்நிழல் சஞ்சிகை ஏற்பாடு செய்து உள்ளது. பாரிஸில் இருந்து நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இலக்கிய சஞ்சிகை இது என்பதும் இது காலஞ்சென்ற கலைச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கலைச்செல்வன் நினைவு ஒன்றுகூடல்

காத்தான்குடியில் ஹர்த்தால்! ஆர்ப்பாட்டம்! - ”எமது கிழக்கை கட்டியெழுப்பவும்” எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

காத்தான் குடியில் நேற்றும் இரண்டாவது நாளாக ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதனால் காத்தான்குடி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், தனியார் காரியாலயங்கள், பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டிருந்தன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காத்தான்குடியில் ஹர்த்தால்! ஆர்ப்பாட்டம்! - ”எமது கிழக்கை கட்டியெழுப்பவும்” எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

இன்று கிழக்கு மாகாணசபை முதலமர்வு - பகிஸ்கரிக்க காத்தான்குடி உலமா சபை வேண்டுகோள்!

கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு இன்று காலை திருகோண மலையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. சபையின் தவிசாளராக தேசிய காங்கிரஸில் தெரிவான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் உதவித் தவிசாளராக கே.எம்.டீ.எச். குணவர்தனாவும் சபை முதல்வராக எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவியும் இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளனர். இன்றைய முதலமர்வு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று கிழக்கு மாகாணசபை முதலமர்வு - பகிஸ்கரிக்க காத்தான்குடி உலமா சபை வேண்டுகோள்!

வாகனத்தில் ‘ஹொர்ன்’ ஒலியெழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையில் எரிபொருள் விலையேற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையுயர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாக நேற்று நண்பகல் 12 மணிக்கு சகல வாகனங்களையும் பாதையில் நிறுத்தி வாகன ‘ஹொர்ன்’ ஒலியெழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை யொன்றினை ஐ.தே.க. மேற்கொண்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு லிப்டான் வலைவில் இவ் எதிர்ப்பார்பாட்டத்தில் கலந்து கொண்டார். ரணிலுடன் ரவூப் ஹக்கீம்ää சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாகனத்தில் ‘ஹொர்ன்’ ஒலியெழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வெள்ள நிலைமை தொடர்ந்தும் படுமோசம்! 21 பேர் மரணம்!

கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்துவரும் அடை மழை காரணமாக தென்பகுதியில் 8மாட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, பதுளை, கம்பஹா ஆகிய மாட்டங்களே வெள்ளத்தால் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெள்ள நிலைமை தொடர்ந்தும் படுமோசம்! 21 பேர் மரணம்!

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு! 18 பேர் காயம்

இன்று காலை 7.10 மணியளவில் தெஹிவளைக்கும் வெள்ளவத்தைக்குமிடையில் அசேல மாவத்தைக்கருகே புகையிரதப் பாதையில் குண்டொன்று வெடித்துள்ளது. காலை 6.35 மணிக்கு பாணதுறையிலிருந்து மருதானை நோக்கி வந்துகொண்டிருந்த அலுவலக புகையிரதத்தை இலக்கு வைத்தே இக்குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இக்குண்டுவெடிப்பில் புகையிரதப் பெட்டியொன்றுக்கு சிறு சேத மேற்பட்டுள்ளதாகவும் புகையிரதப் பாதையின் தண்டவாளமொன்றின்சிறு பகுதி உடைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு! 18 பேர் காயம்

Tuesday, 3 June 2008

வடக்கின் மையத்தின் கீழ், கிழக்கு தெற்கானது| சூரிஜ் நகர கருத்தரங்கின் மையவாதம் : ரவி சுந்தரலிங்கம்

அண்மையில், வைகாசி 18, 2008, எமது முன்னைநாள் ஈரோஸ் தோழர்கள் மிகவும் அரியதான சந்திப்பு ஒன்றினை சுவிஸ் சூரிஜ் நகரத்தில் ஏற்படுத்தியிருந்தார்கள். ஒன்றாக ஓரமைப்பில் இருந்து இலங்கை பூராக வாழும் தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடி இறுதியில் மாற்றியக்கத் தடையால் தமது உயிருக்காகவும் போராடியவர்களில் பலர் இன்று தமது தனிப்பட்ட அடையாளங்களுக்காகப் போரிடுவது போன்ற நிலையில் இக்கூட்டம் எழுந்திருந்தமை ஒருபுறம். பல மாற்றங்கள் குறுகிய காலத்துள் தாயகத்தில் இடம் பெற்றுள்ளமையால் எழுந்துள்ள கேள்விகள் பதில்கள் ஏக்கங்கள் என்பவை இன்னொருபுறம். இவையிரண்டுமே ஒன்றில் மேலொன்றாகிய மனச் சூழ்நிலையில் எதிர்பாராவிதமாக பல அரசியல் தீவிரவாதிகளை சந்திக்கக் கூடியதான சம்பவமாகவும் இச்சந்திப்பு அமைந்தமையால் அரியதொரு வாய்ப்பு என்பதில் உண்மை உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வடக்கின் மையத்தின் கீழ், கிழக்கு தெற்கானது| சூரிஜ் நகர கருத்தரங்கின் மையவாதம் : ரவி சுந்தரலிங்கம்

வட மாகாண முதலமைச்சரும் கலந்து கொள்ளல் வேண்டும்

மே மாதம் 31ஆம் திகதி பதுளையில் நிறைவடைந்த மாகாண முதலமைச்சர்களின் 24வது மகாநாட்டின்போது 12 தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவை பற்றி விபரம் வருமாறு:-

25வது மாகாண முதலமைச்சர்களின் மகாநாடு மட்டக்களப்பில் முதலமைச்சர்களின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடத்தப்படல் வேண்டும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வட மாகாண முதலமைச்சரும் கலந்து கொள்ளல் வேண்டும்

புதிய அரசியல் யாப்பை வரையும் பணிகளில் சர்வகட்சிக்குழு - பேராசிரியர் திஸ்ஸவிதாரண

உடன்படி க்கைகள் மூலமாகவன்றி புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு புதியதொரு அரசியல் யாப்பை வரையும் பணிகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மேற்கொள்ளுமென்று அமைச்சர் விதாரண தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புதிய அரசியல் யாப்பை வரையும் பணிகளில் சர்வகட்சிக்குழு - பேராசிரியர் திஸ்ஸவிதாரண

தொடர்ந்தும் மழை, மரணம் 16, இடப்பெயர்ப்பு 2 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.

இலங் கையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக இழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்றவற்றினால் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். அனர்த்தமுகாமைத்துவ நிலையம் நேற்று (June 2) மாலை வெளியிட்ட தகவல்களின்படி இலங்கையின் 7 மாவட்டங்களிலும் 52,791 குடும்பங்களைச் சேர்ந்த 2,28,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வறிக்கையின் பிரகாரம்
இரத்னபுரி மாவட்டத்தில் 28,468 பேரும்; களுத்துறை மாவட்டத்தில் 60,719 பேரும்; காலி மாவட்டத்தில் 12,386 பேரும்; கம்பஹா மாவட்டத்தில் 75,287 பேரும்; மாத்தறை மாவட்டத்தில் 9,028 பேரும்; நுவரெலியா மாவட்டத்தில் 187 பேரும் பாதிப்படைந்துள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தொடர்ந்தும் மழை, மரணம் 16, இடப்பெயர்ப்பு 2இலட்சத்தையும் தாண்டியுள்ளது.

Monday, 2 June 2008

கிழக்கு மாகாண சபை இன்றைய நிலையும் அதிகாரப் பகிர்வும் : முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்

1970 ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல், 1972ம் ஆண்டில் இலங்கைக் குடியரசுக்கான அரசியல் யாப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வீறு கொண்டு விரிவடைந்த தமிழர் போராட்டம் வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி மாகாணங்களாகக் கருதவில்லை. 2005ம் ஆணடு வரைக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொரு விகிதாசாரத்தினரிடம் கூட இருக்கவில்லை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாண சபை இன்றைய நிலையும் அதிகாரப் பகிர்வும் : முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்

கிழக்கின் அபிவிருத்திற்கு உதவ இந்தியா உறுதி! - ஹிஸ்புல்லாஹ்

இந்தியா உயர் ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அமைசசர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கிழக்கு மாகாண அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் வெளிநாட்டு தூதுவருடன் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த சந்திப்பின்போது கிழக்கின் அபிவிருத்தி மற்றும் இன ஒற்றுமை குறித்து பேசப்பட்டதாகவும் கூறினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கின் அபிவிருத்திற்கு உதவ இந்தியா உறுதி! - ஹிஸ்புல்லாஹ்

ரணில் - மங்கள ஒப்பந்ததுக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சு.க.மக்கள் பிரிவு இணைப்பாளர் மங்கள சமரவீரவுக்குமிடையான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். இது கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நாம் முன்னெடுக்கும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அமைச்சர் ராஜித் சேனாரத்ன தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரணில் - மங்கள ஒப்பந்ததுக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை

வெள்ளப்பெருக்கு மண்சரிவு - 5 பேர் பலி. 90 ஆயிரம் பேர் நிர்கதி.

இலங்கையில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இம்மழையினால் வெள்ளப்பெருக்கு மண்சரிவு போன்றவற்றினால் 90 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். களுத்துறையில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட மண்சரிவால் 2 பெண்கள் பலியானதுடன் இருவரை காணவில்லை. மேலும் காலி மாத்தறை வரக்காப்பொலைபோன்ற பிரதேசங்களிலும் ஒவ்வெருவர் பலியாகியுள்ளனர். காலி அக்குராசையில் பாலித்த எனும் இடத்தில் 14 வயது நிரம்பிய குழந்தையொன்று வெள்ளத்துக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெள்ளப்பெருக்கு மண்சரிவு - 5 பேர் பலி. 90 ஆயிரம் பேர் நிர்கதி.

Sunday, 1 June 2008

பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது! : சாம்பலில் இருந்து 27 ஆண்டுகள் : என் செல்வராஜா

ஈழத் தமிழர்களின் வாழ்வில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். 27 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அறிவியல் மையங்களில் ஒன்றாக நிமிர்ந்து நின்ற யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட அவலம் நடந்தேறிய நாள். யாழ்ப்பாண நூலகத்தோடு சேர்த்து தமிழரின் ஒரேயொரு பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தக சாலை ஆகிய மற்றும் இரு அறிவு மூலங்களும் சேர்த்தே திட்டமிட்டு எரித்து அழிக்கப்பட்டன. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் நள்ளிரவின் பின்னர் இலங்கை அரசின் கைக்கூலிகளான காடையர்களாலும் பாதுகாப்புப் படையினராலும் இந்தப் படுபாதகச்செயல் இருளின் பாதுகாப்புடன் செய்து முடிக்கப்பட்டது. ஈழத் தமிழர்களால் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அறிவுசார் சமூகங்கள் எதனாலும் மன்னித்து ஒதுக்கிவிட முடியாததொரு படுபாதக நிகழ்வு அது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது! : சாம்பலில் இருந்து 27 ஆண்டுகள் : என் செல்வராஜா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றி ஆனந்தசங்கரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய கடிதங்கள்

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு:

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும், நாட்டின் நலன் கருதிய கடமைப்பாடும் எனக்குண்டு....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றி ஆனந்தசங்கரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய கடிதங்கள்

கிழக்கில் இரு மாகாணசபைகள் வேண்டும் - மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா

கிழக்கில் இரு மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டும்” என அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விட்டு உள்ளது. ”கிழக்கிலே வாழும் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் தங்களைத் தாங்களே நிருவகிக்கும் வகையில் அதிகாரப்பகிர்வு ஏற்படுத்துவது பற்றி இனப்பிரச்சினை பற்றி ஆராயும் சர்வகட்சி மகாநாடு முடிவெடுக்க வேண்டும். கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மாகாணசபைகள் உருவாக்கப்படல் வேண்டும். இரண்டு இனங்களிலிருந்தும் இரண்டு முதலமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். ஓரினம் மற்ற இனத்தை ஆளமுற்படும்போதே பிரச்சினைகள் தோற்றம் பெறுவதைக்காண முடிகிறது. மறைந்த தலைவர் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையைத் தொடர்ந்து முன்சென்று கிழக்கிலே முஸ்லிம்களுக்கு நிம்மதியான வாழ்வுக்கு ஒன்றுபட சகல முஸ்லிம்களையும், அரசியல் கட்சிகளையும், நிறுவனங்களையும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அழைக்கிறது.” இவ்வாறு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் இரு மாகாணசபைகள் வேண்டும் - மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா

”நான் முதலமைச்சர் அல்ல மட்டு மண்ணின் மைந்தன்” பிள்ளையான்

“முஸ்லிம்கள் என்மீது சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. சில காலம் எனக்குத் தாருங்கள். நான் முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்யாவிடில் அதன் பிறகு என்னைக் கேளுங்கள்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார். ஏறாவூரில் மே 28ல் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உரையாற்றும்போதே சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”நான் முதலமைச்சர் அல்ல மட்டு மண்ணின் மைந்தன்” பிள்ளையான்

”முஸ்லிம் இளைஞர் ஆயுதம் எந்த நேரிட்டால் அரசம் முஸ்லிம் அமைச்சர்களுமே பொறுப்பு” - ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன்

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுவதாக உள்ளது. அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமும், முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”முஸ்லிம் இளைஞர் ஆயுதம் எந்த நேரிட்டால் அரசம் முஸ்லிம் அமைச்சர்களுமே பொறுப்பு” - ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன்

”நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டுமானால் இனங்களிடையே புரிந்துணர்வு வளர வேண்டும்” பேராசிரியர் காமினி சமரநாயக்க

சாதி, இன, மத மொழி பேதங்களின்றி சகலருக்கும் சேவையாற்றும் ஒரு மகானை எனது தோழனை கௌரவிக்கக் கிடைத்தமையை பெரும் பேறாக நினைக்கின்றேன். தமிழ், சிங்கள உறவுக்கு பாலமாக பேராசிரியர் வை. நந்தகுமார் விள்ஙகுகிறார். இவரை இன்றைய மாணவர்கள் நல்ல உதாரணமாகக் கொள்ள வேண்டும். தாய் நாட்டின் மீது பற்றுள்ள சமாதானத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒரு பேராசான் வை. நந்தகுமார். இவ்வாறு இலங்கை பல்கலைக்கழகம் மானியங்கள் ஆணைக்குழவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டுமானால் இனங்களிடையே புரிந்துணர்வு வளர வேண்டும்” பேராசிரியர் காமினி சமரநாயக்க

மாகாண முதல்வர்களுக்கும் பிள்ளையான் தலைவர்

மாகாண முதலமைச்சர்களின் 24வது மாநாடு பதுளை பசறை யூரி முகாமைத்துவப் பயிற்சி நிலையத்தில் இன்று (மே 31) ஆரம்பமாகியது. அதன் 25வது கூட்டத்தொடருக்கு கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனே தலைமை தாங்க உள்ளார். அதற்கான பொறுப்பு இக்கூட்டத்தொடரில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 24வது கூட்டம் ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித விஜயமுனி சொய்சா தலைமை தாங்கினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாண முதல்வர்களுக்கும் பிள்ளையான் தலைவர்

வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தியதாக ஜேர்மனித் தமிழர்கள் மூவர் கைது

இங்கிலாந்து மற்றும் ஸ்கெண்டிநேவிய நாடுகளுக்கு ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்லும் நடவடிக்கையை நீண்டகாலம் மேற்கொண்டு வந்த இலங்கையர்கள் மூவரை ஜேர்மனியில் வைத்து அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்கள் ஊடாக ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்லும் இந்த மூன்று இலங்கையர்களும் தற்போது ஜெர்மன் நாட்டில் பிரஜா உரிமையைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தியதாக ஜேர்மனித் தமிழர்கள் மூவர் கைது
Newer Posts Older Posts Home