Thursday, 13 March 2008

a letter of fire (Aksharaya) : ரதன் (கனடா)

‘100 kids abused daily’ in Sri Lanka – இது பி.பி.சி ன் மாசி 9ம் நாள், 1999 செய்திக் குறிப்பு. குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இது சாதாரணச் செய்தியல்ல. இதன் கொடூரத்தைத் தான் இன்று இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 20 வீதமான குழந்iதைகள் இணையத்தளங்களால் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 30-40 வீதமான பிள்ளைகள் தமது குடும்பத்திளராலேயே பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்னர். புத்து வீதமானேரே அந்நியர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 வீதமானோர் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். Pedophilia or paedophilia என்ற வார்த்தைக் கான விளக்கம் - “இளம் வயதில் பெரியவர்களால் பாலியல் வன்முறை - கவர்ச்சிக்குள்ளாகும் சிறுவர்கள்” என்பதே.

இதனைக் கருவாகக் கொண்டு தனது படத்தை படைத்துள்ளார் அசோக கங்கம. இவர் வேறு யாருமல்ல “இந்த வழிப்பாதையால்” என்ற A9 பாதையை மையமாகக் கொண்ட படத்தை நெறியாள்கை செய்தவர். தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களையும், தடைகளையும் எதிர் கொள்பவர்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
a letter of fire (Aksharaya) : ரதன் (கனடா)

No comments: