வேறுபட்ட வரலாற்றுச் சூழ்நிலைகளில், ஆண்களதும் பெண்களதும் கூட்டுழைப்பானது குடும்பங்களின் உயர்ந்த வடிவத்திற்கும் ஆண் பெண் உறவிற்கும் புதிய அடிப்படையை உருவாக்குகிறது. முதன்மைச் சமுதாயம் அல்லது ஆதிமனித சமூதாயத்திலிருந்து இன்றுவரையான ஒவ்வொரு வரலாற்றுச் சூழ்நிலைகளிலும் சமுதாயத்தில் பெண்களின் நிலை என்பதும் குடும்பத்தின் வடிவம் என்பதும் அது தொடர்பான கருத்தென்பதும் மாறுபட்டே வந்திருக்கின்றன. ஆதி மனித சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்ற பொருளாதாரத் தேவையுடன் கூடிய குடும்ப அமைப்புமுறை இருந்ததில்லை. ஒரு பெண் பல ஆண்களுடன் பாலுறவு கொண்டிருந்த நிலையில் பெண்ணுக்கு மட்டுமே தனது குழந்தை யார் என்பது தெரிந்திருந்து. தனது குழந்தையும் பரம்பரையும் யார் என்று தெரிந்திராத ஆண் தனது சந்ததிக்கு தலைமை தாங்க முடியாத நிலையில் பெண் என்பவளே அந்த சந்ததிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டத்துடன் சந்ததியின் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் போதும் தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்திற்குத் தலைமை வகித்தாள்.
இதனால் இந்த சமூகத்தில் பெண்ணடக்குமுறை இருந்ததில்லை.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
21ம் நூற்றாண்டுப் பெண்ணியச் சிந்தனை : சபா நாவலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment