நன்றே செய்க அதை இன்றே செய்க அதனையும் முதலில் செய்க. இந்தக் கூற்றுக்கு சாலப் பொருத்தமான நிகழ்வாக 15.03.2008 மாலை Brent நகர மண்டபத்தில் முன்னாள் பேராசிரியர் பாலசுகுமாரின் தலைமையில் நிகழ்ந்த திரு என் செல்வராஜாவின் நூல்த்தேட்டம் தொகுதி 4ன் அறிமுகமும் மலேசிய – சிங்கப்பூர் நூல் தேட்டம் 1 இன் வெளியீடும் மற்றும் இளவயதினரான ஆசிரியர் நவீன் பிரதம ஆசிரியராக இருந்து வெளிக்கொணரும் மலேசிய வல்லினம் தமிழ் இலக்கிய சஞ்சிகையின் அறிமுகமும் ஒரு நேரத்தில் நிழ்ந்துள்ளது. அது மட்டுமன்றி தமிழில் முதன் முதலில் ஈழத் தமிழருக்கான அவர்களின் அறிவுப் பொக்கிசமான 5000 தமிழ் நூல்களை 2002 ஜூன் 01 முதல் இன்று வரை அடிக்குறிப்புடன் விபரமாக பட்டியலிட்டு அதை ஓர் தனி மனித முயற்சியாக செய்து முடித்திருக்கிறார் நூலகர் என் செல்வராஜா. இதனை இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு கருத்துப் பிரிவு சார்ந்த அறிஞர்களின் ஒருமித்ததான கருத்து வெளிப்பாட்டில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆவண காப்பகம் அமைக்க ஆலயங்களும் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வேண்டுகோள் : தொகுப்பு ச முருகையா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment