Monday, 31 March 2008

STOP WAR & STOP KILLING - Letter to the President of Sri Lanka

STOP War and killing the media, its journalists and people-signed an urgent petition

To: President of Sri Lanka

Your Excellency the President of Sri Lanka
Presidential Secretariat,
Colombo,
Sri Lanka.

Protest and condemnation � Stop intimidating the media and journalists

We have watched with indignation and despair, the breach of freedom of expression and brutal suppression of the media and journalists under your government. We have read and heard the explanations given by your Media Minister and Defence spokesmen on all such events and incidents, with absolutely no logic to convince us. In fact the picture of a muddied and raped media needs no explanation to the conscious and intelligent citizenry....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
STOP WAR & STOP KILLING - Letter to the President of Sri Lanka

பெணியத்தின் பன்மைத்துவம் - பாலியல் விடுதலைக்கு அப்பால் பெண்ணிய வாதிகளின் போராட்டம் : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

(”21ம் நூற்றாண்டு பெண்ணிய சிந்தனை பற்றி” சபா நாவலன் எழுதிய கட்டுரை தொடர்பாக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தனது கருத்துக்களை இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.)

‘21ம் நூற்றாண்டில் பெண்ணிய சிந்தனை பற்றி’ என்ற கட்டுரையில் கட்டுரையாளர் சபா நாவலன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள், பெண்ணியம் பற்றிப் பேசுபவர்கள், பெண்ணியக் கருத்துக்களை இலக்கியப் படைப்புக்களில் எழுதுபவர்கள், பெண்ணியம் என்றால் என்னவென்று அறிய முயல்பவர்களை குழப்புவதற்காக எழுதப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பெணியத்தின் பன்மைத்துவம் - பாலியல் விடுதலைக்கு அப்பால் பெண்ணிய வாதிகளின் போராட்டம் : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

கிழக்கின் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலும்

கிழக்கில் காலவரையின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் காணி விவகாரம், கிழக்கு மக்களை பொறுத்தவரை, தமது இருப்பு பாதிக்கப்பட்டுவிடுமோ என அஞ்சும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் வேகமான செயற்பாடுகளும் காரணம் எனலாம். அதாவது பல்லாண்டு காலமாக பொத்துவில் முஸ்லிம்களால் விவசாயம் செய்யப்பட்டு வந்த சுமார் 503 ஏக்கர் காணியும் வனவள பரிபாலன சபைக்கு சொந்தமாக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒலுவில், பாலமுனை, அஸ்ரப் நகர் போன்ற பிரதேசங்களிலிருந்து ஆற்றுமண், களிமண் ஏற்றுவதற்கு தீகவாவி, ஆள்சுட்டான்வட்டை ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் வாகன சாரதிகளை பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தாக்குகின்றனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கின் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலும்

படை நகர்வு அரசியல் தீர்வை கொண்டிருந்தால் புலிகளின் இருப்பு நிச்சயமற்றதாகும் - அமைச்சர் டக்ளஸ்

வடக்கில் நடைபெற்றுவரும் படை நகர்வு ஒரு அரசியல் ரீதியான தீர்வினை இலக்காகக் கொண்டு அமையுமானால் எதிர்காலத்தில் வடக்கில் ஜனநாயகத்தன்மை ஏற்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார். தற்போது வடக்கில் இடம்பெற்று வரும் படை நகர்வு தொடர்பாக வினவியபோதே அமைச்சர் இதனைச் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படை நகர்வு அரசியல் தீர்வை கொண்டிருந்தால் புலிகளின் இருப்பு நிச்சயமற்றதாகும் - அமைச்சர் டக்ளஸ்

Sunday, 30 March 2008

கருத்துச் சுதந்திரமும் படைப்பாளிகளின் அரசியலும் : யமுனா ராஜேந்திரன்

சிங்களத் திரைப்பட இயக்குனர் துசரா பிரீஸின் ‘பிரபாகரன்’ எனும் பெயரிலான திரைப்படம், ‘தமிழகத்தில் திரையிடப்படக் கூடாது என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம்; முடிவுசெய்ய வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். துசரா பிரீஸின மீது இரத்தக் காயங்கள் ஏற்படும் அளவு உடல்ரீதியான தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழகக் கலாச்சார அரசியலில் சமீப காலங்களில் நிகழ்ந்த நான்காவது ‘தாக்குதல்’ சம்பவம் இது. ஹெச்.சி.ரகூல் எனும் இடதுசாரி எழுத்தாளர் ‘இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்’ பற்றி எழுதியதற்காக, அவரும், அவரது குழந்தைகள் மற்றும் மனைவி உள்பட அவரது முழுக் குடும்பத்தினரும் உள்ளுர் ஜமாத்தினால் ‘ஊர்விலக்கம்’ செய்யப்பட்டார்கள். எழுத்தாளராக அவரது ஆளுமையினை முடக்க நடத்தப்பட்ட ‘தாக்குதல்’ இது. இதற்கும் முன்பாக நடிகை குஷ்பு, ‘திருமணத்திற்கும் முன்னான உடலுறவின் போதான கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னுணர்வுகள்’ குறித்து எழுதியதற்காக, இப்போது பிரீஸின் மீது ‘தாக்குதல்’ தொடுத்த இதே மருத்துவர் ராமதாஸின் பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புக்கள் குஷ்புவின் கொடும்பாவியை ‘செருப்பாலும் துடைப்பத்தினாலும்’ அடித்தார்கள். நடிகை குஷ்புவின் வீட்டு முன்பாக அவரது பெண்குழந்தைகள் கிலி கொள்ளும் வகையில்; இவர்கள் ‘கலவரத்தில’; ஈடுபட்டார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்துச் சுதந்திரமும் படைப்பாளிகளின் அரசியலும் : யமுனா ராஜேந்திரன்

துசார பீரிஸ் மீதான தாக்குதல் - கருத்துச் சுதந்திரத்தை மீறும் போலி உணர்வுகள் : ரதன் (கனடா)

துசார பீரிஸ் என்ற இயக்குனரது “பிரபாகரன்” (Me Dawasa Mama Prabhakaran) என்ற படம் சித்திரை 5 ம் நாள் திரையிடத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதன் தமிழ் வடிவத்திற்காக சென்னை ஜெமினி லாபில் இயக்குனர் பிரதிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கு சென்ற தமிழ்(?) ஆர்வலர்கள், தீவிரவாதிகள் படத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த பொழுது, இயக்குனர் “படம் தமிழுக்கு எதிரானது அல்ல. பிரகாகரனுக்கும் எதிரானது அல்ல, பாதிக்கப்பட்ட மக்களின் கதையைத்தான் கூறுகின்றதுஇ படத்தை உங்களுக்கு காட்டுகின்றேன் பாருங்கள் “ என்று கூறியுள்ளார். அங்கு சென்றவர்கள் லாப் நிர்வாகத்துடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது, உள்ளே சென்ற சிலர் இயக்குனருடன் தகராறில் ஈடுபட்டு அவருக்கு ஒரு சில அடிகள் அடித்துள்ளார்கள். இவ்வாறு சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
துசார பீரிஸ் மீதான தாக்குதல் - கருத்துச் சுதந்திரத்தை மீறும் போலி உணர்வுகள் : ரதன் (கனடா)

கிழக்கை ஏன் பிரிக்கச் சொன்னோம் அதாவுல்லா புதிய விளக்கம்

கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்தால் இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. அதேபோன்று முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வந்தால் தமிழர்களையும், சிங்களவர்களையும் பகைத்துக்கொண்டு ஆட்சி செய்ய முடியாது. இது யதார்த்தமான நிலையாகும். இந்த நிலை மக்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் கிழக்கைப் பிரிக்கச் சொன்னோம் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கை ஏன் பிரிக்கச் சொன்னோம் அதாவுல்லா புதிய விளக்கம்

Saturday, 29 March 2008

ஒரே தலைகள் ஆனால் தொப்பி மட்டும் வேறு - மற்றுமொரு புதிய அமைப்பு

புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் ஒன்று கூடல் நேற்று (மார்ச் 29) எட்ச்வெயரில் இடம்பெற்றது. ஆர் ஜெயதேவனால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வொன்று கூடலில் பத்துக்கு உட்பட்ட அமைப்புகளில் இருந்து 25 பேர் வரை கலந்து கொண்டனர். இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கு வன்முறையற்ற சமாதான வழியில் தீர்வு காண விரும்புபவர்கள் வரவேற்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கிடையே குறைந்தபட்ச வேலைத் திட்டங்களுக்குள் இணங்கி வேலை செய்வதற்காகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர் ஆர் ஜெயதேவன் தனது அழைப்பில் தெரிவித்து இருந்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஒரே தலைகள் ஆனால் தொப்பி மட்டும் வேறு - மற்றுமொரு புதிய அமைப்பு

நாயைப் போல் எனது வாழ்க்கை - My life as a dog : ரதன் (கனடா)

தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம். ஏனெனில் சமூகக் கொடுப்பணவுகள் அதிகம். இதற்காகவே சேர்ந்து வாழும் குடும்பங்களும் பிரிந்து வாழ்வதாக காட்டிக் கொள்வது இன்று எமது சமூகத்தில் இயல்பு வாழ்வாக மாறிவிட்டது.

பொதுவாக போரின் பின்னால் பல சமூக கொடூரங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். வங்கிக் கொள்ளைகள் போருக்காக என்ற சமாதானத்துடன் தொடங்கி இன்று கிரடிட் காட் வங்கி அட்டைகள் கொள்ளை என்பனவற்றையும் எமது இயல்பு வாழ்விற்கான காரணிகளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். இவற்றிக்கான எதிர் நிலைகளை இது வரை நாம் வெளிப்படுத்தவில்லை. இதன் வெளிப்பாடு எமது அடுத்த சந்ததியையே சென்றடைகின்றது. அவர்கள் தான் இதன் பலாபலன்களை அனுபவிக்கின்றார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நாயைப் போல் எனது வாழ்க்கை - My life as a dog : ரதன் (கனடா)

பிள்ளையானிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமானால் பிரபாகரனிடமிருந்தும் ஆயுதங்களைக் களைய வேண்டும் - அமைச்சர் ஜெயராஜ்

நாட்டில் சட்ட ரீதியான இராணுவம் ஒன்று மட்டுமே இருக்க முடியும். இதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்க, கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் அணியிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமென ஒரு பிரிவினர் வேண்டுகின்றனர். இது நியாயமா? எனவே பிள்ளையான் அணியிடமிருந்து ஆயுதங்களைக் களைய முன்பு பிரபாகரனிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும்’ என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையானிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமானால் பிரபாகரனிடமிருந்தும் ஆயுதங்களைக் களைய வேண்டும் - அமைச்சர் ஜெயராஜ்

பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது

பிரித் தானியாவில் புகலிடம் வழங்கும் அமைப்புமுறை அதன் மனிதத்தன்மையீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அது இத்துறையை சரியாக கையாள்வதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது எனவும் இவ்விடயத்தில் ஒரு வருடகாலமாக ஆய்வுகளை மேற்கொண்ட சுதந்திர புகலிட கொமிஷன் 27-03-08ல் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் நீதிபதி Sir John waite ன் தலைமையில் எல்லை, குடிவரவு அமைப்பு மேலும் தமது அறிக்கையில் புகலிடம் அவசியமானவர்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டும், புகலிடம் தேவையற்றவர்கள் திருப்பி அனுப்பப் படாமலும் உள்ளதாகவும் தெரிவித்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானியவின் தஞ்சம் வழங்கும் செயன்முறை (asylum system) மனிதத் தன்மையற்றது

Friday, 28 March 2008

மாகாணசபைத் தேர்தல் குழப்பமான கூட்டுக்கள்

ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி (ரியுஎல்எப்) சித்தார்த்தன் அவர்களின் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சிறீதரன் (சுகு) அவர்களின் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - பத்மநாபா (ஈபிஆர்எல்எப்) ஆகிய மூன்று தமிழ்க்கட்சிகளும் ‘தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணி” (ரிடிஎன்ஏ) எனும் பெயரில் ஒன்றிணைந்துள்ளனர். மேற்படி தமிழ் ஐனநாயக தேசியக் கூட்டணியினர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாணசபைத் தேர்தல் குழப்பமான கூட்டுக்கள்

நெடுமாறனின் லண்டன் வருகை கேள்விக்குறி

நாளை மார்ச் 29ல் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் பழ நெடுமாறனின் வருகை தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது. ரூற்றிங் முத்துமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் இந்த முத்தமிழ் விழாவிற்கு இம்முறை நெடுமாறன் அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். பிரித்தானியா வருவதற்கான விசா வழங்கப்படாததினாலேயே இவரது வருகையை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக தெரியவருகிறது. இது தொடர்பாக முத்தமாரி அம்மன் ஆலயத்துடன் தொடர்பு கொண்ட போது, ‘இன்னும் விசாக் கிடைக்கவில்லை, வருவாரோ தெரியாது’ எனத் தெரிவித்தனர். ஆயினும் திட்டமிட்டபடி முத்தமிழ் விழா நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நெடுமாறனின் லண்டன் வருகை கேள்விக்குறி

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் பதவி துறப்பேன் - TNA பா உ இமாம்

“முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாக மட்டுமன்றி அரசியல் அனாதைகளாகவும் இருந்தனர். அவர்களுக்கு வழங்கும் கௌரவமாகவே எனக்கு தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காயப்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் உறவுக்குப் பாலமாகவே நான் பதவியேற்றுள்ளேன். எனினும், முஸ்லிம்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டால் - முஸ்லிம்களுக்கு எதிராக கட்சி செயற்பட்டால் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறுவேன்” - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஆர்.எம். இமாம் தெரிவித்தார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் பதவி துறப்பேன் - TNA பா உ இமாம்

Thursday, 27 March 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று (மார்ச் 27) தொடக்கம், ஏற்றுக் கொள்ளப்படவுள்ள நிலையில் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும், சுயேச்சைக் குழுக்கள் ஏப்ரல் 2ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையிலும் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல்

”தனி நாடு உருவாவதற்கு இந்தியா அனுமதிக்காது” பிரதமர் விக்கிரமநாயக்க

இலங் கைத் தமிழர்களுக்கென தனியான நாடொன்று உருவாவதற்கு இந்தியா ஒரு போதும் அனுமதிக்கா’தென தற்போது இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஜெரூஸலத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு என தனிநாடொன்று அமைவது இந்தியாவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் புதுடில்லி அதற்கு அனுமதிக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு குறித்து இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர், விடுதலைப் புலிகளின் தலைவர் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தமிழர் தாயகமொன்றை உருவாக்க முயல்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”தனி நாடு உருவாவதற்கு இந்தியா அனுமதிக்காது” பிரதமர் விக்கிரமநாயக்க

Wednesday, 26 March 2008

இலங்கை இனப்பிரச்சினையில் தென்ஆபிரிக்காவின் பாத்திரம் என்ன - துணை அமைச்சர் ஆர் எல் பட்டயாச்சி உடன் நேர்காணல் : த ஜெயபாலன்

உலக சமாதான ஆதரவுக் குழு (Global Peace Support Group) என்ற அமைப்பு கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் மார்ச் 22 - 23ம் திகதிகளில் இலங்கையின் இனப்பிரச்சினை என்ற இருநாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தது. (இது தொடர்பான தொகுப்பை அருகில் உள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம்.) அதில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார், தென்ஆபிரிக்க தொடர்பாடல்துறை துணை அமைச்சர் ஆர் எல் பட்டயாச்சி. கருத்தரங்கிற்கு மறுநாள் துணை அமைச்சரை அவர் தங்கியிருந்த கனறிவோர்ப் பிரிட்டானிய இன்ரநசனல் ஹொட்டலில் சந்தித்து ஒரு நேர்காணலை தேசம்நெற் மேற்கொண்டது.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை இனப்பிரச்சினையில் தென்ஆபிரிக்காவின் பாத்திரம் என்ன - துணை அமைச்சர் ஆர் எல் பட்டயாச்சி உடன் நேர்காணல் : த ஜெயபாலன்

அரசு பிள்ளையானுடன் சேர்ந்து கும்மாளமடிக்கிறது - பா உ சஜித் பிரேமதாஸ

நாடு பிளவுபடுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அதேவேளை யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களை உயிருடன் புதைகுழிக்குள் தள்ளும் அரசின் நடவடிக்கைக்கும் நாம் இடம்தரப் போவதில்லை. புலிகளைப் பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் அரசு பிள்ளையானுடன் சேர்ந்து கும்மாளமடிக்கிறது. இவ்வாறு மார்ச் 22 மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சிக்கிளைகளின் சம்மேளனக் கூட்டத்தில் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். விடுதலைப ;புலிகளால் கொலை செய்யப்பட்டவர் எனக் கருதப்படும் முன்னால் ஜனாதிபதி பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ என்பது குறிப்பிடத்தக்கது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசு பிள்ளையானுடன் சேர்ந்து கும்மாளமடிக்கிறது - பா உ சஜித் பிரேமதாஸ

Tuesday, 25 March 2008

அரசு - புலிகள் யுத்தத்தில் இலங்கை அரசைப் பலப்படுத்துகிறது இந்தியா

பெப்ர வரியில் மட்டும் அரசு 90 பாதுகாப்புப் பிரிவினரை பலிகொடுத்துவிட்டது. இந்நிலையில் வன்னி நோக்கி தரைமூலம் நகர்வதும், கைப்பற்றுவதும் லேசான விசயமாக இல்லை என்பதை அரசுக்கும், பாதுகாப்புப் பிரிவினர் உணர்த்தி இருப்பதாக தெரிகிறது. பொறி வெடிகள், மிதி வெடிகள், மற்றும் சினிப்பர்கள் மூலம் பாரிய இழப்புக்களை இராணுவம் அடைகிறது.

கிழக்கின் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பரபரப்பில் ஏனைய பகுதிகளில் சண்டை ஓரளவுக்கு தணிந்து காணப்பட்டது. மன்னார், வவுனியர், வெலிஒயா முன்னரங்குகளில் சண்டையில் தீவிரம் குறைந்துவிட்டிருக்கிறது. புளியங்குளத்தில் மட்டும் பெரிய அளவிலானதொரு சமர் இடம்பெற்றுள்ளது.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசு - புலிகள் யுத்தத்தில் இலங்கை அரசைப் பலப்படுத்துகிறது இந்தியா

எவ்வாறான யுத்த நிறுத்தத்திற்கும் தயார் - அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ரிஎன்ஏ க்கு கூறியுள்ளார்

மார்ச் 6ல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிருட்டினன் சிவநேசனின் இறுதிச் சடங்குகள் மார்ச் 09ல் மல்லாவியில் இடம்பெற்றது. அதில் எல்.ரி.ரி.ஈ.யின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பல சிரேஸ்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்குகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரபாகரன் சந்தித்து உரையாடி உள்ளார். 15 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்ததாகச் தெரியவரும் இச்சந்திப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சந்திப்பின் முடிவில் மறுநாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனை சந்திக்கும்படி பிரபாகரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவுறுத்தி உள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எவ்வாறான யுத்த நிறுத்தத்திற்கும் தயார் - அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ரிஎன்ஏ க்கு கூறியுள்ளார்

பிரித்தானிய எம்.பி.கள் குழு இலங்கை விஜயம்

இலங் கையின் தற்போதைய நிலைமை குறித்து நேரில் கண்டறிவதற்காக பிரித்தானிய எம்.பி.கள் குழு இவ்வாரம் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ரு லவ் தலைமையிலேயே இக்குழு செல்ல உள்ளதாக அறியவருகின்றது. இக்குழு ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாகவும், அதேநேரம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இக்குழுவினரை நேரில் சென்று இலங்கையைப் பார்வையிடுமாறு இலங்கைத் தூதரகமே கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் தெரியவருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய எம்.பி.கள் குழு இலங்கை விஜயம்

Monday, 24 March 2008

இலங்கையும் சர்வதேசமும் : சிறிஹீன்பெல்ல

அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபட் ஓ. பிளெக் மற்றும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாகம ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது அமெரிக்காவின் முதலாம் இலக்க எதிரியாகக் கருதப்படும் ஈரானிய ஜனாதிபதி அஹ்மட் நெஜாட்டின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முன்வந்திருக்கும் வேளையில், அமெரிக்கா இலங்கை குறித்து கடைபிடிக்க இருக்கும் வழிமுறைகள் பற்றியே இப் பேச்சுவார்த்தைகள் அமைந்தது. ரொபட் ஓ பிளெக் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரிடம் வலியுறுத்திக் கூறியது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு இலங்கையின் பயங்கரவாதத்தை ஒழிப்பதே என்று. அதேநேரம் இலங்கை அரசு மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட அறிக்கையும் இங்கு கலந்தாலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையும் சர்வதேசமும் : சிறிஹீன்பெல்ல

சர்வ கட்சிக்குழு பிரிட்டன் வருகிறார்கள்

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த வாரமளவில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு பிரிட்டனுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வொன்றைக் காண்பதற்காக புதிய அரசியல் யாப்பொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சர்வ கட்சிக்குழு பிரிட்டன் வருகிறார்கள்

யாழ். - கிளிநொச்சி முஸ்லீம்களுக்கு புதிய கட்சி

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முகமாக புதியதோர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான புதிய கட்சி பிரகடன மாநாடு; புத்தளம் மர்ஹ{ம் பிஸ்ருல்ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படடு உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் இணைச் செயலாளர்களான எஸ்.எச்.எம். சல்மான் மற்றும் ஆர். ஜெனூஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ். - கிளிநொச்சி முஸ்லீம்களுக்கு புதிய கட்சி

Sunday, 23 March 2008

பின்நவீனத்துவம் முதல் ‘பின்நவீனத்துவம் மீதான மார்க்சிய விமர்சனம்’ வரை : யமுனா ராஜேந்திரன்

முக்கியமில்லாத வகையிலான ஒரு முன்குறிப்பு : “தத்துவ விளக்கும் ‘இல்லாததால்’ தான் ‘அவர்கள்’ கோபத்துடன் எழுதுகிறார்கள்” எனச் சொல்லும் சி ராஜேஸ்குமார் என்கிற ராகவனுக்கான ‘சிறப்பு’ அழைப்பு இது.

நான் பேசுகிற விடயங்கள் குறித்து அவரது ‘தத்துவ விளக்கத்தினை’ முன் வைக்குமாறு நான் அவரை, ‘கோபத்துடன்’ அல்ல ‘பணிவுடன்’ கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்சியம் - பெண்ணிலைவாதம் - தலித்தியம் என்றெல்லாம் தத்துவப் பின்னணியுடன் பேசப் புறப்பட்டிருக்கும் எனது அன்புக்கும் ‘ப்ரியத்திற்கும்’ உரிய நிர்மலா ராஜசிங்கத்தையும் இவ்விவாதத்தில் பங்கேற்குமாறு ‘பிரியத்துடன்’ அழைக்கிறேன்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பின்நவீனத்துவம் முதல் ‘பின்நவீனத்துவம் மீதான மார்க்சிய விமர்சனம்’ வரை : யமுனா ராஜேந்திரன்

கருத்தரங்கில் இருந்து ஜெயதேவனும் சகாக்களும் வெளியேற்றப்பட்னர் : த ஜெயபாலன்

மாரச் 22ல் இலங்கையின் இனப் பிரச்சினை என்ற தலைப்பில் Peace Support Group ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ஆர் ஜெயதேவனும் அவரது சகாக்களும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாமல் வெளியெற்றப்பட்டனர். இக்கருத்தரங்கு ஆரம்பிக்கு முன் தமிழ் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆர் ஜெயதேவன், விவேகானந்தன், நேசன் சங்கர்ராஜி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் வந்து கையெழுத்து வைத்து மண்டபத்திற்கு செல்ல முற்பட்ட போது மு சிவராஜாவால் தடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர்களும் அவர்களை மண்டபத்தினுள் செல்லவிடாமல் தடுத்து வெளியேற்றினர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்தரங்கில் இருந்து ஜெயதேவனும் சகாக்களும் வெளியேற்றப்பட்னர் : த ஜெயபாலன்

Saturday, 22 March 2008

தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தில் எழுப்ப முயற்சி - Global Peace Support Group ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தென்ஆபிரிக்க பிரதிநிதி Sisa James Nijikelana

தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தில் எழுப்ப தென்ஆபிரிக்கா முயற்சி செய்வதாக, Global Peace Support Group ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தென்ஆபிரிக்க பிரதிநிதி Sisa James Nijikelana தெரிவித்தார். இலங்கையில் இன முரண்பாடுகள் என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கு கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இன்று மார்ச் 22ல் ஆரம்பமாகி நாளையும் நடைபெற உள்ளது. தென்னாபிரிக்கா, மலேசியா, இந்தியா, அமெரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்புப் பேச்சாளர்கள் இதில் பங்கேற்றனர். Peace Support Group என்ற கிழக்கு லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பினரே இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வை ஆரம்பித்து வைத்த Peace Support Group இன் தலைவர் கெ குணபாலசிங்கம் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதே தங்கள் நோக்கம் எனத் தெரிவித்தார். இக்கருத்தரங்கிற்கும் எதிர்கால செயற்பாட்டிற்கும் முன்னோடியாக குணபாலசிங்கம் தென்னாபிரிக்கா சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து திரும்பி உள்ளார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தில் எழுப்ப முயற்சி - Global Peace Support Group ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தென்ஆபிரிக்க பிரதிநிதி Sisa James Nijikelana : த ஜெயபாலன்

விசேட அதிரடிப்படையின் ஒரு பகுதியினரே மாற்றம். ரிஎம்விபி இன் அழுத்தம் காரணமல்ல - பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா

கிழக்கு மாகாணத்திலிருந்து விசேட அதிரடிப்படையின் ஒரு பகுதியினரே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. களநிலை மற்றும் சேவை முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படியான மாற்றம் செய்யப்படுவது வழக்கமாகுமெனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
விசேட அதிரடிப்படையின் ஒரு பகுதியினரே மாற்றம். ரிஎம்விபி இன் அழுத்தம் காரணமல்ல - பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா

Friday, 21 March 2008

பிரிட்டனின் வரவு செலவுத்திட்டம் - ஒரு பார்வை

பிரிட்டனின் நிதித்துறைத் தலைவர் அலிஸ்ரர் டாலிங் தனது முதலாவது வரவுசெலவுத்திட்டத்தை 12 மார்ச் 08 புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அமரிக்க பொருளாதார வளர்ச்சி மந்த நிலையடையத் தொடங்கி அதன் அதிர்வலைகள் சர்வதேசரீதியில் பரவத் தொடங்கும் இவ்வேளையில், பிரித்தானியாவில் 25 மில்லியன சிறுவர் நிதிஉதவி பெறுவோரின் விபரங்கள் தொலைக்கப்பட்டமை, பொதுநிதியத்தில் £8பில்லியன் துண்டுவிழுந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளமை, நொதேர்ன் றொக் பிரச்சனை என்பவற்றின் பின்னணியில் தமது வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ள அவர் வறிய குடும்பங்கள், வயோதிபருக்கு உதவுவதும், வர்த்தகத்துறையினருக்கு கைகொடுப்பதும் தமது நோக்கம் என்று தெரிவுத்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிட்டனின் வரவு செலவுத்திட்டம் - ஒரு பார்வை

புலிக்கும் புல் பசிக்கிறது.... : சபா நாவலன்

விமானப் பணிப்பெண்ணிடம் முலைப்பால் கேட்ட ஞான சம்பபந்தப் பெண்ணிலை வாதிகளதும், கூட்டுக்கலவி என்ற குறளிக்கூத்திற்கும் எதிரான பெண்ணியம் தொடர்பான எனது கருத்துக்களை முதலாளித்துவ மேட்டுக்குடிப் பெண்ணியத்துடன் ஒப்பு நோக்கில் முன்வைத்தபோதும், முலைப்பால் சமாச்சாரம் பற்றியோ கூட்டுக்கலவி பற்றியோ மூச்சுக்கூட விடமல் ஆத்திர உணர்வோடு என்மீது கொட்டித்தீர்த்த்ருகிறீர்கள். காதல் கொண்டாலும் நான் முலைப்பால் கேட்கும் அளவிற்கு ஆணாதிக்கக் கருத்தமைப்பைக் கொண்டிருப்பவனல்ல. சரி போகட்டும் 13 வயதுப் பெண்ணுடன் பாலுறவு கொண்டதாக ஒரு காமுகனின் நச்சுப் பேனாக்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சுழலில் பெண்ணியத்தின் பிறழ்வுகள் பற்றிப் பேசிய எனது கட்டுரைக்கு அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அடிபோட்டிருக்கிறீர்கள். இந்த வக்கிரங்களையெல்லாம், ஆணாதிக்க அசிங்கங்களை எல்லாம்விட எனது குட்டிக் கட்டுரை உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டிருபது, நிர்மலா, உங்கள் சமூக உணர்வு மீதும், நீங்கள் பேசும் பெண்ணியம் மீதும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது....

தொடர்ந்து படிக்க இங்கே அழுத்தவும்

கிழக்கில் அதிரடிப்படையினரின் முகாம்கள் இடமாற்றம் - ரிஎம்விபி வற்புறுத்தல்

கிழக்கு மாகாணத்தில் தற்போது கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (எஸ்.டி.எப்) முகாம்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக வாபஸ் பெறப்பட்டு வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்படுமென தெரிய வருகின்றது. இந்த அடிப்படையில் தற்போது அக்கறைப்பற்று, திருக்கோவில், பக்மிடியாவ, முவாம்கடே, கனகநாயகப்புரம் ஆகிய இடங்களில் கடமையில் ஈடுபட்டு வந்த விசேட அதிரடிப்படை முகாம்கள் வாபஸ் பெறப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று (மார்ச் 20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் அதிரடிப்படையினரின் முகாம்கள் இடமாற்றம் - ரிஎம்விபி வற்புறுத்தல்

கே. டானியல் நினைவுகள்: டானியல் பாதையும் தலித்தியப் பார்வையும் : வி. ரி. இளங்கோவன்

ஈழத் தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து, வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து, கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து, அவர்களைச் சக மனிதர்களுடன் சமானமாக நிலைநிறுத்துவதற்குத் தன் உடல், பொருள், ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றி மறைந்தவர் தோழர் கே. டானியல்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கே. டானியல் நினைவுகள்: டானியல் பாதையும் தலித்தியப் பார்வையும் : வி. ரி. இளங்கோவன்

Thursday, 20 March 2008

மட்டு மாநகரசபையின் முதல் பெண் மேயர் சிவகீதா பத்மினி பிரபாகரன் - நேர்காணல்

..... யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வை ஒளிமயமாக்க வேண்டும். அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்காக கைத்தொழில் சாலைகளை அமைக்க வேண்டும். கைத்தொழில் சாலைகளை அமைப்பதனூடாக நகரம் அபிவிருத்தியடையும். இது மாத்திமல்ல நகர மக்களுக்கு என்னாலான உயரிய சேவைகளை வழங்குவேன். அதேபோல பிரதேசமட்ட அபிவிருத்தியிலும் கூடிய கவனம் செலுத்துவேன்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மட்டு மாநகரசபையின் முதல் பெண் மேயர் சிவகீதா பத்மினி பிரபாகரன் - நேர்காணல்

கிழக்கில் மாகாண சபையுடன், வடக்கில் இடைக்கால நிர்வாகம்

கிழக்கு மாகாணத்தில் மே மாதம் 10ஆந் திகதி மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றதன் பின்பு கிழக்கு மாகாண நிர்வாக அலகாக மாகாண சபை அமைக்கப்படும் அதேநேரத்தில் வடக்கில் நிர்வாக அலகாக இடைக்கால ஆலோசனை சபையொன்றை அமைப்பதற்கும் அரசு திட்டமிட்டு உள்ளதாக அறிய முடிகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் மாகாண சபையுடன், வடக்கில் இடைக்கால நிர்வாகம்

”மலையக சமூகம் தோட்டங்களை நம்பி இனிமேலும் வாழக்கூடாது” - பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

''எமது மலையக சமூகம் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலங்களில் தேயிலை தோட்டங்களையும் நம்பி வாழ முடியாது. எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இன்று எமக்கு கோடிக்கணக்கான பணத்தை கல்வி முதல் உட்கட்டமைப்பு வசதிகளுக்கென ஒதுக்க முடிகிறது. இதன் ஊடாக இன்று எமது மலையக சமூகம் ஏனைய பிரதேச மக்களுக்கு சமமாக முன்னேறியுள்ளனர்” என தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சரும், இ.தொ.கா. தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மலையக சமூகம் தோட்டங்களை நம்பி இனிமேலும் வாழக்கூடாது” - பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் : ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் (10-03-2008) நீதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாநகரசபை மற்றும் 8 நகரசபைகளையும் ரி.எம்.வி.பி. கைப்பற்றியதின் ஊடாக புதியதொரு அரசியல் எழுச்சியையும் கிழக்குமாகாண மக்கள் தோற்றுவித்துள்ளார்கள். கடந்துவந்த 30 ஆண்டுகாலங்களில் நடந்துமுடிந்த எல்லாத் தேர்தல்களையும்விட ஜனநாயக மீட்சிக்கான போராட்டப் பாதையில் இத்தேர்தலானது பாரிய திருப்பு முனையொன்றையும் ஏற்படுத்திச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் : ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

Wednesday, 19 March 2008

பாரிஸ் உளுராட்சித் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளில் நின்ற 7 இல. தமிழர்கள் வெற்றி

பிரான்ஸில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளுர் தேர்தலில் 12 தமிழர்கள் தெரிவாகி உள்ளனர். இதில் 7 பேர் இலங்கைத் தமிழர். 3 பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள். இவர்கள் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். பிரான்ஸில் சுமார் 125 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் இலங்கைத் தமிழர்களாவர். பிரான்ஸின் உள்ளுராட்சி தேர்தலில் 14 இலங்கைத் தமிழர்கள் போட்டியிட்டனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாரிஸ் உளுராட்சித் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளில் நின்ற 7 இல. தமிழர்கள் வெற்றி

யாழிருந்து பேர்ண் வரை பரவியுள்ள சாதியத் திமிர் - ஐவர் மருத்துவமனையில்

சுவிஸ் பேர்ன் நகரில் தமிழ் இளையவர்களின் காதல் பிரச்சினையொன்று வன்முறையில் முடிந்துள்ளது. மார்ச் 15ல் பேர்ண் நகரில் இடம்பெற்ற வன்முறைக்கு சாதிய முரண்பாடே காரணம் என்கிறார் விடுதலைப் புலிகளின் சுவிஸ் முக்கியஸ்தரான அன்ரன் பொன்ராஜா. யாழ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரும் அதே இடத்தைச் சேர்ந்த ஒடுக்கும் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இக்காதலை இளைஞரின் குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும் அதன் தொடர்ச்சியாக இவ்விளைஞரின் தந்தை, யுவதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் வைபவத்தில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழிருந்து பேர்ண் வரை பரவியுள்ள சாதியத் திமிர் - ஐவர் மருத்துவமனையில்

ரகுவரன் - கலைஞனின் மரணம் : யமுனா ராஜேந்திரன்

ரகுவரனை எனக்கு நிரம்பவும் பிடிக்கும். அதற்கான காரணங்களில் ஒன்று, நான் படித்த கல்லூரியின் முன்னால் மாணவர் அவர் என்பதாலோ அல்லது நான் சார்ந்த நகரத்தின் ஒரு வசீகரமான இளைஞன் அவர் என்பதாலோ அல்ல, மாறாக, தமிழ் சினிமாவில் அபூர்வமாகவே காணக் கிடைக்கிற அபூர்வமான ஒரு கலைஞன் ரகுவரன் என்பதுதான் பிரதான காரணம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரகுவரன் - கலைஞனின் மரணம் : யமுனா ராஜேந்திரன்

கொழும்பில், பிரித்தானிய வங்கி வாடிக்கையாளர்களின் கோடிக் கணக்கான பணம் மோசடி

பிரித்தானியாவில் இருக்கும் சில தமிழ் இளைஞர்களுடாக பிரித்தானிய வங்கி வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. கிரடிட் கார்ட் அட்டை மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளின் இரகசிய குறியீட்டெண்ணை பெற்றுக் கொண்டு தயாரிக்கப்பட்ட போலி கிரடிட் அட்டைகளைப் பயன்படுத்தியே இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒரு கோடிஸ்வர வியாபாரியும் மேலும் 6 பேரைரும் இரகசிய பொலிஸாரால் நேற்று முன்தினம் (17.03.2008) வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களிடம் இருந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட கிரடிட் கார்ட் அட்டைகள் 200 அளவில் கைப்பற்றப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்தேக நபர் புலிகள் அமைப்பின் பிரதானிகளில் ஒருவரென இரகசிய பொலிஸார் சந்தேகம் கொண்டு உள்ளனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பில், பிரித்தானிய வங்கி வாடிக்கையாளர்களின் கோடிக் கணக்கான பணம் மோசடி

Tuesday, 18 March 2008

ஆதர் சி கிளார்க் காலமானார்

பல்வேறு வானியல் எதிர்வு கூறல்களை தனது எழுத்துக்களில் பதிவு செய்த ஆதர் சி கிளார்க் இன்று காலமானார். ஒரு விவசாயியினுடைய மகனாகப் இங்கிலாந்தின் சமர்செற் பிரதேசத்தில் பிறந்த இவர் தனது திருமண முறிவுக்குப் பின் 1956ல் இலங்கைக்கு புலம்பெயர்ந்தார். 90வது வயதில் மரணிக்கும் வரை அவர் இலங்கையிலேயே வாழ்ந்தார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆதர் சி கிளார்க் காலமானார்

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது! : நிர்மலா ராஜசிங்கம்

21ம் நூற்றாண்டு பெண்ணியச் சிந்தனை எனும் தலைப்பில் நாவலன் ஒரு மிகுந்த அபத்தமான கட்டுரை ஒன்றைத் தேசம் இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாக மட்டுமன்றி சில அடிப்படை விடயங்ளையும் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. நாவலனது கட்டுரையில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அரிதெனினும் கட்டுரையில் அவரின் தீராத பெண்ணிய வெறுப்பும் பெண் வெறுப்பும் (misogyny) மேலோங்கி உள்ளதாலும் அது தமிழ் பெண்ணிய வாதிகளைப் பற்றிய அவதூறான கருத்துகளை பரப்ப முயலுகின்றதாலும் கோட்பாட்டு ரீதியாகவும் தரவு ரீதியாகவும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முயலுவதினாலும் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

பாலியல் சீரழிவு கலாச்சாரத்திற்கே மேற்கத்திய பெண்ணியவாதம் தூபமிடுவதாகவும் பெண்களைப் பாலியல் இயந்திரங்களாக மாற்றும் முதலாளித்துவ தந்திரத்திற்குப் பெண்ணியவாதம் துணை போவதாகவும் திட்டி தீர்த்திருக்கிறார் நாவலன். பென்ணியவாதத்தின் மேலுள்ள காழ்ப்புணர்வால் இவர் அடிப்படையான இரண்டு முக்கிய விடயங்களைத் தந்திரமாகத் தவிர்த்துத் தனது திட்டலை முடித்திருக்கிறார்.......

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது! : நிர்மலா ராஜசிங்கம்

பத்திரிகையாளர் வெ.யசிகரன் கைது : உதவியின் பத்திரிகை அறிக்கை

06.03.2008 இல் ஈக்குவாலிற்றி பதிப்பக உரிமையாளரும், பத்திரிகையாளரமான வெ.யசிகரன் கொழும்பில் கைது செய்யப்பட்டார். கூடவே, அவரது வாழ்க்கைத் துணை வளர்மதியும் கைது செய்யப்பட்டார். இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், இவர்களைத் தொடர்ந்து, அதே வாரத்தில், பிற 4 பத்திரிகையாளர்களும் கைதானார்கள். யசிகரன் உதவியின் (http://www.uthawi.net/) தொடர்பாளராகக் கடமையாற்றியவர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பத்திரிகையாளர் வெ.யசிகரன் கைது : உதவியின் பத்திரிகை அறிக்கை

பிள்ளையான் அணி இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர்

மக்களின் விடிவுக்காக எம்மை அர்ப்பணிப்போம் - பிள்ளையான் அறிக்கை:
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலையடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவர் பிள்ளையான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன: ‘கிழக்கு மக்கள் தமக்காக ஒரே அரசியல் தலைமைத்துவமாக எம்மைத் தெரிவு செய்தமைக்கு முதலில் எம் மக்களுக்கு சிரம் தாழ்த்திய எம் நன்றிகள் உரித்தாகட்டும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையான் அணி இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர்

Monday, 17 March 2008

இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் - வாழ்க்கைச் செலவு : PCI ஆய்வு

நவம்பர் 2007ல் நடத்தப்பட்ட PCI ஆய்வின் முக்கிய பிரதிபலிப்புகளை இங்கு காணலாம். இலங்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு இருந்தது. இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் வாழ்க்கைச் செலவு தொடர்பாக இலங்கை மக்கள் என்ன அபிப்பிராயத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. இலங்கை மக்களின் இம்முடிவுகள் தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.

தற்போது நாடு இனநெருக்கடியில் சிக்கியுள்ளது எனச் சிலரும், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தச் சூழலில் ஈடுபட்டுள்ளதாகச் சிலரும் கூறுகிறார்கள். இந்தச் சூழலை எவ்வாறு வர்ணிக்க முடியும்:

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் - வாழ்க்கைச் செலவு : PCI ஆய்வு

ஆவண காப்பகம் அமைக்க ஆலயங்களும் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வேண்டுகோள் : தொகுப்பு ச முருகையா

நன்றே செய்க அதை இன்றே செய்க அதனையும் முதலில் செய்க. இந்தக் கூற்றுக்கு சாலப் பொருத்தமான நிகழ்வாக 15.03.2008 மாலை Brent நகர மண்டபத்தில் முன்னாள் பேராசிரியர் பாலசுகுமாரின் தலைமையில் நிகழ்ந்த திரு என் செல்வராஜாவின் நூல்த்தேட்டம் தொகுதி 4ன் அறிமுகமும் மலேசிய – சிங்கப்பூர் நூல் தேட்டம் 1 இன் வெளியீடும் மற்றும் இளவயதினரான ஆசிரியர் நவீன் பிரதம ஆசிரியராக இருந்து வெளிக்கொணரும் மலேசிய வல்லினம் தமிழ் இலக்கிய சஞ்சிகையின் அறிமுகமும் ஒரு நேரத்தில் நிழ்ந்துள்ளது. அது மட்டுமன்றி தமிழில் முதன் முதலில் ஈழத் தமிழருக்கான அவர்களின் அறிவுப் பொக்கிசமான 5000 தமிழ் நூல்களை 2002 ஜூன் 01 முதல் இன்று வரை அடிக்குறிப்புடன் விபரமாக பட்டியலிட்டு அதை ஓர் தனி மனித முயற்சியாக செய்து முடித்திருக்கிறார் நூலகர் என் செல்வராஜா. இதனை இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு கருத்துப் பிரிவு சார்ந்த அறிஞர்களின் ஒருமித்ததான கருத்து வெளிப்பாட்டில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆவண காப்பகம் அமைக்க ஆலயங்களும் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வேண்டுகோள் : தொகுப்பு ச முருகையா

குவைத்தில் உள்ள 110,000 இலங்கைப் பணிப்பெண்களுக்கு சிறு நிம்மதி

இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்கு பணிப் பெண்களாகத் தொழில் புரியச் செல்வோரின் நலன் பேணும் முகமாகவும், அங்கு பல்வேறு காரணங்களின் நிமித்தம் நிர்க்கதிக்கு ஆளாவோருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்து அவர்களை துரிதமாக தாய் நாட்டுக்கு அனுப்பி வைப்பதிலும் குவைத் நாட்டுக்கான இலங்கையின் தூதுவர் எஸ்.ஏ.சீ.எம். சுஹைல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
குவைத்தில் உள்ள 110,000 இலங்கைப் பணிப்பெண்களுக்கு சிறு நிம்மதி

இலங்கைப் பிரதமரின் இஸ்ரேல் விஜயமும், சிறுபான்மையினரின் ஐயமும் : வி அருட்சல்வன்

பலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக இலங்கை மக்கள் நீண்ட காலமாக ஆதரவு வழங்கி வருகின்றனர். கடந்த கால கட்டத்தில் பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக இலங்கை இஸ்ரேலுடனான ராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டது. மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜனாதிபதி ஆர் பிரேமதாஸ ஆகியோர் இஸ்ரேலுடனான ராஜதந்திரத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டனர். இந்தநிலை மாறி இஸ்ரேலுடனான ராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைப் பிரதமரின் இஸ்ரேல் விஜயமும், சிறுபான்மையினரின் ஐயமும் : வி அருட்சல்வன்

Sunday, 16 March 2008

சிவனேசன் கொலைக்கு புலிகளே முழுப் பொறுப்பு - வீ. ஆனந்தசங்கரி அறிக்கை

யாழ். தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவனேசன், அவரது கார் சாரதி மகேஸ்வரராசா ஆகியோரின் மிருகத்தனமான கொலையை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவர்களின் மனைவி மக்களுக்கும், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மரணம் எனது ஜென்ம விரோதிக்கும் ஏற்படக் கூடாதென பிரார்த்திப்பவன் நான். வன்முறை மரணங்களை நான் எப்போதும் கண்டித்து வந்துள்ளேன். இத்தகைய கொலைகளுக்கு நான் மறைமுக ஆதரவு வழங்குவதுமில்லை. மகிழ்ச்சியடைவதுமில்லை என த.வி.கூ.. தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சிவனேசன் கொலைக்கு புலிகளே முழுப் பொறுப்பு - வீ. ஆனந்தசங்கரி அறிக்கை

கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சராவதை முஸ்லிம் காங்கிரஸ் தடுத்துள்ளது - சேகு இஸ்ஸதீன்

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லீம் முதலமைச்சர் ஆவதை முஸ்லீம் காங்கிரஸ் தடுத்து உள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார். அரசாங்கத்தில் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் இருக்க முடியாமல் போனதற்கு கிழக்கு முஸ்லிம்களை அரசியல் பலிக்கடாக்களாக்கும் நோக்கமே காரணம் என்று நேற்று மார்ச் 15 காலை அம்பாறை சுற்றுலா விடுதியில் தம்மை சந்தித்த தென் கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் இயக்க அமைப்பாளர்கள், பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்து உள்ளார். தாங்கள் தொடர்ந்தும் அரசுடன் சேர்ந்து அமைச்சராக இருப்பதை நியாயப்படுத்தும் வகையில் உரையாற்றிய அவர் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியதற்கு இப்படியொரு குற்றச்சாட்டை அவர்கள் மீது சுமத்தியுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சராவதை முஸ்லிம் காங்கிரஸ் தடுத்துள்ளது - சேகு இஸ்ஸதீன்

5,419 சிங்கள ஊழியர்களுக்கு தமிழ் மொழிப்பரீட்சை

அரச ஊழியர்களுக்கான மொழித் தேர்ச்சி பரீட்சையொன்று முதன்முறையாக நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. அரச கரும மொழிகள் திணைக்களத்தால் மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த அரச ஊழியர்கள் தோற்றியதாக அரசியலமைப்பு விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
5,419 சிங்கள ஊழியர்களுக்கு தமிழ் மொழிப்பரீட்சை

Friday, 14 March 2008

இரு மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட நாம் அதேநேரத்தில் மீள் குடியேறவும் தயார்! - அமைச்சர் ரிசாத் பதியுதீன்

“வடக்கிலிருந்து முஸ்லிம்களாகிய நாம் இரண்டு மணிநேரகால அவகாசத்தில் வெளியேற்றப்பட்டோம். அதேபோன்று இதே இரு மணிநேர அவகாசத்தினுள் நாம் எமது தாயக மண்ணில் மீள் குடியேறவும் தயாராகவுள்ளோம்…..!” இவ்வாறு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் விடத்தல்தீவைச் சேர்ந்த எம்.ஏ.அப்துல் மஜீத் எழுதிய ‘விடத்தல்தீவு முஸ்லிம்களின் வரலாற்றுப் பண்பாடும்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இரு மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட நாம் அதேநேரத்தில் மீள் குடியேறவும் தயார்! - அமைச்சர் ரிசாத் பதியுதீன்

”வடக்கு-கிழக்கு என உச்சரிக்கப்பட்ட இம்மாகாணங்கள் பிரிக்கப்பட்டது’ ஜனாதிபதி புளாங்கிதம்

”கிழக்கு என்று சொல்லாமல் வடக்கு-கிழக்கு என உச்சரிக்கப்பட்ட இம் மாகாணங்கள் இன்று பிரிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் துப்பாக்கிகளுக்குப் பயந்து வாழ்ந்த கிழக்கு மக்கள் இன்று அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”வடக்கு-கிழக்கு என உச்சரிக்கப்பட்ட இம்மாகாணங்கள் பிரிக்கப்பட்டது’ ஜனாதிபதி புளாங்கிதம்

தமிழ் மக்கள் நொந்துவிட்டார்கள். போராட்டத்தில் பிரயோசனமுமில்லை - எம் பி அதாஉல்லா

'தமிழ் மக்கள் இந்தப் பயங்கரவாதத்தால் மிகவும் நொந்துவிட்டார்கள். போராட்டத்தில் எதுவித பிரயோசனமுமில்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. வெறுமனே உயிர், சொத்திழப்புகளைத் தவிர வேறு எப்பயனுமில்லை என்பதை உணர்ந்துவிட்டார்கள். தற்போது நமக்கு நல்ல சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழரின் உதவி ஒத்துழைப்பின்றி முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி தமிழ், சிங்கள சமூகமோ வாழ முடியாது என்ற உண்மை நிலையை உணர்ந்து சகல சமூகங்களும் முன்பிருந்தது போன்று ஒற்றுமையாக வாழ இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ மேற்கண்டவாறு தேசிய காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்திற்கான எழுச்சிப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா உரையாற்றும் போது தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மக்கள் நொந்துவிட்டார்கள். போராட்டத்தில் பிரயோசனமுமில்லை - எம் பி அதாஉல்லா

சூட்டோடு சூடாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் : வி அருட்சல்வன்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் மார்ச் மாதம் 27ஆந் திகதியிலிருந்து ஏப்ரல் 03ஆந் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களத்தின் சிரே~;ட அதிகாரி பந்துலகுலதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்களை நேற்று (மார்ச் 13) அச்சக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சூட்டோடு சூடாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் : வி அருட்சல்வன்

மட்டு மேயரும் பிரதேச சபைத் தலைவர்களும் : வி அருட்சல்வன்

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரபாகரன் சிவகீர்த்தா (பத்மினி)யையும், பிரதி மேயராக பிரதீப் மாஸ்டரை (எட்வீன் ஸ்கந்தராஜா)வையும் நியமிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது. இவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மட்டு மேயரும் பிரதேச சபைத் தலைவர்களும் : வி அருட்சல்வன்

ரூபவாஹினி ஒளிபரப்பு இடைநிறுத்தம் : வி அருட்சல்வன்

இன்று காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரூபவாஹினி ஒளிபரப்பு இடைநிறுத்தம் : வி அருட்சல்வன்

Thursday, 13 March 2008

a letter of fire (Aksharaya) : ரதன் (கனடா)

‘100 kids abused daily’ in Sri Lanka – இது பி.பி.சி ன் மாசி 9ம் நாள், 1999 செய்திக் குறிப்பு. குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இது சாதாரணச் செய்தியல்ல. இதன் கொடூரத்தைத் தான் இன்று இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 20 வீதமான குழந்iதைகள் இணையத்தளங்களால் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 30-40 வீதமான பிள்ளைகள் தமது குடும்பத்திளராலேயே பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்னர். புத்து வீதமானேரே அந்நியர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 வீதமானோர் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். Pedophilia or paedophilia என்ற வார்த்தைக் கான விளக்கம் - “இளம் வயதில் பெரியவர்களால் பாலியல் வன்முறை - கவர்ச்சிக்குள்ளாகும் சிறுவர்கள்” என்பதே.

இதனைக் கருவாகக் கொண்டு தனது படத்தை படைத்துள்ளார் அசோக கங்கம. இவர் வேறு யாருமல்ல “இந்த வழிப்பாதையால்” என்ற A9 பாதையை மையமாகக் கொண்ட படத்தை நெறியாள்கை செய்தவர். தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களையும், தடைகளையும் எதிர் கொள்பவர்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
a letter of fire (Aksharaya) : ரதன் (கனடா)

அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் 30வது ஆண்டு நாடக விழா : புதியவன் ரா

கடந்த ஞாயிற்றுக் கிழமை (09/03/08) வின்சன் சேச்சில் மண்டபத்தில் க பாலேந்திராவின் நெறியாள்கையின் கீழ் நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. வழமை போல ஆண்ட பரம்பரையின் கலாச்சாரத்தின் படி தாமதமாகவே நிகழ்ச்சி தொடங்கினாலும் நான் எதிர்பார்த்த தாமத்தை காட்டிலும் நிகழ்ச்சி ஒரு 25 நிமிட தாமத்தில் மட்டுமே தொடங்கியது மகிழ்ச்சியாய் இருந்தது.

ஆனந்தராணி பாலேந்திராவின் நாடகக் கழக அறிமுகத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அவைக்காற்றுக் கழகத்தின் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த அமைப்புடன் சேர்ந்து வேலை செய்தவர்கள் பற்றிச் சிறிதேனும் சொல்லி இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். ஆரம்ப காலங்களில் அமைப்பின் உருவாக்கம் பின் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கு என்று பின்னணியில் உழைத்தவர்கள் பொதுவாகவேனும் குறிப்பிடப்பட்டிருக்லாம். (நாடக இதழில் குறிப்பிடப் பட்டிருந்ததை பின்னர் பார்த்தேன்.)....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் 30வது ஆண்டு நாடக விழா : புதியவன் ரா

லண்டனில் மலேசிய நூல்தேட்டம் வெளியீட்டும் வல்லினம் சஞ்சிகை அறிமுகமும்

நூலகவியலாளர் என். செல்வராஜாவின் ஈழத்து நூல்தேட்டம் நான்கு தொகுதிகளின் அறிமுக விழாவும், அவரது அண்மைக்காலத் தொகுப்பான மலேசிய - சிங்கப்பூர் நூல்தேட்டம் அறிமுக விழாவும், எதிர்வரும் சனிக்கிழமை, 15.03.2008 அன்று, மாலை 4.30 மணிமுதல் 08.30 மணிவரை லண்டன், வெம்பிளியில் அமைந்துள்ள பிரென்ட் நகரமண்டபத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டனில் மலேசிய நூல்தேட்டம் வெளியீட்டும் வல்லினம் சஞ்சிகை அறிமுகமும்

ஜனநாயக நிறுவனங்களை மீள நிறுவுவதற்காகவும் மக்களுள் இருந்த அவா வெளிப்பட்டது - பெப்ரல் : வி அருட்செல்வன்

மட்டு உள்ளுராட்சித் தேர்தல் ஜனநாயக நிறுவனங்களை மீள நிறுவுவதற்கு மக்களுக்கு இருந்த அவா வெளிப்படுத்தியதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பெப்ரல் தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்து உள்ளது. வன்முறையற்ற அமைதியான தேர்தல் என்று தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள இவ்வமைப்பு, பகிரங்கமாக ஆயுதங்களுடன் எவரையும் அவதானிக்க முடியாமல் இருந்தமை கண்காணிக்கப்பட்ட ஒரு முக்கிய பண்பாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனநாயக நிறுவனங்களை மீள நிறுவுவதற்காகவும் மக்களுள் இருந்த அவா வெளிப்பட்டது பெப்ரல் : வி அருட்செல்வன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் : வி அருட்செல்வன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை கோரப்படும் என இலங்கைத் தேர்தல் திணைக்களம் அறிவித்து உள்ளது. கிழக்கு மாகாணசபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 1ஆம் வாரத்தில் நடைபெற திட்டமிட்டுள்ளதாக அரசாங்க உயர மட்டத்திலிருந்து அறிய முடிகின்றது. இதுவே 21 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ள முதலாவது மாகாணசபைத் தேர்தலாக அமையவுள்ளது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய 1987ல் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்கள் 1990ல் கலைக்கப்பட்டது தெரிந்ததே. சென்ற வருடம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டது தெரிந்ததே.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் : வி அருட்செல்வன்

Wednesday, 12 March 2008

இலக்கியம் செய்வதும் இனிப்பு கடை வைப்பதும் ஒன்றல்ல : சேனன்

பாரிசில் சுகனுடன் கூட்டுக்கலவி செய்துகொண்டிருந்த காலத்தில் -காதல் முத்திய தருணத்தில்- அவனுக்கு நான் ஒரு வாக்கு கொடுத்திருந்தேன். இலக்கியவாதிகள் என்ற ‘அடையாளத்துக்குள்’ யாரையாவது புகழ்ந்து எழுத முடிவுசெய்தால் அதில் முதல் ஆள் சுகனாகதான் இருக்குமென்று. அன்று கொடுத்த வாக்கை காப்பாற்றும் தருனம் இப்பொழுது வந்துள்ளது.

நமது மென்மையான காதலரை - சுகனை ஆளுக்கால் வாருகிறதை பார்க்க பொறுக்க முடியவில்லை.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கியம் செய்வதும் இனிப்பு கடை வைப்பதும் ஒன்றல்ல : சேனன்

21ம் நூற்றாண்டுப் பெண்ணியச் சிந்தனை : சபா நாவலன்

வேறுபட்ட வரலாற்றுச் சூழ்நிலைகளில், ஆண்களதும் பெண்களதும் கூட்டுழைப்பானது குடும்பங்களின் உயர்ந்த வடிவத்திற்கும் ஆண் பெண் உறவிற்கும் புதிய அடிப்படையை உருவாக்குகிறது. முதன்மைச் சமுதாயம் அல்லது ஆதிமனித சமூதாயத்திலிருந்து இன்றுவரையான ஒவ்வொரு வரலாற்றுச் சூழ்நிலைகளிலும் சமுதாயத்தில் பெண்களின் நிலை என்பதும் குடும்பத்தின் வடிவம் என்பதும் அது தொடர்பான கருத்தென்பதும் மாறுபட்டே வந்திருக்கின்றன. ஆதி மனித சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்ற பொருளாதாரத் தேவையுடன் கூடிய குடும்ப அமைப்புமுறை இருந்ததில்லை. ஒரு பெண் பல ஆண்களுடன் பாலுறவு கொண்டிருந்த நிலையில் பெண்ணுக்கு மட்டுமே தனது குழந்தை யார் என்பது தெரிந்திருந்து. தனது குழந்தையும் பரம்பரையும் யார் என்று தெரிந்திராத ஆண் தனது சந்ததிக்கு தலைமை தாங்க முடியாத நிலையில் பெண் என்பவளே அந்த சந்ததிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டத்துடன் சந்ததியின் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் போதும் தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்திற்குத் தலைமை வகித்தாள்.

இதனால் இந்த சமூகத்தில் பெண்ணடக்குமுறை இருந்ததில்லை.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
21ம் நூற்றாண்டுப் பெண்ணியச் சிந்தனை : சபா நாவலன்

Tuesday, 11 March 2008

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?: வி.புலிகள் அறிக்கை

தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.10.02.2008.
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கௌரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?: வி.புலிகள் அறிக்கை

Friday, 7 March 2008

பிரியமில்லாத ‘ப்ரியாவுக்கு’ப் பிரியங்களுடன் - யமுன ராஜேந்திரன்

(தேசம்நெற் குறிப்பு : யமுன ராஜேந்திரன் 02-03-08 அன்று தேசம்நெற்றில் எழுதிய கட்டுரைக்கு ‘ப்ரியா’ என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவர் எழுப்பிய கேழ்விகளுக்கு எதிர்வினையாகவும் - புனைபெயரில் வந்த பல்வேறு பின்னூட்டங்கள் வைத்த கருத்துக்களுக்கு பதிலாகவும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. யமுன ராஜேந்திரன் இக்கட்டுரையை தமது ‘சொந்த பெயரிலேயே’ அனுப்பி வைத்துள்ளதாலும் பல்வேறு புதிய விசயங்களை அவர் இக்கட்டுரையில் பதிவதாலும் வாசகரின் வாசிப்பை இலகுபடுத்தல் கருதி இதை பின்னூட்டமாகவன்றி கட்டுரையாக பிரசுரிக்கிறோம்.)

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரியமில்லாத ‘ப்ரியாவுக்கு’ப் பிரியங்களுடன் - யமுன ராஜேந்திரன்

13வது திருத்தச்சட்டம், ஒற்றையாட்சி பிரச்சினைக்குத் தீர்வாகாது! தேர்தலைப் புறக்கணியுங்கள்!! - மாவை: வி அருட்செல்வன்

கிழக்கு உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததைப் பயன்படுத்தி அத்தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற நப்பாசையில் அரசுத் தரப்பும் அதன் ஆதரவு ஒட்டுக்குழுக்களும் களமிறங்கியிருக்கின்றன. இந்த ஆயுதக் குழுக்களின் மிரட்டலுக்கு அடி பணியாது அத்தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
13வது திருத்தச்சட்டம், ஒற்றையாட்சி பிரச்சினைக்குத் தீர்வாகாது! தேர்தலைப் புறக்கணியுங்கள்!! - மாவை: வி அருட்செல்வன்

Thursday, 6 March 2008

இனத்துவேசத்தின் எழுச்சி : சேனன்

கடந்த நவம்பர் 2005ல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் வென்ற கையோடு இலங்கை இனத்துவேசம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வென்ற கையோடயே இன வெறியர்களுக்கு அரச பதவிகளையும் மந்திரி பதவிகளையும் ராஜபக்ச அள்ளிக் கொடுக்க தொடங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதுவரைகாலமும் ஆட்சிக்கு வந்த ‘கொழும்பு’ ஜனாதிபதிகள் போலன்றி ராஜபக்ச தெற்கை சேர்ந்தவர். ‘தூய புத்தமத சிங்களவர்’ என்று வர்னிக்கப்பட்டவர். அத்தோடு சண்டிக்கட்டுடன் வயலுகளுக்குள் நடந்து திரிந்து படங்கள் எடுத்து சாதாரன சிங்கள மக்களில் ஒருவராக காட்டப்பட்டவர். தனது பழய இடதுசாரி உறவுகளை சுட்டிக்காட்டி ஜே.வி.பிஇ வாசுதேவ நாணயக்கார முதலான பாயத்தயாராக இருந்த பூனைகளை மதிலில் இருந்து தன் பக்கம் இறக்கியவர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனத்துவேசத்தின் எழுச்சி : சேனன்

மீளத் தலைதூக்கும் பயங்கரம் : HRW அறிக்கை

இலங்கை: பாதுகாப்புப் படைகளினால் மேற்கொள்ளப்படும் “காணாமல் போதல்கள்” ஒரு தேசியப் பிரச்சினை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயற்பணியே உடனடித் தேவை (நியூ யோர்க், மார்ச் 6, 2008) இன்று ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் பரந்தளவிலான “காணாமல் போதல்களுக்கு” இலங்கை அரசாங்கமே பொறுப்பு என, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ”காணாமலாக்கப்படுதல்” என்னும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துவதோடு அந்நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை உடனடியாக வெளிப்படுத்துமாறும், அதன் குற்றவாளிகளை அவற்றுக்கு பொறுப்புச் சொல்ல வைக்குமாறும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பானது அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மீளத் தலைதூக்கும் பயங்கரம் : HRW அறிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவநேசன் உயிரிழப்பு : வி அருட்செல்வன்

தமிழர் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவநேசன் இன்று (Mar 06) பி.ப. 1.20 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (Mar 05) இடம்பெற்ற அமர்வுகளில் கலந்து விட்டு இன்று திரும்பும் வேளையில் வன்னி கனகராயன் மாங்குளம் பகுதியில் இக்கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் அவரது வாகன சாரதியும் இறந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவநேசன் 1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆந் திகதி பிறந்தார். கரவெட்டி அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்ற இவர், தமிழர் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தெரிவானார். இவர் நான்கு குழந்தைகளின் தந்தையுமாவார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மீளத் தலைதூக்கும் பயங்கரம் : HRW அறிக்கை
Newer Posts Home