Thursday, 6 March 2008

பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவநேசன் உயிரிழப்பு : வி அருட்செல்வன்

தமிழர் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவநேசன் இன்று (Mar 06) பி.ப. 1.20 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (Mar 05) இடம்பெற்ற அமர்வுகளில் கலந்து விட்டு இன்று திரும்பும் வேளையில் வன்னி கனகராயன் மாங்குளம் பகுதியில் இக்கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் அவரது வாகன சாரதியும் இறந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவநேசன் 1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆந் திகதி பிறந்தார். கரவெட்டி அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்ற இவர், தமிழர் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தெரிவானார். இவர் நான்கு குழந்தைகளின் தந்தையுமாவார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மீளத் தலைதூக்கும் பயங்கரம் : HRW அறிக்கை

No comments: