Thursday, 27 March 2008

”தனி நாடு உருவாவதற்கு இந்தியா அனுமதிக்காது” பிரதமர் விக்கிரமநாயக்க

இலங் கைத் தமிழர்களுக்கென தனியான நாடொன்று உருவாவதற்கு இந்தியா ஒரு போதும் அனுமதிக்கா’தென தற்போது இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஜெரூஸலத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு என தனிநாடொன்று அமைவது இந்தியாவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் புதுடில்லி அதற்கு அனுமதிக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு குறித்து இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர், விடுதலைப் புலிகளின் தலைவர் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தமிழர் தாயகமொன்றை உருவாக்க முயல்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”தனி நாடு உருவாவதற்கு இந்தியா அனுமதிக்காது” பிரதமர் விக்கிரமநாயக்க

No comments: