Sunday, 30 March 2008

கருத்துச் சுதந்திரமும் படைப்பாளிகளின் அரசியலும் : யமுனா ராஜேந்திரன்

சிங்களத் திரைப்பட இயக்குனர் துசரா பிரீஸின் ‘பிரபாகரன்’ எனும் பெயரிலான திரைப்படம், ‘தமிழகத்தில் திரையிடப்படக் கூடாது என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம்; முடிவுசெய்ய வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். துசரா பிரீஸின மீது இரத்தக் காயங்கள் ஏற்படும் அளவு உடல்ரீதியான தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழகக் கலாச்சார அரசியலில் சமீப காலங்களில் நிகழ்ந்த நான்காவது ‘தாக்குதல்’ சம்பவம் இது. ஹெச்.சி.ரகூல் எனும் இடதுசாரி எழுத்தாளர் ‘இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்’ பற்றி எழுதியதற்காக, அவரும், அவரது குழந்தைகள் மற்றும் மனைவி உள்பட அவரது முழுக் குடும்பத்தினரும் உள்ளுர் ஜமாத்தினால் ‘ஊர்விலக்கம்’ செய்யப்பட்டார்கள். எழுத்தாளராக அவரது ஆளுமையினை முடக்க நடத்தப்பட்ட ‘தாக்குதல்’ இது. இதற்கும் முன்பாக நடிகை குஷ்பு, ‘திருமணத்திற்கும் முன்னான உடலுறவின் போதான கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னுணர்வுகள்’ குறித்து எழுதியதற்காக, இப்போது பிரீஸின் மீது ‘தாக்குதல்’ தொடுத்த இதே மருத்துவர் ராமதாஸின் பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புக்கள் குஷ்புவின் கொடும்பாவியை ‘செருப்பாலும் துடைப்பத்தினாலும்’ அடித்தார்கள். நடிகை குஷ்புவின் வீட்டு முன்பாக அவரது பெண்குழந்தைகள் கிலி கொள்ளும் வகையில்; இவர்கள் ‘கலவரத்தில’; ஈடுபட்டார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்துச் சுதந்திரமும் படைப்பாளிகளின் அரசியலும் : யமுனா ராஜேந்திரன்

No comments: