Sunday, 16 March 2008

சிவனேசன் கொலைக்கு புலிகளே முழுப் பொறுப்பு - வீ. ஆனந்தசங்கரி அறிக்கை

யாழ். தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவனேசன், அவரது கார் சாரதி மகேஸ்வரராசா ஆகியோரின் மிருகத்தனமான கொலையை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவர்களின் மனைவி மக்களுக்கும், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மரணம் எனது ஜென்ம விரோதிக்கும் ஏற்படக் கூடாதென பிரார்த்திப்பவன் நான். வன்முறை மரணங்களை நான் எப்போதும் கண்டித்து வந்துள்ளேன். இத்தகைய கொலைகளுக்கு நான் மறைமுக ஆதரவு வழங்குவதுமில்லை. மகிழ்ச்சியடைவதுமில்லை என த.வி.கூ.. தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சிவனேசன் கொலைக்கு புலிகளே முழுப் பொறுப்பு - வீ. ஆனந்தசங்கரி அறிக்கை

No comments: