Saturday, 30 August 2008

பல்கலைக்கழக மாணவ சமுதாயம் மௌனம் கலைய முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அநீதிகளை அகற்றி மனித உரிமைகளைப் பேணவும் தனிமனித சுதந்திரத்தை மதிக்கவும் மௌனங்களை கலைந்து முன்வரவேண்டும்” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்மை சந்திப்பதற்காக வந்த கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றம் மற்றும் தமிழ்மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட அறைகூவலை அமைச்சர் விடுத்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பல்கலைக்கழக மாணவ சமுதாயம் மௌனம் கலைய முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எண்ணெய் சுத்திகரிப்பு விஸ்தரிப்பு இலங்கை - ஈரான் ஒப்பந்தம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்குவது தொடர்பாக ஈரான் அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எண்ணெய் சுத்திகரிப்பு விஸ்தரிப்பு இலங்கை - ஈரான் ஒப்பந்தம்

வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரஸ்யம் தருபவர் பராக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜோன் மெக்கைன் போடியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி

மக்களை வெளியேறக் கோரி ஹெலி மூலம் துண்டுப்பிரசுரம்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களை போடும் நடவடிக்கையை விமானப் படையினர் ஆரம்பித்துள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மக்களை வெளியேறக் கோரி ஹெலி மூலம் துண்டுப்பிரசுரம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயத்தில் இனி வெளிப்படைத்தன்மை பேணப்படும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயத்தில் மோசடிகள், ஏமாற்றுகள், தில்லுமுல்லுகள் முதலானவை நடைபெறுவதைத் தவிர்ப்பதற்காக வெளிப்படைத்தன்மை பேணப்படும். அதன் பொருட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் திணைக்களத்தின் சகல கருமங்களும் வலைப்பின்னலில் பதியப்படும்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயத்தில் இனி வெளிப்படைத்தன்மை பேணப்படும்

பிந்திய செய்தி: புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு. 45 பேர் காயம்.

கொழும்பு புறக்கோட்டை அரச மரச்சந்தியில் உள்ள கைக் கடிகாரம் விற்கும் கடை ஒன்றின் அருகில் இன்று (30) நன்பகல் 12.15 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி: புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு. 45 பேர் காயம்.

புலிகளால் கைது செய்யப்பட்டு ‘இல்லாமல் ஆக்கப்பட்ட’ செல்வியின் 17ம் ஆண்டின் நினைவாக…. : யசோதா

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளால் கைது செய்யப்பட்டு ‘இல்லாமல் ஆக்கப்பட்ட’ செல்வியின் 17ம் ஆண்டின் நினைவாக…. : யசோதா

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! - ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

பா உ ஜெயானந்தமூர்த்தி 1983 முதல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர். இதன் காரணமாக 1986ல் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பூசா மற்றும் வெலிக்கடை முகாம்களில் 36 மாதங்கள் தடுத்து வைக்கபட்டவர். 1989ல் விடுதலையாகி மீண்டும் தனது பொதுப்பணியில் ஈடுபட்டார். 1991ல் ஊடகவியலாளராக பணியை ஆரம்பித்தார். எந்த ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பிலும் உறுப்பினராக இருக்கவில்லை என்று தெரிவிக்கும் இவர் 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.கொடுப்பது. அப்படி ஒரு நிலை உருவானால் விடுதலைப் புலிகளதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நிலையென்ன ?....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! - ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Friday, 29 August 2008

கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப அரசு அவசர ஏற்பாடு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தடங்கலின்றி மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவையாளர் நாயகம் எஸ்.பி. திவாகரத்ன தெரிவித்தார்.

மோதல் உக்கிரமடைந்துள்ளதையடுத்து மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப அரசு அவசர ஏற்பாடு

பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் நால்வரை தாக்கிய கொழும்பு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் சிலர் அவர்களிடமிருந்த புகைப்படக்கமரா வீடியோ கமராக்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ‘லங்காதீப’ மற்றும் ‘சிரச’ ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்ää சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

மாகாண சபைகளுக்கான தேர்தல் வெற்றி அரசுக்கல்ல. படையினருக்கே உரியது. – சோமவன்ச அமரசிங்க

இரு மாகாணசபைத் தேர்தல்களிலும் அரசை மக்கள் வெற்றியடையச் செய்யவில்லை. மாறாகப் படையினரே வெற்றியடையச் செய்துள்ளனர். யுத்தம் என்ற போர்வையில் மக்களை அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தேர்தல் வெற்றியானது இராணுவத்தினருக்கான வெற்றியே அன்றி அரசுக்குரியதல்ல” - இவ்வாறு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாண சபைகளுக்கான தேர்தல் வெற்றி அரசுக்கல்ல. படையினருக்கே உரியது. – சோமவன்ச அமரசிங்க

மாகாணத் தேர்தல்களில் அரசுக்குக் கிடைத்த வெற்றி இனவாதக் கருத்துகளுக்குக் கிடைத்த சன்மானம். - சுரேஸ் பிரேமச்சந்திரன்

“கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்கள மக்கள் இழுத்துச் செல்லப்பட்டுகின்றனர். இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மைச் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாணத் தேர்தல்களில் அரசுக்குக் கிடைத்த வெற்றி இனவாதக் கருத்துகளுக்குக் கிடைத்த சன்மானம். - சுரேஸ் பிரேமச்சந்திரன்

கருணா குழுவின் பிரமுகர்கள் தமிழ்க் கைதிகளைச் சந்தித்தனர்.

தலை நகரிலும், சுற்றாடலிலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை மற்றும் நியூமகஸின் சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (கருணாகுழுவின்) பிரமுகர்கள் அண்மையில் நேரில் சென்று சந்தித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருணா குழுவின் பிரமுகர்கள் தமிழ்க் கைதிகளைச் சந்தித்தனர்.

வன்னி மக்களின் அவலம் குறித்து ஐ.நா. தொடர்ந்தும் எச்சரிக்கை

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3,000 குடும்பங்கள் இடம்பெயரும் சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. ஜுன் மாதத்திற்குப் பின்னர் 18ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 74ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1இலட்சத்து 34ஆயிரத்து 868ஆகக் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் தமது வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னி மக்களின் அவலம் குறித்து ஐ.நா. தொடர்ந்தும் எச்சரிக்கை

அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர். : கலாபூசணம் புன்னியாமீன்

இலங்கையிலிருந்து வெளிவரும் முஸ்லிம்களுக்கான ஒரே தேசிய இதழான ‘நவமணி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் 2008.08.28ஆந் திகதி நேற்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரெனக் காலமானார். அன்னாரின் பூதவுடல் நேற்று (28) மாலை 5.30 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி மரணச் சடங்குகளில் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர். : கலாபூசணம் புன்னியாமீன்

Wednesday, 27 August 2008

நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

கடந்த 15.08.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீன் அவர்கள் தாயகத்தில் மறைந்த செய்தி எம்மை வந்தடைந்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், நூலக உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் பேசப்பட்டவர். சிலாபம் புனித மரியாள் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய எஸ். எம். கமால்தீன் கொழும்பு சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தன் மேற்கல்வியைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும், நூலகவியலில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். பின்னர் கனடா ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் கலைமானிப்பட்டமும் பெற்றுக்கொண்டவர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.,...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்

இலங்கை இன்று ஒரு ஆபத்தான அரசியற் கட்டத்தில் நிற்கிறது. இனத்துவேச அரசின் யுத்த முன்னெடுப்புகளும் - அதற்கு ஆதரவாக இயங்கும் குழுக்களின் அரசுசார் அரசியல் வித்தைகள் ஜனநாயகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதும் - புலிகள் மக்களை பணயம் வைத்து தமது குறுகிய யுத்தக் காய்ச்சலை வெளிப்படுத்த தயாராகுவதுமாக –‘அதிகார சக்திகள்’ கடும் முரண்;களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆதன் பலனாக ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை வரலாறு காணாத வறுமையையும் வன்முறையையும் எதிர்நோக்கி உள்ளார்கள். குறிப்பாக வன்னி மக்களின் எதிர்காலம் நினைத்துப் பார்க்க நடுக்கமேற்படும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்

Monday, 25 August 2008

பிரிட்டனிலிருந்து 4 இலங்கையர் நாடு கடத்தப்படும் நிலை

பிரிட்டனில் உணவு விடுதியொன்றில் பணியாற்றிய இலங்கையர் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் தற்போது நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் எல்லைக்காவல் அமைப்பின் அதிகாரிகளே ஹாம்ஸ்சையர் பகுதியில் தேடுதல் நடத்தி இவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்களென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிட்டனிலிருந்து 4 இலங்கையர் நாடு கடத்தப்படும் நிலை

மலையக தமிழ்க் கட்சிகளுக்கு சப்ரகமுவ மாகாணசபையில் ஒரு ஆசனமும் இல்லை

சப்ர கமுவ மாகாண சபையின் நிர்வாகத்தை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ள அதேநேரம், இந்த மாகாண சபையின் வரலாற்றில் தமிழ்க் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை முதன்முறையாக இழந்துள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையக தமிழ்க் கட்சிகளுக்கு சப்ரகமுவ மாகாணசபையில் ஒரு ஆசனமும் இல்லை

ஜாதிக ஹெலஉறுமயவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக ஜாதிகஹெல உறுமய வெளியிட்ட கருத்தை மறுப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- ...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜாதிக ஹெலஉறுமயவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீதிபதிகள் நியமனம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படைநடவடிக்கைகள் முற்றுப் பெற்றவுடன் நீதிமன்றங்களையும் பொலிஸ் நிலையங்களையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரச தரப்பு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீதிபதிகள் நியமனம்

Sunday, 24 August 2008

பிரபாவின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் நாள் நெருங்குகின்றது! - நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றும் வெகுவிரைவில் படையினர் அதைச் செய்வர் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று முன்தினம் (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரபாவின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் நாள் நெருங்குகின்றது! - நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

தமிழ் மாணவர்கள் கல்வியியல் சாதனைகள் தொடர்கிறது. : த ஜெயபாலன்

அண்மைக் காலமாக லண்டனில் இருந்து வரும் தமிழர் பற்றிய செய்திகள் துக்ககரமானதாகவும் வேதனையாகவுமே இருந்தது. அதலிருந்து சற்று விடுபட்டு ஆறுதலடையும் வகையில் எமது மாணவர்கள் தங்கள் கல்வியியல் சாதனையை நிலைநாட்டி உள்ளனர். இவ்வாண்டு நடைபெற்ற GCSE பரீட்சைகளிலும் வழமை போல் எமது மாணவ, மாணவிகள் சாதனைகளை நிலைநாட்டி உள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மாணவர்கள் கல்வியியல் சாதனைகள் தொடர்கிறது. : த ஜெயபாலன்

யாழ்ப்பாணத்தில் விரைவில் உள்ளுராட்சி தேர்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவது பற்றி அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. 19 உள்ளுராட்சி மன்றங்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் கடைசியாக 2002ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாண நகரசபை உட்பட 3 நகரசபைகள் 15 பிரதேச சபைகள் விசேட ஆணையாளர்களின் நிர்வாகத்தில் உள்ளன. வடமாகாண விசேட செயலணிக்குப் பொறுப்பான அமைச்சரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாணத்தில் விரைவில் உள்ளுராட்சி தேர்தல்

Saturday, 23 August 2008

50 % அதிகமான வாக்குகளை மகிந்த முன்னணி பெற்றுள்ளது!! பொலன்னறுவையில் UPF 6 அசனங்கள், UNP 4 ஆசனங்கள் : த ஜெயபாலன் & மொகமட் அமீன்

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள சகல தொகுதிகளிலுமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 50 முதல் 60 வீதமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் படி: தேர்தல் முடிவு வெளிவந்துள்ள 17 தொகுதிகளில், அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
50 % அதிகமான வாக்குகளை மகிந்த முன்னணி பெற்றுள்ளது!! பொலன்னறுவையில் UPF 6 அசனங்கள், UNP 4 ஆசனங்கள் : த ஜெயபாலன் & மொகமட் அமீன்

Friday, 22 August 2008

நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

கடந்த 15.08.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீன் அவர்கள் தாயகத்தில் மறைந்த செய்தி எம்மை வந்தடைந்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், நூலக உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் பேசப்பட்டவர். சிலாபம் புனித மரியாள் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய எஸ். எம். கமால்தீன் கொழும்பு சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தன் மேற்கல்வியைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும், நூலகவியலில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். பின்னர் கனடா ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் கலைமானிப்பட்டமும் பெற்றுக்கொண்டவர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

மேயர் பொன் சிவபாலன் 10வது ஆண்டு நினைவு: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்

யாழ் மேயராக இருந்து படுகொலை செய்யப்பட்ட பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் லண்டனில் செப்ரம்பர் 14ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 1988 செப்ரம்பர் 11ல் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் மேயர் பொன் சிவபாலன் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். யாழ் நகர மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 10வது ஆண்டு நிறைவையும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் செய்யப்பட்ட 60வது ஆண்டு தினத்தையும் குறிக்கும் வகையில் மேயர் பொன்சிவபாலனின் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘மேயர் பொன் சிவபாலன் நினைவு : மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்விற்கு பொன் சிவபாலனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட எஸ் சுதாகரன் தலைமை தாங்குகிறார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மேயர் பொன் சிவபாலன் 10வது ஆண்டு நினைவு: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்

தீகவாவி பிரதேச பௌத்த மக்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் திட்டம்.

தீகவாபி பௌத்த மக்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் வேலைத்திட்டம் சிறந்த வெற்றியளித்துள்ளதாக முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்தியப் பணிப்பாளர் திருமதி முபீதா உஸ்மான் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீகவாவி பிரதேச பௌத்த மக்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் திட்டம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்குள் தெரிவான தென்னிலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியாக்கிரகம்

தென் னிலங்கை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய முடிவு கிட்டும் வரை இப்போராட்டத்தைத் தொடரப்படும் எனவும் கூறினர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாணப் பல்கலைக்குள் தெரிவான தென்னிலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியாக்கிரகம்

கடந்த 2 வாரத்தில் ‘40ஆயிரம்’ பேர் வன்னியில் அகதிகளானர்

கடந்த 2 வாரத்துக்குள் மாத்திரம் வன்னி மாவட்டத்தில் யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 40ஆயிரம் சாதாரண பிரஜைகள் அகதிகளாக்கப்பட்டுள்ளனரென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிதிதியின் காரியால ஊடகத்துறை அதிகாரி ‘சரசி விஜயரத்ண’ “அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுள: இடத்துக்கு இடம் கொண்டு செல்லக்கூடிய கூடாரங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளது” என்றார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடந்த 2 வாரத்தில் ‘40ஆயிரம்’ பேர் வன்னியில் அகதிகளானர்

இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வாகமாட்டாது! – இரா. சம்பந்தன்

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வாகமாட்டாது! – இரா. சம்பந்தன்

அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

தெற்கு லண்டனில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிசார் இன்னமும் தொடர்கின்றனர். சம்பவத்தில் கொல்லப்பட்ட சஞ்சயன் நவநீதன் (5), சாரனி நவநீதன் (4) இரு சிறார்களதும் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று (ஓகஸ்ட் 21) லண்டனில் நடைபெறுகிறது. பிரேத பரிசோதணைகள் யூன் 3ல் கிரேட் ஓர்மன் ஸ்ரீற் மருத்துவமனையில் முடிந்த போதும் அவர்களது உடல் உறவினர்களுக்கு கையளிக்கப்படாமலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

Wednesday, 20 August 2008

புலிகளின் தமிழீழ கனவு முற்றாக கலைந்துவிட்டது - சிவநேசதுரை சந்திரகாந்தன்

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி பொது மக்கள் உட்பட எவருமே துணைபோகக் கூடாது. புலிகளின் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே கிழக்கு மண்ணைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளின் தமிழீழ கனவு முற்றாக கலைந்துவிட்டது - சிவநேசதுரை சந்திரகாந்தன்

பாசிஸ்டுகளும் (புலிகளும்) பச்சோந்திகளும் (புலி எதிர்ப்பாளர்களும்) : பாண்டியன் தம்பிராஜா

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, பௌத்த, பேரினவாத அரசுகள் ஏற்படுத்தியமையும், அந்த இரசாயன தாக்கத்தின் விளைவாக பாசிஸ கூட்டமான புலிகள் உருவாகியமையும் எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இலங்கையில் மக்கள் சிந்திய இரத்தமும், பிய்த்தெறியப் பட்ட அவர்களின் உடல்களுமே எமக்கெல்லாம் குடியுரிமைகளை பெற்றுத் தந்ததை மறந்து நாம் எங்கேயோ, எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாசிஸ்டுகளும் (புலிகளும்) பச்சோந்திகளும் (புலி எதிர்ப்பாளர்களும்) : பாண்டியன் தம்பிராஜா

பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று : யமுனா ராஜேந்திரன்

சுதந்திரத்திறகான போராட்டம் பற்றிய கதை என்பது திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. திரும்பத் திரும்பவும் அது நிகழ்கிறது. எந்தக் காலமும் இந்தக் கதையைச் சொல்வதற்கான பொருத்தமான காலம்தான். உலகத்தில் எப்போதுமே ஏதோ ஒரு இடத்தில் ரரணுவ ஆக்கிரமிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். பிரித்தானியப் படைகள் இப்போது எங்கே இருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. துரதிருஸ்டவசமான, வன்முறை நிறைந்த, சட்டவிரோதமான ராணுவ ஆக்கிரமிப்பு இப்போது எங்கே நடந்து கொண்டிருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. எனது திரைப்படம் அன்னிய ஆக்கிரமிப்பு குறித்தது. அதனோடு அசாதாரணமான தோழமையும் வீரமும் குறித்தது. அதனோடு இந்தக் கதையினுள் இடம்பெறும் தோழர்களுக்கு இடையிலான துயரகரமான முரண்பாடு குறித்தது. அறுதியில் பார்க்கிறபோது நாம் தவிர்க்க முடியாத ஒரு கதையாக இது இருக்கிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று : யமுனா ராஜேந்திரன்

Monday, 18 August 2008

”யாழ்நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்!!!” - நெவில் ஜெயவீர : த ஜெயபாலன்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன் என முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நெவில் ஜெயவீர தெரிவித்தார். The Jaffna Public Library Rises From Its Ashes என்ற யாழ் பொது நூலகத்தின் கட்டிடக் கலைஞர் வி எஸ் துரைராஜா எழுதிய நூலின் வெளியீட்டு விழாவில் நெவில் ஜெயவீர இதனைத் தெரிவித்தார். தான் இந்நிகழ்வில் கலந்தகொள்வதில் ஒருபுறம் மகிழ்ச்சி அடைவதாகவும் மறுபுறம் கவலையடைவதாகவும் தெரிவித்த நெவில் ஜெயவீர, தனது உணர்வின் வெளிப்பாட்டுக்கான காரணத்தையும் அங்கு தெரிவித்தார். யாழ் நூலகம் தமிழ் மக்களின் செல்வம் கொழிக்கும் கலாச்சாரித்தின் ஞாபகச் சின்னமாக இருப்பதால் இந்நிகழ்வில் கலந்த கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். அதேசமயம் அந்த ஞாபகச் சின்னத்தை தன்னினத்தைச் சேர்ந்தவர்கள் எரித்தனர் என்பதையிட்டு வெட்கப்படுவதாகவும் நெவில் ஜெயவீர தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”யாழ்நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்!!!” - நெவில் ஜெயவீர : த ஜெயபாலன்

27- பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! – மீள் ஆய்வு.

எந்தவித ஆதாரமுமற்று யாரோ காழ்புணர்வில் கூறிவிட்டார்கள் என்பதற்காய் தாங்களும் ஆராயாமல் அதனை ஏற்றுக்கொண்டு எனைத் தாக்குவது ஒரு தரமாக இலக்கியவாதிக்கான அடையாளம் அல்ல. நான் உண்மையிலேயே உங்களை இதுவரை அறிந்ததில்லை. நான் புளொக்கை விட்டுப் போய் பல மாதங்களாகிவிட்டது. அதிகம் இணையத்தளங்களை வாசிப்பதில்லை. வெறும் அறிவித்தல்களை மட்டும் அவ்வப்போது பார்வையிடுவதுடன் சரி. தனிப்பட்ட கோபம் ஒன்றும் தங்களிடமில்லை. நான் உங்கள் பெயரை பெண்கள் சந்திப்பிற்காக உபயோகித்திருப்பதாகத் தாங்கள் எழுதியிருந்தது எனக்கு விசனத்தைத் தந்தது அவ்வளவே...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
27 - பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! – மீள் ஆய்வு.

தமிழ் மக்களை தன் பக்கம் ஈர்க்க அரசு செய்யப் போவது என்ன? - பிளேட்டோ

இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சிங்கப்பூரில் வெளியாகும் ‘ஸ்ரேட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்று அரசியல்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெறலாம். ஆனால், அவர்கள் போரில் வெற்றி…

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மக்களை தன் பக்கம் ஈர்க்க அரசு செய்யப் போவது என்ன? - பிளேட்டோ

Saturday, 16 August 2008

பர்வேஸ் முஸர்ரப் பதவி விலகவில்லை.

பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸர்ரப் நேற்றுமுன்தினம் (14) பதவி விலகுவாரென பொதுவாக இந்திய, பாக்கிஸ்தானிய ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்திருந்தன. விசேடமாக பாக்கிஸ்தானின் சுதந்திரதின உரையில் மேற்படி அறிவித்தலை பர்வேஸ் முஸர்ரப் விடுப்பாரென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 14ஆம் திகதி தனது சுதந்திரதின உரையினை நிகழ்த்திய முஸர்ரப் தமது பதவி துறப்பு பற்றியோ, தனக்கெதிரான குற்றப் பிரேரணைப் பற்றியோ எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பர்வேஸ் முஸர்ரப் பதவி விலகவில்லை.

இன்று தென்னாபிரிக்கா சுதந்திரப் போராட்டத்தில் ‘காந்தி’ பங்கேற்ற - நூற்றாண்டு விழா

தென்னாபிரிக்க சுதந்திரப் போரின் ஒரு பகுதியாக 1908இல் மகாத்மா காந்தி பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டமையை நினைவுகூரும் நூற்றாண்டு விழா இன்று 16ஆம் திகதி தென்னாபிரிக்க ஜோகன்ஸ் பர்க்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்திய அரசின் சார்பில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பங்கேற்கவுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று தென்னாபிரிக்கா சுதந்திரப் போராட்டத்தில் ‘காந்தி’ பங்கேற்ற - நூற்றாண்டு விழா

அண்டை நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். - இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

சிக்கலான மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையிலும் சமரச முறையிலும் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாத பிரச்சினை எதுவுமில்லை என இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டுள்ள செய்திலேயே அவர் தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அண்டை நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். - இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

Friday, 15 August 2008

வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்

வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவர் தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா! ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா? இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்

‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : அசோக்

அன்புடன் தோழர் சிவலிங்கம் அவர்களுக்கு,

வணக்கம். வாழ்த்துக்கள். இவ்வாறனாதொரு கடிதத்தை எழுத நேர்ந்தமைக்காக நான் என்னுள் உண்மையிலேயே சங்கடம் கொள்கின்றேன். உங்கள் தொடர்பாய் என்னுள் அன்பும் மரியாதையும் என்றும் உண்டு. இலங்கை இடதுசாரி அரசியல் பாரம்பரியம் கண்டவர் நீங்கள். மார்க்ஸ்;சிய விஞ்ஞான அடிப்படையில் இலங்கை அரசியல் பொருளாதார சமூகத்தையும் தேசிய நெருக்கடியையும் விண்டுரைக்க வல்லவராய் நீங்கள் உள்ளீர்கள். அதேவேளை இன்றைய புகலிட உலகத்தில் மலிந்துகிடக்கும் அரசியல் சீரழிவுகளில் இருந்து மாறுகொண்ட குறைந்தபட்ச ஒரு அரசியல் நேர்மை கொண்ட நபராக நீங்கள் இருப்பதாய் என்னுள் ஓர் கணிப்பீடு உண்டு....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : அசோக்

இலங்கையின் எதிர்காலம் என்ன? - கலந்துரையாடல் : செழியன் (கனடா)

இலங்கையில் எல்லா சிறுபான்மை இனங்களுக்குமான நீதியான, கௌரவமான அரசியல் தீர்வு கிடைப்பதன் மூலமே இலங்கையில் தற்போது நிழ்ந்து கொண்டிருக்கும் கொடிய யுத்தம் நிரந்தரமாக முடிவுக்கு வரும்’ என்று ‘சமாதானத்திற்கான கனேடியர்கள்’ என்ற அமைப்பு நம்புகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையின் எதிர்காலம் என்ன? - கலந்துரையாடல் : செழியன் (கனடா)

ஆயுதத்தைக் கைவிட்டு பிரபாகரன் சரணடையும் வரை யுத்தம் தொடரும் - கெஹலிய ரம்புக்வெல்ல

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்புப் பேச்சாளமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆயுதத்தைக் கைவிட்டு பிரபாகரன் சரணடையும் வரை யுத்தம் தொடரும் - கெஹலிய ரம்புக்வெல்ல

காங்கேசந்துறைக் கடலில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்ற இந்தியா உதவும் ?

காங்கேசந் துறை துறைமுகத்தில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்றுவதற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் நெருக்கமடைவதையும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான புதுடில்லியின் ஆதரவையும் இது புலப்படுத்துகிறது என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காங்கேசந்துறைக் கடலில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்ற இந்தியா உதவும் ?

இன்று இந்தியாவின் 62வது சுதந்திர தினம்

இன்று இந்தியாவின் 62வது சுதந்திர தினமாகும். தீவிரவாதிகளின் மிரட்டலையொட்டி தமிழகத்தில் நடைபெறும் சுதந்திர விழாவிற்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று இந்தியாவின் 62வது சுதந்திர தினம்

தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் பெண்கள் சந்திப்பு தடை செய்யப்பட வேண்டும்! : தமிழச்சி

நாம் ஏன் பேசிக் கொண்டே இருக்கிறோம்…?
நாம் ஏன் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம்…?
நாம் ஏன் செயலாற்றுவதில்லை…?
நமக்கு மட்டும் ஏன் துரோகங்களை புறந்தள்ள முடிகிறது…?
நமக்கு தொடரும் வன்முறைகளையும், தீவிரவாதத்தையும்
எப்படி அலட்சியப்படுத்தி செல்ல முடிகிறது…?
நம்மிடம் மனிதம் இல்லையா…?
நம்மிடம் சமூகப்பற்று இல்லையா…?

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் பெண்கள் சந்திப்பு தடை செய்யப்பட வேண்டும்! : தமிழச்சி

Wednesday, 13 August 2008

27வது பெண்க்கள் சந்த்திப்பு கனடா - 2008 ஒரு பார்வை : மோனிகா

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
27வது பெண்க்கள் சந்த்திப்பு கனடா - 2008 ஒரு பார்வை : மோனிகா

Sunday, 10 August 2008

மத்திய கிழக்கில் தொழில் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை யிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகமாக அதிகரித்துள்ளது என வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மத்திய கிழக்கில் தொழில் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும் : தமிழ்நதி

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும் : தமிழ்நதி

யாரொடு நோவது? யார்க்கெடுத்துரைப்பது? - SLDF இடம் ஒரு கேள்வி : சபா நாவலன்

புலம் பெயர் தமிழ் இலக்கியம், புலம் பெயர் சினிமா, புலம் பெயர் இணையம் என்றெல்லாம் வந்தாகிவிட்டது. புலம் பெயர் சூழலில் ஜனநாயக் குரல் முழைத்து, கொடி படர்த்தி, பூப் பூத்து இன்று மறுபடி சருகாய்ச் செத்துப் போனதோவென்று சாபக் குரல்கள் ஒலிக்கின்றன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாரொடு நோவது? யார்க்கெடுத்துரைப்பது? - SLDF இடம் ஒரு கேள்வி : சபா நாவலன்

ஜனாதிபதியின் ‘சார்க் சாமர்த்தியம்’ - இனப்பிரச்சினை தீர்வுக்கும் பயன்படட்டும்

சிறுபான்மை கட்சிகளிடம் குறித்த திட்டத்தைச் சமர்ப்பித்து உரிய பேச்சுவார்த்தையை விரிவாக நடத்தினால் நல்ல பயன் கிடைக்கலாம். சிறுபான்மை மக்களால் ஏற்கக்கூடிய திட்மொன்றை ஜனாதிபதியின் வழிகாட்டல் மூலம் அரசினால் சமர்ப்பிக்க முடியுமென்றால் எல்.ரி.ரி.ஈ.யைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உத்தேச திட்டத்தை மக்கள் ஏற்கும் நிலை வந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படும் என இன்று (10) வெளியான ‘நவமணி’ பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனாதிபதியின் ‘சார்க் சாமர்த்தியம்’ - இனப்பிரச்சினை தீர்வுக்கும் பயன்படட்டும்

இலக்கிய சிந்தனை’ விருதுபெறும் புலம்பெயர் எழுத்தாளர் ‘மாதுமை’

சுவிஸில் இருந்து மாதுமை எழுதிய ‘லாவண்யா திண் வைகுந்தன்’ எனும் சிறுகதை ஏப்ரல் மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இந்திய இலக்கிய சிந்தனை அமைப்பு’ தெரிவு செய்து விருது வழங்கியுள்ளது. இவரது தெரிவு செய்யப்பட்ட சிறுகதை ‘யுகமாயினி’ இதழில் வெளிவந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கிய சிந்தனை’ விருதுபெறும் புலம்பெயர் எழுத்தாளர் ‘மாதுமை’

புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கின்றார் - பிரிட்டன் பாடகி MIA

இலங்கை வம்சாவளியினரான MIA என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கின்றார் - பிரிட்டன் பாடகி MIA

திருமலையில் பாலியல் துஸ்பிரயோகம் பெருமளவில் இடம்பெறுகின்றது - மேல்நீதிமன்ற நீதிபதி

திருகோண மலை மாவட்டத்தில் குச்சவெளி, சீனக்குடா, தம்பலகாமம், கேடுநுவர, கந்தளாய் போன்ற பிரதேசங்களில் பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்கள் பெருமளவில் இடம்பெறுகின்றன. திருமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் 60 சதவீதமானவை பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தப்பட்டவையே. அவற்றிலும் 50 சதவீதமானவை 14 வயதுக்கு கீழ்க்கப்பட்டசிறார்கள் மீது புரியப்பட்ட குற்றங்களாகும். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்’ - இவ்வாறு எச்சரித்தார் திருமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திருமலையில் பாலியல் துஸ்பிரயோகம் பெருமளவில் இடம்பெறுகின்றது - மேல்நீதிமன்ற நீதிபதி

ஆசிய பாராளுமன்றத்தை உருவாக்கும் பணியை ஈரான் முன்னெடுக்கும்

ஈரான் இஸ்லாமியக் குடியரசு சார்க் அமைப்பில் அவதானிப்பாளராக இருக்கும் அதேவேளை, ஆசிய பாராளுமன்றத்தை உருவாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும்’ என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மனுசர் மொத்தக்கி தெரிவித்தார். சார்க் உச்சி மாநாட்டில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அமைச்சர் மொத்தக்கி பத்திரிகையோன்றிற்கு வழங்கிய விசேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆசிய பாராளுமன்றத்தை உருவாக்கும் பணியை ஈரான் முன்னெடுக்கும்

மஹ்முத் தர்வீஸ் : நம் காலத்தின் மனசாட்சி : யமுனா ராஜேந்திரன்

பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்முத் தர்வீஸ், தமது 67 ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமடைந்திருக்கிறார். திறந்த இதய சிகிச்சை நெருக்கடி நிலைமையை அடைந்ததனையடுத்து, இரண்டு நாட்களாக உயிர்காப்பு சிகிச்சை நிலைமையிலிருந்த மஹ்முத் தர்வீஸ் சனிக்கிழமை மதியம் மரணமடைந்திருக்கிறார். இவரது மறைவையொட்டி மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கபபடுமென பாலஸ்தீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மஹ்முத் தர்வீஸ் : நம் காலத்தின் மனசாட்சி : யமுனா ராஜேந்திரன்

Friday, 8 August 2008

இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும். - விமல் வீரவன்ச

இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் செய்யப்படவுள்ள ‘சீபா’ எனப்படும் முற்று முழுதான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இலங்கை கைவிட வேண்டுமென்று விமல்வீரவன்ச பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையில் இந்தியாவின் கையோங்கி இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும் என்றும் இந்த ஒப்பந்தத்தை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும். - விமல் வீரவன்ச

அரசின் நிபந்தனைகளை ஏற்கும்வரை யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை - கெஹலிய ரம்புக்வெல்ல

“முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. அரசாங்கத்தின் நிபந்தனைகள் ஏற்றாலேயொழிய புலிகளின் போர் நிறுத்தத்தையோ, சமாதானப் பேச்சுவார்த்தைகளையோ ஏற்கப் போவதில்லை” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசின் நிபந்தனைகளை ஏற்கும்வரை யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை - கெஹலிய ரம்புக்வெல்ல

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் ‘கியூ’ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் பொலிஸார் முடிவு செய்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு

ஓன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு விடுதலையை விரைவில் வென்றெடுப்போம் - பா. நடேசன்

ஒன்றுபட்ட சக்தியாக அனைவரும் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்’ என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வட்டக்கச்சி கோட்ட போர் எழுச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஓன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு விடுதலையை விரைவில் வென்றெடுப்போம் - பா. நடேசன்

Wednesday, 6 August 2008

இந்தியத் தேசியக்கொடியை கச்சதீவில் ஏற்ற நடவடிக்கை

இந்திய சுதந்திர தினத்தன்று கச்சதீவில் தேசியக்கொடியை ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தஞ்சையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியவை வருமாறு:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியத் தேசியக்கொடியை கச்சதீவில் ஏற்ற நடவடிக்கை

சார்க் பிராந்திய நாடுகளின் செயற்பாட்டிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் - அமெ. உதவிச் செயலாளர் ரிச்சட் பவுச்சர்

சார்க் பிராந்திய நாடுகள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஜனநாயகத்தை விஸ்தரிப்பதற்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் அமெரிக்க உதவிச் செயலாளர் ரிச்சட் ஏ. பவுச்சர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சார்க் நாடுகளுடன் இணைந்து செயற்படவும் தயாராகவுள்ளதாக அவர் மேலும் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க் பிராந்திய நாடுகளின் செயற்பாட்டிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் - அமெ. உதவிச் செயலாளர் ரிச்சட் பவுச்சர்

தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் கடும் தண்டனை வழங்க குவைத் அரசு தீர்மானம்

குவைத்தில் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது மற்றும் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான புதிய சட்ட மூலமொன்று குவைத் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பாராளுமன்ற மனித உரிமைகள் குழு இப்புதிய சட்ட மூலத்தை இயற்றியுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் கடும் தண்டனை வழங்க குவைத் அரசு தீர்மானம்

‘சீபா’ ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

இந்தியாவுடன் இலங்கை அரசு செய்வதற்குத் திட்டமிட்டிருக்கும் விசால பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தத்துக்கு (Comprehensive Economic Partnership Agreement– CEPA) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை யார் எதிர்த்தாலும் எதிர்ப்பவர்களை ஓரத்தில் ஒதுக்கிவிட்டு அரசு இதில் கைச்சாத்திட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சீபா’ ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் - பெ. சந்திசேகரன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும் அரச சமூகத்தினர் அபிவிருத்திச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் இந்தியா முழுமையாக உதவ வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திசேகரன் கொழும்பில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அச்சமயம் அமைச்சரினால் இந்தியப் பிரதமரிடம் ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம்மகஜரில் காணப்பட்ட முக்கிய விடயங்களாவன:....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் - பெ. சந்திசேகரன்

இந்திய பிரதமர் மன்மோகன், ஜனாதிபதி மஹிந்தவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகள் ?

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையில் உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களும் தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மன்மேகன்சிங்ää சார்க் உச்சிமாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்ததோடு இந்தியாவுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இருதரப்பு உறவை வலுவாக்குகிறதெனக் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய பிரதமர் மன்மோகன், ஜனாதிபதி மஹிந்தவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகள் ?

கிழக்கு மக்கள் சோற்றுக்கா சுதந்திரத்தை விற்பவர்களல்லர் - விடுதலைப் புலிகள் அறிக்கை

கிழக்கு மக்கள் சோற்றுக்காகச் சுதந்திரத்தை விற்பவர்கள் அல்லர் என்பதை அனைவருக்கும் காட்டவேண்டிய தருணம் வந்துவிட்டதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மக்கள் சோற்றுக்கா சுதந்திரத்தை விற்பவர்களல்லர் - விடுதலைப் புலிகள் அறிக்கை

Monday, 4 August 2008

கிழக்கு லண்டன் இலவச படக்காட்சி : த ஜெயபாலன்

ஓகஸ்ட் 10ல் குவாக்கர்ஸ் மண்டபத்தில் (லண்டன் லேய்டன்ஸ்ரோன்) கனடியத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட ‘சகா’ என்ற படம் காண்பிக்கப்பட இருக்கிறது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் ஈழவர் திரைக்கலை மன்றமும் இணைந்து இக்குறும்படக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இக்குறும்படக் காட்சி நிகழ்வில் சகா திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறும். மேலும் அடுத்த குறும்படக்காட்சி பற்றிய கலந்துரையாடலும் மேற்கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை எவ்வாறு சூழற்சி முறையில் கொண்டு செல்வது என்பது பற்றியும் ஆராயப்படும். வர்த்தக சினிமாவுக்கு அப்பால் உள்ள சினிமாவுடன் அறிமுகமாக விரும்புபவர்களையும் ஏற்கனவே மாற்று சினிமாவில் தங்களை ஈடுபடுத்தி உள்ளவர்களையும் ஏற்பாட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு லண்டன் இலவச படக்காட்சி : த ஜெயபாலன்

வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

இன்று (ஓகஸ்ட் 4) காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான ஒரு எதிர்காலம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இவ்விளைஞர் இந்த விபரீத முடிவுக்குச் சென்றுள்ள செய்தி கேட்டு அகிலனுடைய பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இருபது வயது மாணவன், எப்போதும் மகிழ்ச்சியான சுபாவமுடைய அகிலனின் முடிவு அவருடை பெற்றோருக்கு பேரிடியாக அமைந்து உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

இந்தியப் பிரதமருடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேச்சு

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு வந்துள்ள மன்மோகன்சிங்கை தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்து பேச்சு நடத்தின. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன கடந்த வெள்ளிக்கிழமை(01) இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியப் பிரதமருடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேச்சு

பயங்கரவாதத்தை துடைத்தெறிய பிராந்திய நாடுகள் கூட்டாக போராட வேண்டும் - பாக். பிரதமர் கிலானி

தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தைத் துடைத்தெறிவதற்காகத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நாம் போராட வேண்டும் என்று பாக்கிஸ்தான் பிரமர் யூசுப் ராசா கிலானி சிலதினங்களுக்கு முன்னர் கொழும்பில் தெரிவித்தார்.

அதேநேரம், இவ்வருடத்தின் பிற்பகுதியில் பாக்கிஸ்தானின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களதும், பொலிஸ் மா அதிபர்களதும் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பயங்கரவாதத்தை துடைத்தெறிய பிராந்திய நாடுகள் கூட்டாக போராட வேண்டும் - பாக். பிரதமர் கிலானி

கொழும்பு – மாத்தறை ரயில் பாதை புனரமைப்புக்கு இந்தியா ஏன்? - டில்வின் சில்வா

கொழும்பு முதல் மாத்தறை வரையிலான புகையிரத பாதையை புனரமைப்பு செய்வதற்காக நிதியை கடனாக வழங்குவதும் இந்தியா புனர்நிர்மான பணியை நிறைவேற்றப்போகும் நிறுவனமும் இந்தியாவுடையது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பு – மாத்தறை ரயில் பாதை புனரமைப்புக்கு இந்தியா ஏன்? - டில்வின் சில்வா

நினைவுகள் மரணிக்கும் போது - நூற்றாண்டு காலத் தியானம் : யமுனா ராஜேந்திரன்

1

சிவானந்தனின் இந்நாவலை முற்று முழுதான அரசியல் நோக்கில் வாசிப்பதென்பது ஒருவர் இந்நாவலில் வாழும் மனிதர்களுக்குச் செய்கிற துரோகமாகும்.

கோடிக்கணக்காக மனிதர்களின் இடையில் வாழ நாம் தலைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு கடந்த காலத்தையும் நினைவுப் பிரபஞ்சத்தையும் கொண்டு திரிகிறோம். இதில் எவரிடம் தான் சொல்ல ஒரு கதையில்லை? இங்கு எவர்தான் முக்கியமற்றவர்?

இவர்கள் அனைவரிடமும் காதலும் வாழ்வும் மரணமும் மோகித்தலும் வெறுப்பும் சார்ந்ததொரு வாழ்வு இருக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நினைவுகள் மரணிக்கும் போது - நூற்றாண்டு காலத் தியானம் : யமுனா ராஜேந்திரன்

15வது சார்க் உச்சிமாநாடு நிறைவு. 4 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து. கொழும்புப் பிரகடனமும் வெளியீடு – முஹம்மட் அமீன்

இணக்கம் காணப்பட்ட விடயங்கள் : 1. தெற்காசிய அபிவிருத்தி நிதியம், 2. தெற்காசிய பிராந்திய தர நிர்ணயத்திற்கான உடன்பாடு, 3. குற்றவியல் சட்டங்கள் தொடர்பான பரஸ்பர உடன்பாடு, 4. தெற்காசிய வர்த்தக உடன்படிக்கையில் ஆப்கானிஸ்தானை இணைத்தல்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
15வது சார்க் உச்சிமாநாடு நிறைவு. 4 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து. கொழும்புப் பிரகடனமும் வெளியீடு – முஹம்மட் அமீன்

‘சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல’ என்ற ஊடகவியலாளர் நோர்வேயில் புலி ஆதரவாளரால் தாக்கப்பட்டார் : த ஜெயபாலன்

நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பகுதி உறுப்பினரால் தாக்கப்பட்டு உள்ளார். இவர் அங்கு விளையாட்டுத்துறை மற்றும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவருகிறது. யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது. குட்டி என்று அறியப்பட்ட பத்மநாதன் என்பவரே மக்கள் மத்தியில் வைத்து இக்கொடூரமான செயலைச் செய்துள்ளார். இச்சம்பவத்தில் பத்மநாதன் கிளாஸால் தாக்கியதில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. உடனடியாக சரவணன் ஒஸ்லோ மருத்துவமனையின் உடனடிச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல’ என்ற ஊடகவியலாளர் நோர்வேயில் புலி ஆதரவாளரால் தாக்கப்பட்டார் : த ஜெயபாலன்

Sunday, 3 August 2008

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையே பொருத்தமான தீர்வாக அமையும் என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் ஆரம்பித்துள்ள கருத்துப் பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக இக்கட்டுரை அமைகிறது. இலங்கை இனப் பிரச்சனைக்குப் பல தீர்வுகள் அமையலாம். ஆனால் அவை யாவும் பொருத்தமான தீர்வாக அமையுமா? பொருத்தமானது என்ற சொற் பதம் பல அர்த்தங்களைக் கொண்டதாக அமைகிறது. அதாவது இலங்கையில் வாழும் ஏனைய இனங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், தற்போதுள்ள இறுக்கமான அரசியல் பின்புலத்திலிருந்து மாற்றங்களை நோக்கித் தள்ளி, ஓர் புதிய வழியை, ஜனநாயக இலக்குகளை நோக்கித் திருப்ப வேண்டும். திம்புக் கோரிக்கைகள் என்பது தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் அடிப்படைகளாக, தமிழ்பேசும் மக்களின் ஒன்றிணைந்த போராட்ட வெற்றிச் சின்னமாக இன்றுவரை விளங்கி நிற்பதாக தெரிவிக்கும் பீடிகையோடு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான நியாயங்களை முன்வைத்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

‘மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசியல் இலாபம் பெற முனைகின்றனர்’- ஹிஸ்புல்லாஹ்

திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடித்தடை ஏற்பட்டிருப்பதற்கான காரணம் அங்குள்ள பாதுகாப்பு காரணம் நிமித்தமே. இம்மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசாங்கத்தை பழிசுமத்துவதும் இதனை விமர்சிப்பதும் அரசியல் இலாபம் பெறுவதற்காகும். இவ்வாறு கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசியல் இலாபம் பெற முனைகின்றனர்’- ஹிஸ்புல்லாஹ்

கருத்தறியாமல், களநிலை தெரியாமல் செயற்படுவதால் விளைவுகள் மோசமாகும் - ஹக்கீம்

“சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் போராட்டங்களின் பின்தான் கிடைக்க வேண்டுமென்ற நிலையை மாற்றி அந்த உரிமைகளை வழங்கிய பின்தான் பெரும்பான்மை சமூகம் தனது பங்கை அனுபவிக்க ஆரம்பிக்க வேண்டும்” இது மர்ஹ{ம் அஸ்ரப் வெளியிட்ட கருத்து. இந்தக் கருத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலையில் தொடர்புபடுத்தி பார்ப்பது மிகப் பொருத்தமாக இருக்கும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்தறியாமல், களநிலை தெரியாமல் செயற்படுவதால் விளைவுகள் மோசமாகும் - ஹக்கீம்

“விட்டுக்கொடுப்பில்லாதனால் தான்; சிறுபான்மை மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்”- டிலான் பெரேரா

“சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்கவிடாமல் தடுக்க முற்பட்டுள்ள பௌத்த மத குருமாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். முஸ்லிம்களது வீடுகளைத் தடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இவ்வாறு கவலையுடன் தெரிவித்தார் அமைச்சர் டிலான் பெரேரா....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
“விட்டுக்கொடுப்பில்லாதனால் தான்; சிறுபான்மை மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” - டிலான் பெரேரா

இன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்!!!

இன்று ஆகஸ்ட் 3ம் திகதி. காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் சுஹதாக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள மீரா ஜும்ஆப் பள்ளிவாயில், ஹசைனிய்யா பள்ளிவாயில்களில் இஸாத் தொழுகையில் (இரவு நேரத் தொழுகை) ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று ஏறாவூரில்12.08.1990இல் 112 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் காத்தான்குடி முஸ்லிம்கள் அம்பலாந்துறையில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி சுஹதாக்கள் (உயிர் நீத்தவர்கள்) தினம் அனுஸ்டிக்கப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்!!!

ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்றங்களை நடத்த முடியாது!- பிரதம நீதியரசர்.

“நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் புலிகள் நீதிமன்றச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் அவை மக்களைத் திருப்திப்படுத்தக் கூடியனவையாக இல்லை. ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதன் மூலம் மக்களுக்கு நியாயம் கிட்டாது” இவ்வாறு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்றங்களை நடத்த முடியாது!- பிரதம நீதியரசர்.

Saturday, 2 August 2008

இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதி

இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்குத் தொடர்ச்சியாக உதவியளிப்பதாக பாக்கிஸ்தான் உறுதியளித்துள்ளது. கொழும்பில் நடைபெறும் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஸா மஹ்மூத் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதி

இந்தியப் படை வருகையால் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் - சோமவன்ச அமரசிங்க

இந்திய இராணுவம் சார்க் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் எமது இராணுவம் சர்வதேச ரீதியில் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கட்சியின் அரசியல் பீடகூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியப் படை வருகையால் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் - சோமவன்ச அமரசிங்க

சார்க்மாநாடு பிராந்திய நலன்களை முன்நிறுத்துமா? அன்றேல் காற்றோடு சங்கமித்துவிடுமா? : முஹம்மட் அமீன்

இன்று (02.08.08) சார்க் நாடுகளின் 15வது உச்சிமாநாடு கொழும்பில் கூடுகின்றது. இன்று 02ஆம் திகதியும், நாளை 03ஆம் திகதியும் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்படலாம் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க்மாநாடு பிராந்திய நலன்களை முன்நிறுத்துமா? அன்றேல் காற்றோடு சங்கமித்துவிடுமா? : முஹம்மட் அமீன்

எதற்காக இந்த சார்க் மாநாடு : த ஜெயபாலன்

இன்று (ஓகஸ்ட் 2) ஆரம்பமாக உள்ள சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் மீண்டும் பயங்கரவாதம் முக்கிய இடத்தை பெறப் போவது பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின், காங்கிரஸ் பிரதமர் ஒருவர், 17 ஆண்டுகளுக்குப் பின், முதற் தடவையாக இலங்கைக்கு வந்து உள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் 60வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எதற்காக இந்த சார்க் மாநாடு : த ஜெயபாலன்
Newer Posts Older Posts Home