Saturday, 29 March 2008

நாயைப் போல் எனது வாழ்க்கை - My life as a dog : ரதன் (கனடா)

தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம். ஏனெனில் சமூகக் கொடுப்பணவுகள் அதிகம். இதற்காகவே சேர்ந்து வாழும் குடும்பங்களும் பிரிந்து வாழ்வதாக காட்டிக் கொள்வது இன்று எமது சமூகத்தில் இயல்பு வாழ்வாக மாறிவிட்டது.

பொதுவாக போரின் பின்னால் பல சமூக கொடூரங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். வங்கிக் கொள்ளைகள் போருக்காக என்ற சமாதானத்துடன் தொடங்கி இன்று கிரடிட் காட் வங்கி அட்டைகள் கொள்ளை என்பனவற்றையும் எமது இயல்பு வாழ்விற்கான காரணிகளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். இவற்றிக்கான எதிர் நிலைகளை இது வரை நாம் வெளிப்படுத்தவில்லை. இதன் வெளிப்பாடு எமது அடுத்த சந்ததியையே சென்றடைகின்றது. அவர்கள் தான் இதன் பலாபலன்களை அனுபவிக்கின்றார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நாயைப் போல் எனது வாழ்க்கை - My life as a dog : ரதன் (கனடா)

No comments: