'தமிழ் மக்கள் இந்தப் பயங்கரவாதத்தால் மிகவும் நொந்துவிட்டார்கள். போராட்டத்தில் எதுவித பிரயோசனமுமில்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. வெறுமனே உயிர், சொத்திழப்புகளைத் தவிர வேறு எப்பயனுமில்லை என்பதை உணர்ந்துவிட்டார்கள். தற்போது நமக்கு நல்ல சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழரின் உதவி ஒத்துழைப்பின்றி முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி தமிழ், சிங்கள சமூகமோ வாழ முடியாது என்ற உண்மை நிலையை உணர்ந்து சகல சமூகங்களும் முன்பிருந்தது போன்று ஒற்றுமையாக வாழ இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ மேற்கண்டவாறு தேசிய காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்திற்கான எழுச்சிப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா உரையாற்றும் போது தெரிவித்தார்.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மக்கள் நொந்துவிட்டார்கள். போராட்டத்தில் பிரயோசனமுமில்லை - எம் பி அதாஉல்லா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment