Monday 18 August 2008

”யாழ்நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்!!!” - நெவில் ஜெயவீர : த ஜெயபாலன்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன் என முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நெவில் ஜெயவீர தெரிவித்தார். The Jaffna Public Library Rises From Its Ashes என்ற யாழ் பொது நூலகத்தின் கட்டிடக் கலைஞர் வி எஸ் துரைராஜா எழுதிய நூலின் வெளியீட்டு விழாவில் நெவில் ஜெயவீர இதனைத் தெரிவித்தார். தான் இந்நிகழ்வில் கலந்தகொள்வதில் ஒருபுறம் மகிழ்ச்சி அடைவதாகவும் மறுபுறம் கவலையடைவதாகவும் தெரிவித்த நெவில் ஜெயவீர, தனது உணர்வின் வெளிப்பாட்டுக்கான காரணத்தையும் அங்கு தெரிவித்தார். யாழ் நூலகம் தமிழ் மக்களின் செல்வம் கொழிக்கும் கலாச்சாரித்தின் ஞாபகச் சின்னமாக இருப்பதால் இந்நிகழ்வில் கலந்த கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். அதேசமயம் அந்த ஞாபகச் சின்னத்தை தன்னினத்தைச் சேர்ந்தவர்கள் எரித்தனர் என்பதையிட்டு வெட்கப்படுவதாகவும் நெவில் ஜெயவீர தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”யாழ்நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்!!!” - நெவில் ஜெயவீர : த ஜெயபாலன்

No comments: