Tuesday, 18 March 2008

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது! : நிர்மலா ராஜசிங்கம்

21ம் நூற்றாண்டு பெண்ணியச் சிந்தனை எனும் தலைப்பில் நாவலன் ஒரு மிகுந்த அபத்தமான கட்டுரை ஒன்றைத் தேசம் இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாக மட்டுமன்றி சில அடிப்படை விடயங்ளையும் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. நாவலனது கட்டுரையில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அரிதெனினும் கட்டுரையில் அவரின் தீராத பெண்ணிய வெறுப்பும் பெண் வெறுப்பும் (misogyny) மேலோங்கி உள்ளதாலும் அது தமிழ் பெண்ணிய வாதிகளைப் பற்றிய அவதூறான கருத்துகளை பரப்ப முயலுகின்றதாலும் கோட்பாட்டு ரீதியாகவும் தரவு ரீதியாகவும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முயலுவதினாலும் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

பாலியல் சீரழிவு கலாச்சாரத்திற்கே மேற்கத்திய பெண்ணியவாதம் தூபமிடுவதாகவும் பெண்களைப் பாலியல் இயந்திரங்களாக மாற்றும் முதலாளித்துவ தந்திரத்திற்குப் பெண்ணியவாதம் துணை போவதாகவும் திட்டி தீர்த்திருக்கிறார் நாவலன். பென்ணியவாதத்தின் மேலுள்ள காழ்ப்புணர்வால் இவர் அடிப்படையான இரண்டு முக்கிய விடயங்களைத் தந்திரமாகத் தவிர்த்துத் தனது திட்டலை முடித்திருக்கிறார்.......

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது! : நிர்மலா ராஜசிங்கம்

1 comment:

Anonymous said...

தலைமுடியை குட்டையாக வெட்டி கையில ஒரு பையை வச்சாபோதும் பெண்னுரிமை வந்திடுமா?

லேடீஸ் கிளப்பும் கத்தரிக்காயும்