கடந்த ஞாயிற்றுக் கிழமை (09/03/08) வின்சன் சேச்சில் மண்டபத்தில் க பாலேந்திராவின் நெறியாள்கையின் கீழ் நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. வழமை போல ஆண்ட பரம்பரையின் கலாச்சாரத்தின் படி தாமதமாகவே நிகழ்ச்சி தொடங்கினாலும் நான் எதிர்பார்த்த தாமத்தை காட்டிலும் நிகழ்ச்சி ஒரு 25 நிமிட தாமத்தில் மட்டுமே தொடங்கியது மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆனந்தராணி பாலேந்திராவின் நாடகக் கழக அறிமுகத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அவைக்காற்றுக் கழகத்தின் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த அமைப்புடன் சேர்ந்து வேலை செய்தவர்கள் பற்றிச் சிறிதேனும் சொல்லி இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். ஆரம்ப காலங்களில் அமைப்பின் உருவாக்கம் பின் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கு என்று பின்னணியில் உழைத்தவர்கள் பொதுவாகவேனும் குறிப்பிடப்பட்டிருக்லாம். (நாடக இதழில் குறிப்பிடப் பட்டிருந்ததை பின்னர் பார்த்தேன்.)....
முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் 30வது ஆண்டு நாடக விழா : புதியவன் ரா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment